search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • நடந்த 11 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 10 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார்.
    • ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

    மும்பை:

    மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 6 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 6 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

    இந்த சீசனில் நடந்த 11 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 10 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்த நிலையில், மேலும் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காராராகி உள்ளார் ரோகித் சர்மா. அவர் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.

    ஐபிஎல்-லில் ரோகித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. அவர் இதற்கு முன்பு 2017 ல் நடந்த ஐபிஎல்-லில் தொடர்ச்சியாக 4 முறை ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்திருந்தார்.

    ஆனால், தற்போது 5 போட்டிகளில் 2(8), 3(5), 0(3), 0(3), 7(8) ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி தனது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டானாலும், சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால், 200 ரன்கள் இலக்கை எளிதில் கடந்து மும்பை வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார்.
    • அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 10 போட்டிகளில் 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பதிவு செய்து தடுமாறி வருகிறது. இதுவரை பதிவு செய்த 5 வெற்றிகளுமே பேட்ஸ்மேன்களின் போராட்டத்தால் கிடைத்து என்றால் மிகையாகாது.

    இந்த சீசனில் நடந்த 10 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு அரை சதம் மட்டுமே அடித்து எஞ்சிய 9 போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் (16) மற்றும் கேப்டன் (10) ஆகிய இரட்டை மோசமான சாதனைகளை படைத்துள்ளார்.

    இந்நிலையில் டெக்னிக்கல் அளவில் எந்த தடுமாற்றமும் இல்லாத நிலைமையில் மனதளவில் பிரச்சனை இருப்பதே ரோகித் சர்மா இப்படி தருமாறுவதற்கு காரணம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா களத்தில் பந்து வீச்சாளர்களுடன் பலப்பரீட்சை நடத்தவில்லை. மாறாக தமக்கு தாமே போட்டியிட்டு வருகிறார். அவரிடம் மனதளவில் ஏதோ ஒரு தேக்கம் இருக்கிறது. ஏனெனில் தற்போது அவருடைய பேட்டிங்கில் டெக்னிக்கல் அளவில் எந்த பிரச்சனையும் இருப்பதாக தெரியவில்லை.

    ஆனால் அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினால் பெரிய ரன்களை எடுத்து முந்தைய போட்டிகளில் செய்த சொதப்பலை அவரால் ஈடு செய்ய முடியும்.

    என்று சேவாக் கூறினார். 

    • மும்பை இந்தியன்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது.
    • ரோகித் சர்மாவின் தடுமாற்றம் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் பரபரப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது. பிளே ஆப் சுற்றுக்குள் முன்னேறுவதற்கு இதுவரை அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், வெற்றிக்காக அனைத்து அணிகளும் போராடும்.

    இந்த சூழலில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.

    5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இனி ஒவ்வொரு ஆட்டமும் அந்த அணிக்கு முக்கியமானது. எஞ்சிய 4 லீக்கிலும் வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 139 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவிய மும்பை அணி சொந்த ஊரில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியுடன் களம் காணுகிறது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் தடுமாற்றம் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கடைசி 4 ஆட்டங்களில் ஒற்றை இலக்கத்தை கூட தாண்டவில்லை. இதில் இரு 'டக்-அவுட்'டும் அடங்கும். பேட்டிங்குக்கு உகந்த வான்கடே மைதானத்தில் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் அவர் மீண்டும் ரன்வேட்டை நடத்துவாரா என்பதே ரசிகர்களின் ஆவலாகும். பந்துவீச்சை பொறுத்தவரை மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவை (17 விக்கெட்) தவிர மற்றவர்களின் பவுலிங் மெச்சும்படி இல்லை.

    பெங்களூரு அணியும் இதே நிலையில் தான் (5 வெற்றி, 5 தோல்வி) இருக்கிறது. விராட் கோலி (6 அரைசதத்துடன் 419 ரன்), பாப் டு பிளிஸ்சிஸ் (5 அரைசதத்துடன் 511 ரன்) தொடர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், மிடில் வரிசை ஒருசேர கைகொடுப்பதில்லை. குறிப்பாக 'அதிரடிபுயல்' மேக்ஸ்வெல் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே ஜொலித்துள்ளார்.

