என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உடல்நலக்குறைவு"
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறும் வரையில் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ‘உடல்நலம் தேறியதும் மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவேன்’ என குமரி அனந்தன் தெரிவித்தார். #KumariAnanthan
கனடா நாட்டின் கியூபெக் சிட்டி விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்துக்கு புறப்பட்டு செல்ல ஏர் டிரான்ஸாட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை (உள்ளூர் நேரப்படி) சுமார் 11 மணியளவில் தயாராக இருந்தது.
விபரமறிந்து விரைந்துவந்த மருத்துவ குழுவினர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கி, முதலுதவி மற்றும் உரிய சிகிச்சை அளித்தனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட சுமார் 10 பயணிகள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைதொடர்ந்து, அந்த விமானம் ஓடுபாதையில் இருந்து நகர்த்தி, தனிப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
வழக்கமாக பறக்க தொடங்குவதற்கு முன்னதாக விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் படிந்துள்ள பனிக்கட்டி அல்லது பனித்துகள்கள் ஓடுபாதையில் பாய்ந்து சீறிக்கிளம்ப முடியாத நிலையில் என்ஜின்களின் உந்துசக்தியை குறைத்து விடும்.
இதை தவிர்க்கும் வகையில் பனிப்பிரதேசங்களில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் மீது சில வாகனங்கள் சூழ்ந்து நின்றுகொண்டு வெந்நீரில் கலக்கப்பட்ட ‘கிளைக்கால்’ எனப்படும் ரசாயன கலவையை விமானத்தின் மூக்கு, இறக்கை மற்றும் வால் பகுதிகளில் தெளிப்பதுண்டு.
இதன்மூலம் படிந்துள்ள பனிக்கட்டிகள் உருகி விடுவதுடன் பறக்கும்போது மேலும் சில மணி நேரங்களுக்கு மீண்டும் பனி படியாமல் தடுக்கப்படும். இதை விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பச் சொல்லில் ‘டிஐசிங்’ என்று அழைப்பதுண்டு.
அவ்வகையில் ‘டிஐசிங்’ செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட தெளிப்பான்களின் நெடி காற்றுப்போக்கிகள் வழியாக விமானத்தின் உட்பகுதிக்குள் நுழைந்ததால் பயணிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #185passengersick #boardingplane #QuebecCityairport #deicing
கோவை:
பா.ம.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இதற்காக ஏற்பாடுகளை கவனிப்பதற்காக பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று கோவை வந்தார்.
பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்றார். அப்போது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இருதயகோளாறு காரணமாக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறினார். இன்று அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #gkmani
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மார்ச் மாதம் கணைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு ஏறக்குறைய இரு மாதங்கள் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர் ஜூன் மாதம் நாடு திரும்பினார். அதன்பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக, மீண்டும் கடந்த செப்டம்பர் அமெரிக்கா சென்றிருந்த பாரிக்கர் சிகிச்சை முடிந்து 6-ம் தேதி நாடு திரும்பினார்.
நேற்று மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே அமைச்சர்கள் மற்றும் கோவா மாநில பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து பேசினார். மேல்சிகிச்சைக்காக மனோகர் பாரிக்கர் இன்று டெல்லி வர உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தொடர்ந்து பாரிக்கருடன் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவரிடம் முதல்வர் பொறுப்பை தற்காலிகமாக ஒப்படைக்க பாரிக்கர் விரும்புவதாகவும் தெரிகிறது. இதுபற்றி பாஜக மேலிடம் ஆலோசனை நடத்தி வருகிறது. #ManoharParrikar
தமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. #MannarMannan
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991-96 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சண்முகநாதன் (வயது 58).
வக்கீலாக பணியாற்றி வந்த அவர் தற்போது திருச்சி நெ.1 டோல்கேட் மேனகா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகநாதன் கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
அவ்வப்போது ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் முன்பே அவர் இறந்து விட்டார்.
மரணம் அடைந்த சண்முக நாதனுக்கு சசிகலா என்ற மனைவியும், என்ஜினீயரிங் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். சண்முகநாதன் உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அவரது உடல் அடக்கம் நடக்கிறது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மே மாதம் 24-ந்தேதி கோவில் பிரகாரத்தில் நின்றிருந்த யானை மசினி, பாகன் கஜேந்திரனை காலால் மிதித்து கொன்றது. இதையடுத்து யானையை கொட்டகைக்கு கொண்டு சென்று பராமரித்து வந்தனர்.
இந்த நிலையில் யானையின் இடது காலில் வந்துள்ள நீர்க்கட்டியால் அவதியுற்று வந்தது. இதற்கு கால்நடை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தும் பலனில்லை. இதையடுத்து தேனி மாவட்டத்தை சேர்ந்த கால்நடை சிறப்பு மருத்துவர் கலைவாணன் யானை மசினியை பரிசோதனை செய்ய உள்ளார்.
அதன்பிறகு அவரது அறிவுறுத்தலின்படி ஒரத்தநாடு பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக யானையை பராமரிக்கும் சுகுமார் தெரிவித்துள்ளார்.
பந்தலூர் தாலுகா படச்சேரி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த கிராமத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. உடல் மெலிந்த நிலையில் காணப்பட்ட அந்த காட்டு யானை, அங்கும், இங்குமாக சுற்றி திரிந்தது. பின்னர் அங்குள்ள ஒரு நடைபாதையில் படுத்து விட்டது. இந்த தகவல் அந்த பகுதியில் பரவியதால் ஏராளமான பொதுமக்கள் காட்டு யானையை காண குவிந்தனர்.
காட்டு யானை குறித்து சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் கூடலூர் கோட்ட வன அதிகாரி ராகுல், வனச்சரகர்கள் மனோகரன், கணேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் ராஜேஸ் குமார், மாதவன், சங்கர், ஆலன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அங்கு காட்டு யானை உயிருக்கு போராடி கொண்டு இருப்பதை பார்த்தனர். இதனை தொடர்ந்து கால்நடை டாக்டர் வரவழைக்கப் பட்டு காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அங்கு குவிந்ததால், பாதுகாப்பு கருதி காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு, ஒரு லாரியில் காட்டு யானை தூக்கி வைக்கப்பட்டது.
இதன்பின்னர் காட்டு யானை அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து சேரம்பாடி கால்நடை டாக்டர் பிரபு காட்டு யானைக்கு சிகிச்சை அளித்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் காட்டு யானை இறந்தது. இறந்த பெண் காட்டு யானைக்கு சுமார் 35 வயது இருக்கும். பின்னர் காட்டு யானை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கு புதைக்கப் பட்டது.
இதுகுறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-
இறந்த பெண் யானையின் நாக்கில் புண் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த காட்டு யானையால் சரியாக சாப்பிட முடியவில்லை. இதனால் உடல் மெலிந்து பலவீனமான நிலையில் இருந்த யானை, சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இதுகுறித்து விரிவாக தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக பதவி வகித்தபோது, கால்நடை தீவனம் வாங்குவதில் ஊழல் செய்த குற்றத்துக்காக 3 வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார். சமீபத்தில் மருத்துவ காரணங்களுக்காக 6 வார கால ஜாமீன் கோரியிருந்த லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், உடல் நிலை மோசமடைந்த காரணத்தினால், பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். #laluprasadyadav #admittedinICU
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்