search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "location"

    • சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
    • அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் ஏற்படுகிறதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை

    சர்வதேச இடப்பெயர்வு கண்காணிப்பு குழு (IDMC) உலகளவில் பல்வேறு காரணங்களால் மக்கள் இடம்பெயர்ந்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் அரை மில்லியன் மக்கள் இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம், கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு உள்ளிட்ட பிரச்சனைகளால் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் கனமழையால் தங்களது வாழ்விடங்களை இழந்து பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

    தெற்காசியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் வன்முறைகளால் சுமார் 69,000 பேர் புலம்பெயர்ந்துள்ளனர். இதில் பிரதானமாக 97% அளவில் மணிப்பூரில் நடந்த குக்கி - மெய்தேய் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சுமார் 67,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    மேலும் உலகம் முழுவதும் வன்முறை மற்றும் கலவரங்களால் 68.3 மில்லியன் மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் உடைமைகளையும் இழந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்களின் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெருபாலான மக்கள் இன்னும் தங்களது ஊர்களுக்கு திருப்ப முடியாமல் கையறு நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    மேலும் அதிகப்படியான இடப்பெயர்வு உலக நாடுகளில் ஏற்படும் வன்முறைகளால் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளதே அன்றி இதற்கான தீர்வை எந்த நாடுகளும் யோசித்ததாகவும் அதன் மீது அக்கறை கொண்டிருப்பதாகவும் தெரியவில்லை என்பவதே உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்டவர்களின் ஒருமித்த ஆதங்கமாக உள்ளது.  

    • சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
    • எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.

    • இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.

    அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.

    இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.

    • பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இக்கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.
    • நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்தார்.

    கும்பகோணம்:

    வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3-வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவிலின் உள் பிரகாரத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

    பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் இந்த கோவிலில் தனியாக சொர்க்கவாசல் கிடையாது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்தி ருந்து தரிசித்தனர்.

    இது போல் கும்பகோ ணம் அருகே உள்ள திருச்சேறையில் சாரநாயகி சாரநாத பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ தலங்களில் 12-வது தலமாக போற்றப்படும் இந்த கோவில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக பரமபத வாசல் உள்ள சிறப்பு பெற்ற ஸ்தலம். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சாரநாத பெருமாள் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

    அப்போது வேத மந்திரங்கள் முழங்க ஆராதனைகள் நடைபெற்றது.பின்னர் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் சாரநாத பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இடம் கையகப்படுத்துவது.
    • சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    மாதிரி மங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் விரிவாக வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.

    குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர்முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி உதவி பொறியாளர் அலுவலகம் தற்போது பரமத்தியிலிருந்து கபிலர் மலைசெல்லும் சாலையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக இன்று(சனிக்கிழமை) முதல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.

    அதேபோல் கபிலர்மலை உதவி பொறியாளர் அலுவ லகம் தற்போது இயங்கி வரும் கட்டிடத்திலிருந்து கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கபிலர்மலை துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

    • புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது.
    • வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கன்னியக்குடி கிராமத்தில் அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் காப்பகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சீர்காழி கார்டன் மறுவாழ்வு மையம் மற்றும் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து கன்னியக்குடி கிராமத்தில் புதிய மறுவாழ்வு மையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் இடத்தை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து இடத்தை ஆர்ஜீதப்படுத்தும் பணியை தொடக்கி வைத்தனர். பயனற்று கிடந்த அரசுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த வீட்டு மனை அற்ற 16 ஏழை குடும்பங்களுக்கு மாற்று இடத்தில் இடம் வழங்குவதற்கு ஆவணம் செய்யப்படும் என கலெக்டர் லலிதா உறுதி அளித்தார்.

    • தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
    • நிலத்தை அளவிடும் பணி தீவிரம்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 22-வார்டுக்கு உட்பட்ட சூரமங்கலம் மண்டல பகுதி ஆண்டிபட்டி சுடுகாட்டில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக விவசாயம் செய்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர், அதன் பேரில் நேற்று மாநகராட்சி சர்வேயர் நித்தியா, உதவி பொறியாளர் மலர் ஆகியோருடைய மேற்பார்வையில் ஆண்டிபட்டி சுடுகாடு பகுதியில் நில அளவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை அகற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதிகாரிகளுடன் 22 -வது வார்டு கவுன்சிலர் கே. சி. செல்வராஜு மற்றும் பொதுமக்கள் சென்றிருந்தனர்.

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர்.
    • பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பள்ளிப்பாளையம்:

    ஜனநாயக மக்கள் கழகத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில், நிறுவன தலைவர் ஆத்துார் கண்ணன் கலந்து கொண்டு சிறப்புறையற்றினர். இதனை தொடர்ந்து, உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டணத்தை உடனடியாக மாநில அரசு திரும்ப பெற வேண்டும்.காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆற்றோரம் வசிக்கும் பொதுமக்கள பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் பஞ்சமி நிலம், மற்றும் புறம்போக்கு நிலத்தை மீட்டு, சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் குழந்தைவேல், பள்ளிப்பாளையம் நகர தலைவர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • மேற்கு மண்டலத்தில் சரகங்கத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • 48 இன்ஸ்பெக்டர்களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, சேலம் சரகங்கள் கோவை, சேலம், திருப்பூர், மாநகர பகுதிகளுக்கு 48 இன்ஸ்பெக்டர் களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் மாநகரத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம் முருகன்,சென்னை அயனாவரம் காவல் நிலையம் செல்வராஜ்,மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜதரண்,சசிகலா, திண்டுக்கல் மாவட்டம் மோகன்பாபு கண்ணா,நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையம் சண்முகசுந்தரம்,கோவை மாநகர காவல் இருந்து விக்னேஸ்வரன், ஆனந்,ஆகிய 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சேலம் சரகத்திற்கு 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் பணிகள் நடைபெறுகின்றன.
    • வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை தேடி கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே திருப்பூர் தெற்கு ஆர். டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, வாகன உரிமம் , தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வீரபாண்டி பிரிவு அடுத்த நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன.நொச்சிப்பாளையம் சாலையில் ஆர்.டி.ஓ.ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

    தெற்கு ஆர்.டி. ஓ அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவாக இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    சென்னை பரங்கிமலையில் விபத்து நடந்த இடத்தில் மின்சார ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மின்சார ரெயில் படிக்கட்டில் அதிகாரிகள் தொங்கிச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். 5 பேர் படுகாயங்களுடன் சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த கோர விபத்துக்கு பரங்கிமலை 4-வது நடைமேடையில் இருந்த கான்கிரீட் தடுப்பு சுவர் தான் காரணமாக கூறப்படுகிறது. இந்த சுவரை அகற்றவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தாலும், ‘சுவர் அகற்றுவதற்கு வாய்ப்பில்லை’ என்று ரெயில்வே அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாற்றுவழி கையாளும் வகையில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குறிப்பிட்ட அந்த கான்கிரீட் சுவர் - தண்டவாளம் இடையேயான தூரம் அளவிடப்பட்டது. இதையடுத்து அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டு, படிக்கட்டில் ரெயில்வே அதிகாரிகள் ஏறிக்கொண்டனர்.

    கான்கிரீட் தடுப்பு சுவர் அருகே ரெயிலை மெதுவாக இயக்கி, ரெயில்வே அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகள் முதுகில் அணிந்திருந்த ‘பேக்’, அந்த தடுப்பு சுவரில் உரசுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கொஞ்சம் வேகமாக மின்சார ரெயிலை இயக்கி சோதனை செய்து பார்த்தனர். ரெயிலில் இருந்தபடியே தடுப்பு சுவரை பிடித்தும் ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வுக்காக விபத்து நடந்த குறிப்பிட்ட அந்த மின்சார ரெயிலே கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. இந்த ஆய்வில் அதே வழித்தடத்தில் உள்ள இரும்புத்தூண் ஒன்றும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து ஆய்வு விவரங்கள் அறிக்கையாக உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதேவேளையில் 5-வது நடைமேடையில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளது.  #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident 
    ×