என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிரியை"
குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30).
இவர், ஓமனில் கப்பல் செய்யும் இடத்தில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வினோபின் ராஜின் பேஸ்புக் நண்பர்கள் திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தனர்.
திருமண விழாவிற்கு வந்திருந்த பேஸ்புக் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் நேரில் அறிமுகம் ஆகிக் கொண்டனர். வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.
கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் மூக்கு கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள்.அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சங்கீதா பலியானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.
பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. கரைக்கு கொண்டு வரப்பட்ட மோகனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பலியான மோகன் காய்கறி வியாபாரி ஆவார். அவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
கடலில் மூழ்கி பலியான சங்கீதா, மோகனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் வடிவேலு மனைவி நித்யா (வயது 34). இவர் சேலம் அருகே மின்னாம்பள்ளியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் நித்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றி காரிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
டெல்லியை சேர்ந்தவர் ரோகன் பாசின் (33). இவர் விமானி ஆக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 வயதில் டெல்லியில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் இவர் சேர்ந்தார்.
அப்போது அவருக்கு சுதா சத்யன் என்ற ஆசிரியை எழுத படிக்க கற்றுக் கொடுத்தார். தனக்கு கல்வி அறிவு அளித்து உயர்ந்த நிலைக்கு வர அடித்தளமிட்ட அவரை கவுரவப்படுத்த ரோகன் விரும்பினார். எனவே, அவரை டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார்.
விமானத்தில் ஏறிய ஆசிரியை சுதா சத்யன் தனது இருக்கையில் அமர்ந்ததும், விமானி உடையில் அங்கு வந்த ரோகன் அவரை சக பயணிகள் முன்பு அறிமுகம் செய்து வைத்தார். இவர்தான் எனக்கு முதன் முதலில் கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியை. இன்று நான் விமான கேப்டன் ஆக உயர இவரே காரணம் என பெருமையுடன் கூறினார். அதை கேட்டதும் பயணிகள் அனைவரும் கைதட்டி அவரை வரவேற்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சுதா சத்யன் ஆனந்த கண்ணீருடன் தனது மாணவர் கேப்டன் ரோகனை கட்டித் தழுவினார். இந்த மகிழ்ச்சியான தருணம் அனைவரையும் நெகிழ வைத்தது.
கேப்டன் ரோகனின் தாயார் அவர் ஆசிரியை சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட போட்டாக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரோகன் 3 வயது சிறுவனாக இருந்தபோது விளையாட்டு பள்ளியில் சுதா சத்யனுடன் எடுத்துக் கொண்ட படமும் அதில் அடங்கும்.
தனது மகன் ரோகன் விளையாட்டு பள்ளியில் சேரும்போது நடந்த ருசிகர சம்பவத்தையும் அதில் நினைவு கூர்ந்துள்ளார்.
கேப்டன் ரோகன் வசதி படைத்த பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கும், விமானத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அவரது தாத்தா ஜெய்தேவ் பாசின் 1951-ம் ஆண்டில் முதன் முதலில் 7 விமானிகள் கமாண்டர்கள் ஆனார்கள். அவர்களில் இவரும் ஒருவர்.
இவரது பெற்றோரும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டவர்கள். ரோகன் பிளஸ்-2 படிக்கும் போதே விமானி ஆனார். 2007-ம் ஆண்டில் இணை விமானி ஆக பொறுப்பேற்றார். #PilotRohan
சேலம்:
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இவர் நேற்று நெத்திமேடு பகுதியில் உள்ள ஒரு கிளினிக்குக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு டாக்டர் தமிழ்ச்செல்வன் (வயது 62) என்பவர் ஆசிரியைக்கு சிகிச்சை அளித்தார்.
அப்போது கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நெஞ்சு வலிக்காக சிகிச்சை பெற்றீர்களே? இப்போது எப்படி இருக்கிறது? என்று ஆசிரியையிடம் கேட்டார். அதற்கு அவர் இப்போதும் லேசான வலி இருக்கிறது என்று கூறினார்.
அப்போது டாக்டர் அவரை பரிசோதிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை அங்கிருந்து தப்பி வீட்டிற்கு சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் நடந்ததை தனது கணவரிடம் தெரிவித்தார். மேலும் டாக்டர் பலமுறை போன்மூலம் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஆசிரியை இது குறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி டாக்டரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட டாக்டர் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு கிளீனிக் நடத்தி வந்துள்ளார்.
சிகிச்சைக்கு வந்த ஆசிரியருக்கு டாக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் சிவி நாயுடு சாலை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (47) ஆசிரியர்.
