என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சஸ்பெண்டு"
- சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வீட்டில் வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது டி.ஐ.ஜி. வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிவக்குமாரை சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.
அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஏற்கனவே வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வார்டன்கள் சுரேஷ், சேது, சிறைக்காவலர்கள் ராஜூ, ரஷித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறைக்காவலர் சரஸ்வதி, செல்வி ஆகிய 11 பேர் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் ஸ்ரீஅவிட்டம் திருநாள் (எஸ்.ஏ.டி.) மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன்பு திடீரென மின்தடை ஏற்பட்டது. 3 மணி நேரம் நீடித்த இந்த மின்வெட்டால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் அவதிக்குள்ளானார்கள். அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டம் ஏற்பட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், பொதுப்பணித்துறையின் மின் பிரிவைச் சேர்ந்த உதவி பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளரை சஸ்பெண்டு செய்து கேரள பொதுப்பணித்துறை மந்திரி முகமது ரியாஸ் உத்தரவிட்டார்.
மேலும் மின்வெட்டுக்கு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணமா? என விசாரிக்க தலைமை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் அளிக்கின்றனர்.
விடைத்தாள்களை திருத்தம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினாலும் தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்து விடைத்தாள் நகல்களை பெற்று பார்த்த போதுதான் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளி வருகின்றன.
ஆசிரியர்கள் அலட்சியமாக விடைத்தாள்களை திருத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அறிந்தும் இது போன்ற தவறுகள் ஒவ்வொரு ஆண்டும் நடக்கின்றன.
மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு 4,500 பேர் விண்ணப்பித்து விடைத்தாளின் நகலை பார்த்தபோது அதில் 1700 மாணவர்களின் மதிப்பெண்கள் வேறுபட்டு இருந்தது.
மாணவர்களின் விடைத்தாள்களில் கூட்டல் தவறு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மதிப்பெண்களை கூட்டி மொத்தமாக போடும் போது தவறு செய்திருப்பது தெரிய வந்தது.
10 மதிப்பெண்கள் வரை வேறுபட்டு இருந்தது. மேலும் சிலரது மதிப்பெண்கள் 72 என்பதற்கு பதிலாக 27 என தவறுதலாக கொடுக்கப்பட்டு இருந்தன. விடைத்தாள்களை ஒரு ஆசிரியர் திருத்தினாலும் அது சரியாக திருத்தப்பட்டு இருக்கிறதா? கூட்டலில் தவறு உள்ளதா? என்பதை கண்காணிக்க படிப்படியாக 3 கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். அப்படியிருந்தும் மதிப்பெண் தவறாக வழங்கியது, முறையாக கூட்டி மதிப்பெண் அளிக்காமல் அலட்சிய போக்கில் செயல்படுதல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டத்திலும் விடைத்தாள் திருத்தம் செய்ததில் குளறுபடிகள் செய்ததாக 500 ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இதனை அனுப்பி உள்ளனர்.
விடைத்தாள்களில் பிழைகள் இருப்பதை சுட்டிக்காட்டி மதிப்பெண் மாறுபட்டு இருப்பதையும் கூறி 7 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
முறையான விளக்கத்தை கொடுத்தால் அவர்கள் மீது 17-ஏ, 17 பி போன்ற குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். அதன்படி அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை 3 ஆண்டுகளுக்கு ‘கட்’ செய்யப்படும்.
உரிய விளக்கம் தராதவர்கள் அல்லது விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விடைத்தாள் திருத்தம் செய்வதில் கவனத்துடன் செயல்படவும் தவறுகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்த போதிலும் ஆசிரியர்கள் சிலர் தவறு செய்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
தற்போது அலட்சிய போக்கில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அவர்களது விளக்கத்தை பொறுத்து ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் சஸ்பெண்டு நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லம் பாய்ச்சலூர் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (வயது 27). இவரது மனைவி ஆதிரா (23).
அனீசுக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் அனீஸ் தாக்கியதாக திருவல்லா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு போலீஸ் நிலையத்திற்கு வருமாறு போலீசார் கூறியதால் அனீசும், அவரது மனைவி ஆதிராவும் திருவல்லா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
திருவல்லா போலீஸ் நிலையத்தில் விசாரணை நடந்த போது அனீசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனால் பயந்து போன அனீஸ் தனது மனைவியை அழைத்துக் கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார். உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் விரட்டிச் சென்றனர்.
அவர்கள் பிடியில் ஆதிரா மட்டும் சிக்கிக்கொண்டார். அனீஸ் தப்பித்த ஆத்திரத்தை அவர் மீது காட்டும் விதத்தில் ஆதிராவை 2 போலீஸ்காரர்களும் நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள். ஷு காலாலும் அவரை மிதித்தனர். பிறகு அவரை போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.
