search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 113362"

    • வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
    • ஊர் பொதுமக்கள் வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குருந்தமலையில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது.

    இதனை தொடர்ந்து வருகிற ஜூன் 1-ந் தேதி மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதை யொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராஜ கம்பீர விநாயகர், கன்னிமூல விநாயகர், ஆறுமுக வேலவர், விஸ்வநாதர்,விசாலாட்சி அம்மன், ஆதி மூலவர் அகஸ்தீஸ்வரர், ராஜ நாகலிங்கம், பஞ்சலிங்கேஸ்வரர், கன்னிமார், இடும்பன், கடம்பன் வீரபாகு ஆஞ்சநேயர் ஆகிய பரிவார தெய்வகளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைக்கும் பணி நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்தது.

    குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து கோபூஜை, தன பூஜை, அணுக்கை, மகா கணபதி ஹோமம், தீர்த்த சங்கர கணம், அக்னி சங்கர கணம் பூரணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து காரமடையில் இருந்து திருமுருக பக்தர்கள் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் தாரை தப்பட்டைகள், செண்டை வாத்தியம் முழங்க முளைப்பாரி மற்றும் தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி மிருதிங்கரணம், அங்கூரார் பணம், ரக்ஷாபந்தனன், கும்ப அலங்காரங்கள் கலா ஆகர்சனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, மண்டப வேதியர்ச்சனை, பூரணாகுதே மற்றும் இரவு உபச்சாரங்கள் தீபாராதனை தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ணயாகசாலை நிகழ்ச்சியை பாலு மற்றும் விவேக் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மூதாட்டி வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார்.
    • வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வால்பாறை,

    வால்பாறை அருகே மானாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் விஜயலட்சுமி தோட்டத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் காட்டில் இருந்த ஒருவகை கீரையை பிடுங்கி விட்டு, வீட்டிற்கு கொண்டு வந்து சமைத்து சாப்பிட்டார்.

    கீரையை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்து, மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது.
    • ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. பதிவு செய்தவைகளை ஒருங்கிணைக்கும் பணி தீவிரமாக நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி வனக்கோட்டம், உடுமலை வனக்கோட்டம் என இரண்டு கோட்டங்களிலும் மொத்தம் 6 வனச்சரகங்கள் உள்ளன.

    இங்கு சிறுத்தை, புலி, யானை, சிங்கவால் குரங்கு, மான், வரையாடு, காட்டு பன்றி உள்ளிட்ட அரிய வகை வனவிலங்குகள் வசிக்கின்றன. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பொள்ளாச்சி கோட்ட வனப்பகுதிற்குட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குளிர் கால வனவிலங்கு கணக்கெடுப்பு நடந்தது. அந்த நேரத்தில் புலிகள் கணக்கெடுப்பு மட்டுமின்றி, கண்ணில் தென்பட்ட விலங்குகளின் கணக்கெடுப்பும் நடந்தது.

    அதன்பின், இந்தாண்டில் நடப்பு மாதத்தில் இரண்டு வாரத்துக்கு முன்பு தொடர்ந்து 3 நாட்கள், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 23-ந் தேதி கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு தொடங்கியது. ரோந்து சென்ற பகுதி மற்றும் நேர்கோடு பகுதிகளிலும் இப்பணி நடைபெற்றது.

    பொள்ளாச்சி வனக்கோட்டத்தில பொள்ளாச்சி வனத்தில் வனச்சரகர் புகழேந்தி முன்னிலையிலும், டாப்சிலிப் வனத்தில் வனச்சரகர் சுந்தரவேல் முன்னிலையிலும் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பில், வனக்காப்பாளர், வேட்டைத்தடுப்பு காவலர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலர் தனித்தனி குழுவாக கலந்து கொண்ட னர்.

    அவர்கள் திசைகாட்டும் கருவி, நிலைமானி, தூரம் அளக்கும் கருவி கயிறு உள்ளிட்டவைகள் பயன்பாட்டுக்கு வைத்திருந்தனர். வனவிலங்கு கணக்கெடுப்பின் போது யானை மற்றும் கடமான்கள் அதிகம் கண்ணில் தென்பட்டுள்ளது. டாப்சிலிப், போத்தமடை உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைகளின் கால் தடயம், எச்சம் இருந்துள்ளது.

