search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sexual complaint"

    • பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கினார்.
    • கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.

    ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் கதாசிரியை ஒருவர் பிரபல மலையாள டைரக்டர் வி.கே.பிரகாஷ் மீது பாலியல் புகார் தெரிவித்து உள்ளார்.

    பஹத் பாசில் இரட்டை வேடங்களில் நடித்த நத்தோலி ஒரு சிறிய மீனல்ல படத்தை வி.கே.பிரகாஷ் இயக்கி கவனிக்கப்பட்டார். நித்யாமேனன் நடித்த பாப்பின்ஸ், பிரணா ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார்.

    பெண் கதாசிரியர் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்த புகார் மனுவில், "என்னிடம் கதை இருக்கிறது என்று வி.கே.பிரகாசுக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பினேன். நேரில் வரும்படி ஓட்டலுக்கு அழைத்தார். ஓட்டலில் நள்ளிரவு எனது அறைக்குள் நுழைந்து கதையை சொல்லும்படி கேட்டார்.

    அப்போது எனக்கு கொஞ்சம் மதுவும் வழங்கினார். பிறகு தோளை இறுக்கமாக பிடித்து என் கன்னத்தில் முத்தமிட முயன்றார். அவரது விருப்பத்துக்கு நான் உடன்படவில்லை என்று தெரிந்ததும் அறையை விட்டு வெளியேறி விட்டார்.

    மறுநாள் உதவி இயக்குனர் மூலம் எனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து அனுப்பி விஷயத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்தார்'' என்று கூறியுள்ளார்.

    • ஐ.ஜி தலைமையில் குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு.
    • தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி.

    கேரள திரைத் துறையில் நடிகைகளால் முன்வைக்கப்படும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ஐ.ஜி தலைமையில் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

    தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்தல், பாலியல் தொல்லை குறித்து நடிகைகள் பேட்டி அளித்தாலும், புகார் அளிக்க முன்வராததால் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரங்களில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 7 பேர் கொண்ட குழு உரிய பணிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக புகார்.
    • தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார்.

    நடிகர் ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவடி சம்பத் பாலியல் குற்றச்சாட்டு விடுத்துள்ளார். நடிகர் ரியாஸ் கான், செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அளித்ததாக நடிகை ரேவடி குற்றம்சாட்டியுள்ளார்.

    தன்னை தகாத உறவுக்கு அழைத்ததுடன், தோழிகளை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டதாகவும் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் உள்ளிட்ட மேலும் சிலர் மீதும் பாலியல் புகார்கள் எழுந்துள்ளதால் மலையாள சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    சித்திக் மீது புகார் கூறிய நடிகை ரேவதி சம்பத், ஒரு திரைப்பட திட்டம் பற்றி விவாதிக்கும் வகையில் சித்திக் தன்னை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 21 வயது. அங்கு அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டே இந்த குற்றச்சாட்டை கூறியதாகவும், அப்போது யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை என்றும் நடிகை ரேவதி சம்பத் கூறியுள்ளார்.

    தற்போது, ரியாஸ் கான் மீது புகார் தெரிவித்துள்ள ரேவதி, நடிகர் சித்திக்கை திரைத்துறையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை.

    நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அழிந்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் குழந்தைகள் நலப் பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, சிவராமன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், தாளாளர் சாம்சன் உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து சிவராமன் தலைமறைவானார்.

    இந்நிலையில், கோவையில் சிவராமன் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அவரை பிடிக்க சென்றனர். அப்போது தப்பி ஓடிய அவர், தடுமாறி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

    இந்நிலையில், கிருஷ்ணகிரியில் எந்த என்.சி.சி. முகாமும் நடக்கவில்லை என்றும் போக்சோ வழக்கில் கைதான சிவராமன் என்.சி.சி.யை சார்ந்தவர் இல்லை என என்.சி.சி. தலைமை அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.
    • மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையில் புகார்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டனம் பகுதியைச் சேர்ந்தவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ள சிவராமன்.

    இவர் பர்கூர் அடுத்த கந்திகுப்பம் அருகே தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டம் என்ற என்.எஸ்.எஸ் முகாம் குறித்த பயிற்சி அளிப்பதாக பள்ளி முதல்வரை சந்தித்து அனுமதி கோரினார்.

    பின்னர் பள்ளி நிர்வா கத்தின் ஒப்புதல் உடன் மாணவர்களுக்கு வேண்டிய பயிற்சியை அளித்து வந்ததாக தெரிகிறது. இதில் சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் தரப்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு துறையின் புகார் எண்ணிற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் பள்ளியில் விசாரணை நடத்திய நிலையில் நடந்த சம்பவம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது.

