search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivan Temple"

    • போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் பிரசித்தி பெற்ற அழியாபதி ஈஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த கோவிலுக்கு முன் பகுதியில் 39.52 சென்ட் நிலம் கோவில் நந்தவனமாக பயன் படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலம் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நந்தவனம் பயன்பாட்டுக்கு இல்லாத நிலை உருவாகி இருப்பதாக அப்பகுதியினர் புகார் கூறினர்.

    இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சுவாமி அழியாபதி ஈஸ்வரரிடம் விண்ணப்பம் செய்து பிரார்த்தனை செய்து போராட்டத்தில் ஈடுபட போவதாக கோவில் பக்தர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை அங்கு பக்தர்கள் பிரார்த்தனை போராட்டம் நடத்தப் போவதாக வந்த தகவலை அடுத்து நெல்லை சந்திப்பு போலீஸ் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

    அப்போது பக்தர்கள் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு வருகை தந்த நிலையில் கோவில் முன்பு ஒற்றை காலில் நின்றவாறு சிவ நாமம் பாடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நந்தவனத்தை மீட்க பிரார்த்தனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பக்தர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பக்தர்கள் தரப்பில், உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் நில அளவை பிரிவு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு பிரச்சனைக்குரிய இடம் அளவீடு செய்யப்பட்டது.

    தொடர்ந்து அரசு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இடம் கோவில் நந்தவனம் என கண்டறியப்பட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஒரு சில நாட்களில் இடத்தை மீட்டு தருவது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில செயலாளர் குற்றாலநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வராஜ், ராஜ செல்வம், மாவட்ட செயலாளர்கள் சுடலை, சுரேஷ், சங்கர், விமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
    • கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி திருவிழா வருகிற 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நாட்டும் விழா இன்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கன்னி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பா ளுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆனி திருவிழா விற்கான முகூர்த்த கால் நாட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.

    இதற்கான விழாவை ஆலய அர்ச்சகர் அய்யப்ப பட்டர் நடத்தினார். இதில் கோவில் மணியம் சுப்பையா, பக்தஜன சபை சார்பில் தெரிசை அய்யப்பன், பூபால் ராஜன், அசோக்குமார், இளைய பெருமாள், ஆன்மீக திருச்சபை நிர்வாகி சுப்பையா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பூஜை ஏற்பாடுகளை ஆலய வழிபாட்டு மகளிர் குழுவினர் செய்திருந்தனர். விழாவின் தொடர்ச்சியாக இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், சுவாமி- அம்பாளுக்கு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.

    • மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார்.
    • முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை

    செவ்வாய் கிரகத்திற்குரிய அதிதேவதை முருகன். பிரபலமான செவ்வாய் தலங்களாக வைத்தீஸ்வரன். கோவிலும், பழனியும் கருதப்படுகின்றன.

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமி சன்னதிக்கும், பழனி தண்டாயுதபாணி சன்னதிக்கும் சென்று வந்தால் மன ஆறுதல் கிடைப்பதுடன் செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணங்கள் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இது தவிர மயிலாடுதுறை அருகிலுள்ள சிறுகுடி மங்களநாதர் கோவிலில் செவ்வாய் அருள் பாலிக்கிறார். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு உகந்தது செவ்வாய் கிழமை.

    செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள சிவன் கோவில் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபடலாம்.

    இவ்வாறு தொடர்ந்து (ஒவ்வொரு செவ்வாய் கிழமை) விரதமிருந்து நெய் தீபம் ஏற்றி வந்தால் திருமணம் தடைபடும் திருமணம் விரைவில் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

    • தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
    • தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர்.

    தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

    தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

    தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

    கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

    சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

    தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

    தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக்கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டால் அவர்களைப் பிடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப்பூர்வமாக அனுபவித்துள்ளனர். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.

    • ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்றது.
    • பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்பபட்டர் குழுவினர் நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை திருவிழா கணபதி ஹோமத்து டன் தொடங்கி நடைபெற்றது.

    அன்னதானம்

    இதனை தொடர்ந்து வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடந்தன. பின்னர் திரவிய ஹோமம், வஸ்திராகுதி, பூரணாகுதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. இதன்பின்னர் சுவாமி, அம்பாளுக்கு 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம், அன்னா பிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பூஜை வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் குழுவினர் நடத்தினர். மதியம் 5 ஆயிரம் பேருக்கு அன்ன தானம் நடந்தது. இதனை பா.ஜ.க. பிரமுக ரான ஆறுமுகநேரி கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    பரிசு பொருட்கள்

