search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரணி"

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் பொது செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி, இன்று பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019 #PriyankaGandhi #Congress #SheilaDikshit
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் இன்னும் இரண்டு கட்டங்கள் மீதமுள்ள நிலையில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஷீலா தீட்சித் உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி இன்று மாலை பிரசாரம் செய்தார்.



    மாலை 4.30 மணியளவில் டெல்லியில் உள்ள முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று மக்களை சந்தித்தார். திறந்த வாகனத்தில் சென்ற அவர் டெல்லியில் முக்கிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.

    டெல்லியில் பிரதமர் மோடியும் பா.ஜ.க. சார்பில் மாலையில் பிரசாரம் செய்ய உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. #LokSabhaElections2019 #PriyankaGandhi #Congress #SheilaDikshit
    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு ஷிரோமணி அகாலி தளம் சார்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    புதுடெல்லி:

    இந்தியாவில் 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வமாக 2800 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சுமார் 8000 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 34 ஆண்டு நிறைவையொட்டி, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்டு டெல்லியில் இன்று ஷிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

    இதில், ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என ஏராளமான சீக்கியர்கள் பங்கேற்றனர். 

    இப்போராட்டத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல் கூறுகையில், ‘எங்கள் சமுதாயம் 34 ஆண்டுகளாக நீதி கேட்டு போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். இந்த கொடுமை இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும். யாருக்கும் நீதி கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை நீதித்துறை ஏன் தாமாக முன்வந்து விசாரிக்கவில்லை?’ என ஆதங்கம் தெரிவித்தார். #AntiSikhRiots #ShiromaniAkaliDalProtest #HarsimratKaurBadal
    சந்திரபாபு நாயுடுவை கண்டித்தும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பவன் கல்யாண் நடத்திய பேரணியில் 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் திரண்டனர். #PawanKalyan #ChandrababuNaidu
    நகரி:

    நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், ஜனசேனை கட்சித் தலைவருமான பவன் கல்யாண் கடந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளித்தார்.

    சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற அவர் சந்திரபாபு நாயுடுவை கண்டித்து ஆந்திராவில் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபை தேர்தலிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பவன் கல்யாண் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராகவும், தனது கட்சியை பலப்படுத்துவதற்காகவும் பேரணி நடத்த முடிவு செய்தார். ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே தபலேஸ்வரம் பாலம் அருகே இந்த பேரணி நடந்தது. இதில் பங்கேற்க தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை ஏற்று 1 லட்சம் தொண்டர்கள் பேரணியில் குவிந்தனர்.

    பேரணியில் பவன் கல்யாண் நடந்து செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிக அளவில் தொண்டர்கள் குவிந்திருந்ததால் நெரிசல் ஏற்படும் என்று கருதி அவரை போலீசார் நடந்து செல்ல அனுமதிக்கவில்லை.

    இதையடுத்து பேரணியின் போது பவன்கல்யாண் காரில் சென்றார். தொண்டர்கள் அவரது காரை பின் தொடர்ந்து பேரணியாக சென்றனர்.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பவன் கல்யாண் பேசியதாவது:-

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் ஊழல் அதிகமாகி விட்டது. இதுபற்றி கேள்வி எழுப்பினால் சந்திரபாபு நாயுடு வாய் திறப்பதில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு வார்டில் கூட போட்டியிடாத அவரது மகனை எம்.எல்.சி. ஆக்கி உள்ளாட்சித் துறை மந்திரியாக்கி விட்டார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்றார். ஆனால் அவரது மகனுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளார்.

    தேர்தலின் போது 600 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் எதையும் அமல்படுத்தவில்லை. 6 வயது குழந்தையை கேட்டால் கூட சந்திரபாபு நாயுடு அரசின் ஊழலை எடுத்துச் சொல்கிறது. நலத்திட்டங்கள் எல்லாம் ஆளும் கட்சியினருக்கு மட்டுமே கிடைக்கிறது. மக்களுக்கு கிடைக்கவில்லை.

