search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தேகம்"

    பாளையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜெயசூர்யா (வயது23). இவர் பி.காம் படித்துள்ளார். இவருக்கும், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    முத்துக்குமார் மணிமுத்தாறு போலீஸ் பட்டாலியன் போலீஸ்காரராக பணி புரிந்தார். திருமணத்திற்கு பின் தற்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஜெயசூர்யா வழக்கம் போல் அறைக்கு படுக்க சென்றார். இன்று காலை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் அறையின் உள்ளே பார்த்தனர். அங்கு ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், அதுபற்றி பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    ஜெயசூர்யா இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயசூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஜெயசூர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் கூறினர்.

    மேலும் முத்துக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஜெயசூர்யாவின் உறவினர்கள் கூறுகையில், ‘நேற்று இரவு வரை ஜெயசூர்யா பெற்றோரின் வீட்டிற்கு போனில் பேசினார். ஆனால் காலையில் அவர் இறந்தது அதிர்ச்சியாக உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.

    இதையடுத்து போலீசார் ஜெயசூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயசூர்யாவின் கணவர் முத்துக்குமார் கேரளாவுக்கு தேர்தல் பணிக்கு சென்றிருந்தார். அவரை போலீசார் நெல்லைக்கு திரும்பி வரச் செய்தனர். முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஜெயசூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஜெயசூர்யா சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

    திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி மர்மமாக இறந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    கர்நாடகாவில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் நடந்துள்ளது.
    பெங்களூர்:

    வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29). எம்.பி.ஏ. படித்து இருந்த அவர் முன்னணி நிறுவனத்தில் மனித ஆற்றல் துறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் திருமணத்துக்காக திருமண தகவல் அலுவலகம் மூலம் பெண் தேடினார். அப்போது தனது பகுதியை சேர்ந்த ரக்‌ஷா (26) என்ற பெண் பொருத்தமான வரனாக அமைந்தது. அவரும் எம்.பி.ஏ. படித்து வேலை பார்த்து வந்தார்.

    இருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்து சிறிது நேரத்தில் ரக்‌ஷா வாந்தி எடுத்தார். வயிற்றில் ஜீரண பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டது.

    ஆனால் சரத்துக்கு வேறு மாதிரி சந்தேகம் ஏற்பட்டது. திருமணத்துக்கு 15 நாட்களுக்கு முன்பு ரக்‌ஷாவின் தாயார் புற்றுநோயால் மரணம் அடைந்தார். இதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். திருமணம் பிடிக்காததால் தான் ரக்‌ஷா இப்படி இருப்பதாக சரத் கருதினார்.

    மேலும் ரக்‌ஷாவின் தாயார் இறந்த நேரத்தில் அந்த ஊரை சேர்ந்த ஆண் நண்பர் ஒருவர் ரக்‌ஷாவுக்கு ஆறுதலாக இருந்து ஏராளமான உதவிகளை செய்தார். இதனால் அவருக்கும் ரக்‌ஷாவுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்கனவே சரத்துக்கு இருந்தது.

    இந்த நிலையில் திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் வாந்தி ஏற்பட்டதாக கருதினார்.

    எனவே ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து அதை கண்டுபிடிக்க முடிவு செய்தார். இதற்காக ரக்‌ஷாவை வயிற்று பிரச்சனைக்கு சிகிச்சை பெறலாம் என கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

    ஆனால் டாக்டர்களிடம் ரகசியமாக பேசிய அவர் ரக்‌ஷா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? வாந்திக்கு கர்ப்பம் காரணமா? என சோதனை நடத்துமாறு கூறினார்.

    எனவே அதற்கான சோதனையை டாக்டர்கள் மேற்கொண்டனர். சோதனை செய்வது தொடர்பான படிவத்தில் ரக்‌ஷாவிடம் கையெழுத்து வாங்கினார்கள். ஆனால் அவர் படித்து பார்க்காமலேயே கையெழுத்து போட்டு விட்டார்.

    டாக்டர்கள் சோதனை செய்தபோதுதான் கற்பு பரிசோதனை நடந்தது தெரிந்தது. இதனால் கோபம் அடைந்த ரக்‌ஷா உடனே ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    கணவர் அவரை நேரில் சென்று அழைத்தும் வர மறுத்து விட்டார். இதனால் சரத் கர்நாடக அரசு குடும்ப நல ஆலோசனை மையத்தில் புகார் அளித்தார். இருவரையும் ஆலோசனை மைய உறுப்பினர்கள் அழைத்து பேசினார்கள்.

    அப்போது என் மீது சந்தேகப்பட்ட கணவரோடு வாழ முடியாது என்று ரக்‌ஷா பிடிவாதமாக கூறிவிட்டார்.

