search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர்"

    நாமக்கல்லில் கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த பெயிண்டருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கியது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாரிகங்காணி தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறை ஒன்றில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி நாமக்கல் அருகே உள்ள கொமரகவுண்டனூரை சேர்ந்த 17 வயது நிரம்பிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவர் மீது நாமக்கல் மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுசீலா வாதாடினார். இவ்வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜ்குமாரை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
    குலசேகரம் அருகே பெயிண்டருடன் விதவை பெண் போலீசில் தஞ்சம் அடைந்தது குறித்து அவரது குழந்தைகளை தர மறுத்து உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
    குலசேகரம்:

    குலசேகரத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோய் (வயது 41). பெயிண்டர்.

    ஜோய்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தினமும் இவர் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். இவரது வீடு அருகே வசித்து வந்தவர் சுபி (30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    சுபியின் கணவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் சுபி, தன் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    பெயிண்டர் ஜோய், தினமும் வேலைக்கு செல்லும் போது சுபியின் வீட்டை தாண்டி செல்ல வேண்டும். அப்போது இருவரும் சந்தித்து பேசிகொள்வது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

    இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று ஜோய்யும், சுபியும் கருதினர். எனவே அவர்கள் இருவரும் நேற்று குலசேகரம் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் மேஜர் என்பதால், முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே பெயிண்டர் ஜோயுடன், சுபி போலீசில் தஞ்சம் அடைந்த தகவல் சுபியின் உறவினர்களுக்கு தெரியவந்தது.

    அவர்கள் உடனே சுபியின் வீட்டுக்கு சென்று அவரது இரண்டு குழந்தைகளையும் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். போலீஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய சுபி, குழந்தைகளை காணாது அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவர்கள் உறவினர் வீடுகளில் இருப்பதை அறிந்து அவர்களை தேடி சென்றார். அப்போது உறவினர்கள், சுபியிடம் குழந்தைகளை கொடுக்க மறுத்து தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட் டது.

    இதையடுத்து சுபி, குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கேட்டு போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். #tamilnews
    மகளை அடித்த ஆத்திரத்தில் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்த பெயிண்டரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குணவேல் (வயது 32). இவர் பெங்களூரில் ஒரு தனியார் போர்வெல் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாரதா (28). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில நாட்க ளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் குணவேல் மனைவியை அடித்துள்ளார்.

    இதனால் மனமடைந்த சாரதா கோபித்துக் கொண்டு கணபதி எப்.சி.ஐ.சாலையில் உள்ள தனது தந்தை தியாகராஜன் வீட்டுக்கு சென்றார். மகளை அடித்ததால் குணவேல் மீது மாமனார் தியாகராஜன் ஆத்திரமடைந்தார்.

    நேற்று இரவு குணவேல் வீட்டுக்கு சென்ற தியாகராஜன் மகளை அடித்தது ஏன்? என கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தியாகராஜன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குணவேலை சரமாரியாக குத்தினார். இதில் குணவேலின் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் தியாகராஜன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்து சரவணம்பட்டி போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தியாகராஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே பெயிண்டரை கொல்ல முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.

    இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    குலசேகரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்தார். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே செருப்பாலூர் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 27). இவர் பெயிண்டராக வேலை செய்துவந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் சஜிகுமார். இவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார்.

    நேற்று மாலை ஸ்ரீகண்டனும், சஜிகுமாரும் ஒரே மோட்டார் சைக்கிளில் செருப்பாலூரில் இருந்து குலசேகரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிளை சஜிகுமார் ஓட்டினார். ஸ்ரீகண்டன் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

    அவர்கள் குலசேகரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே குலசேகரத்தில் இருந்து செருப்பாலூர் நோக்கி கார் ஒன்று வேகமாக வந்தது. எதிர்பாராத விதமாக அந்த காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீகண்டன், சஜிகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்தை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் படுகாயம் அடைது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

    இதில் சஜிகுமார் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஸ்ரீகண்டன் நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஸ்ரீகண்டன் இறந்துவிட்டார். சஜிகுமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்போது விபத்து நடந்து உள்ள பகுதியில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

    ×