என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister Gingee Masthan"
- ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும் விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். அதில், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டார். மேலும், விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமைச்சர் செஞ்சி மஞ்தானுக்கு புதிய பொறுப்பு வழங்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
- எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
கோவை:
இஸ்ரேல் நாட்டில் இருந்து 8 பேர் இன்று கோவை வந்தனர்.
அவர்களை விமான நிலையத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நடைபெறும் நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது. அவசர தேவைக்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 132 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் 25 பேரும், மற்றவர்கள் சென்னை விமான நிலையம் மூலமும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
தொடர்பு கொள்பவர்களை இல்லம் வரை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஒரு சிலர் பாதுகாப்பான நிலையில் இருக்கின்றோம். தேவைபட்டால் தொடர்பு கொள்கின்றோம் என்று தெரிவித்து இருக்கின்றனர். விருப்பத்தின் அடிப்படையிலேயே அழைத்து வருகின்றோம்.
எந்த வெளிநாட்டிற்கு சென்றாலும் பதிவு செய்து விட்டு செல்ல வேண்டும் என்பதை அறிவுறுத்தி வருகின்றோம்.
எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறியும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடன் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆகியோரும் வரவேற்றனர்.
- அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகன் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர்.
செஞ்சி:
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான்.
இவர் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பாக செஞ்சியில் நடந்த தி.மு.க. செயல்வீரர்களின் கூட்டத்தில் பிரச்சனை ஏற்பட்டு, நிர்வாகிகளுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் செஞ்சி மஸ்தானின் சகோதரர் நசீரை செஞ்சி நகர தி.மு.க. செயலாளர் பொறுப்பிலிருந்து தலைமைக்கழகம் விடுவித்தது.
இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து இன்று ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ள மொக்தியார் அலி மஸ்தான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பெரும்புகை மாரியம்மன் கோவில் வீதியில் வசிக்கும் ரோமியன் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட மொக்தியார் அலி, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் ஆவார்.
இதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராக உள்ள ரிஸ்வான், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக செஞ்சி அடுத்த பள்ளியம்பட்டு கிராமம் கபூர் சாகிப் தெருவில் வசிக்கும் ஷேக்வாகித் நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரிஸ்வான் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மருமகன் ஆவார்.
மேலும், ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்ட நிர்வாகியுடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென தி.மு.க. தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் அலி, மருமகன் ரிஸ்வான் ஆகிய இருவரும் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு இருப்பது திண்டிவனம் தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம் நகராட்சியில் உள்ள 13 தி.மு.க. கவுன்சிலர்கள் செஞ்சி மஸ்தானின் குடும்பத்தினர் தலையீட்டை கண்டித்து அண்மையில் தி.மு.க தலைமை கழகத்துக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார்.
- சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அமைச்சர் செஞ்சி மஸ்தான் அனைவரையும் மகிழ்வித்தார்.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நரசிங்கராயன் பேட்டையில் உள்ள ஹசரத் சையத்பாபா தர்காவின் 26-ம் ஆண்டு சந்தன குடம் மற்றும் உருஸ்முபாரக் திருவிழா நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் சந்தனக்கூடு நிகழ்ச்சியில் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தார்.
இதனை தொடர்ந்து அனைவருக்கும் பொது விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
இதில் செஞ்சி ஒன்றிய தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், நகர செயலாளர் கார்திக், ஊராட்சி மன்ற தலைவர் பிலால், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர்கள் காசியம்மாள் ஏழுமலை, ஏழுமலை, பாலகிருஷ்ணன், கவுன் சிலர் ஜான்பாஷா, நிர்வாகிகள் ஜே.எஸ். சார்தார், தொண்டரணி பாஷா உள்ளிட்ட உரூஸ் கமிட்டியினர் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர ஆலோசனை செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும்.
இருளர்கள், நரிக்குறவர்கள், மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் உள்ளிட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள் அனைத்துப் பகுதிகளும் ஆயிரம் பேருக்கு குறையாமல் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை தெருமுனை கூட்டங்கள் நடத்தியும் பிரசாரம் செய்தும் அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்க வேண்டும். 18 வயது பூர்த்தி செய்யப்பட்டவர்களை தி.மு.க.வில் இணைக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு கார்டு வாங்கி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேது நாதன், மாசிலாமணி, செந்தமிழ் செல்வன், சீதாபதி சொக்கலிங்கம், திமுக தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரமணன், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் சேகர், நகர செயலாளர்கள் திண்டிவனம் கண்ணன்,செஞ்சி காஜா நசீர், அனந்தபுரம் சம்பத், சேர்மன்கள் விஜயகுமார், அமுதா ரவிக்குமார், சொக்கலிங்கம், தயாளன், நிர்மலா ரவிச்சந்திரன், யோகேஸ்வரி மணிமாறன், துணை சேர்மன் ராஜாராம் ,பழனி, ஜெயபாலன், ஒன்றிய செயலாளர் மணிமாறன், கவுன்சிலர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
- இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 70-க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வகுப்பு வாரியத்தில் 150-க்கு மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை மீட்கும் போது பள்ளிவாசலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இதற்கு வரவேற்பு உள்ளது.
உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் முதல் உலமாக்கள் மாத உதவி தொகை பெறுபவர்கள் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது. வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வேறுபாடு இல்லாமல் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒன்றே குலம். ஒருவனே தெய்வம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். வெளிநாடு சென்றவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நல வாரியத்தில் பதிவு செய்து சென்றவர்களுக்கு 60 வயது கடந்தாலும் அவர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு, அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்டி. வரி விதித்து இருப்பது கண்டனத்துக்குரியதாகும். அனைத்து தரப்பு மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள், வியாபாரிகள் அனைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதல்- அமைச்சரை வியாபாரிகளும், வணிகர்களும் சந்தித்து வலியுறுத்த உள்ளார்கள். இந்த பிரச்சினைக்கு முதல்-அமைச்சர் நல்ல தீர்வு காண்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்