இவர் அரக்கோணத்தில் இருந்து வரும் அம்மாவை அழைத்து செல்ல சென்னை சில்க்ஸ் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்...
திருவள்ளூரை அடுத்த புடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (52). இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்திலிருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். அவருடைய மனைவி ஜெயகீதா (வயது 40). இவர், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயகீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த முகமது கவுஸ்மைதீன் என்பவரது மகள் நிலோபர் காமு (வயது27). இவர் பழனி அருகில் உள்ள சின்னகாந்திபுரம் அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக கடந்த 2013-ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார். இவர் தினமும் வத்தலக்குண்டுவில் இருந்து பழனிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
அப்போது தனியார் பஸ் கண்டக்டரான பெரியகுளம் தென்கரை இந்திரா நகரை சேர்ந்த பாண்டி மகன் செல்லத்துரை (வயது32). அவரை காதலிப்பதாக கூறி உள்ளார். ஆனால் இதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருந்தபோது தினமும் பஸ்சில் வரும்போது ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவருக்கு தெரியாமலேயே அவரது செல்போன் எண்ணை பெற்று அதில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் செல்லத்துரையை தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தன்னிடம் படித்துவந்த 17 வயது மாணவனை பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே(26) என்ற பெண்ணை கைது செய்த போலீசார் சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு (POCSO) சிறையில் அடைத்துள்ளனர்.
சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஒருவரை ஊடுருவி பாலியல் ரீதியாக ஆதிக்கம் செலுத்துபவர் என்று ஆண்பாலில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெண்ணுக்கு பொருந்தாது. எனவே என்னை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் ஷ்ருஸ்ட்டி அசோக் காம்பிளே மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு சிறப்பு நீதிபதி பராலியா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் அளிக்க மறுத்த நீதிபதி சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
‘போக்ஸோ’ சிறப்பு சட்டத்தில் அவன் என்றோ அவள் என்றோ குறிப்பிடப்படவில்லை. பாலியல் ரீதியாக அத்துமீறும் ‘நபர்’ என்று மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
நபர் என்னும் சொல் ஆண்களை மட்டுமே குறிக்கும் சொல் அல்ல. இந்த சட்டம் பாலியல் ரீதியாக அத்துமீறும் அனைத்து பாலினத்தவர்களுக்கும் பொதுவானது. இந்த சட்டமானது குற்றம்செய்யும் ஆண், பெண் இருபாலர்களுக்குமே பொருந்தும்.
இந்த வழக்கை பொருத்தவரை பாதிக்கப்பட்ட மாணவனின் ஆசிரியையாக - அதிகாரம் செலுத்தக்கூடிய இடத்தில் இருந்த குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், தனது தகுதியை பயன்படுத்தி, துஷ்பிரயோகமாக அந்த சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். எனவே அவரை ஜாமினில் விடுதலை செய்ய முடியாது.
இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். #Courtrejectsbailplea #womanarrestedunderPOCSO
தேனி:
தேனி அருகே அரண் மனைப்புதூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் சன்னாசி மகள் திவ்யா (வயது 25). தனியார் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர் மகன் அரவிந்த் (வயது 24). உத்தமபாளையம் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திவ்யா திருமணம் செய்ய அரவிந்தை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அரவிந்த் திருமணத்துக்கு மறுத்து அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திவ்யா இது குறித்து அரவிந்திடம் தட்டிக் கேட்டுள்ளார். அத்திரமடைந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் வைரமணி, ராஜா ஆகியோர் திவ்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து தேனி அனைத்து மகளிர் போலீசில் திவ்யா புகார் அளித்தார். போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி பஸ்நிலையம் அருகே வசிப்பவர் சங்கரநாராயணன். இவரது மனைவி மாலதி(வயது42). திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இன்று காலை மாலதி வழக்கம்போல் பள்ளிக்கு செல்ல வீட்டில் இருந்து பஸ்நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வாலிபர் ஒருவர் மாலதியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை அங்கிருந்து செல்லும்படி மாலதி திட்டினார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாலதியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.
வலி தாங்கமுடியாமல் மாலதி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடினர். வாலிபர் கையில் ரத்தக்கறையுடன் கத்தியை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றனர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றார். ரத்த வெள்ளத்தில் போராடிக்கொண்டிருந்த மாலதியை போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியையை கத்தியால் குத்தியவர் மாணவரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை காரணமாக மர்மநபர் கொலை செய்ய முயன்றாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்