search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scout"

    • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சூப்பர் பவுல் இறுதிப்போட்டி நடைபெறும்
    • ஸ்கவுட்களின் கடுமையான தேர்வுகளில் "40-யார்ட் டேஷ்" போட்டியும் ஒன்று

    இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பது போல் அமெரிக்காவில் பிரபலமானது, கால்பந்து விளையாட்டு.

    ஆண்டுதோறும் நடைபெறும் "சூப்பர் பவுல்" (Super Bowl) எனப்படும் கால்பந்து போட்டிகள் அமெரிக்கர்களால் விரும்பி பார்க்கப்படும் போட்டித் தொடர் ஆகும்.

    இந்த சூப்பர் பவுல் போட்டித் தொடருக்கு "தேசிய கால்பந்தாட்ட லீக்" (National Football League) எனும் அமைப்பில் உள்ள 32 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோதுவது வழக்கம்.

    ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சூப்பர் பவுல் இறுதிப்போட்டி நடைபெறும்.

    ஆண்டுதோறும், தேசிய ஃபுட்பால் லீக் சார்பில், அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு "தேசிய கால்பந்தாட்ட லீக் டிராஃப்ட்" (National Football League Draft) எனப்படும்.

    இதில் வீரர்களின் திறனையும், ஆடும் நுணுக்கங்களையும் கண்டறிந்து, அவர்களை தரவரிசைப்படுத்தி, தேர்ந்தெடுப்பவர்கள் "ஸ்கவுட்" (Scout) என அழைக்கப்படுவார்கள்.

    ஸ்கவுட்களால், வீரர்களை தேர்வு செய்ய வைக்கப்படும் கடுமையான பரிசோதனைகளில் "40-யார்ட் டேஷ்" (40-yard dash) போட்டியும் ஒன்று.

    இந்த தேர்வில் 40 யார்ட் (36.576 மீட்டர்) எனப்படும் 120 அடி தூரத்தை குறைந்த நேரத்தில் வேகமாக ஓட வேண்டும்.

    நேற்று, இண்டியானாபொலிஸ் (Indianapolis) நகரில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான 40-யார்ட் டேஷ் தேர்வு போட்டியில் "டெக்சாஸ் லாங்ஹார்ன்ஸ்" (Texas Longhorns) அணி வீரர் சேவியர் வொர்த்தி (Xavier Worthy) 4.21 நொடிகளில் கடந்து புதிய சாதனை புரிந்துள்ளார்.

    இந்த சாதனை குறித்து பேசிய வொர்த்தி, "நான் ஒரு பழைய சாதனையை உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளேன். எனக்கு இது நிஜமா என்பதே தெரியவில்லை. என் சக வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த சாதனையை படைத்ததை ஒரு ஆசிர்வாதமாக பார்க்கிறேன்" என கூறினார்.

    2017ல், "வாஷிங்டன் ஹஸ்கீஸ்" (Washington Huskies) அணியை சேர்ந்த ஜான் ராஸ் (John Ross) என்பவர் 4.22 நொடிகளில் 120 அடி தூரத்தை ஓடியதே இதுவரை சாதனையாக இருந்தது.

    • 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக்கொள்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விமானப்ப டைக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில், சாரண மாணவர்களுக்கான ஆண்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.

    இதில், திருச்சி கேவி 1, கேந்திரிய வித்யாலயா கோல்டன் ராக் பள்ளிகளைச் சேர்ந்த 10 வயதுக்குட்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பயிற்சி முகாம் நடைபெற்ற 2 நாட்களும் மாணவர்கள் அங்கேயே தங்கி, தாங்களாகவே தங்களின் வேலைகளை செய்து கொண்டனர்.

    மேலும், குகை வடிவமைத்தல், செடிகளை அலங்கரித்தல், பேச்சு, நடனம், பாடல், ஓவியம், காகிதக் கலை, தாங்களாகவே தங்களின் உடைமைகளை அடுக்கிக் கொள்வது, துணிகளை துவைத்துக் கொள்வது என மாணவர்களுக்கு தேவை யான வாழ்க்கைக் கல்வி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை திருச்சி கேந்திரிய வித்யாலயா, கோல்டன் ராக் பள்ளி ஆசிரியர்கள் பத்மா, ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா நடந்தது.
    • தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நயினார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் சாரண சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத் திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார்.

    மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசே கர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருகிணைப் பாளர் செல்வராஜ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக் கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறி னர்.

    உதயகுடி பள்ளி பட்ட தாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறி னார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
    • நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாம் தொடங்கப்பட்டது.

    திருப்பூர்  :

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சாதி, மதம், மொழி கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினைக்கற்றுத் தருகிறது. அந்த நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாமை பள்ளியின் செயலாளர் டாக்டர் சிவகாமி ெதாடங்கி வைத்தார். இம்முகாமின் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட சாரணப்பயிற்சி ஆணையர் கே.சாரண தேவேந்திரன், மதுரை மாவட்டம் சாரணப்பயிற்சியாளர் எம்.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில் மாணவ சாரண, சாரணியர்கள் சிக்கனம், ஒழுக்கம், பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி மற்றும் முகாம் கூடாரம் அமைத்தல், பலவகையான முடிச்சுகள் பற்றிய பயிற்சி பெறுதல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக்கொண்டனர். மேலும் இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட மாணவ சாரண, சாரணியர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த சாரண ஆசிரியர் நந்தகுமாரையும், சாரணியர் ஆசிரியர்கள் ராஜலட்சுமி, நந்தினி மற்றும் விஜயசபரி ஆகியோரை பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    ×