    கோவிலின் கோசாலை பராமரிப்பு மற்றும் உழவாரப் பணிகளில் ஈடுபட்டு வரும் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் 12 பேருக்கு தலா ரூ. 1000 மற்றும் புடவை உள் ளிட்ட பரிசு பொருட்களையும் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் வழங்கி னார். இதேபோல் ஆலய அர்ச்சகர்கள் உள்ளிட்ட பணியா ளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு 5-வது வார்டு கவுன்சிலர் தமயந்தி, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவசங்கரி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இரவில் திருச்செந்தூர் கோவிந்த ம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீமதி தியாகராஜன் பக்தி சொற்பொழிவு ஆற்றினார். முடிவில் சுவாமி, அம்பா ளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிகளில் பக்த ஜனசபை நிர்வாகி தெரிசை அய்யப்பன், கீழவீடு பாஸ்கர், எம்.எஸ்.எஸ். கார்த்திகேயன், ெரயில்வே வளர்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி, அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் அணி தங்கபாண்டி, பேராசிரியர் அசோக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா, மண்டக படித்தாரரும் முன்னாள் விவசாய சங்க தலைவருமான கீழவீடு கே.ஆர். முருகன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .

    செங்கோட்டை:

    செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் நவராத்திரி மற்றும் லட்சார்சணை நிறைவு விழாவை முன்னிட்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி குலசேகர நாதருக்கு கும்பபூஜை ஜபம், ஹோமத்துடன் 35 வகை நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடை பெற்றது. இதைத்தொடர்ந்து தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதருக்கு பல்வேறு வண்ணமயமான நறுமண பூக்களால் சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . மேலும் ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி பஜனை மண்டலி சார்பில் பக்தி பஜனை பாடல்கள் நிகழ்த்தப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், மீனாட்சி சுந்தர் பட்டர் செய்திருந்தார்.

    • 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
    • மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரம் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மூலவர் , நந்தி, ஸ்ரீ உலகேஸ்வரருக்கு 16வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் , கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர்கோவில் , மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் ஆகிய கோவில்களில் நேற்று மாலை பிரதோஷத்தையொட்டி சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன 7 ஐம்பொன் சிலைகள் தொடர்பாக பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Ponmanickavel
    சென்னை:

    கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோவிலில் 47 ஆண்டுகளுக்கு முன்பு விலை உயர்ந்த 7 ஐம்பொன் சிலைகள் திருட்டு போனது. இதுதொடர்பாக தற்போது சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கும்பகோணம் அருகே தன்டன்தோட்டம் என்ற கிராமத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான சோழர்காலத்தில் கட்டப்பட்ட நடனபுரிஷ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 12-5-1971-ல் கோவில் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான 5 ஐம்பொன் சாமி சிலைகள் திருட்டு போய்விட்டது.

    போலீசில் புகார் கொடுத்தும் கடந்த 47 வருடங்களாக உரிய வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதேபோல 1972-ல் அதேகோவிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள நடராஜர் ஐம்பொன் சிலையும், கொலு அம்மன் ஐம்பொன் சிலையும் திருடப்பட்டது.

    இதுதொடர்பாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையிலும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.



    இதுபற்றிய தகவல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கிடைத்தது. உடனடியாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் போலீஸ் படையுடன் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருட்டு போன சிலைகளில் நடராஜர் சிலை இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்கு விற்கப்பட்டு, அங்கிருந்து அமெரிக்காவுக்கு கடத்தி செல்லப்பட்டு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    7 சிலைகள் திருட்டு போன பிறகு இந்த கோவிலில் மீதமுள்ள 17 சிலைகள் தற்போது அதேபகுதியில் உப்பிலியப்பன் கோவிலில் பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள சிலைகளில் சில உண்மையான சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதில் போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றி விசாரணை நடத்தி தேடி வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Ponmanickavel
    வந்தவாசி சிவன் கோவிலில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் ஜலகண்டேஸ்வரர், பெருமாள் சன்னதி உள்ள பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது. சமீபத்தில் தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது, பிரகாரத்தில் பந்து வடிவில் உள்ள ஐஸ்கிரீம் டப்பா கிடந்தது.

    எப்போதும், கோவிலில் இருக்கும் பவுனம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, குழந்தைகள் விளையாடும் பந்து என்று நினைத்து அதை எடுத்து கோவிலில் உள்ள பாறை மீது வைத்தார்.

    அப்போது, அந்த பந்தில் இருந்து வெடி மருந்துகள் கீழே கொட்டின. இதனால் வெடிகுண்டு என்று நினைத்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, கோவிலில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்ததும் வந்தவாசி டி.எஸ்.பி. பொற்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வெடி மருந்து நிரப்பப்பட்ட பந்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கற்களையே பிளக்கும் வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

    சமூக விரோத கும்பல் யாரேனும் சதி திட்டம் தீட்டி கோவிலில் பந்து வடிவிலான வெடிகுண்டை பதுக்கி தாக்குதலுக்கு நடத்த முயற்சித்தனரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, வெடி மருந்து பந்து மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி மருந்து பந்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் வந்தவாசி பகுதியில் பெரும் பீதியும், பரபரப்பான சூழலும் காணப்படுகிறது.
    ×