என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 102009
நீங்கள் தேடியது "slug 102009"
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வால் மாவட்டத்தில் சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கில் இன்று பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Uttarakhand
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் பௌன் பகுதியில் இருந்து ராம்நகர் பகுதிக்கு இன்று சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
சுமார் 60 அடி ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில், இதுவரை 40 பயணிகள் வரை உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதால் உயிரிழந்தோர் அல்லது காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. #Uttarakhand

சிவகாசியில் வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை நாய்கள் கடித்து குதறியதை தொடர்ந்து குழந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி:
சிவகாசி-விஸ்வநத்தம் ரோட்டில் உள்ள அரசன் காம்பவுண்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். அச்சக தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஜான் (வயது 4), ஜாய்தெரசா (2) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். மாலையில் குழந்தை ஜாய்தெரசா தனது வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியில் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்தில் கழிவுப் பொருட்களை தின்று கொண்டிருந்த நாய்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு குரைத்த படி சிதறி ஓடி உள்ளன.
அப்போது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை நாய்கள் சுற்றி நின்று கடித்து குதறியுள்ளன. இதில் ஜாய்தெரசாவுக்கு காது, தலை, கழுத்து பகுதிகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழந்தையை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசியில் பல இடங்களில 500-க்கும் மேற்பட்ட நாய்கள் தற்போது உள்ளன. பல இடங்களில் பள்ளி குழந்தைகளையும், முதியவர்களையும் நாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பை கொட்டப்படும் இடத்தில் கோழி மற்றும் மீன் கழிவுகளை சிலர் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கொட்டும் பகுதிக்கு வரும் நாய்கள் அதே பகுதியில் சுற்றி திரிந்து பொதுமக்களை கடித்துவிடுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர்.
திருவள்ளூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் திருவள்ளூரில் இருந்து ஒரு வேனில் பணியாளர்கள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த வேனை பிரபு (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
அந்த வேனில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சூர்யா, துர்கா, கவுசல்யா, பிரதீபா மற்றொரு சூர்யா, ஜான்சி உள்ளிட்ட 10 பேர் இருந்தனர். அந்த வேன் திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது.
இதில் டிரைவர் உள்பட 10 பேரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமானூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400 காளைகள் பங்கேற்றன. 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். முதலில் தூய மங்கள அன்னை ஆலயத்தின் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதையடுத்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிவந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் சில காளைகள் வீரர்களை மிரட்டி சென்றன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன.
அடக்க முயன்றபோது காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் கல்லணை தோகூரை சேர்ந்த பாஸ்கர்(வயது 38), புள்ளம்பாடியை சேர்ந்த ஆல்வின்(23), வரகூரை சேர்ந்த ரஞ்சித்(21), திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்(35) உள்பட 5 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், நாற்காலி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் விழாக்குழு சார்பில் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை திருமானூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று மாலை பெய்த மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். #Mumbairain
மும்பை:
மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தெருக்களிலும், சாலை ஓரங்களிலும் சூழ்ந்த வெள்ளநீர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை தொடரும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக தெற்கு மும்பையில் எம்.ஜி சாலை அருகே உள்ள மெட்ரோ சினிமாஸ் பகுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. மரம் முறிந்து விழுந்ததில் மரத்தின் அருகே இருந்த 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள ஜி.கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பார்சிங் மற்றும் ராஜேந்திர சிங் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், தலையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Mumbairain

ஜெர்மனி நாட்டின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். #germanexplosion
பெர்லின்:
ஜெர்மனி நாட்டின் வடபகுதியில் உள்ள ரினே-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் உப்பர்ட்டால் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பின்னிரவு) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரு வீட்டின் பெரும்பகுதி பெயர்ந்து கீழே விழுந்தது. கீழே நின்றிருந்த ஒரு கார் நிலைகுலைந்து சேதம் அடைந்தது. வெடி விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அருகாமையில் வசித்தவர்கள் உள்பட மொத்தம் 25 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ள போலீசார், இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது, எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தா? என்பது தொடர்பாக உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை என குறிப்பிட்டனர்.
இந்த விபத்தின் எதிரொலியாக சில வீடுகள் தீபிடித்து எரிந்தன. தீயணைப்பு படையினர் நெடுநேரம் போராடி, தீ மேலும் பரவாதவாறு அணைத்து கட்டுப்படுத்தினர்.
ஒரு பகுதியில் இடிபாடுக்குள்ளான அந்த அடுக்குமாடி கட்டிடம் முற்றிலுமாக இடிந்து விழுவதை தடுக்கும் நடவடிக்கையில் மீட்பு படையினரும், கட்டிட பொறியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். #germanexplosion #tamilnews
புலிவலம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
புலிவலம்:
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே ஓமாந்தூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான நெல் கிடங்கு உள்ளது. இங்கிருந்து பெரமங்கலத்தில் உள்ள அரிசி ஆலைக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை மண்ணச்சநல்லூர் எதுமலை ரோடு காமராஜ் நகரை சேர்ந்த மயில்(வயது 48) ஓட்டினார்.
லாரியில் மூட்டைகளுக்கு மேற்பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 13 பேர் அமர்ந்து இருந்தனர். புலிவலம் - ஓமாந்தூர் சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 13 தொழிலாளர்களும் கீழே விழுந்தனர். நெல் மூட்டைகளும் சரிந்து விழுந்தன.
இந்த விபத்தில் டிரைவர் மயில் உள்ளிட்ட 14 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு புலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து புலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அரசு அறிவித்த போர் நிறுத்தத்துக்கு இடையில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் மாவட்ட கவர்னர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். #Talibankillsgovernor #Faryabgovernor
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படையினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் கடந்த 16 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தலிபான் அமைப்பை அரசியல் இயக்கமாக அங்கீகரிக்க போவதாக அதிபர் அஷ்ரப் கானி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தார்.
இதற்கிடையில், புனிதமான ரமலான் பண்டிகை காலத்தில் ரத்தம் சிந்தப்படுவதை தவிர்க்கவும், உயிர் பலிகளை தடுக்கவும், அரசுதரப்பில் 8 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த தலிபான் அமைப்பினர் 3 நாட்கள் மட்டும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டனர்.
இதேபோல், நாட்டின் தென்பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் மாவட்ட கவர்னர் வீட்டின் அருகே நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் கவர்னர் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #Talibankillsgovernor #Faryabgovernor

