என் மலர்
நீங்கள் தேடியது "லஞ்சம்"
- சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
- லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
- பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
- உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் திறப்பதிற்கான அனுமதி பெற புதுவை நகர அமைப்பு குழுமத்தில் ஒருவர் விண்ணப்பித்திருந்தார்.
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நகர அமைப்பு உதவியாளர் குமாரவேலு, பெட்ரோல் பங்க் அனுமதிக்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
மேலும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கால தாமதமாக அளித்ததாக தெரிகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த பெட்ரோல் பங்க்கு அனுமதிக்கு விண்ணப்பித்தவர் லஞ்சம் வாங்கியது குறித்து ஆதாரத்துடன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், உதவியாளர் குமாரவேலு லஞ்சம் வாங்கி கொண்டு அனுமதி கொடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கை தலைமை செயலருக்கு அனுப்பட்டது. தலைமை செயலர் உத்தரவுப்படி, குமாரவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொது மேலாளராக இருப்பவர் ராம்பிரித் பஸ்வான். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக காண்டிராக்டை முடித்து கொடுப்பதற்காக ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் லஞ்சப் பணம் கைமாற்றுவது தொடர்பாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் சோதனை நடத்தி, லஞ்சப் பணம் கைமாறிய போதே, ராம்பிரித் பஸ்வான் மற்றும் தனியார் நிறுவன மேலாளரை கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த லஞ்ச வழக்கில் நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த மேலும் 6 உயர் அதிகாரிகளும், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏஜெண்டுகள் என 12 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதையடுத்து ராம்பிரித் பஸ்வான், தனியார் நிறுவன அதிகாரி உள்பட 4 பேரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இவர்களது காண்டிராக்ட் சம்பந்தப்பட்ட இடங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தி ரூ.1.18 கோடி பணம் பறிமுதல் செய்து உள்ளனர்.
- 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
- நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
மதுரை:
மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.
முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
- குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு.
- அப்போது அங்கு நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் கூடி அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.
ரெயில்வே வேலைக்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்ற ஊழல் வழக்கில் விசாரணைக்கு அஜ்ரரகுமாறு ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
லாலு பிரசாத் நாளை (புதன்கிழமை) பாட்னாவில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பின் முன் ஆஜராகுமாறும், மனைவி உள்ளிட்டோர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகுமாறும் அமலாக்கத்துறை சம்மன் தெரிவித்தது.
அதன்படி இன்று பட்லிபுத்ரா மக்களவை எம்பி, மூத்த மகள் மிசா பாரதியுடன், ராப்ரி தேவி வங்கி சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவகத்தில் ஆஜரானார். அப்போது அங்கு கூடிய நூற்றுக்கணக்கான ஆர்ஜேடி தொண்டர்கள் அவரை புகழ்ந்து கோஷம் எழுப்பினர்.

லாலு பிரசாத் யாதவ், 2004 -2009 காலகட்டத்தில் UPA அரசில் மத்திய ரெயில்வே அமைச்சராக இருந்தபோது, இந்திய ரெயில்வேயில் குரூப் D பணியாளர்களை நியமிப்பதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சிபிஐ அறிக்கையின்படி , ரெயில்வேயில் வேலைகளுக்கு ஈடாக நிலத்தை லஞ்சமாக எழுதித்தருமாறு கூறி தேர்வர்களிடம் லஞ்சம் பெறப்பட்டது.
கடந்த வருடம் தாக்கல் செய்யப்பட்ட அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களான மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மற்றும் ஹேமா யாதவ் ஆகியோர், குரூப் D அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர்களின் குடும்பத்தினரிடமிருந்து நிலப் பட்டாக்களைப் பெற்றனர் என்று குறிப்பிடடுள்ளது.
இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணைக்கு நாளை லாலு பிரசாத் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கண்ணையன் அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடைகளில் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது.
- புகார் குறித்து விசாரிக்கும்படி சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் சரவணகுமரனிடம் உத்தரவிட்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் கண்ணையன் (வயது 45). இவர் அம்மாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடைகளில் வசூல் வேட்டை நடத்தியதாக புகார் எழுந்தது. இதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வீடியோ, புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக்கில் பரவவிட்டதோடு அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.
இதுகுறித்து விசாரிக்கும்படி சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, அம்மாப்பேட்டை உதவி கமிஷனர் சரவணகுமரனிடம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் விசாரித்து அளித்த அறிக்கையின்படி ஏட்டு கண்ணையனை அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, துணை கமிஷனர் மாடசாமி உத்தரவிட்டார்.
- கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார்.
- சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான சந்திரசேகர் (43) என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 6-ந்தேதி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.
இதுகுறித்து பரமத்தி போலீஸ் நிலையத்தில் முத்துக்குமார் கொடுத்த புகாரின்படி சந்திரசேகரன், அவரது மனைவி பர்வதம், தாயார் சரஸ்வதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த பரமத்தி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் (55) இந்த வழக்கில் சந்திரசேகர், மனைவி பர்வதம் ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சந்திரசேகரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
இதையடுத்து பர்வதம் ஈரோட்டை சேர்ந்த தனது சகோதரர் வேலுச்சாமியை வைத்து பேரம் பேசியதில் ரூ.5 ஆயிரம் பெற சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வேலுச்சாமி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து கீரம்பூர் அருகே ராசாம்பாளையம் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரிடம், வேலுச்சாமி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது சுங்கச்சாவடி பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை கைது செய்தனர்.
அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி, அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமாரை போலீசார், சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் முருகேசன். தற்போது இவர் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இதற்கிடையே கடந்த 2009-ல் ஏர்போர்ட் காவல் நிலையத்தில் முருகேசன் இன்ஸ்பெக்டராக இருந்தபோது அந்தப் பகுதியைச் சேர்ந்த ரம்யா என்ற பெண் தான் வேலை செய்த அரிசி ஆலை உரிமையாளர் செல்லையா என்பவர் தன்னை தாக்கியதாக புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் செல்லையாவிடம் ரூ.5,000 லஞ்சமாக பெற்றார். அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு கூறினார். ஊழல் தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 7-ன் கீழ் ஓராண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதமும், பிரிவு 13 டி பிரிவின் கீழ் 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் சுரேஷ்குமார் ஆஜராகினார். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு லஞ்ச வழக்கில் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
- பணிகளை முடித்தபின்னர் ‘பில் பாஸ்’ செய்ய மறுத்ததாக புகார்
- தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் வேலை களை கோட்டயம் பகுதியை சார்ந்த பீட்டர் என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
இவர் பணிகளை முடித்ததும் அதற்கான செலவின் பட்டியலை பஞ்சாயத்து அலுவலகத்தில் செலவு பணத்தை பஞ்சாயத்து அலுவலக செயலாளர் சந்தோஷ்குமார் லஞ்சம் பெற்று விட்டு தான் பாஸ் பண்ணுவாராம். ஊழியர்கள் முதல் செக்கட்டறி வரை லஞ்சம் கொடுத்த பின்னர் ஒப்பந்த காரருக்கு ஒன்றுமே கிடைப்பதில்லையாம்.இந்த நிலையில் ஒப்பந்தகாரர் 2.5 லட்சம் ரூபாய்க்கு 3 வேலைகளை ஒப்பந்தம் எடுத்து பின்னர் அந்த வேலைகளை செய்து முடத்துள்ளார்.
ஆனால் செக்கட்டறி சந்தோஷ்குமார் பில்களை தர மறுத்துள்ளார். தனக்கு 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பில்களை பாஸ் பண்ணுவேன் என கூறியுள்ளார். 75000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தனக்கு நஷ்டம் தான் வரும் என்று ஒப்பந்தகாரர் புலம்பியுள்ளார். மன வேதனை அடைந்த ஒப்பந்தகாரர் செக்கட்டறி சந்தோஷ்குமாரின் லஞ்ச வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து லஞ்ச ஒழிப்பு துறையை நாடியுள்ளார். அவர்களின் அறிவுரை படி செக்கட்டறி சந்தோஷ் குமாருக்கு ஒப்பந்தகாரர் பீட்டர் தொலை பேசியில் அழைத்து லஞ்சம் பணம் 75000 ரூபாய் பீல் வந்த உடன் தரலாம் என்று கூறியுள்ளார். அதற்கு செக்கட்டறி சந்தோஷ்குமார் முன் பணமாக 5000 தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கொடுத்த பவுடர் தடவிய 5000 ரூபாய் பணத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து செக்கட்டறி சந்தோஷ்குமாரிடம் ஒப்பந்த காரர் கொடுத்துள்ளார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கையும் களவுமாக செக்கட்டறி சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பஞ்சாயத்து அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து ஊழியர்களிம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.சோதனையில் செக்கட்டறி மட்டுமில்லாமல் பல ஊழியர்கள் சிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. குளத்தூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து செக்கட்டறி யை கைது செய்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
- பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார்.
- மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.
அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.
இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவு அலுவலராக பணியாற்றி வருபவர் பசும்பொன் தேவி (வயது 56). இவரை பருவாய் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் அணுகினார். அவர் தனது பெண் குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக விண்ணப்பித்தார்.
அப்போது பசும்பொன் தேவி ரூ.3ஆயிரம் கொடுத்தால் நலத்திட்ட உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து செந்தில்குமார் பசும்பொன்தேவியின் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் ரூ.1500 பணம் செலுத்தினார். மீதி ரூ.1500 பணத்தை தருவதாக கூறியுள்ளார்.
இந்தநிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார் இது பற்றி திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்து, செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.1500 பணத்தை கொடுத்து அனுப்பினர்.
அவர் பல்லடம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பசும்பொன்தேவியை சந்தித்து ரூ.1500 பணத்தை கொடுத்தார் .அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வேறு யாரிடமாவது லஞ்சம் வாங்கினாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும்.
- லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த வல்லம் பிலோமினா நகரில் தனியார் கெமிக்கல் நிறுவனத்தை நடத்தி வந்தவர் குணசேகர். இவரிடம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி தஞ்சை வணிக வரி அலுவலர்கள் 6 பேர் விசாரணை நடத்தினர்.
அப்போது உங்கள் மீது புகார் வந்துள்ளது. வரியை குறைத்து செலுத்தி கொள்ள ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனவும், பின்னர் ஒவ்வொருவருக்கும் ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் குணசேகரிடம் அலுவலர்கள் கூறினர்.
லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் நாளை திரும்பவும் வந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரி போடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத குணசேகர் இதுகுறித்து தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்சம் வாங்கியபோது வணிக வரி அலுவலர்கள் கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், அலுவலக உதவியாளர் சுரேஷ் ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சண்முகபிரியா விசாரித்து கருணாகரன், சிங்காரவேலு, மகாலட்சுமி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இவர்களில் சிங்காரவேலு ஏற்கனவே இறந்துவிட்டார்.