என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Peacock"
- பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து வீடியோ பதிவிட்டுள்ளார்.
- காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தார்.
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்ந்தவர் பிரணாய் குமார்.
பாராம்பரிய உணவு வகைகளைச் சமைத்து அந்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் பிரணாய் பாரம்பரிய மயில் கறி என்ற பெயரில் தேசியப் பறவையான மயிலை சமைத்து அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
ஆனால் மயிலை கொல்வது சட்டவிரோதம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றத்தை உறுதி செய்த பின் அவரை கைது செய்து விரைவில் சிறையில் அடிப்போம் எனவும் சிர்சில்லா மாவட்ட எஸ்.பி ராஜண்ணா உறுதியளித்துள்ளார்.
சர்ச்சைக்குப்பிறகு பிரணாய், மயில் கறி வீடியோவை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்கியுள்ளார். எனினும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரணாய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது.
- இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த நரங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன்.
இவருக்கு சொந்தமான 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணறு ஒன்று அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில் தேசிய பறவையான மயில் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இது குறித்து சென்னை தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கு சுப்பிரமணியன் தகவல் கொடுத்தார். உயர் அதிகாரிகளின் உத்தரவின் பெயரில் கந்தர்வகோட்டை தீயணைப்பு போலீசார் விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிய மயிலை உயிருடன் மீட்டு வனத்தில் விட்டனர்.
- பக்தர்கள் மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
- ஆனால், சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவிரி வடகரையில் வதான்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
புகழ் பெற்ற குரு பரிகாரம் கோவிலில் தினம் தோறும் அப்பகுதியில் வசிக்கும் மயில் ஒன்று வந்து உலாவி விட்டு செல்வது வழக்கம்.
சம்பவதன்று கோயிலுக்கு வந்துவிட்டு மீண்டும் பறந்து சென்ற பொழுது கோயில் ஆர்ச் அருகே இருந்த மின் கம்பியில் பட்டு உயிருக்கு போராடியது.
இதை பார்த்த பக்தர்கள் மயிலுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மயில் பரிதாபமாக உயிரிழந்தது.
மயிலின் உடலை சீர்காழி வனத்துறையினர் கைப்பற்றி கொண்டு சென்றனர் இச்ச சம்பவம் பக்தர்கள் இடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது.
- மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தில் வசிப்பவர் முத்துக்குமாரசாமி(வயது 51). இவர் ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி 5வது வார்டு உறுப்பினராக உள்ளார். நேற்று இவரது வீட்டில் தேசிய பறவையான ஆண் மயில் ஒன்று வந்து விழுந்தது. அதன் கால்களில் காயம் ஏற்பட்டு அது நடக்க முடியாமல் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த முத்துக்குமாரசாமி குடும்பத்தினர் மயிலுக்கு உணவு கொடுத்து தண்ணீர் கொடுத்து பராமரிப்பு செய்தனர்.
பின்னர் இது குறித்து திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் வன காவலர் வெங்கடேஸை அனுப்பி காயம்பட்ட அந்த மயிலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்தார்.மேலும் மயிலை காப்பாற்றிய அந்த குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
தேசிய பறவையான மயிலை காப்பாற்றி உணவு கொடுத்து பராமரித்த முத்துக்குமாரசாமி குடும்பத்தாருக்கும், உடனடி நடவடிக்கை எடுத்து மயிலுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த வனத்துறைக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது.
- பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.
அவிநாசி:
புளிம்பட்டியில் இருந்து அவிநாசி நோக்கி குரும்பபாளையம் அருகே தனியாா் பேருந்து வந்தபோது, அவ்வழியாக பறந்து வந்த பெண் மயில் பேருந்தின் முகப்பு கண்ணாடியில் அடிபட்டு காயமடைந்தது. இதில் பேருந்தின் முகப்பு கண்ணாடி முழுவதும் உடைந்தது.
மேலும், பலத்த காயமடைந்த மயிலை அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி பெரியசாமி என்பவா் மீட்டு, சேவூா் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளித்தாா். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், மயிலை மீட்டு வனப் பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றாா்.
இதில் கடந்த பிப்ரவரி மாதம் தனது தோட்டத்துக்குள் நாய்கள் துரத்தி வந்த புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் பெரியசாமி ஒப்படைத்தாா்.