இதுபற்றி விசாரணை நடத்திய பத்தனம்திட்டா போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார், நடுரோட்டில் பெண்ணை தாக்கிய 2 போலீஸ்காரர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆதிரா தற்போது சிகிச்சைக்காக திருவல்லா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
திருமலை:
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கும், 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
சித்தூர் மாவட்டம், சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினர் 5 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். இது போல் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் 2 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட்டதாக தெலுங்கு தேசம் கட்சியினரும் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சந்திரகிரி சட்டப்பேரவை தொகுதியில் உள்ள பாகாலா மண்டலம், புலிவருத்திப்பல்லி, ராமச்சந்திராபுரம் மண்டலம் என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம், கேலேபல்லி, குப்பம்பாதுரு ஆகிய 7 மையங்களில் கடந்த 19-ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்தநிலையில் முதல் கட்டமாக புலிவருத்தி பல்லி, என்.ஆர்.கம்மப்பல்லி, கொத்தகண்டிகை, கம்மப்பல்லி, வெங்கடராமாபுரம் ஆகிய 5 வாக்குசாவடி மையங்களில் கள்ள ஓட்டு போட துணையாக இருந்ததாக அதிகாரிகள் முரளி கிருஷ்ணா, குணசேகர்ரெட்டி, செஞ்சய்யா, மகபூப்பாஷா, ஜானகிராம்ரெட்டி, மது, முரளிதர்ரெட்டி, ஸ்ரீதேவி, கங்காதரய்யா, வெங்கட்ரமணா மாதங்கி ஆகிய 10 பேரை சஸ்பெண்டு செய்து சித்தூர் கலெக்டர் பிரத்யும்னா உத்தரவிட்டார்.
கோவை சிங்காநல்லூரில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு திருச்சிக்கு சென்ற அரசு பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்தில் புறப்பட்டதில் இருந்தே டிரைவர் பஸ்சை தாறுமாறாக ஓட்டினார். இதனால் பயணிகள் பீதியுடன் பயணம் செய்தனர்.
இந்நிலையில் பஸ் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் மீது தாறுமாறாக சென்றபோது பாலத்தின் சுவர் மீது உரசியதால் பயணிகள் அலறி சத்தம் போட்டனர். பின்னர் இருகூர் பிரிவு அருகே சென்றபோது பஸ்சை பயணிகள் நிறுத்தி டிரைவரை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்ற விசாரணை நடத்தினர்.
அப்போது பஸ்சை ஓட்டியது கரூர் மாவட்டம் புலியூரை சேர்ந்த சுப்பிரமணியம்(42) என்பதும், அவர் குடிபோதையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பஸ்சில் பயணித்த பயணிகள் மாற்று பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் டிரைவர் சுப்பிரமணியம் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக காங்கேயம் பஸ் டெப்போ அதிகாரிகளும் விசாரணை நடத்தி உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளித்தனர்.
இதனடிப்படையில் டிரைவர் சுப்பிரமணியத்தை முதற்கட்டமாக சஸ்பெண்டு செய்து திருப்பூர் கோட்ட மேலாண் இயக்குனர் முருகேசன் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுப்பிரமணியம் மீது ஏற்கனவே இதுபோன்ற புகார்கள் உள்ளதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியான புகார்கள் இருக்கும்பட்சத்தில் டிரைவர் பணிநீக்கம் செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் குல்பி ஐஸ், 12 ஆயிரம் மோர் பாட்டில், 3 ஆயிரம் லிட்டர் மோர் பாக்கெட், 3 ஆயிரம் லஸ்ஸி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால் கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலை பார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை சஸ்பெண்டு செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் 5 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #AavinMilk
கோவை பாலசுந்தரம் ரோட்டில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் மூலம் டாக்டர் அம்பேத்கர் ஆதி திராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது.
இவ்விடுதியில் 174 கல்லூரி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இவ்விடுதியின் பராமரிப்பு பணிக்கென ஒரு விடுதிக் காப்பாளர், 3 சமையலர், ஒரு உதவி பணியாளர், ஒரு துப்புறவு பணியாளர் என மொத்தம் 6 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விடுதியில் இன்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதியின் சமையல் அறை, மாணவர்கள் அறை, கழிப்பறை, மற்றும் விடுதி வளாகம் என ஒவ்வொரு பகுதிகளிலும் கலெக்டர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இவ்விடுதி வளாகத்தினை முறையாக பராமரிக்காமல் இருந்த காரணத்திற்காக தனது பணியினை சரிவர மேற்கொள்ளாத விடுதி காப்பாளர் ஆர்.ஜெகநாதனை ‘சஸ்பெண்டு’ செய்ய கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார்.
