search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பெண்"

    தஞ்சை திருமண மண்டபத்தில் மணப்பெண் அறையில் புகுந்து 60 பவுன் நகையை திருடிய மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை செல்வம் நகரில் ஒரு தனியார் திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு தஞ்சையை சேர்ந்த மணப்பெண் வீட்டார் தங்கியிருந்தனர். இன்று காலை திருமணம் நடைபெற இருந்ததால் வெளியூரிலிருந்து வந்த மணப்பெண்ணின் உறவினர்களும் திருமண மண்டபத்தில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் மணப்பெண் தனது திருமணத்திற்கு செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து அதனை தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.

    நள்ளிரவு மணப்பெண் அறைக்குள் புகுந்த கொள்ளையன் தலையணைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றான்.

    அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணப்பெண் உறவினர் ஒருவர் மர்மநபர் பையுடன் செல்வதை கண்டு திடுக்கிட்டார். அவர் சந்தேகமடைந்து திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்த உறவினர்கள் சிலர் எழுந்து வந்து மர்மநபரை விரட்டி சென்றனர்.

    இதுபற்றி தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனை கண்ட மர்ம நபர் தன்னை பிடித்துவிடுவார்கள் என்று பயந்து கையில் வைத்திருந்த நகை பையை கீழே போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான். அதனை கைபற்றி போலீசார் மணப்பெண் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.

    திருமண மண்டபத்தில் கொள்ளையன் புகுந்து 60 பவுன் நகையை திருடி செல்ல முயன்ற சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவில் பாலின சமநிலையின்மை காரணமாக மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வியட்நாமில் இருந்து சிறுமிகள் கடத்தி வரப்பட்டு திருமணத்திற்காக விற்கப்படுகின்றனர்.
    பெய்ஜிங்:

    சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கடந்த 50 ஆண்டுகளாக சீன அரசு கடுமையான குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

    இதற்கு பலன் கிடைத்தது. மக்கள்தொகை குறையாவிட்டாலும் கடந்த சில வருடங்களாக பிறப்பு விகிதம் சீராக இருப்பதால் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை. ஆனால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

    பெண்கள் பிறப்பு விகிதம் குறைந்து ஆண்கள் பிறப்பு அதிகரித்துள்ளது. பாலின விகிதாச்சாரம் 100 பெண்களுக்கு 110 ஆண்கள், 120 ஆண்கள் என்று இருக்கிறது. இதனால் இளம் பெண்கள் பற்றாக்குறையில் சீனா தத்தளிக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இவர்களுக்கு சீனாவில் மணப்பெண்கள் கிடையாது. இதனால் இளைஞர்கள் பலர் வயது அதிகரித்து முதுமை அடைந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் பெண் சிசுக்கொலை தான் என்று தெரிய வந்துள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்த அரசு சிசுக்கொலையை கண்டு கொள்ளாமல் ஆதரித்தது.

    மேலும் சீனப்பெண்கள் பொருளாதார ரீதியாக உயர்வதற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு, திருமணத்தை தள்ளி போடுதல் போன்றவையும் ஒரு காரணம்.

    சீனாவில் மணப்பெண் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், இதனை கவனித்த ஆட்கடத்தல் கும்பல், பிரச்சினையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள வியட்நாமில் இருந்து சிறுமிகளையும், இளம்பெண்களையும் ஆசைவார்த்தை கூறி கடத்தி வந்து, சீனாவில் மணப்பெண்களாக நல்ல விலைக்கு விற்றுவிடுகிறார்கள்.

    கம்போடியா, மியான்மர், லாவோ, நாடுகளில் இருந்தும் இளம்பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுகிறார்கள். வியட்நாம்- சீன எல்லையில் பெண்கள் கடத்தல் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. இது சீன அரசுக்கு புது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. #ChinaMaleFemaleRatio #VietnameseGirlsTrafficked
    ஆரணி அருகே தி.மு.க. பேனர் வைக்கப்பட்டதால் தகராறு ஏற்பட்டு தாலிகட்டும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மணப்பெண் உறவினரை மணந்தார்.

    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள ராந்தம் தெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். தி.மு.க. பிரமுகர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மகள் சந்தியா. இவருக்கும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். மாப்பிள்ளை வீட்டார் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். மணமக்களை வாழ்த்தி ராஜகோபால் தரப்பினர் தி.மு.க. பேனர் வைத்தனர். தி.மு.க. கட்சி கொடி கட்டியிருந்தனர்.

