என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏடிஎம்"
மராட்டிய மாநிலம் புனே போசரி போராடே வஸ்தி பகுதியில் பொதுத்துறை வங்கி ஒன்றுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்கு நேற்றுமுன்தினம் காலை அந்த பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார்.
அவர் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றபோது, அங்கு ஏ.டி.எம். எந்திரம் மாயமாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டார். ஏ.டி.எம். எந்திரம் பெயர்க்கப்பட்டு இருப்பதற்கான சுவடு இருந்தது. இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
போலீசாரும், வங்கி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், பணத்துடன் ஏ.டி.எம். எந்திரம் கொள்ளைபோனது தெரியவந்தது.
நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கண்காணிப்பு கேமரா வயர்களை துண்டித்துவிட்டு, கியாஸ் கட்டர் மூலம் வெட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து அலாக்காக தூக்கி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச்சென்றது தெரிந்தது.
கொள்ளைபோன ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சம் பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துணிகர கொள்ளையில் 4 முதல் 5 பேர் வரை ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கூறினர்.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா வயர்களை கொள்ளையர்கள் துண்டித்து சென்று விட்டதால் அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
திருடன் என்றாலே உலகின் அனைத்து நாடுகளிலும் மக்கள் அஞ்சத்தான் செய்கிறார்கள். பணம், நகைகள், வாகனங்கள் போன்றவற்றை திருடுவதற்காக கத்தியினை காட்டி மிரட்டி, துன்புறுத்தி இரக்கமின்றி திருடிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சீனாவில் ஒரு திருடனின் செயல் அனைத்து தரப்பு மக்களாலும் இணையத்தளத்தில் பாராட்டப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ஏடிஎம்மில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்ததை போல ஒருவன் பின்னே வந்து நின்றான். திடீரென கத்தியைக் காட்டி மிரட்டவே அந்த பெண் பயந்து கத்தியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பல்வேறு மக்களும் அவரது செயலை பாராட்டியபோதும், அந்த திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த வீடியோவிற்கு மீம்ஸ்களும், திருடனின் இந்த செயலுக்கு பாராட்டுகளும், கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஒருவர் தனது பதிவில், “என் வங்கிக் கணக்கைப் பார்த்தால் திருடன் அவனுடைய சொந்த பணத்தை மட்டுமல்லாமல், கத்தி மற்றும் அணிந்திருந்த சட்டையையும் கொடுத்து சென்றுவிடுவான்” என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. #ChinaRobberMercy
மெலட்டூர்:
காலத்துக்கேற்ப மோசடியில் புதுபுது யுக்திகளை கையாள்கின்றனர். படிக்காத பாமர மக்களிடம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க உதவுகிறோம் என்று நடித்தும் வங்கியில் இருந்து பேசுகிறோம் என்று ஏ.டி.எம். ரகசிய எண்களை அறிந்தும் மோசடியில் ஈடுபடும் கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வருகிறது.
இதுபற்றி பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறி விவசாயியிடம் ரூ.35 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மேலசெம்.மங்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. விவசாயி.
இவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் உங்களது வங்கி ஏ.டி.எம் காலாவதியாகிவிட்டது. அதனை மாற்ற வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நாராயணசாமியும் நான் வங்கிக்கு சென்று மாற்றிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். ஆனால் செல்போனில் பேசியவர் அவருடைய ஏ.டி.எம். பின் நம்பரை கேட்டுள்ளார், நாராயணசாமியும் பின் நம்பரை கொடுத்துள்ளார்.
பின்னர் அம்மாபேட்டையில் உள்ள வங்கி கிளைக்கு சென்று ஏ.டி.எம். காலாவதியாகி விட்டது குறித்து வங்கி மேலாளரிடமும், தனக்கு வந்த செல்போன் தகவலையும் கூறியுள்ளார். அதற்கு உங்களது வங்கி கணக்கில் தற்போது பணம் இருப்பு இல்லை, பணம் வந்ததும் வாருங்கள் என கூறி அனுப்பிவிட்டார்.
இந்நிலையில் நெல்அறுவடை செய்து அதனை கொள்முதல் நிலையத்தில் விற்ற தொகை ரூ.1 லட்சத்து 800 நேற்று காலை நாராயணசாமி வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதனை அறிந்த நாராயணசாமியும் பாபநாசம் சென்று ஏ.டி.எம். மூலம் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை எடுத்தார். பணம் எடுத்த சிறிது நேரத்தில் நாராயணசாமியின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. வங்கியிலிருந்து வருவதாக நினைத்து வங்கிக்கு சென்று, அங்கு தன்னுடைய சேமிப்பு கணக்கு புத்தகத்தினை வரவு செலவை பிரிண்ட் எடுத்த போது, நாராயணசாமிக்கே தெரியாமல் அவருடைய கணக்கில் இருந்து ஐதராபாத்தில் இருந்து முதலில் ரூ.5 ஆயிரம், பின்னர் ரூ.9999, பின்னர் ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.34,999 ஐ ஆன்லைன் மூலமாக எடுத்துள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தன்னுடைய வங்கி கணக்கை முடக்கி வைத்தார்.
