search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும்.
    • நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்திருந்தோம் என நியூசிலாந்து கேப்டன் கூறினார்.

    நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இந்த மைதானத்தில் இதுதான் முதல் சர்வதேச போட்டி ஆகும். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    நியூசிலாந்து கேப்டனும் அவர்களுக்கு பின்னாடி பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய வீரர்களும் சிரிப்படி இந்த சம்பவத்தை பார்த்தக் கொண்டிருந்தனர்.


    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், நாங்களும் பௌலிங் தான் தேர்வு செய்தோம். இது தான் முதல் சர்வதேச போட்டி என்பதால், விக்கெட் எப்படி விழும் என்பது குறித்து தெரியாது. கடந்த போட்டி சிறப்பாக இருந்தது. கடந்த போட்டியைப் போன்று இந்தப் போட்டியிலும் பேட்டிங் இருக்கும் என்று நம்புகிறேன். நாங்களும் அதே அணியுடன் தான் களமிறங்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.

    நியூசிலாந்து: பின் ஆலென், டெவோன் கான்வே, ஹென்றி நிக்கோலஸ், டெரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ஹென்றி சிப்லே, லக்கி பெர்குசன், பிளைர் டக்னர்.

    • இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் உள்ளார்.
    • சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசினார்.

    இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 349 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாசினார். அதனை தொடர்ந்து சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் இரட்டை சதம் அடித்திருந்தனர். இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரராக சுப்மன் கில் உள்ளார்.

    இந்நிலையில் போட்டிக்கு பின், இந்திய அணியின் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா - இஷான் கிஷன் - சுப்மன் கில் ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.


    அப்போது, இரட்டை சதமடித்தும் உனக்கு(இஷான் கிஷன்) அதன்பின்னர் 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோகித் சர்மா கேட்டார். அதற்கு, நீங்கதான் (ரோகித்) கேப்டன் பிரதர் என்று இஷான் கிஷன் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

    இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் தனக்கு இந்திய அணியில் அடுத்த 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து இஷான் கிஷன் வருத்தப்பட்டாலும், அதை மறைத்துக்கொண்டு ரோஹித்திடம், நீங்கதான் கேப்டன்.. என்னிடம் கேட்கிறீர்களே என்ற அர்த்தத்தில் ரோகித்துக்கு சரியான பதிலளித்தார் இஷான் கிஷன்.

    • டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.
    • பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 349 ரன் குவித்தது. தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் (208 ரன்) அடித்தார்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து 131 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்தது. அதன்பின் பிரேஸ்வெல்-மிட்செல் சான்ட்னெர் ஜோடி சிறப்பாக விளையாடியது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸ்வெல் 57 பந்தில் சதம் அடித்தார். இவர்களின் ஆட்டத்தால் நியூசிலாந்து அணி ரன் இலக்கை நெருங்கியது.

    இந்த ஜோடியை முகமது சிராஜ் பிரித்தார். கடைசி விக்கெட்டாக பிரேஸ்வெல் அவுட் அனார். அவர் 78 பந்தில் 140 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும். நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 337 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிரேஸ்வெல்லின் ஆட்டம் எங்களுக்கு சவால் அளித்து விட்டது. அவர் விளையாடும்போது பேட்டுக்கு பந்து நன்றாக வந்தது. அவர்களின் முதல் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு போட்டி எங்கள் கைக்கு வந்தது. ஆனால் பந்து வீச்சில் சறுக்கலை சந்தித்தோம்.

    டாஸ் போடும்போது நான் சொன்னது போல் விளக்குகளின் கீழ் மற்றும் பனி இருக்கும் போது பந்து வீசுவது கடினம் என்பது எங்களுக்கு தெரியும். இது நாங்கள் சந்திக்க விரும்பிய சவாலாகும்.

    சுப்மன்கில் விளையாடிய விதம் அற்புதமானது. அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். அதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். அதற்காகதான் இலங்கைக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தோம்.