    நேற்று இரவு மணமக்கள் அழைப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


    இன்று அதிகாலை திருமண ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அப்போது மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த தி.மு.க. பேனரால் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. திருமண செலவு எங்களுடையது அதில் மணப்பெண் வீட்டார் எப்படி தி.மு.க. பேனர் வைக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. கைக்கலப்பும் ஏற்பட்டது.

    இதனால் திகைத்து போன மணப்பெண் சந்தியா திருமணத்திற்கு முன்பே இவ்வளவு பிரச்னை என்றால் இன்னும் பின்னர் என்ன பிரச்னை எல்லாம் ஏற்படுமோ என பயந்தார். இதனால் எனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று கூறினார்.

    இதனால் மணமகன் வீட்டார் கோபித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

    திகைத்து போன மணப்பெண் வீட்டார் எப்படியும் திருமணத்தை நடத்தியே ஆக வேண்டும் என எண்ணினர். ராஜகோபாலின் தங்கை மகன் ஏழுமலை (27) என்பவரிடம் திருமணம் குறித்து பேசினர். அவர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து ஏழுமலைக்கும் சந்தியாவுக்கும் அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுபற்றி சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கர்நாடக மாநிலம் ஹாசனில் திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் ஒருவர் பி.காம் இறுதி ஆண்டு தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Bride #Exam
    ஹாசன்:

    கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கண்டசி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவருக்கும் ஹாசன் டவுன் ஜெயநகர் பகுதியைச் சேர்ந்த சுவேதா(20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 6-ந் தேதி பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் இவர்களுடைய திருமணம் நவம்பர் மாதம் 18-ந் தேதி(அதாவது நேற்று) அறிவிக்கப்பட்டது.மணமகன் நவீன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மணப்பெண் சுவேதா, ஹாசன் டவுனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் இவர்களுடைய திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்தனர். திருமண பத்திரிகைகளை அச்சடித்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் கொடுத்தனர். இந்த நிலையில் சுவேதாவுக்கு இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டது.



    அதன்படி திருமண நாளான நவம்பர் 18-ந் தேதி அன்று அவருக்கு வணிக கணக்குப்பதிவியல் மற்றும் சட்டம் ஆகிய பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. திருமண நாளன்று தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் சுவேதா மனமுடைந்தார். அவர் இதுபற்றி தனது வருங்கால கணவர் நவீன் மற்றும் அவருடைய குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

    அதற்கு நவீனும், அவருடைய குடும்பத்தாரும் சுவேதாவுக்கு ஆறுதல் கூறினர். மேலும் நன்றாக படிக்கும்படியும், தேர்வை கண்டிப்பாக தாங்கள் எழுத வைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடக்க, சுவேதா தனது தேர்வுக்காக தயாராகி வந்தார். இந்த நிலையில் திட்டமிட்டபடி நேற்று காலையில் ஹாசன் டவுனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நவீன்-சுவேதா ஆகியோரின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன. காலை 7.45 மணியில் இருந்து 8.45 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆகும்.

    அதன்பேரில் நேற்று அதிகாலையிலேயே மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் திருமணத்திற்கு தயாரானார்கள். திருமணத்திற்காக வந்தவர்களுக்கு அறுசுவை உணவும் தயார் செய்யப்பட்டது. பின்னர் குறித்த நேரத்தில் மணக்கோலத்தில் நவீனும், சுவேதாவும் வந்து மணமேடையில் அமர்ந்தனர். அதையடுத்து அவசர, அவசரமாக புரோகிதர் வேத, மந்திரங்கள் முழங்க மணமகன் நவீன், மணமகள் சுவேதாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    மேலும் விரைவாக திருமணச் சடங்குகளும் முடிக்கப்பட்டன. அதையடுத்து மணமகன் நவீனும், மணப்பெண் சுவேதாவும் மணக்கோலத்திலேயே தேர்வு நடைபெறும் அரசு கல்லூரிக்கு வந்தனர். அங்கு நவீன் வெளியில் காத்திருக்க, சுவேதா மணக்கோலத்திலேயே தேர்வு அறைக்கு சென்று தன்னுடைய தேர்வை எழுதினார். அவர் தேர்வை எழுதி முடித்துவிட்டு திரும்பி வரும் வரை மணமகன் நவீனும், திருமண வீட்டாரும் அங்கேயே காத்திருந்தனர். இந்த சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து மணமகனும், மணப்பெண்ணும் மீண்டும் மண்டபத்திற்கு திரும்பி அங்கு குடும்பத்தினர், உறவினர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் சுவேதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்தது. என் வாழ்க்கையில் நடந்த ஓர் அதிசயம் இது. இந்த தேர்வை நான் எழுதவில்லை என்றால் மனதளவில் மிகவும் வருத்தம் அடைந்திருப்பேன். ஆனால் எனக்கு எனது கணவரும், அவருடைய குடும்பத்தினரும் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களால்தான் இந்த தேர்வை நான் மன நிம்மதியோடு எழுத முடிந்தது. கண்டிப்பாக நான் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுவேன். நான் தேர்வு எழுத உறுதுணையாக இருந்த என் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Bride #Exam
    தக்கலை அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மணப்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது.
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள மருவூர்கோணத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 

