என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொத்தடிமை"
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அருகே உள்ள கொளத்தாஞ்சேரியில் செங்கல் சூளை வைத்திருப்பவர் சதீஷ்.
இந்த செங்கல் சூளையில் 11 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேலன் உத்தரவுப்படி தாசில்தார் பாக்ய லட்சுமி அந்த செங்கல் சூளைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது விழுப்புரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 11 பேர் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரிய வந்தது. இதில் 5 பேர் குழந்தைகள், அவர்கள் பள்ளிக் கூடம் போகாமல் இருந்தனர்.
இதையடுத்து, கொத்தடிமைகளாக இருந்த 11 பேரும் மீட்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அரிசி, துணி, பண உதவி ஆகியவை வழங்கப்பட்டது.
அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 5 சிறுவர்களையும் பள்ளியில் சேர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். செங்கல் சூளை உரிமையாளர் சதீஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
படிக்கும் வயதில் சிறுவர்-சிறுமிகளை வேலைக்கு சேர்க்க கூடாது என்றும், அவ்வாறு சேர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்த போதிலும் சிறுவர்களை வேலைக்கு சேர்ப்பதும், கொத்தடிமைகளாக வைத்திருப்பதும் தொடர்ந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ராமாபுரம் ஊராட்சிக்குட்பட்ட நாகராஜபுரத்தில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த அருள்பாண்டி (வயது 14) கண்ணன் (13) ஆகிய சிறுவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கார்மேகம் என்பவர் நிலத்தில் ஆடுமேய்க்கும் கொத்தடிமைகளாக பணியாற்றுவதாக திருவாரூர் மாவட்ட சைல்டுலைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து நாகராஜபுரம் விரைந்த சைல்டுலைன் அமைப்பின் பணியாளர்கள் சி.பிரகலாதன், ஏ.முருகேஷ், காந்திமதி, மரகதமணி ஆகியோர் வயலில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த சிறுவர்களை மீட்டு மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி முன்னிலையில் ஆஜர்படுத்தி திருவாரூர் குழந்தைகள் குழுமத்திடம் ஒப்படைத்தனர், மன்னார்குடி அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா மல்லஹள்ளி கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளில் தமிழகத்தை சேர்ந்த 4 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 24 பேர் கொத்தடிமைகளாக வேலைபார்த்து வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் சக்லேஷ்புரா தாசில்தார் மற்றும் போலீசார் உதவியுடன் அங்கு சென்று கொத்தடிமைகளாக இருந்த 24 பேரை மீட்டனர். அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் நடுசாலே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. #Hassan #LaborerRescued
இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
முறையான சம்பளம், சரியான உணவு மற்றும் தங்கும் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு அவதிப்படுவதாக தெரிகிறது. இதில் ஆண்களின் நிலை சற்று சுமாராக இருந்தாலும் வீட்டு வேலை செய்வதற்காக இங்கிருந்து செல்லும் பல பெண்கள் அங்கு அனுபவிக்கும் சித்ரவதைகள் மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
இந்நிலையில், பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண்ணை அராபிய செல்வந்தர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது.
அந்த தகவலை அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்கும் நடவடிக்கையில் தூதரக அதிகாரிகள் துரிதமாக களமிறங்கினர்.
இதற்கிடையில், தன்னிடம் சிக்கிய பெண்ணின் குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட அந்த அராபிய செல்வந்தர், அந்த பெண்ணுக்காக நான் ஏகப்பட்ட பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று சவால் விட்டார்.
மீட்கப்பட்ட இந்திய பெண் யார்? எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவரிடம் இந்திய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். #Indianwomanlocked #IndianwomanBahrain #Sushma
திருவண்ணாமலை:
செய்யாறு தாலுகா சின்ன ஏழாச்சேரியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் சுதாகர். இவர்களது குடும்ப நண்பர் காஞ்சீபுரம் மாவட்டம் வேதாசலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன்.
இவர்களிடம் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா பெரும்படுகைகண்டிகை கிராமத்தை சேர்ந்த 3 குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு வட்டிக்கு பணம் கடன் வாங்கி உள்ளனர். கடனை அவர்கள் சரியாக திருப்பி கொடுக்காததால், 3 குடும்பத்தை சேர்ந்த 31 பேரையும் சின்ன ஏழாச்சேரியில் உள்ள கல்குவாரியில் ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோர் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி உள்ளனர்.
அவர்களுக்கு சம்பளமாக நாள் ஒன்றுக்கு ரூ.17 முதல் ரூ.25 வரை கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு உதவி கலெக்டர் பிரியா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந் தேதி கல்குவாரிக்கு சென்று 31 பேரையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி தீர்ப்பு கூறினார்.
அதில், 31 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த ராஜகோபால், சுதாகர், சந்திரசேகரன் ஆகியோருக்கு தலா 11 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர். #arrest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்