    இந்த நிலையில் சரத் விவகாரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடியாக ரக்‌ஷா சரத் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கற்பு மீது சந்தேகப்பட்டு சோதனை நடத்தியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கோர்ட்டிலும் மனுதாக்கல் செய்துள்ளார்.
    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம், கருப்பூர் அருகே உள்ள மூங்கில்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லா கவுண்டர். கட்டிட தொழிலாளி (வயது 41). இவரது மனைவி மகேஸ்வரி (36). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கடந்த 10-ந்தேதி ஆன்மீக சுற்றுலா செல்ல ஊரில் உள்ள மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக அவர்கள் ஒரு சுற்றுலா பஸ் பிடித்தனர்.

    இதையறிந்த மகேஸ்வரி தனது கணவர் நல்லாகவுண்டரிடம் நானும் குழந்தைகளும் ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று வருகிறோம் என்று கூறினார். இதற்கு அவர் போகக்கூடாது என கூறினார்.

    ஆனால், குழந்தைகள் இருவரும் அம்மாவிடம் ஊரில் உள்ள எல்லோரும் சுற்றுலா செல்கிறார்கள். நாமும் போகலாம் அம்மா என்று கூறினார்கள். குழந்தைகள் தொடர்ந்து அடம் பிடிக்கவே வேறு வழியின்றி கணவர் பேச்சை மீறி கடந்த 10-ந்தேதி ஊர் மக்களுடன் சேர்ந்து ஆன்மீக சுற்றுலா சென்றார்.

    மணப்பாறை அருகே உள்ள பிரசித்தி பெற்ற வீரப்பூர் கோவில் மற்றும் திருச்சியில் உள்ள சமயபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கடைசியாக ஆதிபராசக்தி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பஸ்சில் இன்று அதிகாலை குழந்தைகளுடன் மகேஸ்வரி வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டுக்குள் இருந்த நல்லா கவுண்டர் எங்கு சென்று வந்தாய்? என கேட்டார். அதற்கு மகேஸ்வரி நான், குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊர் மக்களுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றேன் என்றார்.

    இதை அவர் நம்பவில்லை. நீ கோவிலுக்கு செல்லாமல் வேறு எங்கோ சுற்றி விட்டு வருகிறாய்?, நான் சொல்லியும் நீ கேட்காமல் வெளியே போய் விட்டு வந்துள்ளாய்? என்று நல்லா கவுண்டர் ஆவேசமாக கூறினார்.

    மகேஸ்வரி பலமுறை அவரிடம் எடுத்துக் கூறியும் கேட்காமல் சந்தேகப்பட்டு நல்லா கவுண்டர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து அவரை சரமாரியாக வெட்டினார். இதனால் மகேஸ்வரியின் உடலில் இருந்து ரத்தம் மளமளவென பீறிட்டு வெளியேறியது. என்னை விட்டு விடுங்கள்.. என்னை விட்டு விடுங்கள் என அவரது காலில் விழுந்து கதறினார்.

    இதை பார்த்து 2 குழந்தைகளும் அழுதது. தந்தையிடம் அம்மாவை வெட்டாதீர்கள்.. விட்டு விடுங்கள் என அந்த குழந்தைகள் கெஞ்சியது. ஆனாலும் நல்லா கவுண்டர் அரிவாளால் ஆக்ரோசமாக மகேஸ்வரியின் இடது கால் மணிக்கட்டு மற்றும் இடது தோள்பட்டையில் வெட்டினார்.

    இதனால் உயிரை காப்பற்றிக் கொள்வதற்காக அவரது பிடியில் இருந்து தப்பித்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே ஓடினார். இருப்பினும் விடாமல் துரத்திச்சென்று தலையில் வெறித்தனமாக வெட்டினார். மேலும் கையில் வெட்ட முயன்றபோது மகேஸ்வரி அரிவாளை பிடித்துக் கொண்டு காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கத்தினார். உடனே அவரை பிடித்து தள்ளி விட்டு அரிவாளால் வலது கை மணிக்கட்டில் வெட்டினார்.

    இதனால் மகேஸ்வரி சரிந்து விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது குழந்தைகள் அம்மா...அம்மா என கதறி அழுதது. சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் நல்லா கவுண்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    பொதுமக்கள் உடனடியாக மகேஸ்வரியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் குழந்தைகளுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நல்லாகவுண்டரை தேடி வருகிறார்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், நல்லகவுண்டர் சென்ட்ரிங் வேலை செய்தபோது, மகேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு வந்த மகேஸ்வரியை சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டியுள்ளார் என்றனர்.

