என் மலர்
நீங்கள் தேடியது "sale"
- சேலம் மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தோட்டத்தில் 6 அடி நீளமுள்ள பெரிய புடலங்காய்.
- 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தைக்கு 3 அடி வரை நீளமுள்ள உள்ள புடலங்காய் விற்பனைக்கு வருவது வழக்கமாகும்.இந்த நிலையில் உழவர் சந்தைக்கு இன்று 6 அடி நீளமுள்ள பெரிய
புடலங்காய் விற்ப னைக்கு வந்தது. சேலம்
மாவட்டம் பனம ரத்துப்பட்டி அருகே உள்ள கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வள்ளி ( வயது 60) என்பவரின் தோட்டத்தில் இந்த புடலங்காய்கள் விளைந்துள்ளது.
இப்போது விற்ப னைக்கு வந்துள்ள புட லங்காய்கள் நாட்டு ரக பச்சை வரி புடலங்காய்கள் ஆகும். பந்தலில் விளைவித்த புடலங்காய்கள் என்பதால் இவை வழக்கமான புடலங்காய்களை விட நீளமான அளவில் உள்ளது. மேலும் இவற்றின் சுவை மற்ற ரகங்களை விட நன்றாகவே இருக்கும். 1 கிலோ ரூ.20- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவை வழக்கமான புடலங்காய்களை காட்டிலும் நீளமாக, பெரிய அளவில் இருப்பதால் இந்த புடலங்காய்களை உழவர் சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். மேலும் அவற்றின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை சீசன் காரணமாக இவற்றின் வரத்து அதிகமாக இருக்கும். என உழவர் சந்தை வேளாண் அலுவலர் மகேந்திரன் தகவல் தெரிவித்தார்.
- வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
- சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
சேலம்:
உலகெங்கும் உள்ள தமிழ் மக்களால் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் கொண்டாட்டம்
அனைவரும் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் பொங்கி மேலே வரும்போது, அனைவரும் பொங்கலோ பொங்கல் என கூறி தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து கொள்வார்கள். பொங்கல், கரும்பு, வெல்லம் மற்றும் தேங்காய் பழங்களைக் கொண்டு இறைவனுக்கு படையல் இட்டு அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
இதையொட்டி, சேலத்தில் கரும்பு, மஞ்சள், பூைஜ பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்ற வருகிறது. அதுபோல் ஜவுளி நிறுவனங்களில் புது துணி எடுக்க பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.
கடை வீதி, முதல் அக்ரஹாரம், ஓமலூர் சாலை, 5 ரோடு, பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருணாச்சல ஆசாரி தெரு, சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து திருவிழா போல் காட்சியளித்தது.
ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தி னருடன் ஜவுளி எடுக்க கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். சிறு, சிறு ஜவுளி கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது.செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், லீ பஜார், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அம்மாப்பேட்டை, சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதிகளில் கரும்புகள், மஞ்சள் குலைகள், விற்பனை களை கட்டி உள்ளது.
தற்காலிக கடைகள் ஆங்காங்கே அமைத்து விற்பனைக்கு மஞ்சள் குலைகள், கரும்புகள் குவித்து வைத்துள்ளனர். தினசரி சந்தைகள், வாழை பழங்கள் விற்பனை கடைகளும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர்.
மாடுகளுக்கான அலங்கார பொருட்கள்
16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து
கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்ப னைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து
வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ளவலசையூர், ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.
இவர்கள் பெரும்பாலும் அயோத்தி யாப்பட்ட ணத்திற்கு வந்து தங்கள் கால்ந டைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்க யிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.
- பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள்.
- கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 14 மனுக்களை பெற்றார். அதில் 7 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் (10581) மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் குற்றபதிவேடு கூடம் துணை சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கேன்னடி. மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
- ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை
கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.
கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.
மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.
இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
- மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மருங்குளம் பகுதியில் திருட்டுத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக தஞ்சை மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் தப்பி ஓட முயன்றார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் தஞ்சை அடுத்த ராவுசாப்பட்டி கிராமத்தை சேர்ந்த வீரமணி (வயது 26) என்பதும், மதுபாட்டில்களை வாங்கி கூடுதல் விலைக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமணியை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
தஞ்சாவூா்:
தஞ்சை வண்டிப்பேட்டை பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஆன்லைன் லாட்டரி விற்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் டவுன் போலீஸ் ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்த சசிகுமார் (வயது 22), குமார் (35) என்பதும், சட்ட விரோதமாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதநீர் சீசன் தொடங்கி யுள்ளது. அதன்படி சின்ன சேலம் அருகே உள்ள வி. அலம்பலம், பாக்கம்பாடி, தோட்டப்பாடி, கள்ளா நத்தம், தகரை, நாகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கப்படுறது.தமிழக அரசு பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறகக தடை விதித்துள்ளது. அதே சமயத்தில் பதநீர் இறக்க தடையில்லை. அனுமதி ஏதும் பெறத் தேவையில்லை. ஏனெனில் பதநீர் என்பது போதையற்ற ஆரோக்கிய பானமாகும்.இதனை பயன்படுத்திக் கொண்டு ஒரு சிலர் பனை மரத்தில் இருந்து பதநீரை இறக்கி, போதை தரும் பவுடர்களை கலந்து விற்பனை செய்கின்றனர். மேலும், தென்னை மரங்களில் பல்லாக்களை கட்டி நேரடியாகவே கள் இறக்கி விற்பனை செய்கின்றனர்.
