search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 112989"

    நேற்று 38.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 38.38 அடியாக இருந்தது.
    சேலம்:

    தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கடந்த மாதம் 29-ந் தேதி 5,600 கன அடியாக அதிகரித்தது. பின்னர் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து நேற்று 1,750 கன அடியானது.

    இந்தநிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று மீண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இன்று காலை 1,866 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 38.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 38.38 அடியாக இருந்தது. தென் மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் இனி வரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒகேனக்கலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் உடலில் எண்ணெய் மசாஜ் செய்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குடும்பத்துடன் ஆனந்தமாக படகு சவாரியும் சென்றனர்.

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களை இணைப்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் 55 ஆயிரம் பேர் பயணம் செய்கிறார்கள்.
    சென்னை:

    சென்னை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, விமான நிலையம் முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரையும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பணிகள் முடிவடைந்த பகுதிகளில் படிப்படியாக மெட்ரோ ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட்டது.

    கடந்த மாதம் (மே) 24-ந் தேதி வரை, விமான நிலையம் - சின்னமலை இடையேயும், ஆலந்தூர்- நேரு பூங்கா இடையேயும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது தினமும் சராசரியாக 35 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி முதல் சின்னமலை - ஏ.ஜி. டி.எம்.எஸ். இடையேயும், நேருபூங்கா - சென்டிரல் இடையேயும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து நீட்டிக்கப்பட்டது. இதனால், தற்போது விமான நிலையம் - ஏ.ஜி. டி.எம்.எஸ்., ஆலந்தூர் - சென்டிரல் இடையே மெட்ரோ ரெயில் சேவை நடைபெறுகிறது.

    மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக, கடந்த 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நாட்களில் தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மெட்ரோ ரெயில்களில் பயணித்து மகிழ்ந்தனர்.

    கடந்த மாதம் 29-ந் தேதியுடன் இலவச பயணம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய தினமும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மெட்ரோ ரெயில் சேவை கோயம்பேடு, விமான நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    கடந்த 30-ந் தேதி மெட்ரோ ரெயில்களில் 55,640 பேரும், 31-ந் தேதி 54,540 பேரும் பயணம் செய்துள்ளனர். முன்பு சராசரியாக பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தால், தற்போது 20 ஆயிரம் பயணிகள் அதிகரித்துள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. 
    தமிழகத்தில் வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவ காற்றால் காற்றாலை மின் உற்பத்தி திறன் உயர்ந்து 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி, செங்கோட்டை மற்றும் தேனி, திண்டுக்கல், கோவை மாவட்டம் உடுமலைபேட்டை பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் உள்ளன.

    காற்றாலைகள் இயங்கத் தொடங்கினால் கணிசமான மின்உற்பத்தியாகும். குறிப்பாக தென்மேற்கு பருவ காற்று வீசும் காலங்களில் காற்றாலைகள் கூடுதல் மின் உற்பத்தியில் ஈடுபடும்.

    ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் வரை தென்மேற்கு பருவ காற்று வீசும். இந்த காலங்களில் தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் கிடைக்கும்.

    அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவ காற்று முன்கூட்டியே வீசத் தொடங்கியதால் காற்றாலை மின் உற்பத்தியும் தொடங்கி விட்டது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, முப்பந்தல் பகுதிகளில் காற்றாலைகள் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளன.

    கடந்த சில மாதங்களாக 250 முதல் 350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த காற்றாலைகள் இப்போது 3 முதல் 5 மடங்கு அதிகமாக மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன.

    இதுபற்றி காற்றாலை என்ஜினீயர்கள் கூறியதாவது:-

    பொதுவாக தென்மேற்கு பருவகாற்று காலங்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு கடந்த 26-ந்தேதி காற்றாலைகள் மூலம் சுமார் 100 மெகாவாட் மின்சாரமே கிடைத்தது. அதன்பிறகு காற்றின் வேகம் அதிகரித்ததால் கடந்த 27, 28-ந்தேதிகளில் 2050 மெகாவாட் முதல் 2100 மெகா வாட்டாக உயர்ந்தது.

    நேற்றும், நேற்று முன்தினமும் காற்றின் வேகம் மேலும் அதிகரித்ததால் உற்பத்தி திறன் உயர்ந்து 4 ஆயிரம் மெகாவாட்டை எட்டியது.



    ஆரல்வாய்மொழி பகுதியில் 600 மெகாவாட்டும், நெல்லை, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 1500 மெகாவாட்டும், கோவை மாவட்டத்தில் 1250 மெகாவாட்டும் என தமிழகம் முழுவதும் உள்ள காற்றாலைகள் மூலம் இந்த மின்சாரம் கிடைத்தது.

    இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். செப்டம்பர் மாதம் வரை நமக்கு காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
    களக்காடு:

    கேரளாவில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கேரளாவை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையினால் அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. களக்காடு மலையில் உள்ள தலையணையில் ஏற்கனவே கோடை வெயிலால் தண்ணீர் வற்றி வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அங்குள்ள தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. குளிர்ந்த காற்றும் வீசுகிறது.

    இதையடுத்து தலையணைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். நேற்று நாகர்கோவில், உவரி கேரளா, மார்த்தாண்டம், குலசேகரம், பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். தண்ணீர் அதிகளவில் செல்வதால் தடுப்பணை அருகே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஆற்றின் ஓரமாக நின்று குளித்தனர்.

    இதைத் தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனரும், வன உயிரின காப்பாளருமான ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் படி வனசரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். சாரல் மழை பெய்து வருவதையடுத்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    சாரல் மழை காரணமாக தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.

    நேற்று காலை 100 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 294 கன அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 113.50 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1476 மி.கன அடியாக உள்ளது.

    இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை, வருசநாடு, மூலவகையாறு உள்ளிட்ட கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் மதுரை மாநகர குடிநீருக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 37.11 அடியாக உள்ளது. வரத்து 60 கன அடி. திறப்பு 60 கன அடி. நீர் இருப்பு 736 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடி. வரத்து 15 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 15.8, தேக்கடி 18.4, கூடலூர் 17.2, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 8, சோத்துப்பாணை அணை 1.5, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
    ஆண்டிப்பட்டி பகுதியில் காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி, ஜி.உசிலம்பட்டி, கண்டமனூர், ஆத்தங்கரைப்பட்டி, கோவிந்தநகரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக, கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தில் இருக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் மே மாத இறுதியில் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி விடும். அந்த நேரத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படும் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரிக்கும்.

    இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசத்தொடங்கி உள்ளது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தியும் தொடங்கியது. தென்மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் ஒரு வினாடிக்கு 8 மீட்டர் முதல் 9 மீட்டர் என்ற அளவில் உள்ளதாக காற்றாலை பணியாளர்கள் தெரிவித்தனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது, தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினர்.நேற்று முன்தினம் இரவு முதல் தென்மேற்கு காற்று வீசத் தொடங்கியதால், காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரையில் ஒரு காற்றாலையின் மின்சார உற்பத்தி 16 ஆயிரம் யூனிட் என்ற அளவில் காணப்பட்டது. இனிவரும் நாட்களில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகமும், காற்றாலை மின்சார உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் மின்வாரியத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது.
    மேட்டூர்:

    காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2700 கன அடியாக உள்ளது.

    காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் 33.85 அடியிலிருந்து 33.63 அடியாக குறைந்து உள்ளது.

    ×