    கோலி கூட டெல்லிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த போது, மந்தமான பேட்டிங் என்று விமர்சனத்திற்குள்ளானது. நல்ல தொடக்கம் கிடைத்தால் கோலி தனது உத்வேகத்தை எந்த காரணத்தை கொண்டும் குறைக்க கூடாது என்று முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் அவர் துரிதமான ரன் குவிப்பில் கவனம் செலுத்துவார் என்று நம்பலாம்.

    பந்து வீச்சில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவிடம் இருந்து (7 ஆட்டத்தில் 7 விக்கெட்) இன்னும் முழுமையான சுழல் ஜாலத்தை பார்க்க முடியவில்லை. எனவே ஒருங்கிணைந்து ஆடினால் மும்பையை முடக்கலாம். ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு பந்தாடியது குறிப்பிடத்தக்கது.

    • சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார்.
    • ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

    சென்னை:

    சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று வரும் ஐ.பி.எல். லீக் சுற்று போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டனான ரோகித் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். 5 பந்துகள் மட்டும் சந்தித்த அவர் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஜடேஜா வசம் கேட்சாகி அவுட்டானார்.

    இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரரானார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.

    இந்த வரிசையில் சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14), ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே (தலா 13 முறை), கவுதம் கம்பீர் (12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், வார்னர், கோலி ஆகியோர் (தலா 10) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்

    • இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
    • டிம் டேவிட், திலக் வர்மா ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.

    மொகாலி:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு மொகாலியில் நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. லிவிங்ஸ்டன் 82 ரன்னும், ஜிதேஷ் சர்மா 49 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய மும்பை அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 41 பந்தில் 75 ரன்னும், சூர்ய குமார் யாதவ் 31 பந்தில் 66 ரன்னும் எடுத்தனர்.

    வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் 140 முதல் 150 ரன்கள் வரை வெற்றிகரமான ஸ்கோராக இருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தை பாருங்கள். கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.

    இந்த ஐ.பி.எல்.லில் சராசரி ஸ்கோர் 180 ஆக இருக்கிறது. இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தனர். டிம் டேவிட், திலக் வர்மா ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தனர்.

    இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு எப்படி விளையாட வேண்டும் என்று பேசினோம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் பேட்டிங்கில் பயமின்றி விளையாட விரும்பினோம்.

    முடிவுகள் பற்றி அடிக்கடி நினைத்தால் உங்கள் திட்டங்களில் இருந்து விலகி சென்று விடுவீர்கள். இஷான் கிஷனிடம் நிறைய சக்தி-திறமை இருக்கிறது. அவர் பயிற்சியில் மேற்கொண்ட ஷாட்களை இந்த ஆட்டத்தில் பார்த்தோம்.

    3 அல்லது 4 ஆட்டங்களில் நாங்கள் 200 ரன்களை விட்டுக் கொடுத்தோம். அதனை சரி செய்ய வேண்டும். நடு ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மும்பை அணி 5-வது வெற்றியை (9 ஆட்டம்) பெற்றது. பஞ்சாப் 5-வது தோல்வியை (10 ஆட்டம்) சந்தித்தது.

    • இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
    • இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும்.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப் கொண்டுள்ள மும்பை அணிக்கு பவுலிங் தான் சங்கடம் கொடுத்து வருகிறது. 7 போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் 181 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர் இந்த சீசனின் கடைசி சில போட்டிகளில் விளையாட மீண்டும் வரலாம். ஆனால், இப்போதைக்கு அவர் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது தேவையான ஒன்று.

    என சுனில் கவாஸ்கர் கூறினார்.

    • ஏப்ரல் 20-ந்தேதிக்குள் சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்கில் புளூ டிக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.
    • மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் கணக்குகளில் புளூ டிக் அகற்றப்பட்டு உள்ளது.

    மும்பை:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை உலக பணக்காரான எலான் மஸ்க் வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

    இதில் பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் கணக்கில் 'புளூ டிக்' பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவை சேர்ந்த பயனர்கள் மாதம் ரூ.900 சந்தா செலுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஏப்ரல் 20-ந்தேதிக்குள் சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்கில் புளூ டிக்குகள் நீக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

    அதன்படி சந்தா கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் நீக்கப்பட்டன. இதில் கிரிக்கெட் வீரர்கள் டோனி, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் டுவிட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் சில கிரிக்கெட் வீரர்களின் கணக்குகளில் புளூ டிக் அகற்றப்பட்டு உள்ளது.

