search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 102009"

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரெயில் மோதி டெய்லர் மற்றும் பெண் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள அரும்பகுதி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42) டெய்லர். இன்று காலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சரவணன் இறந்தார்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லத்தேரி ரெயில்வே கேட் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாவரங்கள் வெட்டும்போது அவற்றின் உணர்வு மண்டலங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? என்பது குறித்த வீடியோ பதிவு வைரலாக பரவி வருகிறது.
    நியூயார்க்:

    இயற்கையின் கொடைகளில் ஒன்றாக கருதப்படும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது ஞானிகளின் ஆத்மார்த்த கருத்து. அவற்றை மெய்ப்பிக்கும் வகையில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளும் நடந்துள்ளன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் என்ற பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகளும், அதற்கான ஆதாரங்களும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

    தாவரங்கள் தாக்கப்படும்போது, அவற்றின் நரம்பு மண்டலங்கள் வழியே உணர்வுகள் கடத்தப்பட்டு இதர பாகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த எச்சரிக்கையை கொண்டு அவை அடுத்து என்ன செய்யும்? என்பது குறித்தான ஆய்வு நீண்டு கொண்டு வருகிறது.

    எனினும், நரம்பு மண்டலமே இல்லாத தாவரங்கள், விலங்குகளை போல தங்கள் உணர்வுகளை அடுத்த பாகங்களுக்கு கடத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ஃப்ளூரோசெண்ட் புரதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலமே தாவரங்களின் உணர்வுகள் கடத்தப்படுவது வெளிப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பல்கலைக்கழக தாவரவியலாளர் சைமன் கில்ராய் கூறுகையில், ‘இந்த முறையிலான சமிக்ஞை இருப்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஒரு இடத்தில் காயமடைந்தால் மீதமுள்ள இடங்களில் அதன் பாதுகாப்பு செல்களை தூண்டுகிறது. ஆனால் இந்த அமைப்புக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. தாவரத்தின் ஒரு பகுதி காயம் அடைந்தால் அது தாவரம் முழுவதும் பரவுகிறது’ என தெரிவித்தார்.

    இதன்மூலம், நாம் அன்றாடம் மிக அலட்சியமாக வெட்டி வீழ்த்தும் தாவரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை உணர்ந்து, தாவரங்களை வெட்டுவதை குறைத்து இயற்கையையும் பாதுகாக்க முயற்சிப்போம்.


    புதுக்கோட்டை அருகே கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டு ஜல்லி மற்றும் பாறாங்கற்களாக அனுப்பப்படுகிறது. இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக சக்தி வாய்ந்த வெடிகள் வைக்கப்பட்டன. அந்த பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த வெடிகள் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று மாலை குவாரிக்கு வந்த மேற்பார்வையாளரான முத்துடையான்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) அந்த வெடிக்காத வெடியை கையில் எடுத்து வைத்து பார்த்துக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் மற்ற தொழிலாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆறுமுகம் கையில் இருந்த வெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். மேலும் அங்கிருந்த வர தாவயல் பகுதியை சேர்ந்த பழனிவேல் (67) உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டியில் வெடி விபத்து ஏற்பட்ட கல் குவாரியை படத்தில் காணலாம்.

    உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை பழனிவேல் என்பவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மற்றவர்கள் தொடர்ந்து சிசிக்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குவாரி வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தொழிலாளர்களிடம் பீதியை உருவாக்கியுள்ளது.

    இதற்கிடையே வெடி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தியை கேட்டு முத்துடையான்பட்டியில் வசித்து வரும் ஆறுமுகத்தின் தாய் தீர்த்தாயி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவந்தனர். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    மகன் இறந்த அதிர்ச்சியில் தாயும் மரணம் அடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    போலீஸ் ஜீப் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் ஜீப்பில் நேற்று நள்ளிரவு மாதனூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜீப்பை அருண்குமார் ஓட்டினார். மாதனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக போலீஸ் ஜீப் மீது மோதியது.

    இதில் சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    சூலூர் அருகே போலீஸ் வேன் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
    சூலூர்:

    திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த போலீசார் கோவை ஜெயிலில் உள்ள கைதிகள் சிலரை விசாரணைக்காக திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேனில் புறப்பட்டனர்.

    போலீஸ்காரர் அஸ்தீன் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். வேனில் திருப்பூர் ஆயுதப்படை போலீசார் மனோஜ்குமார், தட்சிணாமூர்த்தி மற்றும் தெற்கு மகளிர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி ஆகியோர் வாகனத்தில் வந்தனர்.

