search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    சோமாலியாவில் ஓட்டல்களை குறிவைத்து அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். #SomaliaSuicideBlasts #Somalia
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள பே பிராந்தியத்தில் நேற்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் இரண்டு இடங்களில்  தாக்குதல் நடத்தினர். பாய்டோவா நகரில் உள்ள பிலன் ஓட்டல் மற்றும் பத்ரி ஓட்டலுக்குள் திடீரென புகுந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

    இந்த தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் ஓட்டலுக்கு சாப்பிட வந்த பொதுமக்கள் ஆவர்.

    இந்த தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு, சோமாலியாவிலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    சோமாலியாவில் 30 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற சூழ்நிலை, தலைவிரித்தாடும் வன்முறை மற்றும் அரசியல் குழப்பம் நிலவுகிறது. அரசுப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SomaliaSuicideBlasts #Somalia
    ஆப்கானிஸ்தான் நாட்டின் தக்கார் மாகாணத்தில் இன்று பெண் வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். #TakharElectionRally #ElectionRallyExplosion
    காபுல்:

    249 உறுப்பினர்களை கொண்ட ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்துக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    இந்நிலையில், நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள  தக்கார் மாகாணத்துக்குட்பட்ட ரோஸ்டக் மாவட்டத்தில் இன்று நசீபா யூசுபிபேக் என்ற பெண் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    பிற்பகல் சுமார் 2 மணியளவில் அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

    காயமடைந்த 32 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

    இந்த மாதத்தில் மட்டும் தேர்தல் பிரசார கூட்டங்களில் மூன்று முறை வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது.

    கடந்த 3-ம் தேதி நன்கர்ஹர் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் 14 பேரும், கடந்த 9-ம் தேதி ஹெல்மன்ட் மாகாணத்தில் நடைபெற்ற தாக்குதலில் வேட்பாளர் உட்பட 8 பேரும் உயிரிழந்தது நினைவிருக்கலாம். #TakharElectionRally #ElectionRallyExplosion 
    பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), இவர் கேரள மாநில அரசு ஊழியராக உள்ளார்.

    இவர் தனது தந்தை தாமோதரன் (75), தாய் ராதா (60), மனைவி தீபா (36) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை தேவராஜ் ஓட்டினார். முன் சீட்டில் தாமோதரனும், பின் சீட்டில் ராதா, தீபா ஆகியோரும் இருந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் வந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முன் சீட்டில் இருந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் தாமோதரன் பக்கத்தில் பொருத்தப்பட்ட பலூன் வேலை செய்யாததால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் தேவராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபாவும், ராதாவும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்த தீபாவையும், ராதாவையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் தாறுமாறாக ஓடிய போலீஸ் வேன் சுவரில் மோதி நின்றது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
    குன்னூர்:

    தமிழகம் முழுவதும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டு இருந்ததால், சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் தலைமையிலான அதிரடிப்படை போலீசார் 33 பேர் அடங்கிய மீட்புக்குழு ஊட்டிக்கு வந்திருந்தது. பின்னர் ரெட் அலார்ட் விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து ஊட்டியில் முகாமிட்டு இருந்த அதிரடிப்படை போலீசார் நெல்லைக்கு பாதுகாப்பு பணிக்காக அழைக்கப்பட்டனர். அதன்பேரில் நேற்று காலை 8 மணிக்கு இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ் தலைமையிலான போலீசார் ஒரு வேனில் ஊட்டியில் இருந்து நெல்லைக்கு புறப்பட்டனர்.

    குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் கே.என்.ஆர். நகர் அருகே சென்றபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. மேலும் பிரேக் பிடிக்காமல் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த ஒரு சுவரில் மோதி நின்றது. அதில் இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ், டிரைவர் சிவக்குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். மேலும் வேனின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. உடனே சக போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். விபத்து குறித்து வெலிங்டன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் இன்று வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரம் நின்றிருந்த டிராக்டர் மீது மோதிய விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். #Patientkilled #ambulancehitstractor
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம், மோரேனா மாவட்டம், சபல்கர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு தீவிபத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் அருகாமையில் உள்ள குவாலியர் நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு உள்ளூர் டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    இதைதொடரந்து, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் இன்று குவாலியர் நகருக்கு அழைத்து சென்றனர்.

