search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122566"

    சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய தவறான செய்தியை நீக்க கோரியும், மத்திய அரசை கண்டித்தும் நாடார் அமைப்புகள் சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் தி.நகர் ஹரிநாடார் தலைமை தாங்கினார். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன் நாடார், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தொடங்கி வைத்தார்.

    இதில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மண் பாண்ட சங்க தலைவர் சே.ம. நாராயணன், சென்னை புறநகர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் கொளத்தூர் ரவி உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள்.

    இதில் பேசிய தலைவர்கள் சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் பற்றிய அவதூறு செய்திகளை முழுமையாக நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

    உண்ணாவிரதத்தில் த.மா.கா. பொருளாளர் கோவை தங்கம், தலைமை நிலைய செயலாளர் ஜி.கே.வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கொட்டிவாக்கம் முருகன், மனோகரன், சென்னை நாடார் சங்க தலைவர் கரண்சிங் நாடார், அம்பத்தூர் விஜயகுமார், புழல் தர்மராஜ், கே.சி.ராஜா, ராகம் சவுந்தரபாண்டியன், மயூரா, டாக்டர் ஜெமிலா, சிலம்பு சுரேஷ், சாத்தான் குளம் முன்னாள் சேர்மன் ஆனந்தராஜ், சத்ரிய பெருமாள், மால் மருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    சி.பி.எஸ்.சி. பாடத்தில் நாடார் பற்றிய பொய் செய்திகளை வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசு நீக்க வேண்டும்.

    ஆன்மிகம், கல்வி, விளையாட்டு, இதழியல் துறையில் பல சாதனைகள் படைத்த பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் சேவையை போற்றும் வகையில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    சென்னையில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு குலசை எக்ஸ்பிரஸ் எனும் புதிய ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாது மணல் தொழிற் சாலைகளை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்கிட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உண்ணாவிரதம் முடிந்து ஓட்டலுக்கு சாப்பிட சென்ற போது பரோட்டா விலை தகராறில் அடிதடி-ஓட்டல் சூறையாடப்பட்டது. இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை குரோம்பேட்டையில் ஒரு கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. உண்ணாவிரதத்தில் பங்கேற்க பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் வந்தனர்.

    உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போராட்டம் முடிந்ததும் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது குரோம்பேட்டை போலீஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா சாப்பிட முடிவு செய்தனர்.

    16 வயதுள்ள சிறுவன் பஸ்சில் இருந்து இறங்கி ஓட்டலுக்கு சென்று பரோட்டா விலையை விசாரித்தார். அப்போது ஊழியர் சிவானந்தம் ஒரு பரோட்டா ரூ.25 என்றார்.

    அதற்கு அவர் எங்கள் ஊரில் ரூ.5க்கு கிடைக்கிறது. இப்படி அநியாய விலைக்கு விற்கிறீர்களே என்று வாக்குவாதம் செய்தார். இதனால் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த சிறுவன் பஸ்சுக்கு சென்று அதில் இருந்தவர்களிடம் தகவல் கூறினார்.

    பஸ்சில் இருந்தவர்கள் உடனடியாக ஓட்டலுக்கு வந்து ஊழியர்களிடம் தகராறு செய்தனர்.

    அரசியல் கட்சி தொண்டர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் மோதல் உருவானது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

    ஓட்டலில் சாப்பிட வந்தவர்கள் திடீரென்று ஓட்டலில் இருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களையெல்லாம் எடுத்து ஊழியர்கள் மீது வீசி அடித்தனர். அனைத்து பொருட்களையும் சூறையாடினர். அந்த பகுதியே போர்க்களம் போல காணப்பட்டது.

    போலீஸ் நிலையம் அருகே இருந்த கடையில் மோதல் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்றனர்.

    இதனால் மோதலில் ஈடுபட்டவர்கள் சிதறி ஓடினார்கள். அவர்களை போலீசார் துரத்தி சென்றனர். இதில் 7 பேர் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களின் பெயர் சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக்குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆவர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

    மோதல் நடந்த போது அடிதடியில் ஈடுபட்டவர்கள் ஓட்டல் ஊழியர்கள் மீது வென்னீரை தூக்கி ஊற்றினார்கள். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசு தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க பாரதிய ஜனதாவினர் முடிவு செய்து உள்ளனர். #Sabarimala #BJP
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது சபரிமலையில் மண்டல பூஜைக்கால வழிபாடுகள் நடந்து வருகிறது.

