search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister roja"

    • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
    • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

    ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

    ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

    ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

    சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட் பிடிப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கற்றுக்கொடுத்தார்.
    • இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    அமராவதி:

    ஆந்திரா அரசின் சார்பில் ஆடுவோம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதன் தொடக்க நிகழ்ச்சி குண்டூரில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இருவரும் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.

    இதையடுத்து, கிரிக்கெட் பந்தை அடித்து ஆடினார் ரோஜா. தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா அவரையும் விளையாடச் செய்தார்.

    இந்தப் போட்டிகள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.
    • ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது.

    திருப்பதி:

    தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஆந்திர மாநிலத்தில் 110 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

    10 மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    புயல் காரணமாக ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை மந்திரியான ரோஜாவும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார்.

    புத்தூர் பேரூராட்சி பிள்ளாரிப்பட்டு அலுவலகம் தா்மாம்பா புரத்தில் கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் நடனமாடியபடி ரசித்தார்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    புயல் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் மந்திரி ஒருவர் மழையில் நனைந்தபடி நடனம் ஆடியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

    இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுபற்றி தெலுங்கு தேசம் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், கடந்த காலங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார். அப்போது புயல் போன்ற இயற்கை பேரிடர் சமயத்தில் அமைச்சர்கள் அனைவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தோம்.

    ஆனால் ரோஜா மழையை ரசித்து நடனம் ஆடுகிறார் என சாடியிருக்கிறது. இதையடுத்து ரோஜாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.
    • பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆசிய ஆடவர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சகோத் மைனேனிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடுவை சிஐடி கைது செய்த பிறகு யாரை கொல்லலாம் என தெலுங்கு தேசம் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.

    டெல்லியில் இருந்து வக்கீல்கள் வந்தாலும் சந்திரபாபு நாயுடுவை வெளியே கொண்டு வர முடியாது.

    பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி தனது தொகுதியிலும் வீட்டிலும் பெண்களிடம் என்ன மாதிரி நடந்து கொள்வார் என்பது அவரது பேச்சில் தெரிய வந்துள்ளது.

    பெண்களை இழிவு படுத்தி பேசுவது வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும். என்னை இழிவாக பேசி ஒரு வார காலமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்க முடிவு செய்து உள்ளேன். சகோ மைனேனி சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் பல பதக்கங்களை வென்றாலும் அவரை ஊக்கவிக்கவில்லை. உதவி தொகையும் வழங்காமல் பாகுபாடு காட்டினார்.

    ஆனால் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஜாதி மதம் அரசியல் கட்சி வேறுபாடு இன்றி ஊக்குவித்து வருகிறார். அரசு வேலையுடன் கூடிய பயிற்சி மையம் விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா?
    • அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறி தெலுங்கு தேசம் கட்சியினர் சட்டசபையில் சிடிக்கள் காட்டினர். இதுகுறித்து அந்த கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி சமீபத்தில் பேசினார்.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் ரோஜா தன்னை நிர்வாண வீடியோவில் நடித்ததாக சித்ரவதை செய்கின்றனர் என கண்ணீர் விட்டு அழுதார். இது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மாநில மகளிர் அணி தலைவி வாங்கலபுடி அனிதா கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அவர்களது மருமகள் பிராமணியை தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ரோஜா மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

    மாநிலத்தில் அமைச்சர்கள் மட்டும் தான் பெண்களா? மற்றவர்கள் பெண்கள் இல்லையா? கடந்த காலங்களில் சட்டசபையில் ரோஜா பேசிய வார்த்தைகளை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.

    பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தி பேசியதை மறைக்க ரோஜா கண்ணீர் விட்டு அழுதபடி பேசினார். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ரோஜாவை பற்றி பேசியதால், 200 போலீசார் பண்டாரு சத்தியநாராயணா மூர்த்தியின் வீட்டிற்கு வந்து கைது செய்தனர்.

    ஆனால், தெலுங்குப் பெண்கள் மீது தொடர்ந்து தகாத கருத்துகளை தெரிவித்து வருபவர்கள் மீது புகார்கள் வந்தாலும், காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை.

    ரோஜாவை யாரும் பெண்ணாக கருதுவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் உள்ளவர்கள் அமைச்சர் ரோஜாவை வெறுக்கிறார்கள். அமைச்சர் ரோஜா பெண்களிடம் அனுதாபம் பெறுவதற்காக ஒரு நாள் அழுதார்.