    மோரேனா - ஷிவ்புரி சாலை வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு டிராக்டரின் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த கோர விபத்தில் தீக்காயம் அடைந்த ராம்பாபு தகட்(47), அவரது தாயார் ரம்பாட்டி(70), ஆம்புலன்ஸ் டிரைவர் சல்மான்(49) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். #Patientkilled #ambulancehitstractor 
    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    திருவெண்ணைநல்லூர்:

    சென்னையில் இருந்து நெல்லைக்கு ஒரு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

    பஸ்சில் நெல்லை மாவட்டம் மாறாந்தையை சேர்ந்த பிச்சைமணி (வயது 30) உள்பட 2 டிரைவர்கள் இருந்தனர். இதில் பிச்சைமணி முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். மற்றொரு டிரைவர் பஸ்சை ஓட்டி சென்றார். அந்த பஸ் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர்காந்திநகர் பகுதியில் சென்னை-திருச்சி சாலையில் வந்து கொண்டிருந்தது. பஸ்சுக்கு முன்னால் ஒரு லாரி கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றது. அப்போது பஸ் திடீரென அந்த லாரியின் பின்புறம் மீது மோதியது.

    இதில் லாரியில் இருந்த கம்பிகள் பஸ் கண்ணாடியை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தன. அப்போது பஸ்சின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்த மாற்று டிரைவர் பிச்சைமணியின் உடல் மீது கம்பிகள் குத்தின. இதில் பிச்சைமணி பஸ்சில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
    சிவகங்கை:

    மதுரை அய்யர் பங்களாவை சேர்ந்தவர் அங்குரகு (வயது 28). இவருடைய மனைவி முனீஸ்வரி (25), மகன் விஜயராஜன் (10). இந்தநிலையில் அங்குரகு மோட்டார் சைக்கிளில் குடும்பத்துடன் கல்லலை அடுத்த நடராஜபுரத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

    அழுபிள்ளைதாங்கி கண்மாய் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. அதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 
    நாகர்கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் திருச்சி போலீசார் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர்.
    நாகர்கோவில்:

    இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குமரி மாவட்ட கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். குமரி கியூ பிராஞ்ச் போலீசார் இலங்கைத் தமிழர்கள், இலங்கை அகதிகள் உள்பட 13 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மீதான வழக்கு விசாரணை இரணியல் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போதெல்லாம் 13 பேரும் திருச்சியில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவது வழக்கம்.

    இதேபோல் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக திருச்சி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த சீலன் என்ற குணசீலன், கோபிநாத், தயாகரன், குருவிந்தன், தர்ஷன், சத்தியசீலன், ராபின் பிரசாத், தயானந்தன், காந்தரூபன், பிரபாகரன், சுதர்சன், அய்யா என்ற அருள் இன்பத்தேவர், யோககுமார் ஆகிய 13 பேரும் போலீஸ் வேனில் திருச்சியில் இருந்து குமரி மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    இவர்களின் பாதுகாப்புக்காக திருச்சி மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன், ஏட்டு பன்னீர்செல்வம், போலீஸ்காரர்கள் சங்கர், மோகன்தாஸ், எழில்குமார், சரத்குமார், ரீகன், சிவகுமார், பிரபாகரன் ஆகிய 10 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அளித்து 13 பேரையும் குமரி மாவட்டத்துக்கு அழைத்து வந்தனர்.

    நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பால வேலைகள் நடைபெறுவதால் இலங்கை அதிகள் வந்த வேன் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், பூதப்பாண்டி, இறச்சகுளம் வழியாக களியங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. மதியம் 12 மணி அளவில் இறச்சகுளத்துக்கும், அழகன்கோணம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேன் சென்றபோது எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக டிரைவர் வேனை சாலையோரமாக ஒதுக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக வேன் சாலை ஓரத்தில் வயல்கள் அமைந்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த 10 போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 13 பேரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த நாகரகோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பிரபாகரன் என்ற போலீஸ்காரர் ஆகிய 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். மற்ற 7 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

