search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்றம்"

    • நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
    • எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.

    மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.

    சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.

    இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

     

    இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள்  சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். 

    • சட்டமன்றத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சரி செய்ய வேண்டும்

    மார்த்தாண்டம் :

    முஞ்சிறை, கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளிகளில் சிதலமடைந்த கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்

    கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் சட்டசபையில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் முஞ்சிறை அரசு மேல்நிலை பள்ளியும், கொல்லங்கோடு நகராட்சியில் கொல்லங்கோடு அரசு மேல்நிலை பள்ளியும் உள்ளன. இங்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் படித்து தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆனால் அந்த 2 பள்ளிகளிலும் கட்டிடங்கள் மிகவும் சிதலமடைந்திருக்கிறது. அந்த கட்டிடங்களை போர்க்கால அடிப்படையில் அதை சரி செய்து தர வேண்டும்.

    இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், நான் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் 418 பள்ளிக்கூடம் இல்லாமல் மேலும் 173 பள்ளி கூடங்களுக்கு கிட்டத்தட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கூடங்களுக்கு இன்றைக்கு 215 கோடி ரூபாய்க்கு உட்கட்டமைப்பு வசதிக்கு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல் கூடுதலாக இன்னும் 252 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் கணக்கீடுகள் செய்யப்பட்டு அதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

    அந்தந்த பகுதியை சேர்ந்து இருக்கிற கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கின்ற அந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுக்கின்ற அந்த தகவல்களையும் நாங்கள் பெற்று கொண்டு மேலும் பத்திரிகை செய்தி மூலமாக வருகின்ற தகவல்களுக்கும் நாங்கள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அதற்கும் இன்றைக்கு தனியாக நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவாக இந்த நிதி எல்லாம் வரவர அதற்கான வேலைகள் உடனடியாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி ஏனென்றால் 2 வாரத்திற்கு முன்னாடி அவர்கள் துறை சார்ந்து ஒரு கூட்டமே போட்டிருக்கிறார்கள்.

    இத்தனை மாதத்திற்குள் இத்தனை கட்டிடங்கள் இத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் அதை நம்முடைய முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று இன்னும் விரைவாக அந்த பணிகளை முடிக்கின்ற பணியில் நாங்களும் எங்களை ஈடுபடுத்தி கொள்வோம். அதன் அடிப்படையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்றார்.

    • சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு
    • சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது

    இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றமாக உத்தர பிரதேச மாநிலம் சட்டமன்றம் திகழ்கிறது. 403 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். உறுப்பினர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு, பேப்பர்களை கிழிப்பதற்கு, சத்தமாக சிரிப்பதற்கு விரைவில் தடைவர இருக்கிறது.

    இதற்கான புதிய விதிமுறைகள் நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்மீதான விவாதம் இன்று நடைபெற்று அதன்பின் நடைமுறைப்படுத்தப்படும்.

    சபாநாயகருக்கு முதுகு தெரியும்படி எந்த உறுப்பினரும் உட்காரவும், நிற்கவும் கூடாது. உரை நிகழ்த்தும்போது கேலரில் உள்ள யாரையும் சுட்டிக்காட்டக் கூடாது. அதேபோல் பாராட்டக்கூடாது.  புகைப்பிடிக்கக் கூடாது. சத்தமாக சிரிக்கக் கூடாது.

    சட்டசபை கூடும் காலம் 14 நாட்களில் இருந்து ஏழு நாட்களாக குறைப்பு. உறுப்பினர்கள் எந்தவிதமான குறிப்புகளையும் எடுத்துச் செல்லக் கூடாது. சட்டமன்ற முதன்மை செயலகம் அன்றைய தினத்திற்குரிய பணிக்குறிப்புகளை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக உறுப்பினர்களுக்கு கிடைக்கப்பெற செய்யும் போன்ற விதிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

    • நாகூர் அனிபா நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.
    • நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கை விவாதத்தில், நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பேசியதாவது, இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவின் நூற்றாண்டு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.

    திராவிட இயக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தன்னுடைய குரலால் அரும்பணியாற்றிய அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகூரில் அவருக்கு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க வேண்டும்.

    மேலும் நாகூர் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார்.

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பான முகாம் நடந்தது.இதைத் தொடர்ந்து இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    6 சட்டமன்ற தொகுதி களிலும் 35 ஆயிரத்து 112 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 2289 ஆண் வாக்காளர்களும் 3137 பெண் வாக்காளர்கள் 53 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5479 வாக்காள ர்கள் நீக்கப் பட்டுள்ளனர்.

