என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mineral looting"
- கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை.
- கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கனிமவள பாதுகாப்பு, இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கனிம வளங்களை கடத்தி எம். சாண்ட் ஜல்லிக்கற்க்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் என்ற பெயரில் கேரளா, கர்நாடகா, மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. திருப்பூர், கோவை, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, என கனிம வளம் கடத்தப்படும் பகுதிகளின் பட்டியல் நீண்டு கொண்டு செல்கிறது. 20 டன்னுக்கு மேல் கிராமசாலைகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை, ஆனால் மிகப்பெரிய கனரக வாகனங்களை பயன்படுத்தி,சுமார் 60 டன்னுக்கும் அதிகமாக கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், சாலைகள் சேதமடை கின்றன. மேலும் கனிம வளங்கள் எடுக்க அரசுக்கு வரி, ஜிஎஸ்டி, வருமானவரி, ராயல்டி உள்ளிட்ட எதுவும் செலுத்தப்படுவதில்லை. சட்டவிரோதமாக வெடி மருந்துகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதில் பல்லடம் சுக்கம்பாளையத்தில் கடந்த சில தினங்களாக அளவுக்கு அதிகமான கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றார். பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிம வள கொள்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை மிரட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, வரும் மே 16ந்தேதி செவ்வாய்க்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திரு ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அய்யலூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.
- குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், குஜிலியம்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான இடங்களில் அனுமதியின்றி இரவோடு இரவாக கற்கள் உடைத்து எடுத்துச் செல்லப்படுகின்றன. அய்ய லூரிலிருந்து எரியோடு செல்லும் சாலையில் மலையைக் குடைந்து பாறைகள், கற்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதுமட்டுமின்றி அனுமதி சீட்டே இல்லாமல் செம்மண், நீர்நிலைகளில் மண் எடுக்கப்படுகிறது. இதனால் குஜிலியம்பாறை, பாளையம் பகுதியில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே அதிகாரிகள் இங்கு அதிரடி சோதனை நடத்த வேண்டும். கனிம கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இயற்கை வளபாதுகாப்பு சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார்.
கடையம்:
கடையத்தில் கனிமவள கொள்ளையை கண்டித்து நேற்று மாலை
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயற்கை வளபாதுகாப்பு சங்க தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார்.
கடையம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன், கடையம் வட்டார இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைவரும்,கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவருமான பூமிநாத், ஏ.பி.நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட செய லாளர் ஜமீன் உள்பட பல ஊராட்சி மன்ற தலைவர்கள் முன்னிலை வகித்தனர். ரிலையபிள் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜ், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமதுரை, தெற்கு கடையம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலிங்கம், நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கவேல், ஆலங்குளம் சங்கீதா ஈசாக், செங்கோட்டை ராம்மோகன், முல்லை நில தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கரும்புலிகண்ணன், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கடையம் பகுதியிலிருந்து கனரன லாரிகள் மூலம் கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வியாபாரிகள் கடையடைப்பு நடத்தினர்.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணைச்செயலாளர் ராஜசேகர், கடையம் சி.பி.எம்.ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், கவுன்சி லர்கள் புளி கணேசன், மணிகண்டன், ஜனதா, இசக்கியம்மாள், தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது.
- கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் கூறியுள்ளார்.
கடையம்:
முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளை போகிறது. இதனை தடுக்க மக்கள் பிரதிநிதிகள் தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் ஒருமித்த குரல் கொடுத்து வருங்கால சந்ததியினருக்கு கனிம வளங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
கவன ஈர்ப்பு தீர்மானம்
கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணமுரளி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த கூட்ட தொடரிலேயே இதுபோன்று அவர் கொடுத்த கவன ஈர்ப்பு தீர்மானம் சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது.
கனிமவள கொள்ளை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அதை தடை செய்ய அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் பூஜ்யம் நேரம் என்று சொல்லக்கூடிய நேரமில்லா நேரத்தில் இந்த பிரச்சனை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சபாநாயகரிடம் சிறப்பு அனுமதி வாங்கி பேசலாம்.
தடை செய்ய கோரிக்கை
கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை ஆகியவை தொழில் துறையின் கீழ் வருவதால் அத்துறை மானிய கோரிக்கையின் போது இதுகுறித்து பேசி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். கனிமவள கடத்தலால் அரசுக்கு ஏற்படுகின்ற பல கோடி ரூபாய் வருவாய் இழப்பை கண்டுகொள்ளாத வருவாய்த்துறை மானிய கோரிக்கையிலும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.
அளவுக்கு மீறிய பாரத்தை கனரக வாகனங்களில் ஏற்றி சாலைகளில் செல்வதால் சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்ளாட்சி துறை மானிய கோரிக்கையின்போதும் இந்த பிரச்சினையை எழுப்பலாம்.
இப்படி பல வழிகளில் முயற்சி செய்து கனிம வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும். இதை மனதில் கொண்டு சட்டமன்றத்தில் குரல் கொடுங்கள். அதன் மூலம் நமது இயற்கை வளம் காக்கப்படட்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
- அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் அனுமதியின்றி குவாரிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மண் மற்றும் மணல் கொள்ளை கிரானைட் குவாரிகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் கிரானைட் குவாரிகள் அதிக அளவு மறைமுகமாக செயல்பட்டு வருகின்றன.
இதனை கனிமவளத் துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மலைப்பாங்கான பகுதிகளில் குவாரிகள் திருட்டுத்தனமாக நடைபெறுவதால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் குவாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்