இதனை அருந்தும் விவசாயிகள் தொழிலாளர்கள் மற்றும் ஒருசில மாணவர்கள் போதையிலேயே இருந்து வருகிறைனர் ஏற்கனலே, சின்னசேலம் அடுத்த கல்வராயன் மலைப் பகுதியில் சாராய ஊரல்கள் வைக்கப்பட்டு, கள்ளச் சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும் சின்னசேலம் பகுதியில் படு ஜோராக நடக்கிறது.போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்கவும், இது குறித்து பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தவும் தமிழக போலீஸ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் பதநீர் என்ற பெயரில் கள் விற்பனையும், கள்ளச் சாராய விற்பனையும் நடக்கிறது.மேலும். ஒரு சில வாரங்களில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஆரம்பிக்க உள்ளன. வீட்டில் கூலி வேலைக்கு செல்லும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காலையிலேயே பதநீர் என்ற பெயரில் விற்கப்படும் கள் குடிக்கின்றனர். இதனால் மாணவர்களின் கவனம் சிதறி தேர்வுக்கு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்து சின்னசேலம் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட சாராயம், கள் மற்றும் போதைப் பாக்குகள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
- சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது.
- விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.
சேலம்:
தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் தினசரி ரூ.40 கோடி மதிப்பில் பீர் மற்றும் பிராந்தி வகைகள் விற்பனையாகி வருகிறது.
வெயில் தாக்கம் அதிகரிப்பு
இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக பிராந்தி வகை–களை விட, பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவுக்கு மது வகைகள் விற்பனையாகி வருகிறது. விழா காலம் மற்றும் பண்டிகை நேரங்களில் இதன் விற்பனை 20 முதல் 40 சதவீதம் அதிகரிக்கும்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பீர் வகைகளை விட, பிராந்தி வகைகளின் விற்பனை அதிகரிக்கும். அதே நேரத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை அதிகமாக இருக்கும்.
விற்பனை அதிகரிப்பு
அதன்படி தற்போது ேகாடை காலத்தை முன்னிட்டு வெயில் அதிகரித்து இருப்பதால், மது பிரியர்கள், பீர் வகைகளுக்கு மாறி விட்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பீர் வகைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. இதிலும் குறிப்பாக மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பீர் விற்பனை அதிகமாக உள்ளது என டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
- இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது எனவும் விவசாயிகள் கூறினர்.
நெல்லை:
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமார், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்குவாரி
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினர். இருக்கன்துறை பகுதி விவசாயிகள் பேசும்போது, எங்கள் பகுதியில் உள்ள கல் குவாரிகளால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரி வித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து யானைகள் இறங்கி வந்து அங்குள்ள தென்னை மரங்களை நாசம் செய்கிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.
மானூர் பகுதி விவசாயிகள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சில குளங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றனர்.
தரம் குறைந்த விதைகள்
பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் பேசிய தாவது:-
நெல்லை மாவட்ட அணைகளில் கடந்த ஆண்டு இதே நேரத்தில் 62.10 சதவீதம் நீர் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இம்மாதம் இயல்பான மழை அளவை விட 48.32 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 265 உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் 1,546 விதை மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்ப ட்டுள்ளது.
இதில் 39 விதைகள் தரமற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் அந்த விதை விற்பனை யாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும், 2 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 57.79 மெட்ரிக் டன் எடையுள்ள தரம் குறைந்த விதைகள் கண்டறியப்பட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.77 லட்சத்து 36 ஆயிரம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது.
- ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் கள் இறக்கி விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மேலவஸ்தாசாவடி பகுதியில் ஒருவர் கள் இறக்கி விற்பனை செய்வதாக தமிழ் பல்கலை–கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தஞ்சை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார்
(வயது 38) என்பதும், கள் இறக்கி விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதேபோல் வெவ்வேறு இடங்களில் கள் விற்பனை செய்த துலுக்கம்பட்டியை சேர்ந்த குணசேகரன் (36), ராகவன் (55) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
- அரகண்டநல்லூர் அருகே கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் பில்ராம் பட்டு அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங் களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடைகளில் விற்பனையை தொடங்கும் முன்னரே அருகிலுள்ள தனியார் பார்களில் புதுச்சேரி, கர்நாடக மாநி லத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை நடப்பதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் கலி வரதன் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். மேலும் இரவு 10 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடிய பின்னரும் கள்ள மார்க்கெட்டில் மது பான விற்பனை தொடர்ந்து நடைபெறு வதாகவும் அவர் புகார் கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் பில்ராம்பட்டு, அந்திலி மற்றும் கொல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையின் அருகில் உள்ள பார்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது டாஸ்மாக் மதுபான கடைகளில் இருந்து மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து அதனை சில்லறை விற்பனை செய்து வந்த வடகரை தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த வல்லாளன் மகன் இன்பராஜ் (வயது 38), எஸ்.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் மகன் பிரபு (43). அரகண்டநல்லூர் பன்னீர்செல்வம் மகன் வினோத் (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் தயாரித்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.
- ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சி.எஸ்.ஐ.மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் சொந்த தயாரிப்புகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அவர்கள் தயாரித்த குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், பொம்மைகள், ஊறுகாய் மற்றும் எழுது பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன. கல்லூரி துணை முதல்வர் முத்துலட்சுமி விற்பனையை தொடங்கி வைத்தார். கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.
இதன் மூலம் வருகின்ற நிதி சி.எஸ்.ஐ. மனவளர்ச்சி குறைவுடையோர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மூலம் ரூ.38 ஆயிரத்து 640-க்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளையும் வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.