என் மலர்
நீங்கள் தேடியது "Sewerage"
- ரூ.6 லட்சத்தில் கட்டப்படுகிறது
- மின் மோட்டார் மூலம் தேங்கியிருந்த கழிவு நீர் வெளியேற்றம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே புது ஓட்டல் தெருவில் கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ரெயில் நிலைய நுழைவு வாயில் அருகே கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் பல வருடங்களாக மழை நீர் மற்றும் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கும் உள்ளாகி வந்தனர்.
பின்னர் இது குறித்து பல வருடங்களாக இங்கு தேங்கி நிற்கும் மழை நீர் மற்றும் கழிவு நீரை அகற்ற கால்வாயில் கழிவுநீர் தடையின்றி வெளியேற சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. கழிவு நீர் செல்ல அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற் பட்டதை முழு வதுமாக அகற்றி கழிவு நீரை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றப்பட்டது.
அதன் பின் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.
பாளை தியாகராஜநகர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
12-வது வார்டு கவுன்சிலரும், பணி நியமன குழு உறுப்பின ருமான கோகுலவாணி சுரேஷ் கொடுத்த மனுவில் திலக் நகரில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. 12- வது வார்டுக்கு உட்பட்ட சந்திப்பு நாடார் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், தங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. எனவே உடனடியாக அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
- சோழவந்தான் அருகே பேவர் பிளாக், கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிக்குட்பட்ட மேலப்பெருமாள்பட்டி கிராமத்தின் தேவர் நகரில் சாக்கடை வசதி இல்லாததால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போல் மணல்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெருவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
தாழ்வான பகுதியான இங்கு சாதாரண மழைக்கு தண்ணீர் குளம் போல் தேங்கி மக்கள் வெளியேற முடியாத அவல நிலை உள்ளதாக விவசாயி அழகுசாமி (40) தெரிவித்தார். இதேபோல் வீரலட்சுமி (23) கூறுகையில், எங்கள் பகுதிக்கு சாக்கடை வசதி இல்லாததால் வீட்டுக்கு முன்பு கழிவு நீர் தேங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாய் வசதி செய்து, பேவர் பிளாக் சாலை அமைத்து தர வேண்டும் என்றார்.
- பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.
கோவை,
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட 87 முதல் 100-வது வார்டு வரை 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் ரூ.591.34 கோடியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, தி.மு.க. ஆட்சிக்கு வந்து 18 மாதங்களை கடந்து இன்னும் முடியாமல் தாமதமாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவலை காரணம் கூறியதால் 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் 2 மாதங்களே இருக்கிறது.
பம்ப்பிங் ஸ்டேசன் கட்டுவது, மேனுவல் கட்டுவது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கிறது.
இதனால் ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்டு டி நிறுவன உயர் அதிகாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன்பின் ஜூன் வரையிலான செயல்திட்ட அறிக்கையை அந்த நிறுவனம் சமர்ப்பித்து இருக்கிறது.
இதை தொடர்ந்து மாச்சம்பாளையத்தில் பம்ப்பிங் ஸ்டேஷன் கட்டும் பணியை குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
நிர்வாக பொறியாளர் தமிழ்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மதியழகன், கீதா தேவி உள்ளிட்டோர் திட்ட செயலாக்கம் குறித்து விளக்கினர்.இதுகுறித்து மாநராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-
செட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒரே ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளனர். அதன்பின் நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக ரோடு போடப்படும்.
போத்தனூரில் 2.5 கி.மீ தூரத்திற்கு குழாய் பதிக்க வேண்டும். 1.5 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. வீட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டதும் ரோடு போடப்படும். ஜூன் வரையிலான ஆக்ஷன் பிளான் தயாரிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியத்தில் 429 ஊராட்சிகள் உள்ளது. இங்குள்ள அனைத்து கிராமங்களிலும் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் நகரங்களை போல் கிராமங்களிலும் குடியிருப்புகள் பெருகி சாலைகளும், வீதிகளும் உருவாகி வருகிறது. முறையான உள்கட்டமைப்பு திட்டமிடல் இல்லாமல் கழிவுநீர் கால்வாய்கள் இன்றி சாலைகள் அமைக்கப் படுகிறது.
பெரும்பாலான கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மழை நீர், கழிவு நீர் செல்ல போதிய கால்வாய்கள் கட்டப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.
மழைக்காலங்களில் கொசுக்கள் உருவாகி டெங்கு உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. கால்வாய்கள் அமைக்க அதிக அளவில் நிதி ஒதுக்கீடு தேவை என்பதால் ஊராட்சி நிர்வாகங்கள் தீர்மானங்களை மட்டும் போட்டு வைத்துக் கொண்டு தடுமாறுகின்றன.
எனவே கால்வாய் இல்லாத கிராமங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து முறையான கால்வாய்களை அமைக்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நனவாக்க முன் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கிராம ஊராட்சிகளில் கால்வாய் பணிகள் விரைவில் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- நெல்லை எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் பிரதான சாலையான எஸ்.என். ஹைரோட்டில் இருபுறமும் தூர்ந்துபோன வாறுகால்கள் புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சாக்கடை கழிவுகள் தேக்கம்
இதனையொட்டி சில இடங்களில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கும் நிலை உருவாகி உள்ளது. அதில் குறிப்பாக டவுன் ஆர்ச் அருகே அமைந்துள்ள மாவட்ட கல்வி அலுவலகம் நுழைவு வாயில் முன்பு பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கிடக்கும் வாறுகாலில் சாக்கடை தேங்கி கிடக்கிறது.