    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 3204 ஆண் வாக்காளர்களும் 3785 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6989 வாக்காளர்கள் நீக்கப் பட்டுள்ளனர். குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 3,751 ஆண் வாக்காளர்களும் 4,729 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8483 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.

    பத்மநாபபுரம் தொகுதியில் 1524 ஆண் வாக்காளர்களும் 2161பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்கள் 4 என மொத்தம் 3689 பேர் நீக்கப்பட்டுள்ளனர். விளவங்கோடு தொகுதியில் 1445 ஆண் வாக்காளர்களும் 2258பெண் வாக்காளர்கள் என மொத்தம் 3703 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2796 ஆண் வாக்காளர்களும் 3973 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6 ஆயிரத்து 769பேர் நீக்கப்பட்டுள்ளனர். 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 15009 ஆண் வாக்காளர் களும் 20043 பெண் வாக்காளர்களும் 60 இதர வாக்காளர்கள் என மொத்தம் 35112 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதிதாக வாக்காளர் பட்டியலில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 13280 ஆண் வாக்காளர்களும் 17621 பெண் வாக்காளர்களும் 16 இதர வாக்காளர்கள் என மொத்தம் 30917 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதியில் 5788 வாக்காளர்களும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 5164 வாக்காளர்களும் குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 6240வாக்காளர்களும் பத்நாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 4595 வாக் காளர்களும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3714 வாக்காளர்களும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 5416 வாக்காளர்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அரவக்குறிச்சி தொகுதியில் வாக்குச்சாவடி அருகே திரண்ட அதிமுக மற்றும் திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    அரவக்குறிச்சி:

    அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 250 வாக்குச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகிறார்கள்.

    பதற்றமான 29 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே முக்கியமான வாக்குச்சாவடிகளுக்கு தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மற்றும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட மற்ற கட்சி வேட்பாளர்களும் நேரில் சென்று வாக்குப்பதிவை பார்வையிட்டனர்.

    இந்தநிலையில் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையம் அருகே அ.தி.மு.க., தி.மு.க.வினர் தேர்தல் பணிமனைகளை அருகருகே அமைத்திருந்தனர். இதனால் இரு கட்சி தொண்டர்களும் அங்கு அதிக அளவில் குவிந்திருந்தனர்.

    திடீரென அரசியல் கட்சியினர் திரண்டு நின்றதால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் சற்றே பீதியுடன் காணப்பட்டனர்.

    உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் சென்று ஏன் இங்கு திரண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு தி.மு.க.வினர் தங்களது வேட்பாளர் செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக வந்துள்ளதாக தெரிவித்தனர். நீங்கள் இப்படி திரண்டு நிற்பதால் வாக்காளர்கள் அச்சம் அடைந்து இருப்பதாக கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

     


    இதேபோல் அ.தி.மு.க. வினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் இருந்தனர். போலீசாருடன் தர்க்கம் செய்த தி.மு.க.வினர் நாங்கள் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்று கூறி வாதம் செய்தனர். தொடர்ந்து அவர்களை கலைந்து செல்லுமாறு திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி மைக் மூலம்  எச்சரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து அங்கிருந்து கலைந்து அருகில் உள்ள தெருவில் நாற்காலிகளை போட்டு அமர்ந்தனர். அங்கிருந்தும் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு எந்த விதமான இடை யூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் தாங்கள் கூறுவதாகவும், உடனே கலைந்து செல்லுமாறும் போலீசார் தொடர்ந்து கூறினர்.

    ஆனாலும் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு இருந்ததால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    இதற்கிடையே தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி அங்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி தொகுதியல் 250 வாக்குச்சாவடிகளிலும் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் நின்றுகொண்டு தி.மு.க. மற்றும் எங்கள் தோழமை கட்சியினரின் களப்பணியை தடுத்து வருகிறார்கள். அதாவது எங்கள் கட்சி சின்னத்தை எடுத்துக்கூறுவதற்கு கூட அனுமதி மறுக்கிறார்கள்.

    மனிதாபிமானமற்ற முறையில், ஈவு இரக்கமின்றி எங்கள் கட்சியினரை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு உட்பட்டுதான் செயல்படுகிறோம். 300 மீட்டருக்கு அப்பால் வேட்பாளரின் பெயர், சின்னத்தை பிளக்சாக வைக்க தேர்தல் ஆணையமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கிறது.