    பந்து வீச்சில் முகமது சிராஜ் பிரமாதமாக செயல்பட்டு வருகிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவரில் போட்டியிலும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பதில் கடினமாகவும் தெளிவாகவும் செயல்பட்டு வலிமையை அதிகரித்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நியூசிலாந்து கேப்டன் டாம்லதாம் கூறும்போது, "பிரேஸ்வெல் ஆட்டம் அற்புதமானது. ஆனால் வெற்றி பெற முடியாதது ஏமாற்றத்தை அளித்தது" என்றார். 3 ஆட்டம் கொண்ட தொடரில் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 21-ந்தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.
    • ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    டி20 போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதால், எதிர்கால போட்டிகளை கருத்தில் கொண்டு நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டு தொடருக்கான டி20 அணியில் இருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வாளர்கள் வெளியேற்றியுள்ளனர்.

    கே.எல்.ராகுலும் அணியில் இல்லை. குடும்ப பொறுப்புகள் காரணமாக அக்சர் படேலும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார். ஒருநாள் போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

    இந்திய டி20 அணி:

    ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.

    • நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம்.
    • அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    கொல்கத்தா:

    இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி நேற்று கொல்கத்தாவில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 39.4 ஓவரில் 215 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவானிது பெர்னாண்டோ 50 ரன்னும், குசல் மென்டிஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டும், அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறியது. 86 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. அதன் பின் லோகேஷ் ராகுல் (64ரன்), ஹர்த்திக் பாண்ட்யா (36ரன்) ஜோடி பொறுப்புடன் விளையாடியது.

    இந்தியா 43.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இந்த போட்டி நெருக்கமான விளையாட்டாக இருந்தது. இதுபோன்ற விளையாட்டுகள் நிறைய கற்று கொடுக்கிறது. லோகேஷ் ராகுல் நீண்ட காலமாக 5-வது வரிசையில் விளையாடி வருகிறார். அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் ஒருவர் 5-வது வரிசையில் பேட்டிங் செய்யும் போது அது நம்பிக்கையை அளிக்கிறது.

    தொடக்க வரிசையில் ஒரு இடது கை ஆட்டக்காரர் இருப்பது நன்றாக இருக்கும். ஆனால் வாய்ப்பு கொடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த ஒரு வருடத்தில் நிறைய ரன்களை எடுத்துள்ளனர். நாங்கள் ஒரு இடது கை பேட்ஸ்மேனை வைத்திருக்க விரும்புகிறோம். ஆனால் எங்கள் வலது கை பேட்ஸ்மேன்களின் தரம் எங்களுக்கு தெரியும்.

    3-வது ஒரு நாள் போட்டிக்கான ஆடுகளத்தை பார்ப்போம். மேலும் மற்றொரு ஒருநாள் தொடரும் வர உள்ளது. எனவே ஏதாவது மாற்றங்களை செய்ய வேண்டுமா என்று பார்ப்போம்.

    இப்போட்டியில் குல்தீப் யாதவ் திருப்புமுனையை ஏற்படுத்தினர். இந்த நேரத்தில் அவர் ஒரு பந்து வீச்சாளராக மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். இது அணிக்கு நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இலங்கை கேப்டன் ஷனகா கூறும் போது, இப்போட்டி எங்கள் கையில் இருந்தது. ஆனால் போதிய ரன்களை எடுக்க தவறி விட்டோம். ஆரம்பத்தில் 280 ரன்கள் பற்றி விவாதித்தோம். ஆனால் குல்தீப் யாதவ் நன்றாக பந்து வீசினார் என்றார்.

    இந்த வெற்றி மூலம் மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை கைப்பற்றியது.

    3-வது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    • 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

    அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.

    இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.

    அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.

    அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

    குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.

    அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.

    ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணி தரப்பில் முதல் 10 இடங்களுக்கும் ஒருவரும் இல்லை.
    • டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    துபாய்:

    ஆண்களுக்கான கிரிக்கெட் தரவரிசையை ஐசிசி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, பாகிஸ்தான் - நியூசிலாந்து, ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி இரட்டை சதத்தை நெருங்கிய உஸ்மான் கவஜா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் லபுஸ்சாக்னே முதல் இடத்தில் உள்ளார். இந்தியா தரப்பில் கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் 7-வது இடத்திலும் கேப்டன் ரோகித் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதல் இடத்தில் உள்ளார். இந்திய பந்து வீச்சாளர்கள் பும்ரா 3-வது இடத்திலும், அஷ்வின் 4-வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய ககிசோ ரபடா ஒரு இடம் சரிந்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார்.

    டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் இந்தியாவின் ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் முதல் இரு இடங்களில் உள்ளனர்.

    ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார். இலங்கை அணிக்கு எதிராக அதிரடியாக சதம் அடித்து அசத்திய இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அதே போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா 1 இடம் முன்னேறி 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் டிரெண்ட் பவுல்ட் முதல் இடத்திலும், ஹேஸ்லேவுட், ஸ்டார்க், ரசித் கான், மேட் ஹென்றி 2 முதல் 5 இடங்களில் உள்ளனர். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணி தரப்பில் முதல் 10 இடங்களுக்கும் ஒருவரும் இல்லை.

    ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, மெஹதி ஹசன், ரசித் கான், மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

    டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இலங்கை அணிக்கு எதிராக அதிரடி சதம் அடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ் முதல் இடத்தை தக்க வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக முகமது ரிஸ்வான், யேவான் கான்வே, பாபர் அசாம், ஏய்டன் மார்க்ரம் ஆகியோர் 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

    டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பிய ஹசரங்கா முதல் இடத்தை பறிகொடுத்துள்ளார். இதனால் ரஷித் கான் முதல் இடத்துக்கு முன்னேறினார். அடில் ரஷித், ஹேச்லேவுட், சாம் கர்ரன் 3 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

    டி20 ஆல்ரவுண்டர்கள் தரவிசையில் ஷகிப் அல் ஹசன், முகமது நபி, ஹர்த்திக் பாண்ட்யா, சிக்கந்தர் ராசா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

    • இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
    • பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என இலங்கை முன்னாள் வீரர் மேத்யூஸ் பாராட்டி உள்ளார்.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 373 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதை சோதிப்பதற்காக நடுவரும் 3-வது நடுவரை அணுகினார். அந்த சமயத்தில் வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் சென்று பேசி இப்படி அவுட் தேவையில்லை என தெரிவித்தார்.

    அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். இதனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.

    சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் பாராட்டி உள்ளார்.


    இந்நிலையில் அவர் கூறியதாவது:-

    நடுவரிடம் ரன் அவுட்டை வாபஸ் பெற்ற ரோகித் சர்மா ஸ்போர்ட்மேன்ஷிப்பின் உண்மையான வெற்றியாளர். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.

    மேலும் ஒரு இலங்கை அணியின் முன்னாள் வீரர் கூறியதாவது:-


    பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்காக சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ஹேட்ஸ் ஆஃப் ரோகித் சர்மா.

    இவ்வாறு கூறினார்கள்.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்தார்.
    • இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

    இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதது.

    அதன்படி களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தை விளாசி 113 (87) அவுட்டானார். அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ 5, குசல் மெண்டிஸ் 0, அசலங்கா 23 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இருப்பினும் மிடில் ஆர்டரில் வழக்கம் போல கேப்டன் தசுன் சனாக்கா சவாலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ரன்களில் பேட்டிங் செய்தார்.


    கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4-வது பந்தில் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார் என்பதற்காக சனக்காவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் சனாக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3வது நடுவரை அணுகினார்.