    ஜெகன்மோகன் ரெட்டி மீது எனக்கு கோபம் இல்லை. அவரது தந்தை ராஜசேகர ரெட்டி மீது தான் எனக்கு கோபம் உண்டு. 2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக இருந்த போது அவரது கட்சியினர் என்னை வைத்து படம் எடுக்க முயன்றனர். அதற்கு நான் மறுத்தேன். எனவே என்னை மிரட்டினார்கள். அதனால்தான் ராஜசேகர ரெட்டி மீது எனக்கு கோபம் வந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பவன் கல்யாண் நேற்று ஆந்திரா மாநிலம் ஸ்ரீகா குளம், விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.  #PawanKalyan #ChandrababuNaidu
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற கேரள அரசை வலியுறுத்தி அகில இந்து பரிஷத் அமைப்பினர் இன்று பேரணி நடத்தினர். #SabarimalaTemple #AkhilHinduParishad
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அவ்வகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் இயற்ற கேரள அரசை வலியுறுத்தி அகில இந்து பரிஷத் அமைப்பினர் இன்று திருவனந்தபுரம் நகரில் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் பெரும்திரளாக பங்கேற்றனர். #SabarimalaTemple  #AkhilHinduParishad 
    வருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    வருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.

    தேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.

    அதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee
    டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது சர்வதேச அகிம்சை நாளான இன்று போலீசார் நடத்திய தடியடிக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். #Farmersrally #RahulGandhi
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
     
    இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.


    இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர்.

    இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இரண்டாண்டு காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தின் தொடக்கமாக சர்வதேச அகிம்சை தினமான இன்று  டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது இந்த பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளது.

    அவர்களின் கோரிக்கைகள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி முடக்கப்பட்டுள்ளது’ என தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். #Farmersrally #RahulGandhi
    டெல்லி எல்லைக்குள் நுழைய முடியாமல் போராடிவரும் வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    அனைத்து மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கானோர் 'கிசான் கிராந்தி' என்ற பெயரில் கடந்த 23-ம் தேதி பேரணியாக புறப்பட்டு தலைநகர் டெல்லி நோக்கி வந்தனர்.
     
    இன்று இந்த பேரணி காசியாபாத் பகுதியை கடந்து உத்தரப்பிரதேசம்  - டெல்லி எல்லைப்பகுதியை வந்தடைந்தது.  டெல்லிக்குள் விவசாயிகள் நுழையாத வகையில் ராஜ்காட் செல்லும் பாதையில் அதிரப்படை போலீசார் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்.

    இதனால் விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. தடுப்பு வேலிகளை டிராக்டர்களால் மோதி தடையை மீற முயன்றனர். அவர்கள் கலைந்து செல்வதற்காக  போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், லேசான தடியடி நடத்தியும் நடவடிக்கை எடுத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.


    இதற்கிடையில், இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வேளாண்மைத்துறை இணை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசாரின் நடவடிக்கைக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். #RajnathSingh #Delhifarmerprotests #KisanKrantiPadyatra
    வத்தலக்குண்டுவில் தரமான சாலை அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு காந்திநகர் மெயின்ரோடு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் குடிநீர் பைப் அமைக்க பள்ளம் தோண்டி மண், ஜல்லி கற்களை சாலையின் மையப்பகுதியிலேயே கொட்டியுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.

    மேலும் ஆட்டோக்கள் அதிகளவு ஆட்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வருவதால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். மேலும் அவரச கால வாகனங்களும் செல்ல சிரமம் அடைவதால் உயிர்பலி ஏற்படுகிறது. இதனை கண்டித்து வத்தலக்குண்டு காந்திநகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போஸ்ட் ஆபிஸ் அருகே பேரணியை சக்திகிளினிக் தலைமை டாக்டர் தெய்வேந்திரன் தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பத்திர எழுத்தர் சங்க தலைவர் சிதம்பரம் ஆகியோர் உடனிருந்தனர். பேரணி பேரூராட்சி அலுவலகம் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்கத் தலைவர் ஜெக நாதன், செயலாளர் அழகர் சாமி, பொருளாளர் சுப்பிரமணி, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் சூரியமூர்த்தி, ராஜமுருகன், பேபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று மு.க.அழகிரி கூறினார். #DMK #MKAzhagiri
    அவனியாபுரம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.

    தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    இதனால் திட்டமிட்டப்படி 5-ந்தேதி அமைதி பேரணி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நேற்று நிருபர்களை சந்தித்த மு.க.அழகிரி, நான் தலைவரின் (கருணாநிதி) மகன். சொன்னதை செய்வேன்.

    கோப்புப்படம்

    5-ந்தேதி சென்னையில் தி.மு.க. உண்மை தொண்டர்களுடன் அமைதி பேரணி அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் என்றார்.

    இந்த நிலையில் மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று பதில் அளித்தார். #DMK #MKAzhagiri
    ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி லக்னோவில் இருந்து அயோத்திக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக பிரவீன் தொகாடியா அறிவித்துள்ளார். #PravinTogadia
    பைசாபாத்:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவரான பிரவீன் தொகாடியா  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், பைசாபாத் மற்றும் அயோத்திக்கு இன்று சென்ற பிரவீன் தொகாடியா, ராமர் கோவில் இயக்கத்திற்கு தொடர்புடைய தலைவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர், பேரணி நடத்தும் தேதியை அறிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு திரட்டும் வகையில், வரும் அக்டோபர் மாதம் 21-ம் தேதி லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த உள்ளேன். ராம ஜென்ம பூமிக்காக இந்துக்கள் செய்த தியாகத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இந்த பேரணி நடத்தப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.

    ராமர் கோவில் விஷயத்தில் மோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. #PravinTogadia
    இஸ்ரேல் நாட்டில் யூதர்களுக்கு மட்டுமே அதிக முன்னிரிமை அளித்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். #Isreal
    ஜெருசலேம்:

    இஸ்ரேலின் பூர்வீக குடிகளாக கருதப்படும் ஜெவிஸ் சமூகத்தினருக்கு மட்டுமே அந்நாட்டின் சுய உரிமை அளிக்கப்படுவதாக புதிதாக சட்டம் இயற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் அரபி மொழி அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இஸ்ரேலில் வாழும் அரேபியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு வாழும் அரேபியர்கள் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு இவர்கள் இங்கு குடியேறியதாகவும் தெரிகிறது.

    இஸ்ரேல் அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ட்ரஸ் எனப்படும் இஸ்ரேலில் வாழும் பழங்கால அரபியர்கள் கடந்த வாரம் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    இந்த சட்டம் குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த சட்டத்தின் மூலமே ஜெவிஸ் மக்களின் சுய உரிமைகள் பாலஸ்தீன அரேபியர்களால் தடுக்கப்படுவதை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில், இந்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் டெல் அவிவ் என்ற இடத்தில் மாபெரும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சட்டம், இனவாதத்தை சட்டப்பூர்வமாக்குவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். #Isreal
    திண்டிவனத்தில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார். #RoadSafetyAwareness
    திண்டிவனம்:

    திண்டிவனம் உட்கோட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திண்டிவனத்தில் நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, கார்த்திகேயன், விஜி, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாம்பெனட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கலந்து கொண்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் திண்டிவனம் உட்கோட்ட போலீசார், ஊர்க்காவல்படையினர், போலீஸ் நண்பர்கள் குழு, இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்று சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த பேரணியானது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ரெயில்வே மேம்பாலம், நேரு வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ரங்கராஜ், மகாலிங்கம், பாண்டியன், நடராஜன், கல்யாணராமன், தட்சிணாமூர்த்தி மற்றும் இருசக்கர பழுது பார்ப்போர் நல சங்க தலைவர் பிரபு, துணை தலைவர் குமார், ஆலோசகர் பாலதண்டாயுதபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×