    வழக்கமாக மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சபரிமலையில் நடைபெறும் போராட்டம், பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடி காரணமாக தற்போது அங்கு வருகைதரும் பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சபரிமலை கோவிலுக்கு காணிக்கை, பிரசாதம் விற்பனை போன்றவை மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்துவிட்டது.

    சபரிமலையில் அய்யப்ப பக்தர்களுடன் சேர்ந்து பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்துவதால் இன்று வரை சபரிமலையில் இளம்பெண்கள் தரிசனம் செய்ய முடியவில்லை. மாநில அரசு சபரிமலையில் போலீசை குவித்து பாதுகாப்பை பலப்படுத்திய போதும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த முடியாத நிலையே உள்ளது.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி தனது போராட்டக்களத்தை சபரிமலையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    அதன்படி வருகிற 3-ந்தேதி காலை இந்த உண்ணாவிரத போராட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தொடங்குகிறது. முதல் கட்டமாக 15 நாட்கள் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலையில் பக்தர்களிடம் போலீஸ் கெடுபிடியை கைவிட வேண்டும், 144 தடையை நீக்க வேண்டும், சபரிமலை சென்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பக்தர்களிடம் போலீசார் அவமரியாதையாக நடந்து கொண்டதை கண்டித்தும், பாரதிய ஜனதா பொதுச் செயலாளர் சுரேந்திரன் உள்பட கட்சியினர் மீது போலீசார் போட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சபரிமலையில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தும், சபரிமலையை பாதுகாக்க கோரியும் மாநிலம் முழுவதும் 1 கோடி பேரிடம் கையெழுத்து பெறவும் இயக்கம் நடத்த பாரதிய ஜனதா திட்டமிட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சபரிமலை பிரச்சனைக்காக பாரதிய ஜனதா போராட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாரதிய ஜனதா மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை கூறும்போது சபரிமலையில் நடைபெறும் போராட்டத்தை அய்யப்ப பக்தர்கள்தான் நடத்துகிறார்கள். அவர்களுக்கு உறுதுணையாக பாரதிய ஜனதா பின்னணியில்தான் செயல்பட்டு வருகிறது. இனிதான் எங்களது போராட்டம் எப்படி இருக்கும் என்பதை மாநில அரசு பார்க்கப்போகிறது என்றார். #Sabarimala #BJP
    ஊதிய உயர்வு ஒப்பந்த ஆணை வெளியிட வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    ஊதிய உயர்வு ஒப்பந்த ஆணை வெளியிட வலியுறுத்தி நேற்று கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்த ஆணையை வெளியிடக் கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வைரப்பன் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் சர்வேசன், தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் இ.அருணாசலம் தொடங்கி வைத்தார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநிலத் தலைவர் ஏ.சவுந்திரராஜன், தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு.சண்முகம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    உண்ணாவிரதத்தின் போது, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் வருகிற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கூட்டுறவு வங்கி ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போகின்றனர். இந்த போராட்டம் அதோடு நின்றுவிட போவது இல்லை. தமிழகத்தில் உள்ள வணிக வங்கி ஊழியர்கள் 50 ஆயிரம் பேர் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றார். #tamilnews
    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    அம்பேத்கருக்கு ஈரோடு மாவட்டத்தில் முழு உருவ சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் அரங்க முதல்வன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அக்பர் அலி, வீர துரைசாமி, சதாசிவம், சரவணன், வெற்றிச்செல்வன், பெரிய கலையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் மண்டல அமைப்புச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பழனிச்சாமி, மனித நேய மக்கள் கட்சியின் சித்திக், தமிழ் நாட்டு மக்கள் இயக்க செல்வம் உள்பட பல்வேறு கட்சி சேர்ந்த பிரதிநிதிகள் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். #tamilnews
    கத்தி பட கதை விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குறும்பட இயக்குநர் ராஜசேகர், சர்கார் படத்துக்கு தடை கேட்டுள்ளார். #KaththiStory #ARMurugadoss #Vijay
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம் தன்னுடைய கதையை காப்பி அடித்து எடுக்கப்பட்டு இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் அளித்திருந்தாரர்.

    புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க நிர்வாகி டைரக்டர் பாக்யராஜும் அதனை உறுதி செய்ததால் வழக்கு ஐகோர்ட்டுக்கு சென்றது. கதைக்கருவை வருண் முதலில் பதிவு செய்திருந்ததை முருகதாஸ் ஒப்புக்கொள்ளவே வழக்கில் சமரசம் ஏற்பட்டு முடித்துக் கொண்டனர்.