    இருப்பினும் அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

    அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த சனாக்கா 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இலங்கை கேப்டனை சதமடிக்க விடாமல் தடுக்க நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்த முகமது ஷமியின் செயலுக்கு நிறைய இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெற்றி இரு பக்கத்திற்கும் சமமாக இருக்கும் போது மன்கட் செய்திருக்க வேண்டும் அல்லது சனாக்கா 60, 70 போன்ற ரன்களில் இருந்த போது மன்கட் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் வெற்றி உறுதியான பின்பு சதமடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இவ்வாறு செய்வது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் சமியை விமர்சிக்கிறார்கள்.

    அதையே போட்டியின் முடிவில் "சிறப்பாக விளையாடிய சனாக்காவை நாங்கள் அந்த வழியில் அதுவும் 98 ரன்னில் அவுட் செய்ய விரும்பவில்லை" என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அந்த வகையில் வெற்றி பறிபோனாலும் தனி ஒருவனாக போராடி தகுதியான சதத்தை நெருங்கிய சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

    • விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார்.
    • கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    கிரிக்கெட் வீரர் விராட் கோலி 2023 புத்தாண்டை தனது மனைவியும், பாலிவுட் முன்னணி நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் கொண்டாடினார். இருவரும் இடம்பெறும் ஃபோட்டோவை விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு 6 மில்லியன் அதாவது 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன. விராட் கோலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 229 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

    முன்னதாக தோனி தனது மகள் ஜிவாவுடன் புத்தாண்டை கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவும் வைரலாகி வருகிறது.

    தனது மகளை மகிழ்ச்சிப்படுத்தி தந்தையாகவும் தோனி முன் மாதிரியாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமென்ட்டில் கூறியுள்ளனர்.

    சமீபத்தில் ஜிவா தோனிக்கு லியோனல் மெஸ்ஸி ஆட்டோகிராஃப் அளித்த டி ஷர்ட் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

    மேலும் தனது நீண்ட நாள் காதலியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இருவருக்கும் இந்த மாதமோ அல்லது மார்ச் மாதமோ திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும், இந்திய கிரிக்கெட் வீரருமான கே எல் ராகுல் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.

    தற்போது ஓய்வில் இருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் மகளுடன் ஓய்வு நேரத்தை நன்றாக செலவிட்டு வருகிறார். தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரோகித் சர்மா அங்கு நன்றாகவே என்ஜாய் பண்ணுகிறார்.

    இதேபோன்று சச்சின் டெண்டுல்கரும் வித்திசாயசமான முறையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இந்த பதிவும் கவனம் ஈர்த்து வருகிறது.

    இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    • ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை.
    • 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது.

    மும்பை:

    இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான அணி சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு எந்த சிக்கலும் இல்லை. அவரது கேப்டன்ஷிப் குறித்து அதிருப்தியான அம்சங்கள் எதையும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    ரோகித் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரது கேப்டன்சி சாதனை சிறப்பாக உள்ளது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    2023 ஆம் ஆண்டில் இந்திய அணி 35 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வழங்கி உள்ளது. மேலும், வரும் ஐபிஎல் சீசனில் விளையாடுவதை தவிர்க்கும்படி முன்னணி வீரர்களுக்கு அறிவுறுத்தப்படலாம்.

    • வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார்.
    • 2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார்.

    வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2- 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடுவதற்கு 2- 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    அதனால் முதல் போட்டிக்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 4வது இடத்திலிருந்த இந்தியா தென்னாப்பிரிக்காவை முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வீழ்த்திய உதவியுடன் நேரடியாக 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதன் காரணமாக இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில் முதல் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா காயத்தால் களமிறங்கவில்லை.

    வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கையில் காயத்துடன் வெற்றிக்கு போராடிய ரோகித் சர்மா முதல் டெஸ்டில் விலகினார். இருப்பினும் அவரது காயம் லேசாக இருந்த காரணத்தால் 2-வது போட்டிக்கு முன்பாக குணமடைந்து வந்து விடுவார் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்தன.

    இந்நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் 2வது போட்டியிலிருந்தும் ரோகித் சர்மா விலகுவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

    2-வது போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் இந்தியாவை வழி நடத்துவார் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிய வருகிறது. 

    ×