    இது குறித்து பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    மேலும், சிவராமனை விசாரிப்பதற்காக தேடியபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த சம்பவத்தில் சிவராமனின் உறவினார்கள் 5 பேர் அவருக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிவராமன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் வெளியான சில மணி நேரங்களில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவராமனை கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ்.
    • இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம், மே.5-

    மேற்கு வங்க மாநிலத்தில் கவர்னராக இருப்பவர் சி.வி. ஆனந்தபோஸ். இவர் மீது கவர்னர் அலுவலக பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சி.வி. ஆனந்தபோஸ், கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள ஆலுவா வழியாக சென்றார். அப்போது அவருக்கு எதிராக கேரள இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    • திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கல்லூரி பேராசிரியை பாலியல் புகார் கொடுத்துள்ளார்
    • வீடியோ காலில் வந்து தொல்லை கொடுப்பதாக பரபரப்பு புகார்

    திருச்சி,

    சென்னை வேளச்சே–ரியை சேர்ந்தவர் திரிஷா (வயது 27, பெயர் மாற்றப் பட்டுள்ளது). தற்போது இவர் திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னையைச் சேர்ந்த நான் திருச்சியில் தங்கி எம்.எஸ்சி. கணிதம் படித்து வருகின்றேன். மேலும் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.

    இந்தநிலையில் எனது மாமன் மகன் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக கோட்டை அனைத்து மக–ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் எனது செல்போனை அந்த காவல் நிலைய அதிகாரி விசாரணைக்காக வாங்கி வைத்துக்கொண்டார். இதற் கிடையே அந்த முதல் தகவல் அறிக்கை–யில் சில தவறான தக–வல்கள் இடம்பெற்று இருந்ததால அதனை திருத்தம் செய்வதற்காக மீண்டும் துணை போலீஸ் கமிஷனை சந்திக்க கமி–ஷனர் அலுவலகத்துக்கு சென்றேன்.

    அப்போது திருச்சி மாநகரில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைப் பற்றிய விவ–ரங்களை தெரிந்து கொண்டு எனக்கு உதவுவது போல நடித்து அவரும் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். வீடியோ கால் மற்றும் வாய்ஸ் காலில் வந்து தொல்லை கொடுத்தார். அவருக்கு பெண் போலீஸ் அதிகாரி உட்பட சில போலீசாரும் உதவியாக இருக்கின்றனர். என்னை தாக்கி தவறாக வீடியோவும் எடுத்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

    • திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
    • பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருச்சி, ஆக.18-

    திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கிலத்துறை தலைவராக இருக்கும் பேராசிரியர் ஒருவர் முதுகலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தப் பேராசிரியர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.

    அவர் எம்.ஏ. மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் பி.எச்.டி. மாணவிகளை குறிவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் விசாரணைக்கு முற்பட்டபோது மேலிட செல்வாக்கை சொல்லி மிரட்டியதாக கூறப்பட்டது.

    இதையடுத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அந்த மாணவி புகார் அனுப்பினார். அதன் அடிப்படையில் கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரனை கமிட்டி அமைத்து விசாரணை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்படி பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் அறிக்கை உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த அறிக்கை அனுப்பப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக வலைதளங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    என்.டி. ராமராவ் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் புகார் எழுந்திருப்பது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LakshmiParvathi
    விஜயவாடா:

    மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி; தெலுங்கு எழுத்தாளர்.

    முதல் மனைவி பசவதாரகம், 1985-ம் ஆண்டில் புற்றுநோயால் மரணம் அடைந்த பின்னர் லட்சுமி பார்வதியை 1993-ம் ஆண்டில் ராமராவ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

    என்.டி.ராமராவ் மறைவுக்கு பின்னர் கட்சி சந்திரபாபு நாயுடுவசம் போன பின்னர், லட்சுமி பார்வதி என்.டி.ஆர். தெலுங்குதேசம் என்ற கட்சியை தொடங்கி சிறிது காலம் நடத்தினார். பின்னர் அவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார்.

    இந்த நிலையில் லட்சுமி பார்வதி மீது நடிகரும், சமூக சேவகருமான கோட்டி என்ற ஆனந்த் பால் என்பவர் வினுகொண்டா போலீஸ் நிலையத்தில் செக்ஸ் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

    நான் வினுகொண்டா மண்டல் உப்பர் அப்பளம் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு லட்சுமி பார்வதியை கடந்த 4 ஆண்டுகளாக தெரியும். அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாக பழகி வந்தேன்.

    கடந்த 18 மாதங்களாக அவர் என்னை காதலிப்பதாக ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல்கள் அனுப்பி வருகிறார். அவர் ஆபாச படங்களுக்கான இணையதள தொடர்புகளையும், படங்களையும் அனுப்பி வருகிறார். பாலியல் தொல்லையும் கொடுத்து வருகிறார்.

    அவரது ஆசைக்கு இணங்கி நடந்தால், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியிடம் பேசி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் நல்ல பதவி பெற்றுத்தருவதாகவும் கூறினார்.