    வனவிலங்கு கணக்கெடுப்பை, இணை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று கண்காணித்தனர்.கோடை கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி, நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து விலங்குகளின் கால்தடயம், முடி உதிர்தல், எச்சம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்தும் பணி நடப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மர்மநபர்கள் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றனர்.
    • போலீசார் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(34).

    இவர் வெள்ளக்கிணறு அருகே உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவி உள்ளார்.

    இவர்களுடன் ராதாகிருஷ்ணனின் தந்தை பாண்டியராஜன் மற்றும் தாயார் சாந்தியும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர்கள் சொந்தமாக அந்த பகுதியில் பேன்சி ஸ்டோரும் நடத்தி வருகிறன்றனர்.

    நேற்று மதியம் ராதாகிருஷ்ணன் தனது தாய் மற்றும் மனைவியுடன், பேன்சி ஸ்டோருக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்று விட்டனர். பாண்டியராஜனும் மோட்டார் சைக்கிளை சரி செய்ய காந்திபுரம் சென்றார்.

    இந்த நிலையில் பாண்டியராஜன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டிற்குள் இருந்த பீரோவும் திறந்து கிடந்ததுடன், அதில் இருந்த துணிகளும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதையடுத்து பீரோவை சோதனை யிட்டார். அதில் வீட்டில் வைத்திருந்த செயின், ஆரம், நெல்லிக்காய் மாலை, 2 ஜோடி கம்மல் என மொத்தம் 26 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    இவர்கள் வீட்டை விட்டு வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நகையை திருடி சென்றதும்,போலீசில் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் ெபாடியை தூவி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். வீட்டில் தடயங்கள் ஏதாவது உள்ளதா எனவும் சோதனை செய்தனர்.

    மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
    • மயிலின் கழுத்தில் காயம் இருப்பது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

    கவுண்டம்பாளையம், 

    கோவை பகுதிகளில் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மயில்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை மட்டுமே விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை தடாகம் சாலையில் உள்ள குன்று பெருமாள் கோவில் அடுத்துள்ள ராகவேந்திரா நகரில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. இதனை அப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பார்த்து, புகைப்படம் எடு த்து வனத்துறையினருக்கு தகவல் அளி த்தார்.

    தக வலின் பேரில் அங்கு சென்ற வனத் துறையி னர் இறந்த மயிலை கைப்பற்றி விசார ணை செய்து வருகி ன்றனர். மயில் மின்சாரம் தாக்கி உயிரிழ ந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்ற கோண த்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மயிலின் கழுத்தில் காயம் இருப்பதால் யாராவது கொன்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

    கோவை,

    கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

    கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை நடத்தி வருகிறோம். இதன் மூலம் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

    இந்நிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் கலெக்டர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகளவில் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்து விட்டனர்.

    தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளிலும் போலி மதுபான விற்பனைகள் நடைபெற்று வருகிறது. போலி மதுபானம் தயாரிக்கும் ஆலைகள் கண்டறியப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் பிரதான கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்திடவும், கள்ளச்சாராயம் விற்பவர்களைகுண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும், தமிழக விவசாயிகளின் நலம் காத்திடும் வகையில் பனை மற்றும் தென்னை கள் விற்பனையை அனுமதி அளிக்க வேண்டும்.மேலும் தமிழக அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் வரை டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளித்தும், அதை தமிழகஅரசே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்திட வேண்டும். இதனால் விவசாயிகள் அதிக அளவில் பயனடைவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கோவை அருகே உள்ள ஊத்துப்பாளையம் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாவட்ட ம் சூலூர் வட்டம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட ஊத்துப்பாளையம் பகுதியில் உள்ள நீர்நிலையில் உள்ள குட்டை மற்றும் வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நீர் நிலைக்கு வரும் தண்ணீர் தடைபடும். எனவே நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

    • தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
    • ஒற்றை நோட்டை வைத்து கொண்டு மாற்ற முடியாமல் மக்கள் புலம்புகிறார்கள்.

    குனியமுத்தூர்

    கடந்த 19-ந் தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது.

    மேலும் செப்டம்பர் மாத இறுதிக்குள் அதனை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம் எனவும், அனைத்து வங்கிகளிலும் தினமும் பத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தது.

