என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 114229"
- முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
- பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.
- வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
- ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மற்றும் மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து முட்டை விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது.
இதனால் 535 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை 540 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வெளிநாட்டுக்கு முட்டை ஏற்றுமதி உயர்ந்துள்ளதாலும், நுகர்வு அதிகரித்துள்ளதாலும் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-575, ஹைதராபாத்-530, விஜயவாடா-529, பார்வாலா-538, மும்பை-590, மைசூர்-550, பெங்களூரு-550, கொல்கத்தா-593, டெல்லி-560 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கோழி உற்பத்தி விலை நிர்ணயம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
ரூ.102-க்கு விற்கப்பட்ட முட்டை கோழி விலை, ரூ.5 உயர்த்தி ரூ.107 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கறிக்கோழியில் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒரு கிலோ ரூ.98 என நிர்ணயம் செய்யப்பட்டது.
- கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
நாமக்கல் :
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
- தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
- முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதில் தமிழகம், கேரளாவில் 510 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை மேலும் 5 காசுகளை உயர்த்தி 515 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை நிலவரம் வருமாறு, சென்னை-530 காசு, ஹைதராபாத்-499 காசு, விஜயவாடா-509, பார்வலா-504, மும்பை-556, மைசூர்-520, பெங்களூரு-520, கொல்கத்த-580, டெல்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல முட்டை கோழி 95 ரூபாய்க்கும், கறிக்கோழி 115 ரூபாய்க்கும் என விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
- தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர்.
- முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது.
நாமக்கல்:
தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் முட்டை தொழிலுக்கு பெயர் பெற்று திகழ்கிறது நாமக்கல். இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் முட்டை விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 4½ கோடிக்கும் மேற்பட்ட முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கு பணியாளர்களிடமிருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்கின்றனர். இந்த முட்டை கொள்முதல் விலையானது தற்போது திருவிழா பண்டிகை காலங்களில் தேவையை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் 1-ந் தேதி ரூ.4.10-க்கு முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தமிழகத்தில் முட்டை கொள்முதல் விலை 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தாலும் நாமக்கல் முட்டை விற்பனையை நிர்ணய ஆலோசனை குழு 30 காசு குறைத்து விற்க பரிந்துரைக்கிறது. அதன்படி ஒரு முட்டையை 480 காசுக்கே வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஆனால் ஹைதராபாத் மண்டலத்தில் கொள்முதல் விலை 500 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட அதே விலைக்கு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர்.
இதனால் விலை குறைவாக உள்ள தமிழக முட்டைக்கு அதிக அளவில் ஆர்டர் வழங்குகின்றனர் .தினமும் 10 லோடு என 35 லட்சம் முட்டைகள் இங்கிருந்து மும்பை, கல்கத்தா போன்ற வடமாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வட மாநிலங்களில் கொள்முதல் விலையை உயர்த்தும்போது தமிழகத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. இனிவரும் நாட்களிலும் முட்டை விலை உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள்.
- ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல்.
திருவையாறு:
திருவையாறு அருகே வைத்தியநாதன் பேட்டை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் அட்மா பயிற்சி முகாம் நடந்தது.வைத்தியநாதன் பேட்டை ஊராட்சி தலைவர் சம்மந்தம் தலைமையில் நடந்த இம்முகாமில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்தியநாதன் பேட்டை மற்றும் கடுவெளி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிர்களில் பூச்சி நோய் மேலாண்மையில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளின் பங்கு, உயிரியல் முறையில் எவ்வாறு நோய்களை கட்டுப்படுத்துவது, முட்டை ஒட்டுண்ணிகளை பயன்படுத்தியும், வரப்புகளில் பயிர்களை பயிர் செய்தும் பயிர்களை நோய்களிடம் இருந்து பாதுகாக்கும் முறைகள், முட்டை ஒட்டுண்ணிகளான ட்ரைகோகிராமா கைலோனிஸ் வைத்து உயிரியல் முறையில் நோய்களை கட்டுப்படுத்துதல் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து உயிரியல் முறையில் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று தஞ்சாவூர் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வக வேளாண்மை அலுவலர் புனிதா எடுத்துக் கூறினார்.
மேலும் உயிரியல் முறையில் நாம் நோய்களை கட்டுப்படுத்துவதன் மூலம் நம்மால் இயன்றவரை ரசாயன பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிர் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இப்பயிற்சியில் வேளாண்மை அலுவலர் சினேகா மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயபிரபா கலந்துகொண்டு தொழில்நுட்பம் குறித்த உரை ஆற்றினர்.
இப்கோ நிறுவனத்தின் கள அலுவலர் சரவணன் கலந்துகொண்டு நானோ யூரியாவை பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி மற்றும் மணிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.
- வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள்.
- முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம்.
குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான். வளரும் குழந்தைகள் தினசரி ஒரு முட்டை சாப்பிட டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். ஊட்டச்சத்துகள் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும், தேவையான கனிம சத்துகளும் முட்டையில் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மூளை மற்றும் தசை வளர்ச்சி, நினைவாற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை திறன் மேம்படுதல் போன்றவற்றுக்கு முட்டை உலகளவில் சிறந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் உலக முட்டை தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
முட்டையின் நன்மைகள் குறித்தும், அதில் உள்ள சத்துகள் மற்றும் அதன் முக்கியத்துவங்களை மக்களுக்கு தெரியப்படுத்துவதுதான் இந்த நாளின் நோக்கம். இந்த ஆண்டு உலக முட்டை தின கருப்பொருளாக, 'சிறந்த வாழ்க்கையை சாத்தியமாக்கும் முட்டை' என்பது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாளில் ஊட்டச்சத்துமிக்க முட்டையை தினமும் உணவில் சேர்த்து உடலை வலுப்படுத்துவோம் என அனைவருமே உறுதிமொழி ஏற்போம்.
கடந்த ஆண்டு உலக முட்டை தினத்தையொட்டி, 100-க்கும் மேற்பட்ட நாடுகள் சமூக வலைதளங்களில் முட்டை தினத்தை கொண்டாடும் வகையில் பல போட்டிகளை வைத்து முட்டை உண்பதில் அவசியத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டும் முட்டை சாப்பிடுவதின் அவசியத்தை நாம் உணர்வோம். வளரும் தலைமுறையினரை வலுவாக்குவோம்.
- பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
- வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது.
காலை உணவுடன் முட்டை சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிறைய பேர் முட்டையை அப்படியே உடைத்து குடிக்கும் பழக்கத்தையும் பின்பற்றுகிறார்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. வேகவைக்காத முட்டையில் 10 சதவீதம் புரதமும், 90 சதவீதம் நீரும் உள்ளது. அதனுடன் பொட்டாசியம், மெக்னீசியம், நியாசின், சோடியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இருக்கின்றன. முட்டையின் உள்பகுதியான மஞ்சள் கருவில் இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற வைட்டமின்கள் உள்ளன.
முட்டையில் இருக்கும் வைட்டமின்கள் இதயம், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் பலன் கிடைக்கும். பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. முட்டையை அப்படியே உடைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் வெள்ளைக்கரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். சருமம் சிவத்தல், அரிப்பு, வீக்கம், வயிற்று போக்கு, கண்களில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். வெள்ளை நிற திரவத்தை சாப்பிடுவது சிலருக்கு பயோட்டின் குறைபாட்டை ஏற்படுத்தும். பயோட்டின் குறைபாடு வைட்டமின் பி 7, வைட்டமின் எச் என்றும் அழைக்கப்படுகிறது.
முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள அல்புமினை உட்கொள்ளும்போது உடல் பயோட்டினை உறிஞ்சுவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடும். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். கோழிகளின் குடல் பகுதியில் சால்மோனெல்லா எனப்படும் பாக்டீரியா காணப்படும். அது முட்டை ஓட்டின் உள்பகுதியிலும், வெளிப்பகுதியிலும் பரவி இருக்கும். சால்மோனெல்லாவை நீக்க அதிக வெப்பநிலையில் முட்டையை வேக வைக்கவேண்டும். அதை விடுத்து முட்டையை அப்படியே குடித்தால் பாக்டீரியாக்களால் பாதிப்பு நேரும்.
- தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்:
அகில இந்திய அளவில் முட்டைக்கோழி வளர்ப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 1,000 கோழிப்பண்ணைகளில், 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த முட்டைகள் தமிழக சத்துணவு திட்டத்துக்கும், தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான முட்டை மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
என் முட்டை, என் விலை என்ற அடிப்படையில், முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் 2 நாட்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கிறது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நிர்ணயிக்கப்படும் விலையை அனுசரித்தே, தமிழகத்திலும் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக என்இசிசி நிர்ணயம் செய்து அறிவித்தது. தொடர்ந்து 9-ம் தேதி ரூ.5.20, 11-ம் தேதி ரூ.4.90, 14-ம் தேதி ரூ. 4.60, 16-ம் தேதி ரூ. 4.40, 25-ம் தேதி ரூ. 4.20, நேற்று (1-ம் தேதி) ரூ.4 என முட்டை விலையில் தொடர் சரிவு ஏற்பட்டு ஒரே மாதத்தில் ஒரு முட்டைக்கு ரூ.1.50 குறைந்துள்ளது.