    நான் லட்சுமி பார்வதியை அம்மா போலத்தான் கருதினேன். ஆனால் அவரோ முறையற்ற வீடியோக்களை எனக்கு அனுப்புகிறார். இது எனது குடும்ப வாழ்க்கையில் இடையூறாக அமைந்துள்ளது. அவரது விருப்பத்துக்கு நான் அடிபணியாததால், அவர் என்மீது கோபம் கொண்டுள்ளார். நான் பயங்கர விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டுகிறார்.

    எனக்கும், என் குடும்பத்தாருக்கும் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும். பாலியல் தொல்லை செய்ததற்காக லட்சுமி பார்வதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறி உள்ளார்.

    ஆதாரங்கள்

    மேலும் அவர் தனக்கு லட்சுமி பார்வதி அனுப்பியது என்று சொல்லி செல்போன் ‘ஸ்கிரீன்ஷாட்’களையும், சில படங்களையும் ஆதாரங்களாக போலீசிடம் அளித்துள்ளார்.

    இதுபற்றி வினுகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.வி. சீனிவாச ராவ் கூறும்போது, “கோட்டி என்ற ஆனந்த் பால் அளித்த புகாரை பெற்றுக்கொண்டோம். சட்ட ஆலோசனை பெற்று, ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அதன்பின்னரே வழக்கு பதிவு செய்வோம்” என கூறினார்.

    ஆந்திர சட்டசபைக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே கட்டமாக 11-ந்தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் லட்சுமி பார்வதி மீதான இந்த செக்ஸ் புகார், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.##LakshmiParvathi
    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரெட் கவனாக் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றார். #BrettKavanaugh
    வாஷிங்டன்:

    அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாக்கை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது 2 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர்.

    இதையடுத்து பாலியல் புகாருக்கு ஆளான பிரெட் கவனாக்கை நீதிபதி பதவிக்கு தேர்வு செய்யக்கூடாது என அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. எனினும் அவரை நீதிபதியாக நியமிக்க ஆளும் குடியரசு கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது.

    இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தன.

    இதையடுத்து அவர் மயிரிழையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் நீதிபதியாக பதவி ஏற்பது ஏறக்குறையாக உறுதியாகி உள்ளது. #DonaldTrump #Kavanaugh #SupremeCourt
    திருப்பதி தேவஸ்தான உதவி அதிகாரியான சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஊழியரின் மகள் போலீசில் புகார் அளித்துள்ளார். #TirupathiDevasthanam
    ஸ்ரீகாளஹஸ்தி:

    திருப்பதி அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் அலுவலக உதவியாளராக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார். அவர், ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் உள்ளன.

    பெண் ஊழியரின் மகளுக்கு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் உள்ளான். அந்த மகள் தனது கணவரை விட்டு பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறார். பெண் ஊழியர் தனது அடுத்த வாரிசாக மகளை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்ப்பதற்கான ஆவணங்களுடன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    மகள் பெயரை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் என்றால் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி, திருப்பதி தேவஸ்தான உதவி அதிகாரி சீனிவாஸ் என்பவர், பெண் ஊழியரின் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி பெண் ஊழியர், திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கரிடம் புகார் செய்தார். இதுபற்றி அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பெண் ஊழியரின் மகள் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் தேவஸ்தான உதவி அதிகாரி சீனிவாஸ் மீது புகார் செய்தார்.

    இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எனது கணவரை விட்டு பிரிந்து தாயாருடன் வசித்து வருகிறேன். எனக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். மகன் நோயால் அவதிப்பட்டு வருகிறான். எனது தாயாருக்குப் பிறகு வாரிசுதாரராக என்னுடைய பெயரை தேவஸ்தான சர்வீஸ் பதிவேட்டில் சேர்க்க வேண்டும் எனச் சில ஆவணங்களை வைத்திருந்தேன்.

    அந்த ஆவணங்களை ஏற்க வேண்டும் என்றால், உதவி அதிகாரி சீனிவாஸ் என்பவர் 2 நாட்கள் தனியாக என்னுடன் வசிக்க வேண்டும் எனக் கூறி தினமும் எனக்கு போன் செய்தும், வாட்ஸ்-அப் மூலமும் ஆபாச படங்களை அனுப்பி வைத்தும் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார்.

    எனது ஆசைக்கு இணங்கினால் உனது தாயாருக்கு மருத்துவ ரீதியாக வேலை செய்வதற்கான தகுதியை இழந்து விட்டதாக கூறி, ஒரு அரசு டாக்டர் மூலமாக மருத்துவ சான்றிதழ் பெற்றுத் தருவதாகவும், எனக்கு தாயாரின் வேலையை நேரடியாக வாங்கித் தருவதாகவும், வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார்.

    இதுபற்றி தனது தாயார், தேவஸ்தான இணை அதிகாரி போலா.பாஸ்கரிடம் புகார் செய்துள்ளார். அவர், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, சந்திரகிரி போலீசார் ஆகியோர் தேவஸ்தான உதவி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #TirupathiDevasthanam
    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    ×