    செப்டம்பர் மாதம் இறுதிவரை அனைத்து வர்த்தக நிறுவனம் மற்றும் பெட்ரோல் பங்ங் என அனைத்து இடங்களிலும் 2000 ரூபாய் நோட்டை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் 2 ஆயிரம் ரூபாய் திரும்ப பெறப்படுவதாக அறிவித்ததில் இருந்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் என அனைத்து இடங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்களிடம் மூட்டை மூட்டையாக 2000 நோட்டுகள் கிடையாது. சேமித்து வைத்திருக்கும் 10 அல்லது 20 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் தான் இருக்கும். ஆனால் அதனையும் கடைகளில் வாங்க மறுத்து வருகிறார்கள். எனவே செப்டம்பர் இறுதி வரை அனைத்து வர்த்தக மையங்களும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கட்டாயமாக அறிவிக்க வேண்டும். மேலும் கட்டாயம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டும் என சட்டம் இயற்ற வேண்டும் என்றனர்.

    நேற்று கூட கோவை சுந்தராபுரத்தை அடுத்த எல்ஐசி காலனியை சேர்ந்த சமூக ஆர்வலரான ராஜா அப்பாசாமி என்பவர் தனது மொபட்டில் வெளியில் சென்றார். போகும் வழியில் பெட்ரோல் தீர்ந்து விடவே அருகில் இருக்கும் பெட்ரோல் போட சென்றார். கையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு இருந்துள்ளது.

    இதனை கொடுத்து பெட்ரோல் போட முயன்றபோது, 500-க்கு போட்டால் வாங்கி கொள்கிறோம். இல்லையென்றால் வாங்க மாட்டோம் என கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து நேற்று மளிகை கடை, டிபன் கடைக்கு சென்று மாற்ற முயன்றும் முடியாததால் சோர்வடைந்து சுந்தராபுரம் சிக்னலில் அமர்ந்தார். அவரை போலீஸ் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரிசர்வ் வங்கியின் அறிவி ப்பு வரவேற்க த்தக்கது. ஆனால், ஒரு திட்டம் அமுல்படுத்தும் போது, அதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வண்ணம் அமுல்படுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் இறுதி வரை இந்த நோட்டை யாரும் வாங்க மறுக்கக்கூடாது என்று ஒரு சட்டம் இயற்றினால், அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.

    எனவே இந்த அவல நிலையை மாற்ற வேண்டும். மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் இணைந்து இதற்கு உடனே ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், வங்கி கணக்கு சரியாக வைத்திருக்கும் ஒருவர், மற்றும் மாதாமாதம் சரியாக வரி செலுத்துபவர் இதனைப் பற்றி கவலை பட வேண்டாம். மூட்டை மூட்டையாக கருப்பு பணம் வைத்திருப்பவர்களே கவலைப்பட வேண்டும். எந்த ஒரு சராசரி மனிதனிடம் 2000 நோட்டுகளை பார்க்க முடியாது. ஆகவே இதனைப் பற்றி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றார்.

    • தார்சன் தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
    • தார்சன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர்.

    கோவை,

    கோவை சின்னவே டம்பட்டி அருகே உடயாம்பா ளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (52). இவரது மகன் தார்சன் (வயது 31). இவர் எம்பிஏ முடித்து விட்டு ஆவாரம்பா ளையத்தி ல் உள்ள தனியார் நிறுவன த்தில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலை யில் வேலையை முடித்து விட்டு அவரது வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது வீட்டில் உள்ள குளியல் அறைக்கு குளிப்பத ற்காக சென்றார்.அப்போது குளியல் அறையில் இருந்து திடீரென சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை கேட்டு குழந்தை வேல் குளியல் அறைக்கு சென்று பார்த்த போது, அவரது மகன் சுயநினை வின்றி கீழே விழுந்து மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியு டன் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்ப த்திரிக்கு கொண்டு சென்ற னர். இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அங்கிருந்து அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சரவண ம்பட்டி போலீசா ருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்த னர். பின்னர் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
    • கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 130 நபர்கள் பங்கேற்றனர்.

    நீலாம்பூர்,

    தமிழரின் பாரம்பரியக்க லைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

    அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியு ள்ளது.

    இதை ஒட்டி 26-வது சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் நேற்று சோமனூர் அடுத்த காடுவெட்டிபாளையம் விநாயகர்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 130 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:-, கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

    நாட்டுபுறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெதெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து ஆறு மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 ஆயிரம் ரூபாய் வள்ளி கும்மி ஆட்ட கலைக்குழுவுக்கு பரிசு வழங்கினார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோமனூரை சேர்ந்த ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் ஒயிலாட்ட கலையையும் வள்ளிகும்மியாட்ட கலையையும் மீட்டெக்கும் முயற்சியில் பல்வேறு கிராமங்களில் தனது குழுவை அமைத்து வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டக் கலையை அரங்கேற்றி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கலையை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார்.