    இதே போல பிரபல அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் என பலரின் டுவிட்டரில் புளூ டிக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

    • மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது.
    • ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி மும்பை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

    ஐதராபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. இதனால் ஐதராபாத் அணிக்கு 193 ரன் இலக்காக இருந்தது.

    கேமரூன் கிரீன் 40 பந்தில் 64 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), திலக் வர்மா 17 பந்தில் 37 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர், கேப்டன் ரோகித்சர்மா 18 பந்தில் 28 ரன்னும் 16 பவுண்டரி) எடுத்தனர். மார்கோ வின்ஜான் 2 விக்கெட்டும், புவனேஷ்வர் குமார், டி நடராஜன் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஐதராபாத் அணி 19.5 ஓவர்களில் 178 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மயங்க் அகர்வால் 41 பந்தில் 48 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கிளாசன் 16 பந்தில் 36 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஜேசன் பெஹரன் டார்ப், ரிலே மெர்டிக் பியூஸ் சாவலா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    தெண்டுல்கரின் மகனான அர்ஜூன் தெண்டுல்கர் இந்த போட்டியில் புவனேஷ்வர் குமாரை அவுட் செய்தார். அவர் கைப்பற்றிய முதல் ஐ.பி.எல். விக்கெட் ஆகும். தனது 2-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் முதல் விக்கெட்டை எடுத்தார்.

    மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. அந்த அணி முதல் 2 ஆட்டத்தில் தோற்றது. பின்னர் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்றது.

    இந்த வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது:-

    ஐதராபாத் மைதானம் எனக்கு ஏராளமான நினைவை ஏற்படுத்தியது. அந்த அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடி ஒரு கோப்பையை வென்றோம். இங்கு மீண்டும் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. மும்பை அணியில் இளம் வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பது முக்கியமானது. ஐ.பி.எல்.லில் அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் வெற்றியே பெற்று கொடுப்பார்கள்.

    மும்பை அணியின் திலக் வர்மாவை கடந்த சீசனிலேயே அனைவரும் பார்த்தோம். அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். பேட்டிங்கில் அவரது அணுகுமுறை என்னை பிரமிக்க வைக்கிறது.

    "அவர் எந்த பந்து வீச்சாளர்களையும் பார்த்து பயப்படாமல் அவர்கள் வீசும் பந்துகளில் மட்டுமே கவனம் கொடுத்து ஆடுகிறார். எதிர்காலத்தில் பல்வேறு அணிகளுக்காக திலக் வர்மா நிச்சயமாக விளையாடுவார்.

    அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஆண்டுகள் எங்கள் அணியோடு இருக்கிறார். அவர் திறமை மீதும், பந்து வீச்சு மீதும் நம்பிக்கை வைத்துள்ளார். பவர்பிளே ஓவர்களில் ஸ்விங் செய்வதோடு, டெத் ஓவர்களில் சிறப்பாக யார்க்கர்களை வீசுகிறார். அவரின் திட்டமும் சிறப்பாக உள்ளது. அணிக்கு ஏற்றவாறு அவர் தன்னை செயல்படுத்துகிறார்.

    இவ்வாறு ரோகித்சர்மா கூறியுள்ளார்.

    மும்பை அணி 6-வது போட்டியில் பஞ்சாப்பை 22-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 3-வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை 21-ந் தேதி எதிர்கொள்கிறது.

    • இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
    • இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

    இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் இடம்பெறாததால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி கொல்கத்தா அணிக்கெதிரான இந்த போட்டியில் களம் இறங்கியது.

    ஆனால் முதல் பாதியில் விளையாடாத ரோகித் சர்மா கொல்கத்தா அணி 185 ரன்கள் குவித்ததும் அடுத்ததாக மும்பை அணி சேசிங் செய்ய வருகையில் இம்பேக்ட் பிளேயராக துவக்க வீரராக இஷான் கிஷனுடன் களமிறங்கினார். அந்த வகையில் இம்பேக்ட் பிளேயராக களம் புகுந்த ரோகித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தார்.