அதேபோல தற்போது பேருந்தில் அடிபட்ட காயமடைந்த மயிலை மீட்டு முதலுதவி அளித்த பெரியசாமியை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.
- காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது.
- போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் இன்று மதியம் கார் ஒன்று லாரன்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த காரை நாகராஜ் என்பவர் ஓட்டி சென்றார். அந்த காரின் மேலே மயில் ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் நாகராஜ் ஓட்டி சென்ற காரை வழிமறித்து காரின் மீது இருந்த மயிலை பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் வன ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் செல்லா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மயிலை மீட்டார். இதனைத் தொடர்ந்து மயில் அமர்ந்து வந்த கார் எங்கிருந்து வந்தது? எந்த ஊரை சேர்ந்தது? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் கார் மீது மயில் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
- பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது.
- வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த அடக்கம் செய்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் கச்சேரி வலசு பகுதியில் நேற்று பெண் மயில் ஒன்று டிரான்ஸ்பார்மரில் மோதி அடிபட்டு இறந்து விட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நாகராஜ் ,வனத்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நில வருவாய் அலுவலர்களுக்கு தகவல் பகொடுத்தார். பிறகு வெள்ளகோவில் கால்நடை மருத்துவ அலுவலர் பகலவன் மயிலை பிரேதப் பரிசோதனை செய்த பிறகு கச்சேரி வலசு பகுதியிலேயே மயிலை அடக்கம் செய்தனர்.
- சோதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும்.
- ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது.
அந்தியூர்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்து வரட்டுப்பள்ளம் அணை உள்ளது.
இந்த அணையின் அருகே உள்ள ேசாதனை சாவடி பகுதி மிகவும் குளிர்ச்சியாக இருக்கக்கூடிய பகுதியாகும். இந்த பகுதியில் மயில்கள் அதிக அளவில் உள்ளது. அவ்வப்போது மயில்கள் அந்த பகுதியில் உள்ள விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் வருகிறது.
இந்த நிலையில் மாலை நேரத்தில் ஆண் மயில் ஒன்று தனது தோகையை விரித்து ஆடி கொண்டிருந்தது. இதனை அந்தப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து ரசித்தனர்.
மேலும் தங்களது செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தனர். மயில் தோகை விரித்து ஆடினால் மழை வரும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதே போல் மயில் ேதாகை விரித்து ஆடியதும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் மழையும் தூறியது.
- அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
- மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது.
திருப்பூர் :
பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திகுமார் ஓட்டி சென்றார். பஸ் பல்லடம் அடுத்த சின்னிய கவுண்டன் பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே மயில் ஒன்று பறந்து வந்து பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பஸ்ஸில் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள் தூளானது.
மேலும் மயில் பஸ்ஸில் உள்ளே விழுந்து இறந்தது. இதில் பஸ்ஸில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் இது குறித்து டிரைவர் சக்திவேல் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் வனத்துறையினருடன் இறந்த மயிலை மீட்டு சென்றனர். பின்னர் பயணிகளை வேறொரு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
- 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
- தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
காங்கயம் :
காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
- தியாகதுருகம் அருகே கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
- கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே தியாகை ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை (வயது 62), விவசாயி, இவருக்கு அதே பகுதியில் உள்ள முனியப்பர் கோவில் அருகே விவசாய கிணறு மற்றும் நிலம் உள்ளது. நேற்று கிணற்றுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக மின்சார வாரிய அதிகாரிகள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மின்வாரிய அதிகாரி ஒருவர் கிணற்றை எட்டிப் பார்த்தபோது கிணற்றின் சுற்று சுவரில் முட்டைகளை அடைகாத்து க்கொண்டிருந்த மயில் திடீரென பறந்தபோது தவறி கிணற்றில் விழுந்தது. இது குறித்து அங்கிருந்தவர்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் கார்த்திகேயன், அருணாச்சலம், சந்தோஷ்குமார், ஜெகன், சங்கர் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 50 அடி க கிணற்றில் தண்ணீரில் விழுந்து கிடந்த பெண் மயிலை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சிறுவல் காட்டில் பத்திரமாக விட்டு சென்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்