    இவரது பயிற்சியில் தற்போது சோமனூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது.
    • வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    குனியமுத்தூர்,

    தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது.

    அத்தியாவசிய தேவை யாக இருந்தாலும், வெயிலின் உஷ்ணம் குறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

    வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    மேலும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதநீர், மோர், பழவகைகள் போன்ற குளிர்ச்சியான ஆகாரங்க ளை உணவாக எடுத்து கொண்டு வருகி ன்றனர்.

    இதுகுறித்து கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

    வருடா வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவது இயற்கை. ஆனால் இந்த வருடம் மிகவும் அதிகமாக உள்ளது.

    வீட்டில் மின்விசிறி இல்லாமல் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினால் கூட வெப்ப காற்று தான் வருகிறது.

    இதனை தவிர்த்து மொட்டை மாடியில் படுத்தால் கூட வெப்ப காற்று தான் வீசுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

    ஆனாலும் அது ஒரு சில நாட்கள் தான். மீதி அனைத்து நாட்களிலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்ப ட்டு வருகிறோம்.

    கடும் வெயில் காரணமாக குழந்தைகளுக்கு வியர்வை வேர்த்து ஊற்றுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தினமும் 2 நேரம் குளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை உள்ளது. மிகவும் இக்க ட்டான சூழலில் உள்ளோம். ஆகவே விரைவில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து வழக்க மான சூழ்நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லதாக சூழ்நிலை அமையும் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஆரோக்கியமேரி பூச்செடிகளை நடவு செய்தார்.
    • வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கேட்டார்.

    கோவை,

    கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி (வயது 58). இவர் அவரது வீட்டின் முன்பு பூச்செடிகளை நடவு செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் முகவரி விவரங்களைக் கேட்டார்.

    இதையடுத்து அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொ ண்டிருந்த அந்த வாலிபர் குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் தருமாறு கேட்டார். உடனே ஆரோக்கியமேரியும் வீட்டுக்கு ள் சென்று தண்ணீர் கொண்டு வந்தார்.

    இதையடுத்து அந்த வாலிபர் தண்ணீரை வாங்கி குடித்தார். அதன்பின்னர், ஆரோக்கியமேரி வீட்டுக்குள் சென்றார். அப்போது அவரை பின்தொ டர்ந்து சென்ற வாலிபர் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர், அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து பீளமேடு போலீ சாருக்கு தகவல் தெரிவிக்க ப்பட்டது.

    போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் நகையை பறித்து சென்ற வாலிபர் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்று ள்ளனரா? என்றும் சோதனை செய்தனர். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.

    • 4 சக்கர வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.
    • சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலைகளில் அவிநாசி சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பீளமேடு, ஹோப் காலேஜ், சித்ரா, ஏர்போர்ட், கருமத்தம்பட்டி, அவிநாசி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் பஸ் செல்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த வழியாக சென்று வருவதால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வித மாக அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவை அவினாசி ரோடு மேம்பாலம் அருகே தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் எதிரே உள்ள சாலையில் ஹார்டுவேர்ஸ் மற்றும் லைட் விற்பனை செய்யும் கடைகள் அதிகமாக உள்ளது. அந்தக் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் கோவிலின் எதிரே 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    இதனால் தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள பகுதியில் இருந்து உப்பிலிபாளையம் சிக்னல் வரை வரிசையாக 4 சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்கள் மற்றும் நஞ்சப்பா ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த இடத்தில் சங்கமிப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அப்பகுதி அகலமான ரோடு ஆகும்.

    ஆயினும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு செல்வதால் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாற வேண்டுமெனில், போக்கு வரத்து போலீசார் அதனை கண்காணிக்க வேண்டும். சாலை ஓரத்தில் நிறுத்த ப்பட்டிருக்கும் வாகன ங்களை கண்டுபிடித்து அவர்க ளுக்கு அபராதம் விதிக்க வே ண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே அவினாசி ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.

    இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், தண்டு மாரியம்மன் கோவில் எதிரே வரும்போது மிகுந்த நெரிசலை சந்திக்க வேண்டி உள்ளது. ஏனெனில் ஆங்காங்கே 4 சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இந்த அவல நிலை மாறினால் பயணம் மிகவும் ஏதுவாக இருக்கும் என்றனர்.

    ×