மேலும், விடுதியினை முறையாக 2 நாட்களுக்குள் சீர்செய்யும்படியும், மாவட்ட கலெக்டர் ராசாமணி மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். #tamilnews
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 2-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். பேச்சு வார்த்தைக்கு அரசு அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
ஆனால் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்தது. மேலும் பணிக்கு திரும்ப காலக்கெடு நிர்ணயித்தது.
இதையடுத்து ஆசிரியர்கள் 30-ந்தேதி பணிக்கு திரும்பினர். அதன்பின் அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
அரசு நிர்ணயித்த காலக்கெடுக்குள் பணிக்கு திரும்பாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 1500 பேர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாய்ந்தது.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக கல்லூரி பேராசிரியர்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 25 கல்லூரி பேராசிரியர்களை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
முன்தேதியிட்டு ஜனவரி 25-ந் தேதியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சென்னை மாநில கல்லூரியை சேர்ந்த 6 பேராசிரியர்களும் அடங்குவர்.
இதற்கான உத்தரவு கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பேராசிரியர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. #CollegeTeachers #JactoGeo
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட தொடக்கபள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மாணவர்களின் வாசிப்பு திறன் குறைவாக உள்ள பள்ளிகளில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலை பகுதியில் வெதூர் மற்றும் விளாநெல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த 2 பள்ளிகளும் பல நாட்களாக மூடப்பட்டிருப்பதும், வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் விளாநெல்லி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாராம் ஆகியோர் பள்ளிக்கு வராமல் இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் மாணவர்களை சேர்க்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெரியவந்தது.
அப்பகுதி மக்களும் இந்த பள்ளிகளுக்கு தலைமைஆசிரியர்கள் வரவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து வெதூர் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், விளாநெல்லி பள்ளி தலைமைஆசிரியர் ராஜாராம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு குடிமுறை அரசு பணிகள் விதிப்படி 2 தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்து கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அதிகாரி கார்த்திகா உத்தரவிட்டார்.
தமிழகத்தில் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
முதல்-அமைச்சரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபட போவதில்லை என்று சங்க நிர்வாகிகள் அறிவித்தனர்.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பி உள்ள நிலையில் துறை ரீதியாக நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறைக்கு சென்றவர்கள் இன்று வேலையில் சேர முடியவில்லை.
சென்னை தலைமை செயலகத்தில் ‘சஸ்பெண்டு’ நடவடிக்கைக்கு உள்ளான ஜாக்டோ-ஜியோ நிர்வாகி வெங்கடேசன் இதுபற்றி கூறியதாவது:-
அரசு ஊழியர்களில் சஸ்பெண்டு ஆனவர்களில் நானும் ஒருவன். போராட்டத்தை தூண்டியதாக என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தலைமை செயலகத்தில் நான் உள்பட 30 பேர் சஸ்பெண்டு ஆகி உள்ளோம். எங்களுக்கு பாதி சம்பளம் தான் கிடைக்கும்.
எங்களைப்போல் சஸ்பெண்டு ஆனவர்கள் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் சுமார் 3500 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு 1-ந்தேதி சம்பளம் கிடைக்காது.
3 அல்லது 4-ந் தேதிகளில் தான் பாதி சம்பளம் கிடைக்கும். சஸ்பெண்டில் இருக்கும்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கவில்லை என்று எழுதி சான்று கொடுத்தால் தான் எங்களுக்கு பாதி சம்பளம் கிடைக்கும்.
கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டிஸ்மிஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது 7 மாதம் பணியில் சேர முடியாமல் இருந்தோம். அதன் பிறகு தேர்தலுக்கு முன்புதான் எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்தார். அதன் பிறகே வேலையில் சேர முடிந்தது.
அதேபோல் இப்போதும் சஸ்பெண்டு நடவடிக்கைக்கு ஆளாகி இருப்பதால் பணியில் சேர முடியாத நிலை உள்ளது.
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தால்தான் நாங்கள் பணியில் சேர முடியும். அப்போதுதான் முழு சம்பளத்தை பெற முடியும். அதுவரை பாதி சம்பளம் தான்.
பாராளுமன்ற தேர்தல் வருவதால் அதற்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எங்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #JactoGeo
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 3228 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு மற்றும் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் 38 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதில் கைது செய்யப்பட்ட 27 ஆசிரியர்களின் பெயர் பட்டியலை காவல் துறையினர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்தனர்.
அதன்படி கைது செய்யப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்களான செல்லக்குட்டியூரைச் சேர்ந்த மணிகண்டன், தேவிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன், வெறியம்பட்டியைச் சேர்ந்த அண்ணாத்துரை உள்பட 27 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 9 ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 36 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JactoGeo
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்