    ஆனால் 4½ ஆண்டுகால ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பெண்களும் கதறி அழுகிறார்கள். அமைச்சர் ரோஜா படத்தின் டிரெய்லர் மட்டும் தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரிஜினல் படத்தைக் வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாணை ஒப்பிட முடியாது.
    • பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார்.

    அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

    எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.

    கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும்.

    பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார்.

    சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு இராணுவ வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • இதை ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா வெடி வெடித்து கொண்டாடினார்.

    அமராவதி:

    ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக மாநில குற்றப் புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் சந்திரபாபு நாயுடு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதன்பின் நேற்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. வரும் 22-ம் தேதி வரை ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.

    ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆனதால் அவர் சிறை செல்வது உறுதியானது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா கொண்டாடியுள்ளார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ரோஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    • தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    திருப்பதி:

    அமைச்சர் ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடித்து வெளியே வந்த அமைச்சர் ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது,:-

    தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுவின் பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிச்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் பரந்த மைதானத்தில் கூட்டத்தை நடத்தாமல் குறுகிய இடத்தில் கூட்டம் நடத்தியதால்தான் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதுகுறித்து கோர்ட்டு தானாக முன்வந்து சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மனித உரிமை ஆணையமும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    • போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
    • மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.

    திருப்பதி:

    விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன.

    விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார்.

    பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

    அப்போது எதிர்த்து விளையாடியவர் முகத்தில் ஒரு குத்து விட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும்.
    • சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை தங்கள் வலையில் வீழ்த்தி உள்ளனர்.

    மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மீதும் இந்த அரசு ஜெட் வரி விதித்ததால் மாதத்திற்கு அரசுக்கு ரூ.750 கோடி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் இறால் மீன்களின் விலையை கிலோவுக்கு ரூ.240-ல் இருந்து 210 ரூபாயாக இந்த அரசு குறைத்து விட்டது.

    இதனால் விவசாயிகள் எப்படி பிழைப்பார்கள் என எண்ணிப் பார்க்கவில்லை. கூட்டத்திற்கு ஆதோனி, எமிகானூர், கடப்பா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் கலந்து கொண்டதால் அந்த மாவட்டத் தலைவர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து ஜெகன்மோகன் நீக்கி விட்டார்.

    வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிக்கும். குப்பம் தொகுதி மட்டுமல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியான புலி வேந்தலா உட்பட 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலம் சீரழிவை சந்திக்க நேரிடும் என்றார்.

    சந்திரபாபு நாயுடு பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக குண்டூரில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:-

    தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை.

    எதிர்க்கட்சியாக உள்ளதால் எங்கள் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

    • திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
    • கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அவர் பேசுகையில்:-

    முதல்-அமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நான் திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    அது மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். அமைச்சராக உயர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் பரதநாட்டியம் குச்சிப்புடி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜாவும் கலைக்குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.

    இதனைக் கண்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    • நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளதால், ஆளுங்கட்சியாக உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்வதற்காக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக எம்.எல்.ஏக்களை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல் எதிர்க்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் எப்படியாவது ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக ஆந்திரா முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆளும் கட்சியில் உள்ள குறைகளை பொதுமக்களிடம் கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    சமீபத்தில் சந்திரபாபு நாயுடு நகரி தொகுதியில் உள்ள புத்தூரில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடத்தினார். இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது சந்திரபாபு நாயுடு அமைச்சர் ரோஜா மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் பொது மக்களுக்கு சரியாக கிடைக்கிறதா என கேட்டு குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான ரோஜா நகரியில் நேற்று வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் அமைச்சர் ரோஜாவுக்கு மாலை அணிவித்தும் மேள தாளங்கள் முழுங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அரசு சார்பில் வழங்கப்படும் முதியோர் பென்ஷன், விதவை பென்ஷன் உள்ளிட்டவை கிடைக்கிறதா? ரேசன் பொருட்கள் சரியான அளவில் வீடு தேடி வருகிறதா, வீட்டு மனை, பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    ஆந்திர சட்டசபைக்கு தேர்தல் வர இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் ஆந்திராவில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருவதால் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

    ×