என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "road accidents"
- 1.46 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலை முழுவதும் இத்திட்டதில் கொண்டு வரப்படுகிறது
- பொறியியல் மாணவர்களையும் இதில் ஈடுபடுத்த அரசு முடிவெடுத்திருக்கிறது
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways) அனைத்தையும் குழிகள் மற்றும் பள்ளங்கள் அறவே இல்லாத சாலைகளாக மாற்றுவதற்கான வழிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கென காலக்கெடுவையும் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. சாலைவழிகளை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான யணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பொறுப்பில் உள்ள ஒவ்வொரு திட்ட இயக்குனரும் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலைகளின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட வேண்டும், மேலும், அங்கு எழும் எந்தவொரு பராமரிப்பு சிக்கல்களையும் உடனடியாக தீர்க்க வேண்டும். இப்பணியை சரிவர செய்யாத பொறியாளர்கள் மீது நடவடிக்கைகள் பாயும் என தெரிகிறது.
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 1.46 லட்சம் கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை இந்த நடைமுறைக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
குழிகளைக் கண்டறிவது, பராமரிப்பு குறைபாடுகளை அடையாளம் காண்பது, வடிகால்கள் அமைப்பது உள்ளிட்ட இந்த செயல்முறையை நடைமுறைப்படுத்த பொறியியல் மாணவர்களை ஈடுபடுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்களினால் மட்டுமே 3625 சாலை விபத்துக்கள் நடைபெற்றதாகவும் அதில் சிக்கி இதுவரை 1481 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2021-ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இப்பின்னணியில் அரசின் இந்த நடவடிக்கை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது
- ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10-ஆக குறைக்க முடியும் என்றார்.
அவினாசி:
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கருப்பராய சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 3-ந் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அனுப்பர்பாளையம்புதூர் உதயம் நற்பணி மன்றம் சார்பில், குடும்ப உறவுகளை பேணி காப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆசைத்தம்பி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். அப்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியது அவசியம். ஹெல்மெட் அணிவதன் மூலம் ஆண்டுக்கு 100 பேர் உயிரிழப்பு என்பதை 10ஆக குறைக்க முடியும் என்றார்.
- சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
காங்கயம் :
சாலை விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக பதிவேட்டின்படி காங்கயம் தாலுகா பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 981 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 155 பேரும், 2018-ம் ஆண்டில் 174 பேரும், 2019-ம் ஆண்டில் 182 பேரும், 2020-ம் ஆண்டில் 163 பேரும், 2021-ம் ஆண்டில் 147 பேரும், 2022-ம் ஆண்டில் 160 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலேயே கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் காங்கயம் தாலுகா பகுதியில் 981 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.காங்கயம் பகுதியில் விபத்துகளை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகிறது.
- புவனகிரி விருத்தாசலம் சாலையில் விருந்தினர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகனஓட்டிகள் புகார்,
- விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர்
கடலூர்:
புவனகிரி விருத்தாச்ச லம் சாலையில் விருந்தி னர்மாளிகையில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்பட்டு கனரக வாகனங்கள் இயக்குவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே இடத்தில் 2 விபத்துக்கள் நடைபெற்று இருவரும் சம்பவ இடத்திலேயே நசுங்கி உயிரிழந்தனர்.
இதற்குகாரணம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமி ப்புகளை அகற்றாமல் பல்வேறு இடங்களில் சாலை சேதமடைந்து இருப்பதையும் சரி செய்யாமலும் இரு ப்பதால்தான் இது போன்ற விபத்துக்கள் நடக்கிறதுஎன்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர் ஆகையால் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை தகவலாகவும் தொ லைபேசி வாயிலாகவும் கடிதம் மூலமும் தெரிவித்தி ருப்பது தெரிய வந்தது. ஆகையால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இதனை ஆய்வு மேற்கொண்டு இதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
நாகை அருகே பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். ஊர்வக்காவல்படை மண்டல தளபதி ஆனந்த் வரவேற்றார். விழிப்புணர்வு ஊர்வலத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்தப்படி போலீசார் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலம் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதை தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற சாலை விழிப்புணர்வு முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த தான் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம். அவ்வாறு ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிள் விபத்துகளில் இறக்கின்றனர். அதில் பெரும்பாலும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிந்து 4 சக்கர வாகனங்களை ஓட்டவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தினர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து ஓட்டக்கோவில் வரை சாலையில் முகப்பு குவி கண்ணாடி வைத்தல், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்காக ரூ.30 லட்சம் செலவு செய்வதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மற்ற தனியார் சிமெண்டு நிறுவனத்தினர் சாலை விபத்தை தடுக்க தடுப்பு அரண்கள், தகுந்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தர கூட்டத்தில் சம்மதித்தனர்.
பின்னர் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை பைபாஸ் சாலையில் கண் கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கருப்பு வில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார்.
சாலை விபத்துக்களினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றை தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த கோவையில் உயிர் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்பின் தொடக்க விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி உயிர் அமைப்பை தொடங்கி வைத்தார்.
இந்த அமைப்பின் தலைவர் சஞ்ஜெய் ஜெயவர்த்தன வேலு வரவேற்று பேசினார். நிர்வாக அறங்காவலர் கங்கா மருத்துவமனை டாக்டர். ராஜசேகரன் அறிமுக உரையாற்றினார். இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த அமைப்பின் புரவலர்களாக சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், பண்ணாரி கல்வி குழுமம் டாக்டர். பாலசுப்பிரமணியம் மற்றும் டாக்டர். சண்முகநாதன் ஆகியோர் செயலாற்றுகிறார்கள்.
கோவையின் முக்கிய பிரமுகர்கள், முதன்மையான பெரு நிறுவனங்கள, தொழிலகங்கள் என பலர் இந்த அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
தொடக்க விழாவில் உயிர் அமைப்பின் உயிர் காக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு அதிகாரிகளுடன் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து உயிர் சேதம் தவிர்க்க எல்லா வகையிலும் ஒத்துழைப்போம் என கோவையின் பொது நல அமைப்புகள், தொழில் அமைப்புகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், ஆன்மீக அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து உறுதியேற்பு எடுத்து கொள்ளும் ஸ்ரீமஹா சங்கல்பம் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், ஆன்மீக அமைப்பினர் கலந்து கொண்டனர். #TNCM #EdappadiPalaniswami #RoadAccident
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்