    வேன் சூலூர் அருகே உள்ள நீலாம்பூர் பகுதியில் வந்தபோது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி தனியார் பஸ் வந்தது. எதிர்பாராதவிதமாக போலீஸ் வேனின் பின் பக்கமாக மோதியது.இதில் சப்-இன்ஸ்பெக்டர் கலாவதி, மற்றும் போலீஸ் காரர்கள் தட்சிணாமூர்த்தி, மனோஜ்குமார் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து போலீஸ்காரர் அஸ்தீன் சூலூர் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூலூர் போலீசார் பஸ் டிரைவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி என்பவரை பஸ்சுடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விபத்து குறித்து விசாரித்தனர். #tamilnews
    காரைக்கால் அருகே வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வாகனம் புகுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறு தென்னாங்குடி பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜின் மகள்கள் அருள் மீனா (வயது 23), அருள்மனிஷா (18) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கவிராஜன் (26) உள்பட 8 பேர் நேற்று இரவு 10 மணி அளவில் வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    திருப்பட்டினம் பைபாஸ் சாலையில் சென்றபோது அந்த வழியாக சென்ற வாகனம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் திடீரென புகுந்தது. இதில் அருள் மீனா, அருள்மணிஷா, கவிராஜன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதையடுத்து விபத்தில் காயம் அடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் அருள்மீனா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அருள் மணிஷா, கவிராஜன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து திருப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடிவருகின்றனர்.
    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 2 பேருக்கு மண்டை உடைந்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் சென்னை சாலையில் உள்ள நகர தி.மு.க. அலுவலகம் முன்பு தி.மு.க.வினர் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமையில் ஒரு கோஷ்டியினரும், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அஸ்லாம் தலைமையில் இன்னொரு கோஷ்டியினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் அன்சர், அபியுல்லா ஆகிய 2 பேர் தாக்கப்பட்டு அவர்களது மண்டை உடைந்தது. அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ஊத்துக்கோட்டை அருகே நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50) சமையல்காரர்.

    நேற்று இரவு உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த தரணி, சதீஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்ய சென்றார்.

    தச்சூர்மேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது.

    இதில் மணி, தரணி, சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கந்தர்வக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் மற்றும் பெண் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வக்கோட்டை அருகே உள்ள வலவம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுபா. உடல்நிலை சரியில்லாத சுபாவை, ரமேஷ் ஆஸ்பத்திரிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுபா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தஞ்சாவூர் பழைய அவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). இவர் கந்தர்வக்கோட்டையில் தனியார் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அடைக்கன் குளம் பகுதியில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து கந்தர்வக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர் மன்னன் விசாரணை நடத்தி வருகின்றார்.
    கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நடைபெற்றுவரும் உறியடி திருவிழாவில் தானே மற்றும் மும்பை பகுதியில் 36 பேர் காயமடைந்தனர். #MumbaiDahiHandi #DahiHandicelebrations
    மும்பை:

    ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என நினைத்து மக்கள் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெயை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள்.

    தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    இதன் அடிப்படையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய் பால் போன்ற பலவிதமான பண்டங்களை மக்கள் உண்ணுவார்கள்.

    பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழா என்று அழைக்கிறோம்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று உறியடி திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. உயரத்தில் தொங்கும் தயிர் பானையை கம்பால் அடித்து உடைப்பதற்கு வாலிபர்கள் ஒருவர் தோளின்மீது மற்றவர் ஏறி எட்டடுக்கு, பத்தடுக்கு மனித பிரமிடுகளாக மாறி உற்சாக மிகுதியில் இதில் பங்கேற்கின்றனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிவரை கிடைத்த தகவலின்படி, தானே மற்றும் மும்பை பகுதியில் நடைபெற்ற உறியடி திருவிழாவில் 36 பேர் காயமடைந்தனர். #MumbaiDahiHandi  #DahiHandicelebrations
    கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    பொன்னேரி என்.ஜி.ஓ. நகரைச்சேர்ந்த ஜெகன்நாதன் மகன் வசந்தகுமார்(19). இவர் பொன்னேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை செய்து வந்தார்.

    நேற்று வசந்தகுமார், கும்மிடிப்பூண்டி அருள் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கும்மிடிப்பூண்டி ரெட்டம் பேடு சாலை சந்திப்பின் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது.

    பலத்த காயம் அடைந்த வசந்தகுமார், பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டம் தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர் சென்னை காசிமேடு பகுதியில் மீன் வாங்க நேற்று இரவு சென்றனர். மீன்வாங்கிக் கொண்டு இன்று காலை திருவள்ளூர் ஜே.என்.சாலை பஸ் டிப்போ டெம்போவில் திரும்பினார்கள்.

    அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த டெம்போ லாரி மீது மோதியது. இதில் நாகம்மாள், லலிதா, கோவிந்தம்மாள் , ரோசி, தனலட்சுமி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    பலத்த காயம் அடைந்த எல்லம்மாள், கதிர்வேலு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    திருவள்ளூர் டவுன் போலீ சார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரஷியாவின் சோச்சி நகரில் இன்று ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற விமானம் தீப்பிடித்த விபத்தில் 18 பேர் காயமடைந்தனர். #Russianpassengerjet #Sochirunway
    மாஸ்கோ:

    ரஷியா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் இருந்து தென்பகுதியில் உள்ள சோச்சி நகருக்கு 164 பயணிகளுடன் வந்த போயிங் 737-800 ரக தனியார் விமானம் இன்று அதிகாலை சோச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியது.

    அப்போது அங்கு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் தரையிறங்கியதும் உரிய நேரத்தில் ‘பிரேக்’ போடுவதற்கு விமானி தவறிவிட்டதால் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்ற அந்த விமானத்தில் திடீரென்று தீப்பிடித்தது.

    இதை கண்ட சோச்சி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பயத்தால் அலறித் துடித்தனர். உடனடியாக விரைந்துவந்த தீயணைப்பு வாகனங்கள் சுமார் பத்து நிமிடம் போராடி விமானத்தில் பற்றிய தீயை அணைத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.


    இந்த மீட்பு நடவடிக்கையின்போது தீயணைப்பு படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. இந்த விபத்தில் காயமடைந்த 18 பயணிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்துக்குள்ளான விமானத்தின் என்ஜின் மற்றும் இறக்கை பகுதி எரிந்திருக்கும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. #Russianpassengerjet #Sochirunway  
    ×