search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 118705"

    • தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது?
    • உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது?

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தீ தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பயிற்சி பெற்றார்.

    மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது, உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது, தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ள ப்பாதிப்பு ஏற்பட்டாலும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மேற்பா ர்வையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
    • ரூ. 47 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஒன்றியம் மாதானத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை கட்டிடம் சிதிலமடைந்து இருப்பதால் கால்நடை சிகிச்சைக்கு வந்து செல்பவர்கள் அச்சத்துடன்வருவதோடு, பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்களும் பாதுகாப்பின்றி பணியாற்றும் சூழல் நிலவிவந்தது.

    இதனையடுத்து கால்நடை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என கோரிக்கை விடுக்கப்ப ட்டுவந்த நிலையில் அதற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.47லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கால்நடை மருத்துவர் மணிமொழி தலைமை வகித்தார்.பொதுப்பணித்துறை (கட்டிடம்) உதவிசெய ற்பொறி யாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜான்டிரோஸ்ட், மாதானம் ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதிசிவராமன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கென்னடி, திமுக மாவட்ட பிரதிநிதியும், ஒப்பந்ததாரருமான வேட்டங்குடி இளங்கோவன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பூமிபூஜையில் பங்கேற்று புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து பணிகளை துரிதமாக செய்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

    • அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தர வேண்டும்.
    • நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித்தரவேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மணக்குடி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குநர் சிலேகா முன்னிலை வகித்தார்.

    துணைத் தலைவர் காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார். கிராம சபை கூட்டத்தில் மணக்குடி ஊராட்சிக்கு சாலை வசதிகளை செய்து தருமாறும், அங்கன்வாடி கட்டிடம் கட்டித் தரக் கோரியும், நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொது மக்கள் வலியுறுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமாரராஜா, மகளிர் சுய குழு அலுவலர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் உமாபதி நன்றி கூறினார்.

    • நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சியில் ரூ. 44 லட்சம் மதிப்பில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதில் தலைஞாயிறு மாநில விவசாயிகள் குழு உறுப்பினர் மகா குமார் அடிக்கல் நாட்டினார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெபஸ்டி அம்மாள், அண்ணாதுரை, ஒன்றிய பொறியாளர்கள் கோவிந்தராஜ், ரசுகுமாரன், ஒன்றிய மேற்பார்வையாளர் தர்மராஜன், உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க இயக்குனர் மச்சழகன், வழக்கறிஞர் ஜெய்சங்கர், தி.மு.க.மாவட்ட பிரதிநிதி வீரகுமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தார்வாரில், 5 மாடி கட்டிடம் இடிந்த சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக 3 நாட்களுக்கு பிறகு ஒரு தம்பதி உள்பட 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். #DharwadBulidingCollapse
    உப்பள்ளி :

    மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 12 பள்ளி மாணவிகளை உயிருடன் மீட்க மீட்பு குழுவினர் போராடி வருகிறார்கள்.

    கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக 5 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. அந்த கட்டிடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தின் கட்டிட பணிகள் முடிவடைந்து கடைகள், கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 19-ந் தேதி அந்த கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது மாடிகளின் கட்டிட பணிகள் நடந்து வந்தன. கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    அதேபோல் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் உள்ள கடைகளுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்திற்கும் 12 பள்ளிக்கூட மாணவிகள் வந்து பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் 19-ந் தேதி மதியம் 4 மணியளவில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கடைகளில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் இருந்த 12 மாணவிகள் என அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

    இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டனர். இதேபோல் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை, தீயணைப்பு படையினர் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தபோது எடுத்தபடம்

    முதல்நாளில் 2 பேரின் உடல்களும், 2-வது நாளில் 5 பேரின் உடல்களும், 3-வது நாளில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றும் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது. அப்போது மேலும் 2 பேரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இதனால் இச்சம்பவத்தில் சாவு எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே நேற்று கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு தம்பதியை மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். அந்த தம்பதியின் பெயர் திலீப் மற்றும் சங்கீதா ஆகும். அதேபோல் ஒரு வாலிபரையும் மீட்பு குழுவினர் உயிருடன் மீட்டனர். அவருடைய பெயர் கங்கண்ண கவுடா ராமனகவுடா என்பதாகும். இவர்கள் 3 பேரும் அந்த வணிக வளாகத்தில் இருந்த கடைகளில் பொருட்கள் வாங்க வந்திருந்ததும், அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இடிபாடுகளுக்குள் உயிருடன் இருந்ததை மீட்பு குழுவினர் நவீன எந்திரங்கள் மூலம் சோதனை மேற்கொண்டு கண்டறிந்தனர். பின்னர் அவர்களை உயிருடன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

