என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜிகேவாசன்"
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் காவிரி நதியின் குறுக்கே தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி அணை கட்டும் முயற்சிக்கு மத்திய அரசு ஒரு போதும் துணை போகக்கூடாது. குறிப்பாக மேகதாது அணை திட்டம் தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த 18-ம் தேதியன்று தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி கர்நாடக அரசு காவிரி நதிநீர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக முடிவு எடுப்பதை மத்திய அரசு ஏன் அனுமதி அளிக்கிறது.
இந்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கே முதலில் மத்திய அரசு அனுமதி அளித்திருக்கக் கூடாது. ஏனென்றால் மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு முயற்சியிலும் கர்நாடக அரசு ஈடுபடுவது ஏற்புடையதல்ல.
எனவே மத்திய அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டிப்போடு தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.
கர்நாடக அரசின் தொடர் வீண்பிடிவாதப் போக்கை மத்திய அரசு முறியடிக்காமல் பிரச்சனையை வேடிக்கைப் பார்ப்பது நியாயமில்லை. இப்பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் நடத்துகிறது. எனவே கர்நாடக அரசு தன்னிச்சையாக தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மேகதாது பகுதியில் அணை கட்ட மத்திய அரசு ஒரு போதும் அனுமதி அளிக் கக்கூடாது.
மேலும் மேகதாது அணை கட்டுவது தொடர்பான கர்நாடக அரசின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தீவிர நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு தமிழக விவசாயிகள், பொது மக்கள் ஆகியோருக்கு உரிய காவிரி நதி நீர் தடையில்லாமல் கிடைப்பதற்கு வழி வகைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MekedatuDam #GKVasan
சென்னை:
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உட்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்த்தபோது மனம் மிகவும் வேதனை அடைந்தது.
பல மாவட்டப்பகுதிகளில் நகரம் முதல் குக்கிராமம் வரை மின்சாரம் இல்லாமல் அன்றாட வாழ்க்கை இருளில் மூழ்கியுள்ளது.
விவசாயிகள், மீனவர்கள் போன்ற பல தரப்பட்ட மக்களும் இப்புயலினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீரமைப்புப் பணிகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இதற்காக மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்களை வர வழைத்து நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தலாம். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், சேதமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் 25 ஆயிரம் ரூபாயும், முறிந்து போன தென்னை மரம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், சாய்ந்து போன வாழைக்கு ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கவேண்டும்.
நெல்லுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாயும், கரும்புக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாயும், பிற பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 30 அயிரம் ரூபாயும், சேதமடைந்த, இடிந்து போன வீடுகளுக்கு குறைந்த பட்சம் 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக கொடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளுக்கும், வலைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேதத்திற்கேற்ப நிவாரணத்தொகையை அதிக அளவில் கொடுத்தால் தான் அவர்களால் மீன் பிடித்தொழிலில் தொடர்ந்து ஈடுபட முடியும்.
நிவாரணத் தொகையை தமிழக அரசு உடனடியாக கொடுக்க வேண்டும். புயலின் பாதிப்பை முறையாக, சரியாகக் கணக்கெடுத்து அதற்கேற்ப நிவாரணத்தொகையை மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டியது தமிழக அரசின் கடமை.
இயல்பு நிலை திரும்பும் வரை சீரமைப்புப்பணிகளை துரிதப்படுத்தி, நிவாரணப் பொருட்களை தங்கு தடையின்றி வழங்கி, இழப்பீட்டுக்கான தொகையையும் அதிகமாக கொடுத்து மக்களை துயரத்தில் இருந்து மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Storm #Gajastorm
திருச்சி:
திருச்சியில் இன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புனித அஸ்தி தமிழகத்தின் பிரதான நதியான காவிரியில் கரைக்கப்பட்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை உள்ள இயற்கையினை நேசித்தவர் வாஜ்பாய். ஓடும் ஆற்றினை புனிதம் என கருதினார். சுதந்திரத்திற்கு பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர்.
சென்னையில் வருகிற 28ந்தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடை பெறுகிறது. 1ந்தேதி முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளோம் என்றார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே.வாசன் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என கூறினார். #gkvasan #mukkombu #tngovt
திண்டுக்கல்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.
ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்