இந்நிலையில், பர்யாப் மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியை கைப்பற்றுவதற்காக தலிபான் பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதலில் கோஹிஸ்ட்டனாட் மாவட்ட கவர்னர் அப்துர்ரஹ்மான் பன்னாஹ் என்பவர் கொல்லப்பட்டார். கோஹிஸ்ட்டனாட் மாவட்டத்தின் மையப்பகுதியை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் அரசுப் படைகளை சேர்ந்த மேலும் 8 பேர் உயிரிழந்தனர் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதேபோல், நாட்டின் தென்பகுதியில் உள்ள கஸ்னி மாகாணத்தில் மாவட்ட கவர்னர் வீட்டின் அருகே நடைபெற்ற கார் குண்டு தாக்குதலில் கவர்னர் உட்பட 26 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #Talibankillsgovernor #Faryabgovernor
திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. காளைகளை அடக்க முயன்ற போது காளைகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சின்னபட்டாகாடு கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 காளைகள் பங்கேற்றன. 100 மாடுபீடி வீரர்கள் காளைகளை பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ஊரின் தெற்குத்தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளையும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் ஆக்ரோஷத்துடன் மாடுபிடி வீரர்களை முட்டி தள்ளி விட்டு சென்றன.
காளைகளை அடக்க முயன்ற போது கோவிலூரை சேர்ந்த ராகுல்(வயது 20), வைப்பூர் ஆசைத்தம்பி(34), தஞ்சாவூர் ஆனந்த்(19) சின்னப்பட்டாகாடு முருகானந்தம்(39), கீழஎசனை புண்ணியமூர்த்தி(24) உள்பட 11 பேர் காயமடைந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சில்வர் பாத்திரம், மின் விசிறி, சைக்கிள், கட்டில், வேட்டி மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஜல்லிக்கட்டில் விடப்பட்ட காளைகள் திரும்ப திரும்ப விடப்பட்டதாலும், சிறு கன்றுகள் விடப்பட்டதாலும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மதியம் 1 மணிக்கு மேல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்தனர்.

விழுப்புரம் அருகே சாலையை கடக்க முயன்ற காவலாளி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(வயது 46). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு செஞ்சி நான்குமுனை சந்திப்பில் கணேசன் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்தவழியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மாணவர்கள் சூர்யா(20), அபிவர்மன்(20), பிரவீன்(20) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரதவிதமாக சாலையை கடக்க முயன்ற கணேசன் மீது மோதியது.
இதில் தூக்கிவீசப்பட்ட கணேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த 3 மாணவர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews

பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெரியபாளையம்:
ஆந்திர மாநிலம் மதனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 20). கடந்த வாரம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான கார்த்திக் (20), தினேஷ் (25) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு செங்குன்றத்தில் உள்ள உறவினரை பார்க்க வந்தார்.
பெரியபாளையம் அருகே சென்னை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் கன்னிகைபேரில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகே வந்த போது எதிரே குஜராத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சிலம்பரசன் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். அவர்களை கிராம மக்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் பரிதாபமாக இறந்து போனார். அவர் நண்பர்கள் கார்த்திக், தினேஷ் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து பெரிய பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #Tamilnews

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி பனியன் கம்பெனி தொழிலாளி பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி கள்ளி மேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் மாரி (25). அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு இவர் தனது நண்பர் தினேசுடன் (24) மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு சென்றார். திருப்பூர்-பொங்கலூர் சாலையில் பெத்தாம் பாளையம்பகுதியில் சென்ற போது எதிரே மோட்டார் சைக்கிளில் கள்ளி மேடு பகுதியை சேர்ந்த சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் வந்தனர்.
திடீரென இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் 4 பேரும் தவறி கீழே விழுந்தனர். தலையில் பலத்த காயம் அடைந்த மாரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அவரது நண்பர் தினேஷ் மற்றும் சசிகுமார், ஜெகநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

×

X