    தற்போது அவர்கள் சிகிச்சைக்காக கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அந்த தம்பதி உள்பட 3 பேரும் 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இடிபாடுகளுக்குள் 12 பள்ளிக்கூட மாணவிகள் உயிருடன் இருப்பதாக மீட்பு குழுவினருக்கு தெரியவந்துள்ளது. அவர்களை உயிருடன் மீட்க தீயணைப்பு துறையினரும், மீட்பு குழுவினரும் போராடி வருகிறார்கள். #DharwadBulidingCollapse
    கரூரில் இடியும் நிலையில் உள்ள வீட்டுவசதிவாரிய குடியிருப்பு கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு கரூர் கலெக்டர் அலுவலகம், கோர்ட்டு, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத வாடகையாக செலுத்தி குடியிருந்து வருகின்றனர்.

    இங்குள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாததால் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளன. மேலும் கட்டிடத்தின் கம்பிகள் வெளியே தெரியும் படி இருக்கின்றன. இதனால் பாதுகாப்பு கருதி 30-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலிசெய்துவிட்டனர். காலி செய்யப்பட்ட கட்டிடங்களில் பழைய மரசாமான்கள் உள்ளிட்டவைகளை போட்டு வைக்கப் பட்டுள்ளது.

    மேலும் இந்த குடியிருப்பு வளாகத்தில் சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் விளையாடுவதற்காக அமைக்கபட்ட பூங்காவில் வேண்டாத செடிகள் முளைத்து பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இங்கிருந்து விஷ ஜந்துகள் அடிக்கடி வருவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே தாந்தோன்றிமலையில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். அங்குள்ள பூங்காவை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள பகுதியில் யானைகளின் வழித்தடத்தில் நில ஆக்கிரமிப்பு செய்து ஓய்வு இல்லங்கள் (ரிசார்ட்) மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு தடை விதிக்குமாறு கோரி சுற்றுச்சூழல் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, முன்பு யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகள், ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், குடியிருப்புவாசிகள் காலி செய்து, நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஓய்வு இல்லங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வக்கீல் யானை ராஜேந்திரன் நேரில் ஆஜராகி வாதாடினார்.

    அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

    சென்னை ஐகோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த போது நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் 136 ஓய்வு இல்லங்கள் மட்டுமே இருந்தன.

    ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதுவரை 430-க்கும் மேற்பட்ட ஓய்வு இல்லங்களும், ஓட்டல்களும் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து சட்ட விரோதமாக கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் மற்றும் தண்ணீரை உடனடியாக துண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    இதைத்தொடர்ந்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களில் எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன? அவற்றின் தன்மை மற்றும் அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    ஐகோர்ட்டு உத்தரவுக்கு முன்பு கட்டப்பட்டவை எத்தனை? அதற்கு பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் எத்தனை? அவற்றில் ஓட்டல் மற்றும் ஓய்வு இல்லங்கள் மற்றும் குடியிருப்புகள் எத்தனை? இந்த கட்டிடங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விவரங்களும் அந்த அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று அப்போது நீதிபதிகள் கூறினார்கள்.

    அத்துடன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள். 
    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை நகரில் சிறந்த கட்டிட கலைகளில் ஒன்றாக எழும்பூர் ரெயில் நிலையம் திகழ்கிறது. 1908-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இந்த கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் இருந்து முதல் ரெயிலாக ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ‘போட் மெயில்’ என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது.

    3 நடைமேடைகளாக உருவாக்கப்பட்ட எழும்பூர் ரெயில் நிலையம் தற்போது 11 நடைமேடைகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பழமை மாறாமல் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த கட்டிடம் 110 வயதை தொட்டுள்ளது. இதையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று நடைபெற்றது. எழும்பூர் ரெயில் நிலையம் கடந்து வந்த பாதை, இயக்கப்பட்ட பல்வேறு மாடல் ரெயில் என்ஜின் உள்பட எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடத்தை பறைசாற்றும் வகையில் ஏராளமான படங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.

    பயணிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கட்டிடத்தின் 110-வது வயதை கொண்டாடும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் ‘கேக்’ வெட்டும் நிகழ்ச்சி எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எழும்பூர் ரெயில் நிலையத்தின் மூத்த ஊழியரான பி.எம்.கோவிந்தராசு ‘கேக்கை’ வெட்டினார். இந்த நிகழ்ச்சியில் எழும்பூர் ரெயில் நிலைய இயக்குனர் ஜெயவெங்கடேசன் உள்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். 
    வேலூர் விமான நிலையத்தில் கட்டிடங்கள் அமைப் பது தொடர்பாக டெல்லி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
    வேலூர்:

    மத்திய அரசின், ‘உதான்’ திட்டத்தின்கீழ் நாடு முழுவ தும் பயனற்ற நிலையில் உள்ள விமான நிலையங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 100 விமான நிலையங்களை மத்திய விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் குழுவினர் ஆய்வு செய்த னர். தமிழகத்தில் வேலூர் மற்றும் ஓசூர், நெய்வேலியில் இருந்து புதிதாக சிறிய ரக விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப் பட்டது.

    அதன்படி வேலூரில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 டிக்கெட் கட்டணத்தில் பெங்களூரு, திருப்பதி, சென்னை ஆகிய நகரங்களுக்கு 19 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் இயக் கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதையடுத்து வேலூர் விமான நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை தொடங்க தமிழக அரசும் தடையில்லா அனுமதி வழங்கியது.

    அதைத்தொடர்ந்து தென் மண்டல விமானப் போக்கு வரத்து ஆணையரக அதிகாரி கள் வேலூர் அப்துல்லா புரத்தில் உள்ள விமான நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர். விமான ஓடுதள பாதைக்கு கூடுதலாக நிலங்கள் தேவைப்படும் என்று அவர்கள், மாவட்ட நிர்வாகத் திடம் தெரிவித் தனர்.

    இதையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செங்கோட்டையன் தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்குச் சென்று, அங்குள்ள புறம்போக்கு நிலங் களை கையகப்படுத் துவது குறித்து ஆய்வு மேற்கொண் டனர். தொடர்ந்து கலெக்டர் ராமன் 55 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

    அதன்தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் வேலூர் விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்குவது தொடர்பான சாத்தியகூறுகள் குறித்து டெல்லி மத்திய விமான போக்குவரத்து ஆணையரகத்தின் நிலம் அளவீடு மற்றும் தொழில் நுட்பக்குழுவை சேர்ந்த 3 பேர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் சிக்னல் கட்டுப்பாட்டு அறை, பயணிகள் மற்றும் விமானிகள் ஓய்வறைகள், ஓட்டல்கள், வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவை குறித்தும், விமான நிலையம் அருகே உள்ள மேம்பாலம், மலைப்பகுதிகள், கட்டிடங்கள், மரங்கள் போன்றவை விமானங்கள் தரையிறங்கும் போது தடையாக இருக்குமா? என்றும், மேலும் விமான நிலையம் மற்றும் தரையிறங்கும் விமானத்துக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் குறித்து அதிநவீன எந்திரங்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.

    தற்போது விமான நிலையம் சீரமைப்பதற்கான ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிவில் என்ஜினீயரிங் குழுவை சேர்ந்த 3 பேர் நேற்று ஆய்வுப்பணிக்காக வேலூர் விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் விமான நிலையத்தின் நிலப்பரப்பு, ஓடுதளம் அமையும் பகுதி, கட்டிடங்கள் அமையும் பகுதி, விமானம் இறங்கி ஏறும் வகை யிலான ஓடுதளம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    ஒருவார காலம் இந்த ஆய்வு கள் நடைபெறும் என்றும், ஆய்வுக்கு பின்னர் 6 அடி உயரம், 850 மீட்டர் அளவுக்கு மொரம்பு மண் கொட்டி ஓடுதள பாதைகள் அமைக் கப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
    ×