search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • சீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்ரா சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடந்தன.
    • சிவலிங்க சுவாமிக்கு அபிேஷக ஆராதனை மற்றும் பூஜையும், மாலை கொடி இறக்குதலும் நடைபெற உள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த பெத்தமேலுப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா பெருமாள் கோவிலில், 68வது ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

    இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு அஷ்டமி திதி, அவிட்ட நட்சத்திரத்தில் விநாயகருக்கு அபிேஷக ஆராதானை மற்றும் பூஜையும், மாலை 6 மணிக்கு சுவாமிகளின் கொடி ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தன.

    தொடர்ந்து கனகமுட்லு சுவாமி பூஜைகள், ஈரோஜிராவ் தர்மகர்த்தா சமாதி பூஜைகள், வெங்கடேஸ்வரா சுவாமி, சீரடி சாய்பாபா, சுப்பிரமணியர் சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி கோவிகளில் அபிேஷக ஆராதனை, பூஜைகள் மற்றும் மஹா மங்களார்த்தியும் நடைபெற்றன.

    நேற்று காலை வெங்கடேஸ்வரா சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, பூஜைகளும் தொடர்ந்து 10.30 மணிக்கு சீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்ரா சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடந்தன.

    11 மணிக்கு கருட கம்ப பூஜைகள், தள்கி பூஜைகள், மதியம் அன்னதானம், மாலை வெங்கடேஸ்வரா சுவாமி திருவீதி உலாவும், மங்களார்த்தியும் நடைபெற்றன. இன்று (மே 15) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிவலிங்க சுவாமிக்கு அபிேஷக ஆராதனை மற்றும் பூஜையும், மாலை கொடி இறக்குதலும் நடைபெற உள்ளன.

    இதற்கான ஏற்பாடுகளை பெத்தமேலுப்பள்ளி ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்வாக ஒகேனக்கல் லூகாஷ் தேரை ெதாடங்கி வைத்தார்.
    • பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் ஊட்டமலை மக்கள் வழிபட்டனர்.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலில் கிறிஸ்தவ தேவாலயம் புனித அருவியின் அன்னை ஆலயம் உள்ளது.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை லூர்துசாமி தலைமையில் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்த நிலையில் நேற்று காலை ஆடம்பர திருவிழா திருப்பலி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக ஒகேனக்கல் லூகாஷ் தேரை ெதாடங்கி வைத்தார். தேர் பவனியின்போது அருவியின் அன்னை தேர்பவனி ஊட்டமலை கோவிலில் இருந்து, ராணிப்பேட்டை வழியாக சாலையில் வலம் வந்தன.

    இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், புனித அருவியின் அன்னை எழுந்தருளினார். பக்தர்களுக்கு ஆசி வழங்கியபடி வீதிகளில் வலம் வந்ததை ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் ஊட்டமலை மக்கள் வழிபட்டனர். வான வேடிக்கையுடன் நடைபெற்ற இந்த தேர் பவணியில் மெழுகுவர்த்தி ஏந்தி வேண்டுதலுக்காக திருத்தேர் மீது உப்பு தூவினர்.

    • மதுரை சித்திரை திருவிழாவின்போது இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை, ரூ.50 லட்சம் நிதி வழங்க கோரி கலெக்டரிடம் திருமாறன் மனு அளித்தார்.
    • சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

    மதுரை

    மதுரையில் நடந்த சித்திரை திருவிழாவின் போது திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜெயக்குமார்-பேச்சியம்மாள் தம்பதியரின் மகன் பிரேம்குமார் (வயது 10) ஆற்றில் மூழ்கி பரிதாப மாக உயிரிழந்தான். அவனது குடும்பத்தினர் இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களுடன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறனும் உடன் வந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நேரத்தில் 5 லட்சத்திற்கு மேலான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதால் கடந்த 3-ந் தேதி வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரை செடிகளை உடனே அகற்ற வேண்டும் என்று கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்ேதன்.

    ஆனால் மாவட்ட நிர்வாகம் இதை அலட்சியப் பப்படுத்தியதன் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது சிறுவன் பிரேம்குமார் நீரில் மூழ்கி உயிரிழந்தான். மேலும் பிரேம்குமாரின் தந்தை, தாயை விட்டு சென்று விட்டார். இந்த நிலையில் தினேஷ், பிரேம் குமார் ஆகிய 2 மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைத்துக் கொண்டிருந்த நிலையில் பிரேம்குமாரின் இறப்பு அந்த குடும்பத்துக்கு பெரிய இழப்பாக உள்ளது.

    எனவே தமிழக அரசு இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரளிகோட்டையில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
    • திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள அரளிகோட்டை கிராமத்தில் கோசியப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா விமரிசையாக நடந்தது.

    திரளான பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கைகள் முழங்க மண் குதிரைகளை சுமந்து வந்து கோவில் முன்பாக கொண்டு வந்து சேர்த்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து மந்தை எனப்படும் சவுக்கையில் தாரை தப்பட்டையுடன் இளைஞர்கள் ஆடி பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தனது பிறந்த ஊர் என்பதால் விழா தொடக்கத்தில் இருந்து பொதுமக்களோடு மக்களாக இணைந்து திருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அரளி கோட்டை கிராமத்தார்கள் மற்றும் கோசியப்ப இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    • திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.
    • யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் காட்டுநாயக்கன் பழங்குடியினர் தெருவில் உள்ள படைவெட்டி மாரியம்மன் கோயில் 9-ம் ஆண்டு திருவிழா வரும் 14-ம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது.