இதனால் அலுவலகத்திற்கு வருபவர்கள் முகம் சுளிக்கின்றனர். இதன் முலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவரது உத்தரவின்பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின்பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வையில் உடனடியாக வாறுகால் தூர்வாறும் பணி நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் தேங்கி கிடந்த சாக்கடை கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்தனர்.
- கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது.
- கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது
ஊட்டி,
குன்னூர் 11-வது வார்ட்டில் பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. அந்தப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் உடைந்துவிட்டது. இதனால் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஒடுகிறது.
இதனால் அந்த பகுதியே சாக்கடை நிரம்பி நடக்க முடியாமலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமமும் அடைந்து வருகின்றனர். மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் கூறும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற போது சில பணிகள் நடந்தன. ஆனால் அப்போது கூட மக்களுக்கு தேவையான பிரதான அடிப்படை வசதியான நடைபாதை மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படவில்லை. இது குறித்து பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
- சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
- மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.
இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.
அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 23 வீடுகள் சுவர் இடிப்பு
- கலெக்டர் உத்தரவு
வேலூர்,
வேலூர் மக்கான் அம்பேத்கர் நகர் பகுதியில் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாத நிலை உள்ளது. இதனால் கழிவு நீரோடு மழை நீர் சேர்ந்து அந்த பகுதியில் தேங்கியது.
அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதை யடுத்து மாநகராட்சி செயற்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் சில வீடுகளில் பாதி பகுதிகள் இடித்து அகற்றப்பட்டன.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, அம்பேத்கர் நகர் பகுதியில் மெயின் தெருவில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக அந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள ஆக்கிரமப்புகள் அகற்றப்பட்டது.
சுமார் 23 வீடுகளின் ஆக்கிரமிப்பு அகற்றி உள்ளோம். விரைவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்படும் என்றனர்.
- புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.
- நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் நகராட்சி சங்குபுரம் தெருவில் புதிய வாறுகால் அமைக்கும் பணியை துரிதப்படுத்த கோரி தெருவில் உள்ள பெண்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்மனிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சேர்மன் உமா மகேஸ்வரி, இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாறுகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
- குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கடந்த 1992-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த குடியிருப்பு சுமார் 125 ஏக்கர் பரப்பளவு கொண்டது ஆகும். இங்கு 6 பிளாக்குகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது பெய்த பலத்த மழையின்போது மழைத் தண்ணீர் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியது.
இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகள் தேங்கி கிடப்பதால் கழிவு தண்ணீர் சரிவர செல்ல முடியவில்லை.
மேலும் இந்த கழிவு தண்ணீர் சுத்தி கரிக்கப்படாமல் நேரடியாக ஏரியில் சென்று கலக்கிறது. இதனால் ஏரித்தண்ணீர் மாசடைந்து வரும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேக்கம் அடைந்துள்ளன.
மேலும் கால்வாயில் டன் கணக்கில் நெகிழி கழிவுகள் மிதப்பதால் தண்ணீர் முறையாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
அடுத்து வரும் மழையை கருத்தில் கொண்டு தங்கு தடையின்றி மழைத்தண்ணீர் வடிந்து செல்ல மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்குள்ள கழிவுநீர் கால் வாய் தண்ணீர் ஏரியில் நேரடியாக கலந்து ஏரித் தண்ணீர் மாசடைந்து வருகிறது.
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைக்கும்போது சுகாதார நிலையம், வணிக வளாகம், குடிநீர் மேல்நிலை தொட்டி ஆகியவற்றிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இவைகள் அனைத்தும் 28 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
இதனால் கட்டிடங்கள் விரிசல் அடைந்து முற்றிலுமாக சேதம் அடைந்தும் வருகிறது.
மேலும், இந்த கட்டிங்களின் பல பகுதிகளில் மரங்கள், செடிகள் வளர்ந்து சேதம் அடைந்து வருகின்றன. இதனால் இந்த கட்டிடங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பாழடைந்த கட்டிடங்கள் தற்போது மது அருந்தும் குடிமகன்களின் கூடாரமாக திகழ்கிறது. மேலும், இங்கு சமூக விரோத செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இங்குள்ள கட்டிடங்களில் மது அருந்திவிட்டு காலி பாட்டிகளை சாலையில் உடைத்து எறிந்துவிட்டு குடிமகன்கள் செல்லுகின்றனர்.
இந்த பாட்டில்கள் தெருக்களில் நடந்து செல்லும் பாதசாரிகளின் கால்களில் குத்தி ரத்த காயம் ஏற்படுத்துகின்றன.
பாழடைந்த கட்டிடங்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது. இதனால் இப்பகுதியில் பகல்-இரவு நேரங்களில் மக்கள் நடமாட முடியவில்லை.
இவைகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளில் படையெடுத்து வருகின்றன. இதனால் பலர் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதுவரை இங்கு பஸ் நிலையம் அமைக்கப்படாமல் உள்ளது.
பஸ் நிலையம், தபால் நிலையம், நூலகம், வங்கி அமைக்க நிலங்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவைகளும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் ஒப்படைக் கப்படாமலேயே உள்ளது.
இதனால் 3 கி. மீட்டர் தூரம் சென்று தான் மக்கள் பயன்படுத்திட வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், இங்குள்ள குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளதால், ஒரு குடம் தண்ணீரை ரூ.10-க்கு வாங்கி வருகிறார்கள். இது குறித்து அரசு துறைகளின் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.