    இந்த போட்டியில் 13 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு சிக்சர் ஒரு பவுண்டரி என 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா ஏன் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார் என்பது குறித்து மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில்:-

    நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீசவே விரும்பினோம். ஏனெனில் மைதானம் கொஞ்சம் டிரையாக இருந்ததால் இரண்டாவது பேட்டிங்கிற்கு மைதானம் நன்றாக ஒத்துழைக்கும் என்று நினைத்தோம். அதன்படியே முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம். ரோகித் சர்மாவிற்கு இந்த போட்டிக்கு முன்னதாக வயிற்று பகுதியில் சற்று அசவுகரியம் ஏற்பட்டது.

    அதனாலேயே அவர் இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. பின்னர் அவர் சேசிங்கின் போது இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.

    என்று சூர்யகுமார் யாதவ் கூறினார்.

    • சென்னை அணிக்கெதிராக ஷிகர் தவான் 1029 ரன்கள் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
    • சென்னை அணிக்கெதிராக விராட் கோலி 979 ரன்கள் எடுத்து 4-வது இடத்தில் உள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் 22-வது போட்டியில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய ரோகித் சர்மா 13 பந்துகளில் 20 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஓர் அணிக்கெதிராக அதிகபட்ச ரன்களைக் குவித்தவர் என்ற பெருமையை மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

    கொல்கத்தா அணிக்கெதிராக இதுவரை 1040 ரன்களை ரோகித் சர்மா குவித்துள்ளார். அதற்கடுத்த இடங்களில் சென்னை அணிக்கெதிராக ஷிகர் தவாணும் (1029 ரன்கள்), கொல்கத்தா அணிக்கெதிராக டேவிட் வார்னரும் (1018 ரன்கள்), சென்னை அணிக்கெதிராக விராட் கோலியும் (979 ரன்கள்) உள்ளனர்.

    • ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் பட்டியலில் 2-வது இடத்தில் டோனி உள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (7 முறை) 2-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி இந்த தொடரோட முதல் வெற்றிய பதிவு செய்தது.

    ஒரு போட்டியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ரோகித் சர்மா பல சாதனைகளை படைத்துள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கடைசி 25 போட்டிகளில் முதல் அரைசதம் விளாசியுள்ளார். இந்த தொடரோட முதல் அரைசதம்.

    ஐபிஎல் தொடரில் இது அவருக்கு 41-வது அரைசதம் ஆகும். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 6-வது அரைசதம். அருண் ஜெட்லி மைதானத்தில் 3-வது ஐபில் அரை சதம்.

    இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிகமுறை ஆட்டநாயகன் விருதை பெற்றவர் என்ற சாதனையை ரோகித் சர்மா (19 முறை) படைத்துள்ளார். 2-வது இடத்தில் டோனி (17 முறை) உள்ளார்.

    இந்த போட்டியில் டெல்லி அணியை ஆல் அவுட் செய்ததன் மூலமாக 31 முறை எதிரணியை ஆல் அவுட் செய்த அணி என்ற சாதனையை மும்பை அணி படைத்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் அதிக முறை கடைசி பந்தில் வெற்றி பெற்ற அணிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி (7 முறை) 2-வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் சென்னை அணி (8 முறை) உள்ளது.

    • பவர் பிளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டோம்.
    • இஷான் கிஷன், திலக் சர்மா பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்சை வீழ்த்தியது. 173 ரன் இலக்கை ஆட்டத்தின் கடைசி பந்தில் எடுத்து மும்பை அணி முதல் வெற்றியை பெற்றது. 5 முறை சாம்பியனான அந்த அணி 2 தோல்விக்கு பிறகு முதல் வெற்றியை ருசித்தது. டெல்லி அணி தொடர்ச்சியாக 4-வது தோல்வியை தழுவியது.

    இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    போட்டியில் வெற்றி மிகவும் முக்கியமானது. முதல் போட்டியில் இருந்து அதே கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறோம். முதல் வெற்றியை பெற்றது. மிகவும் முக்கியமானது. சிறப்பானதாக உணர்கி றேன்.

    174 ரன் இலக்கு எடுக்க கூடியதாகும். பவர் பிளே ஓவர்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டோம். இதன் காரணமாக தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட ஆரம்பித்தோம். இஷான் கிஷன், திலக் சர்மா பொறுப்புடன் ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த போட்டிகளிலும் வெற்றிகளை நோக்கி காத்திருக்கிறோம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    ×