பின்னர் வங்கி கிளையிலும், மெலட்டூர் போலீஸ் நிலையத்திலும் இது தொடர்பாக நாராயணசாமி புகார் செய்தார். #tamilnews
பெருந்துறை அருகே உள்ளது காஞ்சிகோவில். இங்குள்ள நான்கு ரோடு பகுதியில் ஒரு தேசிய வங்கியின் ஏ.டி.எம். உள்ளது.
24 மணி நேரம் செயல்படும் இந்த ஏ.டி.எம்.மில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பணம் எடுத்து செல்வார்கள். மேலும் இந்த ஏ.டி.எம். அருகே கடைகளும், வீடுகளும் உள்ளன.
அதிகாலையில் இந்த ஏ.டி.எம்.மில் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் சுற்று முற்றும் பார்த்தான். பிறகு அவன் கொண்டு வந்த இரும்பு கம்பியால் பணத்தை கொள்ளையடிக்க ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தான்.
இந்த சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள பொதுமக்கள் எழுந்து வெளியே வந்தனர். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து சத்தம் வரவே அங்கு சென்றனர்.
பொதுமக்களை கண்டதும் மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். ஆனால் அவனை பொதுமக்கள் விரட்டி மடக்கி பிடித்தனர்.
பிறகு அவனுக்கு தர்ம அடி கொடுத்து காஞ்சிகோவில் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
அவனை கைது செய்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விசாரணையில் அவன் பெயர் அரவிந்த்சாமி (வயது 27) என்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மான்குட்டை பாளையத்தை சேர்ந்தவன் என்றும் தெரிய வந்தது.
போலீசார் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
அண்ணாநகர் ஏ.ஏப். பிளாக்கில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இன்று அதிகாலை 3 மணிக்கு வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார்.
சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர் ஏ.டி.எம். மையத்தை வாலிபர் ஒருவர் உடைப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அண்ணாநகர் ரோந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் விரட்டி சென்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் அந்த வாலிபர் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து மடக்கி பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் அவர் சேலம் மாவட்டம் கெங்கைவல்லியை சேர்ந்த சங்கர் என்பதும், சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் ஒப்பந்த லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சங்கர் வேறு எங்காவது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- சத்திரப்பட்டி ரோட்டில் பி.எஸ்.கே.நகர் பஸ் நிறுத்தம் அருகில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம கும்பல் ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து கடப்பாரையால் எந்திரத்தை உடைக்க முயன்றது. அரைமணி நேரத்திற்குமேல் போராடியும் அவர்களால் உடைக்க முடியவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியில் ஆட்கள் வருவதை உணர்ந்த கும்பல் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு பாதியிலேயே தப்பியது
இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் சேதம் அடைந்து இருப்பதை கண்ட மக்கள் வங்கி அதிகாரிகளுக்கும், ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், ராஜாமணி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்
இந்த நிலையில் போலீசார் ராஜபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடப்பாரை மற்றும் ஆயுதங்களுடன் 3 பேர் சிக்கினர். இவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தில் கொள்ளையடிக்க முயன்றவர்களா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
விருகம்பாக்கம், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்தவர் நாராயணி (73). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
நாராயணி நேற்று முன்தினம் மாலை பணம் எடுப்பதற்காக அதே பகுதி காமராஜர் சாலை விநாயகம் தெருவில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் நாராயணிக்கு பணம் எடுக்க உதவினார்.
பின்னர் நாராயணி வீட்டிற்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து நாராயணியின் செல்போனிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதில் அவரது வங்கி கணக்கில் இருந்து 37ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணி நேற்று வங்கிக்கு சென்று விசாரித்தார். அப்போது நாராயணி பணம் எடுத்த அதே ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கப்பட்டதும், அவரிடம் இருந்தது. மேலும் போலியான ஏ.டி.எம் கார்டு என்பது தெரியவந்தது.
பணம் எடுக்க உதவியவர் நாராயணியின் கணக்கில் இருந்து 37ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு அவரிடம் போலியான ஏ.டி.எம். கார்டை கொடுத்து நூதன முறையில் ஏமாற்றி பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேலுமணி ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் பணத்தை எடுத்து தப்பி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏ.டி.எம். மெஷின்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏ.டி.எம். அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு (நாளை முதல்) 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் பாரத ஸ்டேட் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. #SBI #SBIDebitCards #ATM
இணையம் மற்றும் வணிக செய்திகளில் பிட்காயின் (Bitcoin) எனும் கள்ளப்பணம் ஸ்பாட் லைட் பெற்றிருக்கிறது. பொதுவாக பிட்காயின் என்பது இணையத்தில் (கள்ளப்பரிமாற்றம் செய்ய மட்டும்) பயன்படுத்தக்கூடிய பணம் எனலாம். ஆனால் இதனை கொண்டு அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்களை வாங்கவோ, இதர சேவைகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
பிட்காயின் என்பது கள்ளச் சந்தையில் பயன்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட பணம் ஆகும். இதனை கண்டறிந்தவர் மற்றும் அவரது பின்புலம் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. சமீபத்தில் ஒரு பிட்காயின் மதிப்பு 16,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.10,31,728 வரை உயர்ந்ததே, பிட்காயின் திடீர் டிரென்ட் ஆக காரணமாக அமைந்துள்ளது.
இணையத்தில் மொத்தம் 2.1 கோடி பிட்காயின்கள் மட்டும் புழக்கத்திற்கு விநியோகம் செய்யப்பட இருக்கின்றது. எனினும் இத்தகைய பிடிகாயின்களை விநியோகம் செய்ய 2140-ம் ஆண்டு வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை மட்டும் இணையத்தில் மொத்தம் 1.67 கோடி பிட்காயின்கள் புழக்கத்திற்காக விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
கள்ளச்சந்தையில் இணைய பரிமாற்றங்களின் போது இதுவரை 9,80,000 பிட்காயின்கள் ஹேக்கர்கள் மற்றும் பல்வேறு திருடர்களால் திருடப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 1500 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் இந்திய மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடிகளை (967245000000) தொடுகிறது.
ஒரே ஆண்டில் 1700 சதவீதம் உயர்ந்த பிட்காயின் விலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி நிலவரப்படி 17 ஆயிரத்து 752 டாலர்களாக அதிகரித்தது. அந்த மாதத்தில் மட்டும் பிட்காயினின் மதிப்பு 77 சதவீதம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் துமக்கூரு நகரை சேர்ந்த பட்டதாரியான ஹரிஷ் என்பவர் ‘அன்காயின் டெக்னாலஜிஸ்’ என்னும் நிறுவனத்தை தொடங்கி, இணையத்தின் மூலமாக பிட்காயின் பரிவர்த்தனைகளை செய்து வந்தார்.
மேலும், ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளை மீறிய வகையில் பெங்களூரு நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றில் அனுமதியின்றி பிட்காயின் ஏ.டி.எம். ஒன்றையும் கடந்த வாரம் ஹரிஷ் திறந்துள்ளார்.
இதை தொடர்ந்து பெங்களூரு போலீசார் நேற்று ஹரிஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரித்து வருகின்றனர். #Bizmanheld #BitcoinATM #BengaluruBitcoinATM
அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திற்குள் இந்தியன் வங்கி கிளை உள்ளது. இதில் ஏ.டி.எம். மையமும் செயல்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக ஏ.டி.எம்மில் அடிக்கடி பணம் குறைந்து வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் போரூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில் ஏ.டி.எம். மையத்தின் பொறுப்பாளராக பணியாற்றி வரும் சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த வங்கி ஊழியர் சுரேஷ் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை சுரேசை கைது செய்தனர். விசாரணையில் சுரேஷ் 11 வருடங்களாக வங்கியில் பணியாற்றி வந்ததும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் போரூர் கிளைக்கு வேலைக்கு வந்ததும் ஏ.டி.எம். மையத்தில் கள்ளசாவி போட்டு அடிக்கடி பணத்தை எடுத்ததையும் சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
3 ஆண்டுகளில் சுமார் ரூ.64 லட்சம் பணத்தை ஏ.டி.எம். மூலம் எடுத்தது தெரியவந்துள்ளது தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
ஏ.டி.எம். மெஷின்களில் ஸ்கிம்மர் உள்ளிட்ட கருவிகளைப் பொருத்தி அதன்மூலம் வாடிக்கையாளரின் வங்கி அட்டை விவரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேலும் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையிலும், டிஜிட்டல் மற்றும் பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வரம்பை பாதியாக குறைத்துள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் தற்போது எடுக்க முடியும். இனி அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அதற்கு மேல் எடுக்க முடியாது. இந்த புதிய உத்தரவு இம்மாதம் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் அனைத்து கிளைகளிலும் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டும்படி சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பணம் எடுக்கும் வரம்பை குறைத்திருப்பதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள். #SBI #SBIDebitCards #ATM
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எரிமயூர் அருகே எஸ்.பி.ஐ. வங்கி கிளையின் ஏ.டி.எம். எந்திரம் உள்ளது.இந்த எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.
ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஆலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
வங்கி மேலாளர் சிராஜ் ஏ.டி.எம்.மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தில் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஏ.டி.எம். உடைக்கப்பட்டது குறித்து ஆலத்தூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எலிசபெத் கூறும் போது, ஏ.டி.எம். எந்திரத்தில் நடந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காரில் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கார் அப்பகுதியில் உள்ள கோவில் வழியாக சென்ற தடயம் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். ஏ.டி.எம். எந்திரத்தில் நடைபெற்ற கொள்ளை முயற்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்