search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter died"

    • வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார்
    • சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது

    வெள்ளகோவில் : 

    வெள்ளகோவில் அருகே உள்ள ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் (வயது 29) என்பவர் தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து, அதில் தங்கி கொண்டு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று சந்திரகுமார், அளவுக்கு மீறி மது குடித்துவிட்டு, சாப்பிட்டு விட்டு வீட்டின் முன்பு படுத்திருந்ததாக தெரிகிறது. பின்னர் அடுத்த நாள் காலையில் பார்க்கும்போது சந்திரகுமார் தான் படுத்திருந்த திண்ணையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சென்று பார்த்துள்ளனர். இந்நிலையில் சந்திரகுமார் மூச்சு பேச்சு இன்றி கிடந்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துள்ளது தெரிய வந்தது. அளவுக்கு மீறி மது குடித்து விட்டு இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) பெயிண்டர்.

    இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • குடி பழக்கத்துக் அடிமையான வாலிபருக்கு இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.
    • தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்தவர் கணபதி (வயது42). திருமண மாகாதவர். குடி பழக்கத்துக் அடிமையானவர். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வந்துள்ளது.

    பெயிண்டிங் வேலை பார்த்து வந்த கணபதிக்கு சம்பவத்தன்று சீலையம்பட்டி சமத்துவ புரத்தில் வேலை பார்த்தபோது வலிப்பு ஏற்பட்டது. அப்போது தண்ணீர் என நினைத்து தின்னரை குடித்து விட்டார்.

    தேனி க.விலக்கு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் கருப்புத்துரை கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார்.
    • உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.

    பெரும்பாறை:

    திண் டுக்கல் மாவட்டம் பெரும் பாறை அருகே உள்ள மங்களம் கொம்பு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி மகன் மங்களகார்த்தி (வயது 38). பெயிண்டர் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர் கும்பரையூர் ஊராட்சி மன்ற அலுவலக த்தின் மேல் பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது சுவர் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பி அவர் மீது உரசியதில் தூக்கி வீச ப்பட்டு உயிரி ழந்தார்.

    • பஸ் படிகட்டில் பயணம் செய்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் பெங்களூருவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு இவர் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்சில் வந்ததார். பின்னர் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை சுமார் 2 மணி அளவில் அரசு பஸ்சில் பெரணம்பாக்கம் நோக்கி சென்றார். பஸ்சில் அதிக அளவில் பயணிகள் இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    திருவண்ணாமலையை அடுத்த இனம்காரியந்தல் அருகில் உள்ள சுங்கச்சாவடி வழியாக பஸ் செல்லும் போது படியில் தொங்கிக் கொண்டிருந்த சேட்டு எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மாதங்களாக வேலை செய்து வந்தார்.
    • சிமிண்ட் சீட் உடைந்து கீழே விழுந்தார்.

    கோவை

    கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் புஸ்பராஜ் (வயது 45). பெயிண்டர். இவர் வேலைக்காக கோவை மாவட்டம் பொள்ளாச்சி வந்தார்.

    பின்னர் அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அங்கு கடந்த 2 மாதங்களாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல மில்லுக்கு வேலைக்கு சென்றார்.

    அங்கு 15 அடி உயரத்தில் சிமிண்ட் சீட் மீது நின்று பெயிண்ட் அடித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சிமிண்ட் சீட் உடைந்து புஸ்பராஜ் கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து புஸ்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போளூர் அருகே பைக் மீது மற்றொரு பைக் மோதிய விபத்தில் பெயிண்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    போளூர்:

    போளூர் அங்காள பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது48) பெயிண்டர். இவர் இன்று காலை அத்திமூர் கிராமத்திற்கு வேலைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    போளூர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பிச்சாண்டி பலத்தகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த போளூர் போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×