    மனைவியை சந்தேகப்பட்டு கணவர் கொடூரமாக வெட்டிய சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த தாய், தனது 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை டி.வி.எஸ்.நகர், சத்தியசாய் நகர், முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37). லாரி டிரைவரான இவருக்கும், மைக்கேல் ஜீவா (36) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு ஹரிதா (4), ஹரீஸ்கிஷோர்குமார் (3) என்ற 2 குழந்தைகள் இருந்தனர்.

    மைக்கேல் ஜீவாவுக்கும், வேறு ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ராஜா சந்தேகப்பட்டார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தது.

    மனமுடைந்த மைக்கேல் ஜீவா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். தான் இறந்து விட்டால் பிள்ளைகள் அனாதையாகி விடுமே என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்று விடுவது என்று முடிவு எடுத்தார்.

    அதன்படி நேற்று இரவு மைக்கேல் ஜீவா, தனது 2 குழந்தைகளையும் பிளாஸ்டிக் உறைகளால் முகத்தில் மூடினார். இதில் மூச்சுத் திணறி குழந்தைகள் இறந்தன. அதன் பின்னர் மைக்கேல்ஜீவா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்வதற்கு முன்பு மைக்கேல் ஜீவா எழுதிய கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறியிருப்பதாவது:-

    பலியான குழந்தைகள் ஹரிதா, ஹரிஸ்கிஷோர்குமார்.

    “எனக்கு யாருடனும் கள்ளத்தொடர்பு இல்லை. எனக்கு செய்த துரோகத்துக்கு நீ (கணவன்) அனுபவிப்பாய், அதை நான் பார்க்கத் தான் போகிறேன்.

    என்னை எவ்வளவோ கேவலப்படுத்தி இருக்கிறாய். என்னையும், என் குழந்தைகளையும் தவறாக பேசியதால் நொறுங்கி விட்டேன். இதுக்கெல்லாம் நீயும் சரி, உன் குடும்பமும் சரி அனுபவிப்பீங்க” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    “அனாதை போல் எங்களை கருதி எரித்து விடவும். என் கணவர் கொள்ளி போடக்கூடாது” என்று தனது சகோதரிகள் ராணி, தீபா ஆகியோருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் மைக்கேல் ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பரிதாப சம்பவம் சத்திய சாய் நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் எந்த மர்மமும் இல்லை என்று தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
    தஞ்சாவூர்:

    '2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள்' என்ற நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார்.

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழக அரசு நம் நாட்டில் இயற்கை வளங்களை அழிக்கும் திட்டத்தை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அல்லது போராடினாலும் அவர்களை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்ட எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, எரிவாயு எதிர்ப்பு போராட்டம் என எந்த போராட்டமாக இருந்தாலும் அவை மக்களால் உருவாக்கப்படுகின்றன. இதற்காக குரல் கொடுக்கிற கட்சிகளையோ அல்லது அமைப்புகளையோ ஒடுக்குவதற்கு முயற்சி செய்வது ஒருபோதும் வெற்றி பெறாது, அவ்வாறு ஒடுக்க நினைத்தால் மிகப்பெரிய அளவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பதற்கு தூத்துக்குடி போராட்டம் எடுத்துக்காட்டு என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும்.


    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்து போது, புதுடெல்லியில் இருந்து எய்ம்ஸ் டாக்டர்கள், சிங்கபூர், லண்டனில் இருந்து டாக்டர்கள் என பெரிய டாக்டர்கள் கூட்டமே வந்து அவரது உடலை பரிசோதித்தது. அப்போது தேவையான சிகிச்சையை அவர்கள் அளித்தனர். இதில் எந்த மர்மமும் இல்லை.

    இது பற்றி விரிவான தகவல் டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் என்ற நூலில், ஆசிரியர் விரிவாக குறிப்பிட்டுள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் நீண்ட காலத்துக்கு முன்பே தமிழகத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் இந்த சட்டம் தற்போது தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போதாவது இந்த லோக் ஆயுக்தா சட்டத்தை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jayalalithaa #PazhaNedumaran
    ஆண்டிப்பட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகில் உள்ள மயிலாடும்பாறை கோரையூத்து பகுதியை சேர்ந்தவர் சேனாதிபதி (வயது30). இவருக்கும் முத்துப்பிரியா (20) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    மனைவியின் நடத்தையில் சேனாதிபதிக்கு சந்தேகம் இருந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மனைவியை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேனாதிபதியை கைது செய்தனர்.

    இதேபோல் கடமலைக்குண்டு அருகில் உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் வனராஜ் (34). இவருக்கும் ஜெயலட்சுமி (28) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 மகள்கள் உள்ளனர். குடிபழகத்திற்கு அடிமையான வனராஜ் தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு கம்பால் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். 

    இது குறித்து கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வனராஜை கைது செய்தனர்.

    ×