    அதே நேரத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளரின் பிளக்ஸ் கூட்டணி கட்சி தலைவர்களின் படங்களுடன் வைக்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இது காவல்துறையின் ஒரு தலைப்பட்சமான, ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நிலையை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஒடிசாவில் அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். #NaveenPatnaik #LokSabha
    புவனேசுவரம்:

    ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதாதளம் கட்சி 118 தொகுதிகளில் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்-மந்திரியாக உள்ளார். அதேபோல 21 பாராளுமன்ற தொகுதிகளில் 20 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது.

    நடைபெற உள்ள தேர்தலிலும் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    மாநிலத்தில் மொத்தம் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளிலும், 21 பாராளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர்களை நிறுத்தும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு நவீன் பட்நாயக் கூறினார். #NaveenPatnaik #LokSabha 
    பயங்கரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, டெல்லி சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் எழுந்து நின்று இந்திய விமானப்படை வீரர்களை பாராட்டினர். #DelhiAssembly #Budget2019 #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 12 நாட்கள் கழித்து, இன்று  இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300க்கும் அதிகமான பயங்கரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் டெல்லியில் இன்று 2019ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டமன்றம் கூடியது. அப்போது டெல்லி  துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.



    முன்னதாக சபாநாயகர் ராம் நிவாஸ் பேசும்போது, எல்லை தாண்டி பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையினருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார். அப்போது விமானப் படையினருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று பாராட்டினர்.

    பட்ஜெட்டை  தாக்கல் செய்து துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா பேசுகையில், “புல்வாமா தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டினை சமர்ப்பணம் செய்கிறேன். இந்திய விமானப்படையினரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இந்த பட்ஜெட் உயிரிழந்த வீரர்களின் கனவை நனவாக்கும் வகையில், அவர்களது குழந்தைகள் சிறந்த கல்வி பெற நிச்சயம் வழி வகுக்கும். இந்தியா தாக்குதல் நடத்தி நாடே பெருமிதம் அடைந்துக் கொண்டிருக்கும் இச்சமயத்தில், பட்ஜெட் தாக்கல் செய்கிறேன்” என்றார்.

    உறுப்பினர்கள் எழுந்து நின்று விமானப் படை வீரர்களை பாராட்டியபோது, பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடியை வாழ்த்தி முழக்கமிட்டது குறிப்பிடத்தக்கது. #DelhiAssembly  #Budget2019 #IAFAttack #LoC

    காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது இடைத்தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #TNElectionOfficer #SatyabrataSahoo

    சென்னை:

    தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட வாக்காளர்கள் உதவி மையத்தை ரிப்பன் மாளிகையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்த கூறினாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    100 சதவீத வாக்காளர் அட்டை வழங்கி உள்ளோம். புதிய வாக்காளர் அட்டை பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும். வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான தகவல்களுக்கு 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்றார். #TNElectionOfficer #SatyabrataSahoo

    உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், பசுவை நாட்டின் தாயாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #Uttarakhand #RashtraMata
    டேராடூன்:

    இந்தியாவில் மாடுகளை பாதுகாக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் தீவிரமாக போராடி வருகின்றனர். சமீபத்தில் பசு பாதுகாவலர்கள் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு பசுக்களை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த பசு பாதுகாவலகள் என்ற பெயரில் சிலர் வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

    மேலும், நாட்டின் பல பகுதிகளிலும் பசுக்களை பாதுக்காக்க பல்வேறு மையங்கள் மற்றும் அமைப்புகள் நிருவப்பட்டு பரமாரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஒருபடி மேலே சென்று, பசுவை நாட்டின் தாய் என அறிவித்து புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. இதுதொடர்பாக பேசிய உத்தரகாண்ட் மாநில கால்நடை பராமரிப்பு மந்திரி ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், மத்திய அரசும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். #Uttarakhand #RashtraMata
    முதல்வர் பதவி விலகும் வரையில் சட்டமன்றத்தில் பங்கேற்க மாட்டோம் என திமுக அறிவித்த நிலையில், நாளை அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டமன்றம் நடத்தப்போவதாக திமுக அறிவித்துள்ளது. #DMK #MKstalin #competitiveassembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது.

    இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. அதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், ஸ்டாலினின் உரை முடிந்ததும்  திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.



    அந்த உரையில், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. #DMK #MKstalin #competitiveassembly
    ×