search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Massacre"

    • சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.
    • ஷாருக்- சல்மான் இடையே சண்டை ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது

    மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் மும்பையில் படுகொலை செய்யப்பட்டார். நேற்றைய தினம் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சித்திக் மீது சுடப்பட்ட 6 குண்டுகளில் 4 அவரது மார்பில் பாய்ந்தது.

    66 வயதான பாபா சித்திக் மகாராஷ்டிர அரசியலில் அனைவருக்கும் பரிட்சயமான முகமாக இருந்து வந்தவர். தனது இளமைக் காலம் முதல் 48 ஆண்டுகாலமாக காங்கிரசில் இருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் அணிக்கு மாறினார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த இவர் உணவுத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி களிலும் இருந்துள்ளார்.

    காங்கிரசில் தன்னை சாப்பாட்டில் வாசனைக்காக போடும் இலையைப் போல அலட்சியமாக நடத்தியத்தாக அப்போது அவர் தெரிவித்திருந்தார். இவரது மகன் ஜீஸ்ஹான் பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவரது அலுவலகத்துக்கு வெளியில் வைத்தே சித்திக் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஜீஸ்ஹான் எம்.எல்.ஏ வாக இருக்கும் பாந்த்ரா தொகுதியில் சித்திக் பலகாலமாக எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் ஆவார்.

     

    கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்துவைத்ததால் சித்திக் பெரிதும் பேசப்பட்ட தலைவராக உள்ளார். அந்த சமயத்தில் ஷாருக் சல்மான் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பாலிவுட் திரைத்துறை இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடந்தது. எனவே வருடந்தோறும் பிரம்மாண்டமாக இஃப்தார் விருந்து நடந்தும் சித்திக் அந்த வருடம் ஷாருக் சல்மான் இருவரையும் விருதுக்கு அழைத்தார்.

     

    ஷாருக்கை சல்மான் கானின் தந்தை சலீம் கான் அருகே அமரவைத்தார். அதன்பின் சல்மான் கானை அவர்களருகில் அனுப்பி மனஸ்தாபத்தைத் தீர்த்து வைத்தார். இவ்வாறு மும்பையில் முக்கிய புள்ளியாக வளம் வந்த சித்திக் மகாராஷ்டிர தேர்தல் நெருக்கும் சமயத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளது அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறனர்.

    • பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை.

    மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஹாரூன் ரசீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் சுந்தர் நகரி பகுதியில் இருக்கும் கோயில் ஒன்றில் பிரசாதம் சாப்பிட்டதற்காக மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ரார் என்பவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கி படுகொலை செய்துள்ளது ஒரு மதவெறி வன்முறை கும்பல்.

    இந்த வன்முறை செயல்கள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. இது எல்லா இடங்களிலும் தொடர்ந்து பரவிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தவறு செய்ததற்கான முகாந்திரங்கள் ஏதுமின்றி இஸ்லாமியர்கள் என்பதால் மட்டும் தாக்கப்படுவது இந்தியாவில் அன்றாட வழக்கமாகிவிட்டது, ஆனால் இதற்கு மத்திய அரசு பெரிதாக எந்தக் கண்டனமும் தெரிவிப்பதில்லை. சமீபகாலமாக மத வெறுப்பு பேச்சு, கும்பல் படுகொலைகள் அரங்கேறி வருவது அன்றாடமாகிவிட்டது .

    இந்த அசாதாரண சூழல் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அப்பாவி இஸ்லாமிய இளைஞர் முகமது இஸ்ராரை படுகொலை செய்த கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற மதவெறி வன்முறை கும்பலை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கொடுத்த பணத்தை திருப்பி தராததால் படகில் அழைத்து சென்று நடுக்கடலில் பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யபட்டார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காரக்கோட்டை கோழிசனம் பகுதியை சேர்ந்தவர் சுலோ–சனா (வயது 60). கணவரை இழந்து விதவையான இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருகி–றார்.இதற்கிடையே கடந்த 2-ந்தேதி வெளியில் சென்ற சுலோசனா மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்தவித தகவலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மகள் மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசா–ரித்தனர். அப்போது சுலோ–சனா கொலை செய்யப்பட் டது தெரிய வந்தது. அதா–வது, அதே ஊரை சேர்ந்த கொழுந்தன் முறை கொண்ட உறவினரான ரமேஷ் என் பவர் தனியாக வசித்து வந்த சுலோசனாவிற்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.அப்போது ரமேஷ் அவ–ருக்கு பண உதவிகளும் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ரமேஷ் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு சுலோசனாவால் உடனடியாக திருப்பி தர–முடியவில்லை.

    இந்தநிலையில் சுலோச–னாவை ஒரு இடத்திற்கு வரும்படி ரமேஷ் தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் சோமநாதபட்டினம் கடற் கரை பகுதிக்கு சென்று அங்கே இருந்த நண்பர் செந்தில்குமாரை கூட்டிக் கொண்டு அங்கிருந்து படகு மூலம் கடலுக்குச் சென் றுள்ளனர்.நடுக்கடல் பகுதிக்கு சென்றதும் ரமேஷ் தான் வைத்திருந்த கட்டையால் சுலோச்சனாவின் பின் தலையில் அடித்துள்ளார். இதில் சுலோச்சனா மயங்கி விழுந்ததும் கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

    அதனை தொடர்ந்து சுலோசனாவின் உடலை மணமேல்குடி அலையாத்திக்காடு புதர் பகுதியில் வீசிவிட்டு சென் றுள்ளது தெரிய வந்துள்ளது.அதனை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நண்பரான செந்தில்குமாரை கைது செய்த போலீசார் தலை–மறைவாக உள்ள ரமேசை தீவிரமாக தேடி வரு–கின்றனர். கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்ப–வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.


    • கழக மாநில பொதுச்செயலாளராக இருந்தவர் 2001-ல் படுகொலை செய்யப்பட்டார்.
    • தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளராக இருந்த கணேச பாண்டியன், 2001-ல் படுகொலை செய்யப்பட்டார்.

    அவரது 21-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்ட பட்டியல் அணி தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் கதிரவன் முன்னிலையில் பா.ஜ.க.வினர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆத்மா கார்த்திக், தாய் லட்சுமி, பிரியா முருகானந்தம், இயற்கை மற்றும் கனிமவள மாவட்ட தலைவர் செந்தில்குமார், பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் காளி ராஜா, துணைத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட செயலாளர் உமா ரமணி, தரவு மேலாண் பிரிவு மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கலைவாணி உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். #JallianwalaBagh #BritishGovernment
    லண்டன்:

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

    இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார். 
    ×