    இவருக்கும், பறைக்கோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அழகியமண்டபம் சந்திப்பில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடைபெறும் என்று அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. திருமணத்துக்காக சதீஷ்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தார். திட்டமிட்டபடி நேற்று மாலை அழகிய மண்டபம் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. உறவினர்களும் திரளாக பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிகளும் நடந்தது. 

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவில் புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் மாயமானார். அதிகாலையில் அவரது அறைக்கு சென்ற உறவினர்கள் சதீஷ்குமாரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது அறையில்  உள்ள மேஜை மீது நிச்சயதார்த்தத்தின் போது மணப்பெண் வீட்டார் அணிவித்த 9 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் இருந்தது. 

    மேலும் மண்டபத்துக்கு வெளியே சதீஷ்குமார் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் தக்கலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சதீஷ்குமார் மாயமானது பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சதீஷ்குமார் எதற்காக மாயமானார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    சதீஷ்குமார் திருமணம் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் தக்கலைக்கு தப்பி வந்து அங்கிருந்து பஸ்சில் வேறு எங்காவது சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சதீஷ்குமார் மாயமானதால் மணப்பெண் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். சதீஷ்குமாருடன் அவருக்கு நடக்க இருந்த திருமணம் நின்று போனது. திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர், வைகுண்டபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். வாலிபரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் அதே மண்டபத்தில் மணப்பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.
    மணப்பெண்ணை செல்போனில் படம் பிடித்ததை தட்டிக் கேட்ட உறவினர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 38).

    நேற்று இவரது சகோதரி மகள் ஈஸ்வரிக்கும், கல்விமடையைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் பிள்ளையார் குளத்தில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்து நேற்று இரவு மணமக்கள் முருகவேல் வீட்டுக்கு வந்தனர். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (24), செந்தில்குமார் (24), கோபி (21), முத்து (18) ஆகியோர் தங்களது செல்போனில் மணப்பெண்ணை படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இதைப்பார்த்த முருகவேல் பெண்ணை படம் பிடிக்க வேண்டாம் என 4 பேரையும் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கட்டையால் முருகவேலை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.

    இதில் படுகாயம் அடைந்த முருகவேல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஏ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகம், கோபி உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    முருகவேல் அடித்துக்கொலை செய்யப்பட்டதால் திருமண வீடுகளை இழந்து சோகமாக காணப்பட்டது.

    மத்திய பிரதேசத்தில் மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் சென்ற தலித் மாப்பிள்ளையை வலுக்கட்டயமாக இறக்கி உயர் ஜாதியினர் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    போபால்:

    வடமாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது.

    இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார் என்பவருடைய திருமணம் நடைபெற்றது. இவர், தலித் சமூகத்தை சேர்ந்தவர்.