மேலும் நெஸ்பேக் என்ற முட்டை மற்றும் பண்ணையாளர்கள் கூட்டமைப்பு, முட்டை கொள்முதல் செய்யும் மொத்த வியாரிகளுக்கு ஒரு முட்டைக்கு 40 பைசா குறைத்து வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.3.60 மட்டுமே கிடைக்கும். சில நேரங்களில் மேலும் விலை குறைத்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் என்இசிசி அறிவிக்கும் விலைக்கும், பண்ணையாளர்களுக்கு கிடைக்கும் விலைக்கும் பெரிய இடைவெளி உருவாகிறது.
ஆனால் வியாபாரிகள் விலையைக் குறைத்து வாங்கி சில்லரையில் விற்பனை செய்யும் போது, என்இசிசி விலைக்கும் கூடுதலாக லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் முட்டை வாங்கும் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள், முட்டை கொள்முதல் விலை தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்–பட்டுள்ளனர். கோழிப்பண்ணைத் தொழிலில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
- கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணை யாளா்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.
மற்ற மண்டலங்களில் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாலும், ஆடிப் பண்டிகை காலமாக இருப்பதால் மக்களிடையே முட்டை நுகா்வு வெகுவாக குறைந்துள்ளதாலும், தேக்கத்தை கட்டுப்படுத்தவும் முட்டை விலையைக் குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ. 4-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
கறிக்கோழி
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 90-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
- எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார்.
- 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், “முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்” என்றார்.
நாம் உண்ணும் உணவுத்தட்டில் முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து "புரதச்சத்து" எனும் ப்ரோட்டீன்கள்.
பவர் தரும், எனர்ஜி தரும், வளர்ச்சி தரும் இத்தகைய ப்ரோட்டீனை உணவில் எப்படி எளிதாக அடைவது?
ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான எளிதான ஒரு உணவு உண்டெனில் அது முட்டை தான். முழுமையான புரதச்சத்து நிரம்பிய உணவு தான் முட்டை.
முட்டையில் இவையன்றி வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி2 , பி6,பி12. துத்தநாகம் செம்பு என்று மனிதனுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துகளும் தாதுஉப்புகளும் இருக்கின்றன.
முட்டையை வெறும் வெள்ளைக்கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப்போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும். நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும். கொழுப்புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை.
தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன். எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார். 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது என்று கேட்டதற்கு தயங்காமல் அவர் கூறிய பதில், "முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக்குக் காரணம்" என்றார்.
நாளொன்றுக்கு ஒருவர் மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் ஒரு கண்டிசன், கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும். முட்டை தோசை, முட்டை பரோட்டா என்று சாப்பிடக்கூடாது. ஆனால் நமக்கு பிடித்த மாதிரி அவித்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ் என்று சாப்பிடலாம். முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதேசிறந்தது.
குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து ஒரு முட்டையைக் கொடுத்து பழக்கலாம். முதலில் மஞ்சள் கருவில் ஆரம்பித்து பிறகு ஒரு வயதுக்குப் பிறகு வெள்ளைக்கருவும் சேர்த்துக் கொடுக்கலாம்.
ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை. ஈவினிங் ஸ்நாக்காக ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம். இது சாக்லேட், பப்ஸ், பர்கரை விடவும் சிறந்தது.
முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது. அபான வாயு அடிக்கடி வெளியேறுகிறது என்று கம்ப்ளய்ண்ட் செய்வார்கள். அதற்குத்தான் முன்பே கூறினேன், கட்டாயம் முட்டைகளை தனி உணவாகவே உண்ண வேண்டும். முட்டையை சோறுடனோ, முட்டை தோசை என்றோ, முட்டை பரோட்டா என்றோ உண்ணக்கூடாது.
என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகிறேன். நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200-ஐத் தாண்டாது. காரணம் முட்டைகளில் கார்போஹைட்ரேட் கிடையாது.
கார்போஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறைவாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும். மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அளவுகளை ஏற்றும்.
நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள். முதல் நன்மை ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது. இரண்டாவது நன்மை நிறைவான புரதச்சத்து கிடைப்பது. மூன்றாவது நன்மை நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது.என்னை சந்திக்கும் பொருளாதாரத்தில் எளியோர்க்கும் சரி, வலியவர்களுக்கும் சரி.. நான் பரிந்துரைக்கும் புரதம் சார்ந்த உணவு "முட்டை" தான். தினமும் மூன்று முட்டைகள் எடுத்தால் போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவதில்லை.
- டாக்டர் ஃபரூக் அப்துல்லா
- முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
- ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம்.
நாமக்கல்:
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.
இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ. 4.20-ஆக நிா்ணயிக்கப்பட்டது.
அேதபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்