search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
    • 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.

    இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி நிர்வாக அனுமதி பெறாமலும் பணிகள் நடக்கிறது.
    • கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சால் பொதுமக்கள், நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்படுவர்.

    சீர்காழி:

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமாரை சந்தித்து திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    திருமுல்லைவாசல் காந்திநகரில் குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகருகே அமைந்துள்ள இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக புதிய 5ஜி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி மன்ற நிர்வாக அனுமதி பெறாமலும், இந்த பணி நடக்கிறது.

    செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.

    எனவே உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
    • ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபா ளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலுார், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.

    கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித் துறை பூங்கா அமைக்கப்பட் டது. மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளை யாடக்கூடிய சீசா போன்ற வையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து, பூங்காவில் பொழுதை குதூ கலமாக கழித்து ஜேடர்பா ளையம் அணைக் கட்டு பகுதியில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

    இந்நிலையில் தற்போது ஜேடர்பாளையம் அணைக் கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் மற்றும் அணைக்கட்டு பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த மாதம் மட்டும் 4 பேர் உயிரிழந்த உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு குடிபோ தையில் இளை ஞர்கள் குளிக்க வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தற்காலிகமாக ஜேடர்பாளை யம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பூங்காவிற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி, குளிக்க அனுமதி கிடையாது என்று பொதுப்ப ணித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் நேரடியாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
    • அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் வார்டு வாரியாக நேரடியாக சென்று குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

    இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை சந்தித்தார்.

    இந்நிலையில் டூவி புரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொது மக்களிடம் நேரடி யாக மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

    அதில் சிலர் வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.

    அதை பெற்றுக்கொண்டு அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் அக்கறை கொண்டு 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி யில் செயல்படுத்தாமல் பல பணிகளை முறைப் படுத்தாமல் இருந்ததை தற்போது முறைப்படுத்தி செய்து வருகிறோம். மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகளை ஒவ்வொன்றாக முழுமையாக தீர்த்து வைப்போம் என்றார்.

    இதில், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டு ராஜா, கஸ்தூரிதங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், நாகேஸ்வரி, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், கடம்பூர் பேரூராட்சி கவுன்சிலர் நாகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
    • பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முன்தினம் 2-வது முறையாக ஏற்பட்ட நில அதிர்வில் பொன்னுக்கரை நேதாஜி வீதியில் உள்ள இரு வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. திருக்கூர், அழகப்பநகர், வரந்தரப்பள்ளி, புதுக்காடு, நென்மணிகரை ஆகிய ஊராட்சிகளில் பல இடங்களில் நிலஅதிர்வும், வெடிச்சத்தமும் ஏற்பட்டது.

    இந்நிலையில் திருச்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் பல இடங்களில் நில அதிர்வு மற்றும் வெடி சத்தம் ஏற்பட்டது. கடந்த 2 முறை நில அதிர்வு ஏற்பட்ட இடங்களில், நேற்று அதிகமாக உணரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சில இடங்களில் வீடுகளில் இருந்த பாத்திரங்கள் மற்றும் பொருட்கள் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நில அதிர்வால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என மாவட்ட கலெக்டர் கிருஷ்ணதேஜா தெரிவித்துள்ளார்.

    • பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது
    • பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படியும் , தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக செயல்பட்டுவரும் டான்ஹோடா விற்பனை நிலையத்தில் பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது . இங்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் தினசரி டான்ஹோடா விற்பனை நிலையத்தை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறும்படி கேட்டுக்கொ ள்ளப்பட்டனர்.இந்நிகழ்ச்சி யில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் , தோட்டக்க லை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி , தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடாசலபதி ,வேளாண்மை உதவி அலுவலர் அமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநிலம் முழுவதிலும் இருந்து வருபவர்கள் சென்னையில் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.
    • பொது மக்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அவர் அமரும் முன் இருக்கை கொஞ்சம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதுகுவலி, மூட்டுவலி என்று சிறுசிறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டாலும் தலைநகர் சென்னைக்கு வராமல் சேலத்திலேயே பெரும்பாலான நாட்கள் இருந்து விடுகிறாரே என்று கழக கண்மணிகள் ஆதங்கப்படுகிறார்கள். மாநிலம் முழுவதிலும் இருந்து வருபவர்கள் சென்னையில் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள்.

    சேலத்தில் உடலுக்கு சற்று ஓய்வு கொடுத்து கொண்டிருந்தாலும் கட்சியின் முக்கிய வேலைகளில் தீவிரமாகவே இருக்கிறார்கள். தேர்தல் பிரசாரத்துக்கான புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். பொது மக்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அவர் அமரும் முன் இருக்கை கொஞ்சம் உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. காரின் இரு புறமும் பாதுகாப்பு படையினர் நின்று கொண்டு வர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    • மதுக்கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள வீரடிப்பட்டி (வீரப்பையா சுவாமி கோவில் அருகில்) புதிதாக அரசு மதுபானகடை ஒன்று திறக்கப்பட இருந்தது.

    இதைத் தொடர்ந்து இப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான இன்று காலை ஒன்று திரண்டு புதிதாக அரசு மதுபான கடை இந்த பகுதியில் திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில்,

    புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான கடை அருகே பிரசித்தி பெற்ற வீரப்பையா சுவாமி கோவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது பொதுமக்கள் அதிகம் குடியிருப்பு உள்ளது கடை திறக்க கூடாது என கூறி கடைக்குள் மதுபான பாட்டில்களை கொண்டு செல்ல விட மாட்டோம் என்றனர்.

    இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அமைதி பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை செய்யப்படும் என்று ள் உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சோழவந்தான் பகுதி ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.
    • வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன் உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு மனு கொடுத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பகுதியில் உள்ள ஊராட்சி அலுவலகங்களில் கிராம பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது .

    சோழவந்தான் அருகே நாச்சிகுளம் ஊராட்சியில் நடந்த சிறப்பு முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுகுமாரன் தலைமை ஏற்று கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி, தோட்டக் கலை மாரிச்செல்வம், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கருப்பட்டி ஊராட்சியில் தலைவர் அம்பிகா மனுக்கள் பெற்றுக் கொண்டார். கிராம நிர்வாக அலுவலர் பழனி, துணைத்தலைவர் சித்ராதேவி, ஊராட்சி செயலாளர் முனியாண்டி மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    இரும்பாடி ஊராட்சியில் தலைவர் ஈஸ்வரி பண்ணை செல்வம் மனுக்களை பெற்றுக் கொண்டார். துணைத்தலைவர் பிரியா சேகர், ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    தென்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார் துணைத்தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் முனியராஜ். கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், கால்நடை ஆய்வாளர் ஜெயராமச்சந்தி ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் கேபிள் ராஜா முன்னிலை வகித்தார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    வாடிப்பட்டி யூனியன் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிச்சை மணி, ஊராட்சி செயலாளர் மனோபாரதி, கிராம நிர்வாக அலுவலர் பிரபாக ரன் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    மன்னாடிமங்கலம் ஊராட்சியில் தலைவர் பவுன் முருகன், துணைத் தலைவர் பாக்கியம் செல்வம், ஊராட்சி செயலா ளர் திருச்செந்தில் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன், ஊராட்சி செயலாளர் ஒய்யனன் ஆகியோர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இதேபோல் மேலக்கால், திருவேடகம், நெடுங்குளம், திருவாளவாயநல்லூர், சித்தாலங்குடி, சி.புதூர், ரிஷபம், குருவித்துறை ஆகிய ஊர்களிலும் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டனர்.

    இந்த முகாமில் வீடு இல்லாதவர்கள் வீடு கேட்டு, முதியோர் பென்சன், குடிநீர் குழாய் இணைப்பு உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனு கொடுத்தனர்.

    • 9-வது வார்டுக்குட்பட்ட பூபால்ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.
    • அப்பகுதியில் குடியிருக்கும் பலர் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் இன்னும் பட்டா வழங்கவில்லை அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் 9-வது வார்டுக்குட்பட்ட பூபால்ராயர்புரம் மெயின் 5-வது தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

    அமைச்சர் உத்தரவு

    அப்போது அதில் சில பகுதி களுக்கு சீரான முறை யில் தண்ணீர் வரவில்லை. சாலைகளும் சேதம் அடைந்து நிலையில் உள்ளது என்று எடுத்துக் கூறினார்கள். அனைத்து தரப்பி னரின் கோரிக்கை களும் முழுமையாக கேட்டறிந்து மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் வழங்கி அதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    பின்னர் பூபால் ராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதி களில் சில குறைபாடு கள் இருப்பதை சரிசெய்ய வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர். அப்பகுதியில் குடியிருக்கும் பலர் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் இன்னும் பட்டா வழங்க வில்லை அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    சீரான குடிநீர்

    அவர்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறியதாவது:-

    இந்தபகுதியில் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரி க்கைகளின் அடிப்படையில் புதிய தார்சாலை, குடி தண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதி களுக்கும் அமைக்கப்ப டாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும்.

    மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரி களிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைக ளையும் முழுமையாக நிறை வேற்றி தருவேன். விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.

    அப்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணன், கவுன்சிலர் ஜெபஸ்டின் சுதா, வட்டச் செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனிய சாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரி கணேஷ், கல்யாண சுந்தரம், ஆணை யரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மணி, அல்பட், காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கண்தானம் வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.
    • பொதுமக்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரிமா சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட துணை ஆளுநர் சவரிராஜ் தலைமை தாங்கினார்.

    மண்டல தலைவர் ராமஜெயம், வட்டார தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு கடந்த ஆண்டு 103 ஜோடி கண்களை தானமாக வழங்கியவர்களின் குடும்பங்களை பாராட்டி கவுரவித்தார்.

    மேலும், 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 2023-24-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகளை துணை ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    தலைவராக செந்தில்குமார், செயலாளராக செந்தில் நாதன், பொருளாளராக திருமுருகன் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதில் பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக அமைச்சர் கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன் என்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சரு மான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் 8-வது வார்டுக்குட்பட்ட சிறுமலர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்தபகுதியில் குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய தார்சாலை, குடி தண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடி தண்ணீர், இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதிகளுக்கும் அமைக்கப்படாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும்.

    மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடை பெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.

    இதில், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் தினேஷ்குமார், மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற் பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர் பவாணி மார்ஷல், வட்டச்செயலாளர் ரவிசந்திரன் மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×