    மணப்பெண் வீட்டுக்கு அவர் குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்குள்ள உயர் ஜாதியான தாகூர் இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    தலித் சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது என்று கூறி அவரை குதிரையில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி மணப்பெண் வீட்டுக்கு நடந்து செல்ல வைத்தனர். மேலும் உயர் ஜாதியின பெண்கள் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

    இது, தலித் சமூக மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்களும், உயர் ஜாதியினரும் மோதிக் கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
    மணப்பெண் அலங்காரத்தில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
    மணப்பெண் அலங்காரத்தில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்:

    திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் அனைவருமே, மணப்பெண் அலங்காரத்தை விரும்புகிறார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் விதத்தில் மணப்பெண் அலங்காரத்திலும் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டிருக்கின்றன. அந்த புதுமைகளை பெற்று, தங்களை முழுமையாக அழகுப்படுத்த விரும்பும் பெண்கள் கவனிக்கத்தக்க விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

    * எந்த இடத்தில் திருமணம் நடக்கிறதோ அந்த இடத்துக்கு தக்கபடி அலங்கார விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக மேக்கப் செய்து கொண்டு கோவிலில் எளிமையாக திருமணம் செய்வது முரண்பாடாக அமையும்.

    * ஏ.சி. வசதி இல்லாத இடத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தால் அதற்கு தக்கபடி மேக்கப் செய்து கொள்வது சவுகரியமாக இருக்கும்.

    * நீங்கள் எல்லா நாட்களிலும் எப்படி சிகை அலங்காரம் செய்கிறீர்களோ அதே மாதிரியான அலங்காரத்தைதான் திருமணத்தின்போதும் பின்பற்ற வேண்டும். வழக்கத்துக்கு மாறாக சிகை அலங்காரம் செய்தால் அது ஒட்டுமொத்த அழகையும் கெடுத்துவிடும்.

    * சிலருக்கு கூந்தலை விதவிதமான ஸ்டைல்களில் அலங்கரித்தால் பார்க்க அழகாக இருக்கும். சிலருக்கு சாதாரணமாக சிகை அலங்காரம் செய்தாலே அருமையாக அமைந்துவிடும். எது பொருத்தமாக இருக்குமோ அதனையே பின்பற்றலாம்.



    * திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் மேக்அப் ஒத்திகை பார்க்க வேண்டும். ஒரு தடவையாவது எந்த மாதிரியான மேக்கப் செய்வது நன்றாக இருக்கும் என்று பரிசோதித்து பார்த்தால்தான் உங்களுக்கும், அழகுக்கலை நிபுணருக்கும் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும்.

    * மேக்அப் ஒத்திகை செய்யும்போது திருமணத்திற்கு உடுத்தப்போகும் புடவை, அணியும் ஆபரணம் போன்றவற்றை உடன் எடுத்து செல்லவேண்டும். அது மேக்கப்பை முழுமைப்படுத்தும். நிறை, குறைகளை சரி செய்ய உதவியாக இருக்கும். ஜீன்ஸ், டாப் போன்ற மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொண்டு மேக்கப் ஒத்திகைக்கு சென்றால் பலன் தராது.

    * சிலருக்கு தங்கள் முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறது என்பது தெரியாது. உதடுதான் அழகாக இருப்பதாக நினைப்பார்கள். ஆனால் கண்கள்தான் வசீகரிக்கும் அழகை கொண்டிருக்கும். முகத்தில் எந்த உறுப்பு அழகாக இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதுதான் ஒப்பனைக்கு கூடுதல் அழகு சேர்க்கும்.

    * மணப்பெண் அலங்காரம் பெரும்பாலும் காலை வேளையில்தான் அதிகமாக நடக்கிறது. அவசர, அவசரமாக கிளம்பி சென்று சீக்கிரமாக மேக்கப்பை முடித்துவிடுமாறு நிறைய பேர் சொல்கிறார்கள். ஒருவேளை மேக்கப் சரி இல்லை என்றால் அதனை மாற்ற நேரம் இல்லாமல் போய் விடும். அதனால் மேக்கப் செய்ய அழகுக்கலை நிபுணருக்கு போதுமான நேரம் கொடுங்கள்.

    * ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே இளநரை பிரச்சினை இருக்கிறது. அதனை முதலிலேயே சரிபடுத்திவிட வேண்டும். திருமணத்திற்கு முந்தைய நாள் டை அடித்துக்கொள்ளலாம் என்று தள்ளிவைக்காதீர்கள்.

    * ஒருசிலர், ‘நாங்கள் பார்க்க கலராக தெரிய வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்’ என்று அழகுக்கலை நிபுணர்களிடம் சொல்கிறார்கள். அப்படி குறுக்கு வழியில் அழகை கூட்ட நினைப்பது ஆபத்தானது. இயல்பான அழகையும், நிறத்தையும் சற்று மேம்படுத்துவதில் மட்டும் அக்கறைகாட்டுங்கள். 
    ×