    முன்னதாக ஆலயம் முன்பு சிவாச்சாரியார் மந்திரங்களுடன் யாகம் நடத்தப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீபா ர்த்தனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் 12 வருடங்களுக்கு பிறகு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் நடைபெற்ற நிலையில் கோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்ற ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் தீமிதி திருவிழா நடத்த முடிவு செய்தனர்.

    இந்நிலையில் கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டி கடும் விரதம் இருந்தனர். இந்நிலையில் மாலை வேளையில் பூங்கரகம் ஏந்தி பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என முழக்கங்களை எழுப்ப சுமார் 50க்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பக்தர்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    • விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.
    • அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அருகே உள்ள கருப்பூரில் அய்யனார் மாவடி கருப்புசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    விழாவில் இன்று சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது.

    திருவிழாவை முன்னிட்டு சைக்கிள் பியூர் அகர்பத்தி நிறுவனத்தின் சார்பில் 6 அடி உயர மெகா அகர்பத்தியில் கருப்பூர் கிராம மக்கள் முன்னிலையில் ஜோதி ஏற்றப்பட்டது.

    அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சியில் சைக்கிள் பியூர் நிறுவனத்தின் மண்டல மேலாளர் ராமமூர்த்தி, பகுதி மேலாளர் சரவணன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் பத்தாவது நாளான நேற்று மாலை தூக்குத் தேர் திருவிழா நடைபெற்றது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராம த்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சூரமாகாளியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் பத்தாவது நாளான நேற்று மாலை தூக்குத் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 40 அடி உயரமும் 20 அடி அகலமும் 6 டன் எடை கொண்ட சக்கரங்கள் இல்லாத தேரை நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிற்கும் சுமார் 40 பேர் கொண்ட பக்தர்கள் சீருடை அணிந்து தோளில் சுமந்தவாறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள அங்குள்ள குளக்கரையைச் சுற்றி மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    இப்பகுதியில் பிரபலமான தூக்குத் தேரோட்டம் காண, உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்க ணக்கானோர் வந்திருந்தனர்.

    • கறம்பக்குடி அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா நடைபெற்றது
    • தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அருகே உள்ள வடக்களூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் மண்டகப்படிதாரர்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நாளான கடைசி நாள் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்று தொடர்ந்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேரில் சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் காட்சி அளித்து பவனி வந்தார். தேரை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி கோவிலை வந்தடைந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதான நிகழ்வு நடைபெற்றது. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகுநாதபுரம் மற்றும் கறம்பக்குடி போலீசார் செய்திருந்தனர்.

    • அய்யனார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
    • மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யனார் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் வரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதில் குன்னம், அந்தூர், கொளப்பாடி, வெண்மணி, வேட்டக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    • சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • நாளை பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கோவை,

    கோவை பீளமேடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2-ந்தேதி காலை 7.30மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சியும், 9-ந்தேதி காலை 7 மணிக்கு லட்சார்ச்சனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து நாளை (12-ந் தேதி) பீளமேட்டில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களில் பொங்கல் விழாவும், 13-ந்தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடும் விழாவும், 14, 15, 16-ந் தேதிகளில் காலை, மாலை இருவேளை பூவோடு எடுத்து கோவிலை சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    16-ந்தேதி இரவு 9 மணிக்கு கோவில் வளாகத்தில் அம்மன் அழைப்பும், இரவு கரகங்கள் அலங்கரித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந்தேதி ஆதிவிநாயகர் கோவிலில் இருந்து ஆண்கள், பெண்கள் பூவோடு மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தடையும். காலை 9.30 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், காலை 10.30 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை மாவிளக்கு பூஜையும் நடைபெறும்.

    18-ந்தேதி காலை 11 மணிக்கு முத்தாலம்மன் திருவிழாவும், 19-ந்தேதி காலை 7 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு வசந்த பூஜை விழாவும் நடைபெறும்.  

    • கறம்பக்குடி ஸ்ரீ முத்து கருப்பையா கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது
    • திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்து கருப்பையா திருக்கோவிலில் கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது. தொடர்ந்து பெண்கள் பாலி எடுப்பு நிகழ்வு நடைபெற்றது. பின்பு தினந்தோறும் மண்டக படிதார்களால் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் பெண்கள் தென்னம்பாளையை குடத்தலிட்டு அதற்கு பூ மற்றும் வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டு அதனை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் மது எடுத்து வந்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    பக்த கோடிகள் அழகு குத்தி, பால் காவடி, செடல் காவடி, பெரிய காவடிகளை செண்டை மேள தாளங்களுடன் எடுத்து வந்தனர். மேலும் முக்கிய நிகழ்வான கிடா வெட்டும் நிகழ்ச்சி மாலை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பக்தகோடி பொதுமக்களுக்கு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றன. திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    ×