    சர்கார் பட பிரச்சினை தீர்ந்தாலும், கத்தி பட சர்ச்சை முருகதாசை தொடர்கிறது. குறும்பட டைரக்டர் ராஜசேகர், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் டைரக்டர் முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உதவி டைரக்டர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார்.



    அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன்.

    இந்நிலையில் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படத்தை முருகதாஸ் எடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை.

    பிறகு எனது வக்கீல் மூலம் முருகதாஸ், விஜய், லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. லைகா நிறுவன தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது.

    ஆனால் முருகதாசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன்.

    எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார்.



    எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

    தனக்கான நியாயம் கிடைக்கும் வரை சர்கார் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் அளித்துள்ள புகார் மனு அடிப்படையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் இன்று காலை 10 மணி முதல் 5 வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

    கத்தி வெளியான சமயத்தில் டைரக்டர் மீஞ்சூர் கோபியும் இதே புகாரை கூறினார். அந்த வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. #KaththiStory #ARMurugadoss #Vijay #Rajasekar #HungerStrike

    புழல் ஜெயிலில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.
    செங்குன்றம்:

    திருவள்ளூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் செல்வகுமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சேலம் வந்தபோது அவரை கொல்ல முயன்ற வழக்கும் போலீஸ் பக்ருதீன் மீது உள்ளது. புழல் ஜெயிலில் தனி அறையில் போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ளார். புழல் ஜெயிலில் போலீஸ் பக்ருதீன் அறையில் இருந்த டி.வி., ரேடியோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    சிறைத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனை என்ற பெயரில் தன்னை அச்சுறுத்துவதாகவும் புகார் கூறி வந்தார். இதை கண்டித்து போலீஸ் பக்ருதீன் நேற்று மதியம் முதல் புழல் ஜெயிலில் திடீரென்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 2-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடித்தது.

    மத்திய மாநில அரசுகளால் வணிகர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வருகிற 23-ந்தேதி வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    மத்திய மாநில அரசுகளால் வணிகர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் வருகிற 23-ந்தேதி வள்ளுவர் கோட்டம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    இதுபற்றி ஆலோசிக்க தென் சென்னை கிழக்கு மாவட்ட தொகுதி கூட்டம் பல்லாவரத்தில் மாவட்டத் தலைவர் என்.டி.மோகன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் தேசிகன், பொருளாளர் சின்னவன் வரவேற்றனர். இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    வருகிற 23-ந்தேதி வள்ளூவர் கோட்டத்தில் பேரமைப்பு நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தென் சென்னை கிழக்கு மாவட்டத்தில் இருந்து 1000-த்துக்கும் அதிகமான வியாபாரிகள் கலந்து கொள்வார்கள்.

    பல்லாவரத்தில் மேம்பாலம் பணிகள் நடப்பதால் போக்குவரத்தை திருப்பி விட்டு உள்ளதால் பொது மக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    அனகாபுத்தூர் பம்மல் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே பல்லாவரம் சிக்னலை திறந்து மார்க்கெட் ரோடு இந்திரா காந்தி ரோட்டை இருவழி பாதையாக்கி போலீசாரை சிக்னலில் நிறுத்தினால் போக்குவரத்தை ஒழுங்காக சீர்படுத்த முடியும். மேற் கண்ட தீர்மானங்கள் நிறைவேறின.

    தொகுதி கூட்டத்தில் மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா மண்டல தலைவர் ஜோதி லிங்கம், ராஜ்குமார், வி.பி.மணி, ஆனந்த் குமார், ஆர்.ஜெயபாண்டியன், குமார், சுந்தரபாண்டியன், மீனாட்சி சுந்தரம், கோமஸ், கோவில்துரை, கே.கே.பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் ஜெயபாண்டியன், ஆறு முகம், செல்வம், சிவா, தங்கராசு, துரை, செந்தில் குமார், பி.டி.சேகர், கணேச பாண்டியன், வெற்றி, காளிதாஸ், முனியாண்டி, கர்ணன், கந்தன்சாவடி, வில்சன், சுப்பிரமணி, பல்லாவரம் ஜோசப் பிரதீப் மற்றும் 13 தொகுதி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சையில் அரசு கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மண்டல அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தஞ்சை மண்டல தலைவர் ராஜராஜன், செயலாளர் கோவிந்தராசு, துணைத்தலைவர் நிலாவழகன், இணை செயலாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதப்போராட்டத்தில், கிராமப்புற கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க விரைவில் ஆசிரியர் நியமிக்க வேண்டும். தர ஊதியம் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை பெறுவதற்கான அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். எம்.பில், பி.எச்டி முடித்தவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    2015-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழு தகுதிச்சான்று, பணிவரன்முறை ஆணை வழங்க வேண்டும். உறுப்புகல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அரசாணை வெளியிட வேண்டும். அரசு கல்லூரிகளின் பாதுகாப்புக்கென அறிவிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீட்டு ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம், ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் கிட்டு, பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், மண்டல செயலாளர் சேவியர்செல்வகுமார், பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் இளமுருகு, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கோதண்டபாணி ஆகி யோர் கலந்து கொண்டு பேசினர்.