    அகதிகள் உள்ளிட்ட 13 பேரில் காந்தரூபன், யோககுமார், குருவிந்தன், அருள்இன்பதேவர், பிரபாகரன், சத்தியசீலன், தயாகரன், தயானந்தன் ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 5 பேர் லேசான காயம் அடைந்தனர். விபத்து நடந்த விவரம் இரணியல் கோர்ட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    பின்னர் குமரி மாவட்ட போலீஸ் பாதுகாப்புடன் மாற்று வாகனம் மூலமாக திருச்சி போலீசாரும், இலங்கை அகதிகள் உள்ளிட்ட 12 பேரும் நேற்று மாலை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெறும் அருள் இன்பத்தேவர் மட்டும் சிகிச்சை முடிந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். 
    திருவாரூர் அருகே மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    கொரடாச்சேரி:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள எருக்காட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது40). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது ஆட்டோவில் ஆலத்தாங்குடியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவருடைய மனைவி செல்வி, செல்வேந்திரன் மகள் தீபிகா (3) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கமலாபுரத்தில் இருந்து கண்கொடுத்தவனிதம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆலவாய் பண்ணைக்குளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த நீலனூரை சேர்ந்த சுரேஷ் (32), ஆட்டோவில் பயணம் செய்த சிறுமி தீபிகா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தீபிகா திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சுரேசுக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆட்டோ டிரைவர் கிருஷ்ணன் கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #JKLandslide
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு  மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்நிலையில், காலி பட்டோலி கிராமத்தில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு மண் வீடு முழுவதும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டது.


    இதையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள், அங்கு விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், வீட்டில் இருந்த  கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என 5 பேரையும்  சடலமாகவே மீட்க முடிந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #JKLandslide
    புளியம்பட்டியில் ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் போலீஸ் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி புஞ்சை புளியம் பட்டி பகுதியில் சுமார் 40 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அந்த சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. புஞ்சை புளியம்பட்டி அவ்வை வீதியிலும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ தயார்படுத்தப்பட்டது. அதில் விநாயகர் சிலையை ஏற்றி பவானி ஆற்றை நோக்கி எடுத்து சென்றனர்.

    சரக்கு ஆட்டோவை கார்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார்.ஆட்டோவில் அந்த பகுதியை இளைஞர்கள் பலர் ஏறி இருந்தனர்.

    பாதுகாப்புக்காக பவானிசாகர் போலீஸ் நிலைய பெண் காவலர் லட்சுமியும் (32) அந்த ஆட்டோவில் இருந்தார். அவரது சொந்த ஊர் சேலம், வடுகம்பட்டி, பிச்சம்பாளையம் ஆகும்.

    நள்ளிரவில் கணக்கரசம் பாளையம் அருகே சென்ற சரக்கு ஆட்டோ அங்குள்ள வளைவில் திரும்பும்போது திடீரென விநாயகர் சிலையுடன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த பெண் காவலர் லட்சுமி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    வசந்த் (29), அருண் (22), தினேஷ்குமார் (22), சஞ்சய் (15), சக்திவேல் (21), காசி (26), சூர்யா (17), பிரனீத் (16), பிரபஞ்ச் (17), சுரேஷ் கிருஷ்ணா (19), அருண் பிரசாத் (17), டிரைவர் கார்த்தி, பெண் காவலர் லட்சுமி.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே ரோட்டோர பள்ளத்தில் தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனப்பகுதி காடகநல்லிக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

    காடகநல்லிக்கு பஸ் சென்று அங்கிருந்து மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தது.

    பசுவணாபுரம் அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பிய போது எதிர்பாராத வகையில் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ரோட்டோர பள்ளத்தில் பஸ் திடீரென கவிழ்ந்தது.

    பஸ் கவிழ்ந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ... அம்மா.. என அபாய குரலிட்டனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி சென்று இடிபாட்டுக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டனர்.

    சம்பவ இடத்துக்கு போலீசாரும் விரைந்து வந்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் பெயர் ஊர் விவரம் உடனடியாக தெரியவில்லை.

    மேலும் இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி பகுதிகளில் இருந்து ஆம்புலன்சுகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. படுகாயத்துடன் துடித்தவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ×