search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்புமணி"

    அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மேல் சபை உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 18 மேல்சபை இடங்கள் உள்ளன. ஒரு மேல்சபை இடத்தை பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற வேண்டும். ஒரு மேல்சபை எம்.பி.யின் பதவி காலம் 6 ஆண்டுகள். இவை சுழற்சி முறையில் காலியாகும்.

    மேல்சபை உறுப்பினர்களில் 6 பேரது பதவி காலம் ஜூலை 24-ந்தேதி முடிகிறது. வி.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், டி.ரத்னவேல், ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஆகியோரது பதவி காலம் முடிகிறது.

    இதனால் புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) நடக்கிறது.

    சமீபத்தில் நடந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கட்சி மேல்சபையில் ஒரு இடத்தை இழக்கிறது. தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியதால் கூடுதலாக ஒரு மேல்சபை எம்.பி. பதவியை பெறுகிறது.

    234 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் அ.தி.மு.க.வின் பலம் 123 ஆக உள்ளது. தி.மு.க. கூட்டணி எண்ணிக்கை 110ஆக இருக்கிறது. டி.டி.வி. தினகரன் ஒரு தொகுதியில் உள்ளார்.

    இதன்மூலம் மேல்சபையில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.


    ஒரு உறுப்பினருக்கு 34 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இதன்மூலம் அ.தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்களுக்கு 102 பேர் தேவை. 21 எம்.எல்.ஏ.க்கள் அந்த கட்சியில் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தலின் போது பா.ம.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேல்சபை எம்.பி.யாகிறார். அவர் ஏற்கனவே 2004 முதல் 2010 வரை மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

    தி.மு.க.வில் 3 மேல்சபை உறுப்பினர்கள் தேர்வுக்கு பிறகு 8 எம்.எல்.ஏ.க்கள் உபரியாக இருப்பார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி ம.தி.மு.க.வுக்கு ஒரு மேல்சபை தொகுதியை தி.மு.க. ஒதுக்கியது. அதன்படி அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

    அ.தி.மு.க.வில் இருந்து மற்ற 2 மேல்சபை உறுப்பினராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது மேல்சபை எம்.பி.யாக உள்ள மைத்ரேயன் மீண்டும் அந்த பதவியை கேட்பதாக தெரிகிறது. இதேபோல கரூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தம்பி துரையும் மேல்சபை எம்.பி. பதவியை கேட்பதாக தெரிகிறது. அ.தி.மு.க. இது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

    தி.மு.க.வில் உள்ள எஞ்சிய 2 இடத்தில் ஒரு தொகுதியை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்காக காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    காங்கிரசுக்கு கொடுத்த போது மீதமுள்ள ஒரு எம்.பி. பதவியை தி.மு.க. யாருக்கு கொடுக்க போகிறது என்று தெரிவில்லை. தி.மு.க. தலைமை இது குறித்து விரைவில் முடிவை அறிவிக்கும்.

    பிரசாரத்தின்போது வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் பேசியதாக புகார் எழுந்ததால், அன்புமணி ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காஞ்சிபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அதிமுக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தார். அப்போது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது போன்று அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    ‘இந்த பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி கிடையாது. திமுகவுக்கு மட்டும் கொஞ்சம் வாக்கு வங்கி உள்ளது. எனவே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் நாம் மட்டும்தான் இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே தெரியும். நமது வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்’ என அன்புமணி பேசினார்.

    இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வாகுச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அன்புமணி ராமதாஸ் இந்த கருத்தை தெரிவித்ததாக திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    நான்கு வருடமாக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத பா.ஜனதா அரசு தற்போது மட்டும் அக்கறையாக செயல்படுவது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #AnbumaniRamadoss
    சென்னை:

    தண்டையார்பேட்டை கணக்கர் தெருவில் பா.ம.க கட்சியின் வடக்கு மாநில அலுவலகம் திறப்புவிழா நடந்தது.

    விழாவுக்கு மாநில துணை பொதுசெயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் மா.வெங்கடேச பெருமாள், வண்ணை ரா.சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலகத்தை பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. திறந்து வைத்தார். கட்சி தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினார்கள். பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஆறு மாதத்திற்கு முன்பாகவே தயார் நிலையில் இருக்கிறோம். களபணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வோம். மக்கள் எங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சியை தமிழக அரசு திட்டமிட்டு எதிர்கொள்ள வேண்டும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. 40 விழுக்காடு மழை மட்டுமே பெய்து இருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மிகக் கடுமையான வறட்சி ஏற்படும். அதற்கு இப்போது இருந்து திட்டமிட்டு அண்டை மாநிலங்களிலிருந்து நீரை கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

    மேற்கு வங்கத்தில் மத்திய மாநில அரசுகளின் உறவு சுமூகமாக இருக்க வேண்டும். சுமூகமாக இருந்தால்தான் மாநிலம் முன்னேற்றம் அடையும். ஆனால் சிபிஐ வைத்தும் மற்ற அமைப்புக்களை வைத்தும் மிரட்டுவது நியாயமற்றது. நியாயமான முறையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். சட்டத்திற்கு உள்ளடங்கிய செயல்களில் மட்டுமே ஈடுபட வேண்டும்.



    தமிழக விவசாயிகளுக்கு ஒரு எக்டேருக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும். இரண்டு பருவத்திற்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது தேர்தல் அறிக்கையாக தயாரித்து உள்ளோம். அதன் படி ஆண்டிற்கு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

    ஆனால் தற்போது 6000 ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். இது போதுமானதாக இல்லை.விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழலில் இது போதுமானதாக இல்லை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நான்கு வருடமாக விவசாயிகள் நலனில் அக்கறை இல்லாத பா.ஜனதா அரசு தற்போது மட்டும் அக்கறையாக செயல்படுவது ஏன்? 4 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் இருந்தாலும் பெட்ரோல், டீசல் தமிழ்நாட்டில் அதிக விலைக்கு தான் விற்பனை செய்தார்கள் எண்ணெய் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் பயன் அடைந்தார்கள்.

    தி.மு.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்தபிறகு அதுபற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அன்புமணி கூறினார். #BJP #AnbumaniRamadoss
    குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் குன்னம், பெரம்பலூர் தொகுதி நிர்வாகிகள் பா.ம.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டதலைவர் ராம.மருதவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில துணை பொதுசெயலாளர் - வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.

    மாநில துணை தலைவர் அனுக்கூர் ராஜேந்திரன், கண்ணபிரான், மதுரா செல்வராஜ், மற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் கண்ணன் , மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் செல்லரவி  மற்றும் உழவர் பேரியக்க நிர்வாகிகள் கோடங்குடி ராஜேந்திரன், ரவி, மாநில செயற்குழு உறுப்பினர். அன்புச்செல்வன், செல்வகடுங்கோ, மாநில மாணவர் அணி துணை தலைவர் பிரபு,  பேச்சாளர் தமிழ் இனியன் மற்றும் மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் 200க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில்  குன்னம் கண்ணதாசன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில் மழவராய நல்லூர் கிராமத்தில் இருதரப்பினர் மோதல் விவகாரத்தில், ஒருவரை கைது செய்த மங்களமேடு போலீசார்   லஞ்சம் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர். எனவே போலீசாரை கண்டித்து வருகிற 26-ந்தேதி பெரம்பலூர் ஆர்.சி. அருகே போராட்டம் நடத்துவது, வருகிற 25-ந் தேதி சென்னையில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் பெரம்பலூர் - அரியலூர் மாவட்டத்தில் உள்ள 200 பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்,  கட்சி அணைத்து நிலை பொறுப்பாளர்களும் அன்புமணி ராமதாசை முதல்வர் ஆக்கும் வரை பாகுபாடு இன்றி பணியாற்ற வேண்டும் என்பது உள்பட  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #pmk
    மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று சேலத்தில் நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் எம்பி பேசினார். #anbumani #pmk

    சேலம்:

    சேலத்தில் இன்று நடந்த மாணவ, மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துரையாடி பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது, டாஸ்மாக் கடைகள் வேண்டும் என்று விரும்புபவர்கள் கை தூக்குங்கள் என்றார். ஆனால் யாரும் கையை தூக்க வில்லை.

    மதுவினால் 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. இதில் மூளை, இதயம், கல்லீரல் போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. முன்பெல்லாம் 40-வயதுக்கு மேல்உள்ளவர்கள் தான் மது குடித்தார்கள், தற்போது 13 வயதிலே மது குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    இதனால் சாலை விபத்து அதிக அளவில் நடக்கிறது. இந்த விபத்தில் 25-வயதுக்குட்பட்டவர்கள் இறந்து விடுகிறார்கள். இதனால் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர். மனநலம் நோய் காப்பகம் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

    மதுக்கடைகளை மூட தமிழக அரசு மறுக்கிறது. காரணம் அதில் தான் வருமானம் அதிகம் வருகிறது. ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடி கிடைக்கிறது.

    மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். கண்டிப்பாக எங்களால் கொண்டு வர முடியும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு கையெழுத்து போட்டு மதுவை முழுமையாக ஒழிப்போம். இதனால் சிலர் சாராயம் அதிகமாகும் என்று கூறுவார்கள். அதனை கட்டுப்படுத்த இலவச போன் நம்பர் ஒன்று கொடுப்போம், அந்த நம்பருக்கு தகவல் கொடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு கொடுப்போம். மீறி சாராயம் விற்கப்பட்டால் அந்த பகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும், உயர் அதிகாரிகள் மீது கரும்புள்ளி வைக்கப்படும், இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது. மது இல்லாத தமிழகமாக மாற்றுவோம்.

    டாஸ்மாக் மூலம் அரசுக்கு 36 ஆயிரம் கோடி லாபம் வந்தாலும் தனி நபருக்கு இழப்பு ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏற்படுகிறது. மது போதையால் விபத்து, வேலைக்கு செல்லாதது உள்பட பல்வேறு காரணங்களால் இந்த இழப்பு ஏற்படுகிறது.

    விவசாய பொருட்களை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்றி பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம், மழை நீரை சேமித்து கூடுதல் மகசூல் பெற வழி ஏற்படுத்தலாம். குறைந்த மழை பெய்யும் மேலை நாடுகளில் கூட தண்ணீரை சேமித்து அதிக அளவு விவசாயம் செய்யப்பட்டு விவசாயிகள் லாபம் சம்பதிக்கிறார்கள். ஆனால் நீர் மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு சரியாக கையாளாமல் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது.

    தமிழகத்திற்கு மொத்தம் 7 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்கு ஆண்டுக்கு 62 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறார்கள். இந்த தொகை மூலம் தினமும் ஒரு மெடிக்கல் கல்லூரியை கட்ட முடியும், பல லட்சம் வேலை வாய்ப்புகளையும் புதிய தொழிற்சாலைகளையும் தொடங்க முடியும் என்றார். தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். #anbumani #pmk

    அரூர் அருகே சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். #anbumani
    அரூர்:

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    பின்னர் அவர் பேசியதாவது, இப்பகுதி மக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என பேசினார். மேலும் அப்பகுதி மக்கள் இம்மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும், மேலும் செல்போன் டவர் இல்லாததால் சில கிராமங்களில் போன் வசதி பெற இயலாமல் உள்ளது எனவே செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

    செல்போன் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேலம் சென்னை 8 வழி சாலையால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 தேசிய சாலைகளும் விமான, ரயில் வசதியும் உள்ளது. இதையெல்லாம் விடுத்து புதியதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். 

    விழாவில் கோட்டாட்சியர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், உள்பட பலர் கலந்து கொண்டனர். #anbumani
    தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுக்காவிட்டால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #tngovt #chennaisalem8waygreenroad

    சேலம்:

    சேலத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை இடையே 8 வழி சாலை தேவை இல்லாத ஒன்று. சேலம்-சென்னைக்கு 3 தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் 4-வது தேசிய நெடுஞ்சாலை தேவையில்லை. 2 ரெயில் பாதை, விமான போக்குவரத்து உள்ளது. அதனால் 8 வழி சாலை திட்டம் தேவையில்லாத ஒன்று. 8 வழி சாலையை எதிர்த்து நான் சென்னை உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தேன். எனது வக்கீல் ராஜா என்பவர் வாதாடினார். நானும் அங்கு சென்றேன். அப்போது அன்புமணி எம்.பி அவர்கள் இந்த 8 வழி சாலையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த மன வேதைனையும், மன அழுத்தத்தில் இருப்பதாக கூறினர்.

    இதை கேட்ட நீதிபதிகள் சம்பந்தபட்ட அரசின் அட்வகேட் ஜெனரலிடம் கேட்டனர். நாங்கள் பொதுமக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று கூறினர். இதைகேட்ட நீதிபதிகள் இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    ஆனால் எங்கள் நோக்கம் இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பது தான். இதை சட்ட ரீதியாக தான் நாங்கள் அனுகியுள்ளோம் தேவைப்பட்டால் அரசியல் ரீதியாக குதிப்போம். எனவே 8 வழி சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை தமிழ்நாட்டில் உள்ள 33 ஆறுகளில் ஒவ்வொறு 5 கிலோ மீட்டருக்கும் ஒரு தடுப்பணை அமைத்து 50 டி.எம்.சி நீரை தேக்கலாம். வருங்காலத்தில் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும். ஆனால் சேலம் மாவட்ட மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால் கடந்த 6 வாரமாக மேட்டூர் 155 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. மேட்டூர் உபரி திட்டம் தொடங்க கோரி 50 ஆண்டுகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் சேலம் மாவட்டம் முழுவதும் பயன்பெற 50 டி.எம்.சி தண்ணீர் உபரி நீரே போதுமானது. மேச்சேரி, ஆத்தூர் தலைவாசல், வசிஷ்ட நதி, திருமணிமுத்தாறு, ஆகிய பகுதிகளை இணைத்து மேட்டூர்-சேலம் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டத்திற்கு நிறைவேற்றதற்காக ரூ.1800 கோடி நிதி ஒதுக்கப்படும் அறிவிப்பு மட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றவில்லை. சேலம் மாவட்டத்தை சேர்ந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நினைத்தால் நிறைவேற்ற முடியும்.


    கே- கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து உங்கள் கருத்து

    பதில்- கருணாநிதி தி.மு.க-வுக்கு மட்டும் தலைவர் அல்ல தமிழகத்திற்கும் தலைவர் அவர். இந்தியாவிற்கே வழி காட்டியாக இருந்தவர். அவரின் நினைவேந்தல் கூட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள். அதை அரசியலாக பார்க்க கூடாது.

    கே- முதல் அமைச்சர் மீது ஊழல் புகார் தி.மு.க கொடுத்துள்ளது.

    பதில்- பொதுப்பணித் துறையில் 7 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்தார். அப்போது 5 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது. அது மட்டும் அல்ல தார் ஊழல், பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதை ஊழல் என பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளது. தேவைப்பட்டால் நாங்களும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்.

    69 சதவீத இட ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ளது. இதனால் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால். தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதனால் மிகப்பெரிய புரட்சி வெடிக்கும். அடுத்த நிமிடமே ஆட்சி கவிழும். இதனால் ஒட்டு மொத்த தமிழக மக்களை அலட்சியப்படுத்த வேண்டாம் என்றார். 

    இவ்வாறு அவர் கூறினார்.  #anbumani #tngovt #chennaisalem8waygreenroad

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வைகோ, அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளனர். #Vaiko #anbumani #tnfisherman

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, இங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், மீனவர்கள் நாள்தோறும் மீன்பிடிக்கச் செல்வது வழக்கமாகும்.

    கடந்த 10-ந்தேதி மாலை நெடுந்தீவு அருகே நாட்டுப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சிறிய ரோந்துக் கப்பலில் வந்து சுற்றி வளைத்து, 4 நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்ததுடன், அதில் இருந்த 27 மீனவர்களையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    27 பேரும் இலங்கையின் காங்கேசன்துறை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று, ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் நிறுத்தி, பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது இலங்கை அரசு தற்போது கொண்டு வந்துள்ள புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

    இலங்கைக் கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-


    ராமநாதபுரம் நம்பு தாளையைச் சேர்ந்த 22 மீனவர்கள் 3 நாட்டுப் படகுகளில் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அதேபோல், நாகப்பட்டினம் மாவட்டம் வானகரத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஒரு படகில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

    இலங்கை அரசின் புதிய மீன்பிடித் தடை சட்டத்தின்படி தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவர்களின் படகுகளை இலங்கை அரசு திருப்பித் தராது என்றும் கூறப்படுகிறது. தவறு செய்யாத மீனவர்களுக்கு வழங்கப்படும் இத்தண்டனை மிகவும் கொடூரமானதாகும்.

    கைது செய்யப்பட்ட 27 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் நாட்டுப் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Vaiko #anbumani #tnfisherman

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விவசாயிகளை நேரில் சந்திப்பேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். #anbumani #chennaisalem8wayroad

    தருமபுரி:

    தருமபுரி தொகுதி எம்.பி.யும்., முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் எனக்கு அனுமதி அளித்தனர். ஆனால் எனது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் நான் கருத்து கேட்க அனுமதி மறுத்து உள்ளனர்.

    ஏற்கனவே அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை. உள்ளாட்சி பிதிநிதிகளும் இல்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மக்களின் கருத்துக்களை கேட்பது எனது ஜனநாயக கடமை. அதை தடுப்பது மிகவும் தவறான செயலாகும்.

    இது தொடர்பாக பாராளு மன்ற சபாநாயகருக்கும், பாராளுமன்ற உரிமை குழுவிற்கும் கடிதம் அனுப்பி உள்ளேன். கோர்ட்டு மூலம் உரிய அனுமதி பெற்று தருமபுரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சென்று கருத்து கேட்பேன்.

    மக்கள் கருத்தை கேட்டு 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. கூறுகிறது. இந்த 8 வழி சாலை திட்டமே தேவையில்லாதது என்று நாங்கள் கூறுகிறோம். இந்த விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.


    தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் யார் அறிவாளி? என்ற வாதத்திற்கு என்னை அழைக்கிறார். அவர் அறிவாளிதான் ஏற்றுக் கொள்கிறேன்.

    நான் மருத்துவ படிப்பிற்கான சீட்டை மெரிட் அடிப்படையில் பெற்றேன். அவர் எம்.ஜி.ஆரிடம் பரிந்துரையை பெற்று அதன் மூலம் மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டரானவர்.

    நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த போது தேசிய கிராமப்புற சுகாதார திட்டம் உள்பட பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சுகாதார திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தேன்.

    கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் தமிழகத்துக்கு ஒரு சுகாதார திட்டம் கூட கொண்டு வரப்படவில்லை. மத்திய அரசின் மூலம் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு சுகாதார மேம்பாட்டு திட்டத்தையாவது தமிழிசை சவுந்தரராஜனால் சொல்ல முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #chennaisalem8wayroad

    டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் ராமதாசை வரம்பு மீறி விமர்சித்து பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். கோரை கேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிசந்தர் வரவேற்றார். நகர பொருளாளர் அருண்குமார், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் யோகலட்சுமி, நகர பொருளாளர் ராஜாத்தி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    கும்பகோணத்தில் பா.ம.க. சார்பில் காந்தி பூங்கா அருகில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மரம்வெட்டி என்று கூறியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

    யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று தமிழிசை கேட்டதற்கு அதை அன்புமணி ஏற்றுள்ளார். #anbumani #tamilisai

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கும், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே ‘டுவிட்டர்’ தளத்தில் கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது டாக்டர் அன்புமணியை கடுமையாக விமர்சித்தார்.

    இதை கண்டித்து பா.ம.க. வினர் சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    நான் அன்புமணியை போல் தந்தையின் நிழலில் பதவியை பெறவில்லை. எனது அறிவு, திறமை, உழைப்பை கொண்டுதான் மாநில தலைவர் பதவிக்கு வந்து இருக்கிறேன்.

    யார் அறிவாளி? யார் சிறந்த அரசியல்வாதி? என்பதை தெரிந்து கொள்ள என்னுடன் விவாதம் நடத்த அன்புமணி தயாரா? என்று சவால் விட்டு இருந்தார்.

    இதுபற்றி டாக்டர் அன்புமணி கூறியதாவது:-

    30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இட ஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கொச்சைப்படுத்தி இருக்கிறார். அவரை கண்டித்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடக்கிறது.

    நாளைக்கு (29-ந்தேதி) பிறகு எங்கு வேண்டுமானாலும் தமிழிசையுடன் விவாதம் நடத்த தயார்.

    இவ்வாறு அவர் கூறினார். #anbumani #tamilisai

    அன்புமணி ராமதாஸ் பற்றி கருத்து கூறிய தமிழிசையை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #anbumani

    சென்னை:

    பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறி இருந்தார்.

    இதற்கு பா.ம.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே சென்னையில் பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள்.

    இன்று தமிழிசை சவுந்திர ராஜனை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை புறநகர் மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட மாதவரத்தில் மாநகாட்சி மண்டல அலுவலகம் அருகே மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட தலைவர் ஞானபிரகாசம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சண்முகம், துணைத்தலைவர் மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    காஞ்சி வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழிசை சவுந்தரராஜனை கண்டித்து பல்லாவரம் பஸ்நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் விநாயகம், மாவட்ட துணை செயலாளர் பூக்கடை முனுசாமி பங்கேற்றனர். #tamilnews #anbumani

    ×