    முடிவில் தஞ்சை மண்டல பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
    அகர்வால் மரணத்தை தொடர்ந்து கங்கையை சுத்தப்படுத்த கோரி மேலும் ஒரு சாமியார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #GopalDas #Ganga #GDAgarwal
    ரிஷிகேஷ்:

    உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கை நதியின் குறுக்கே அணைகள், தடுப்பணைகள், நீர் மின் நிலையங்கள் கட்டுவதால் நதியின் போக்குமாறுகிறது என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும், ஆன்மீகவாதியுமான ஜி.டி. அகர்வால் 4 மாதங்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்டார்.

    அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சாமியார் தலைநகர் ரிஷிகேஷில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் பெயர் கோபால்தாஸ்.

    36 வயதாகும் இவர் இளமையிலேயே துறவியானார். பிரபல சாமியார் அரவிந்த் ஹத்வாலின் சீடர் ஆவார்.

    கங்கையில் கால்வாய்கள், சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் 24-ந்தேதி முதல் ரிஷிகேஷில் கங்கை நதிபாயும் பாக். மலைப்பகுதியில் உண்ணாவிரதம் தொடங்கினார்.

    நேற்று அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று சாமியார் கோபால்தாசை ஆம்புலன்சில் ஏற்றி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் முழு சிகிச்சை அளித்து வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக வலுக்கட்டாயமாக உணவு சாப்பிட வைக்கும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். #GopalDas #Ganga #GDAgarwal
    ஆவடி மற்றும் புதூரில் வணிகர்களுடன் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார். 23-ந்தேதி நடைபெற உள்ள உண்ணாவிரதத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #vikramaraja #gst

    சென்னை:

    சில்லறை வணிகத்தில் அந்திய முதலீடு, உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி., பிளாஸ்டிக் தடை சட்டம் ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 23-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடக்க உள்ளது. இது தொடர்பாக வட சென்னை மேற்கு மாவட்டம் சார்பு சங்கங்களின் தொகுதி கூட்டம் மாநிலத் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தலைமையில் ஆவடியிலும், புதூரிலும் நடந்தது.

    மாவட்டத் தலைவர் என்.ஜெயபால், மாவட்டச் செயலாளர் அம்பத்தூர் ஹாஜி கே.முகம்மது, மாநில துணைத் தலைவர் அய்யார் பவன் அய்யாத்துரை, ஆவடி கூட்டமைப்பு தலைவர் ஆர்.கே.எம். துரைராசன், ஆர்.வேலுச்சாமி, தங்கதுரை, மனோகரன், குருசாமி, திருமாறன், மாறன், முகமது ஷெரீப், மகாலிங்கம், பொன் பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

    உண்ணா விரதத்தில் மேற்கு மாவட்ட அடையாளமாக மஞ்சள் துண்டு அணிந்து 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. மாவட்டத் தலைவர் ஜெயபால் தலைமையில் மாவட்ட செயலாளர் ஹாஜி முகம்மது சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறார். #vikramaraja #gst

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ் கொலையாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி கோவில்பட்டியில் காங்கிரஸ் வக்கீல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். #RajivGandhi #Perarivalan
    கோவில்பட்டி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அக்கறை காட்டி வரும் தமிழக அரசினை கண்டித்தும், ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சிறப்பு சட்டம் இயற்றி உடனடியாக தூக்கிலிட வேண்டும்,

    மேலும் அவர்களின் விடுதலைக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி வக்கீல் பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி என்பவர் காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தினை தொடங்கினார்.

    அவர் தனது உடலில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் ராஜீவ் காந்தி படத்தினை மாட்டியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த அய்யலுச்சாமியை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #RajivGandhi #Perarivalan
    ×