search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of tractor"

    • ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ் பெக்டர் பாலசுப்பிரமணி யம், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி உள்ளிட்ட போலீ சார் நேற்று குடியாத்தம் அடுத்த ஜிட்டப்பள்ளி மலை அடிவாரம் பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தினர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து போலீசார் கடத்திவரப்பட்ட முரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரி ஆய்வில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த சாத்தூர் ஏரியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக ஆற்காடு வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாசில்தார் சுரேஷ், வரு வாய் ஆய்வாளர் பாரதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் சாத்தூர் ஏரிக்குச் சென்றனர். அப்போது அங்கு மண் அள் ளிக்கொண்டு இருந்த நபர்கள் அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து மண் கடத்த பயன்படுத்திய டிராக் டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆற்காடு தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    வாழப்பாடி:

    ஆறு, ஓடை உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து அனுமதி பெறாமல் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்–பாளையம் சம்பா நகர் வடக்கு காடு பகுதியில், நேற்று அதிகாலை அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச்செல்வதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா உத்தரவின் பேரில், பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியர் அன்பு–செழியன் தலைமையிலான வருவாயத்துறையினர் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். இதில் மணல் கடத்திச் சென்ற ராமநாயக்கன்பாளையம் ஊத்துமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது டிராக்–டரை பறிமுதல் செய்து, ஏத்தாப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராக்டர் உரிமையாளர் சுப்பிர–மணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமம் வாட்டர் பம்ப் ஹவுஸ் அருகே தொடர்ந்து மர்ம கும்பல் மணல் கடத்துவதாக அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரத்திற்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு டிராக்டரில் மண்ணை திருட்டுத்தனமாக நிரப்பி கொண்டு இருந்தனர்.

    பின்னர் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது டிராக்டர் டிரைவர் மற்றும் உடனிருந்த நபர்கள் டிராக்டரை விட்டு விட்டு தப்பி ஓடினர். இந்த நிலையில் அங்கிருந்த டிராக்டர், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

    • தாசில்தார் ரோந்து பணியில் சிக்கியது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவுக்கு தொடர்ந்து புகார் வந்தது.

    அதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முக சுந்தரம் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அரக்கோணத்தை அடுத்த சித் தூர் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பதிவெண் இல்லாத டிராக்டர் அருகே சென்று பார்த்தபோது டிராக்டரில் மணல் இருப்பது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து டிராக்டரை கைப்பற்றி தக்கோலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவர் தப்பியோட்டம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொட்டாற்றில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தொடர் புகார்களின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி உத்தரவின் பேரில் குடி யாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலையில் குடியாத்தம் அடுத்த மேல் தனகொண்டபல்லி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது டிராக்டரில் மணல் கடத்தி வந்த நபர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிய ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, மற்றும் போலீசார் சேத்துப்பட்டு அருகே உள்ள ஊத்தூர், தேவிகாபுரம், ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஊத்தூர் அருகே அதிவேகமாக வந்த டிராக்டரை மறித்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து. மேலும் தப்பியோடு டிரைவரை சேத்துப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

    ×