search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு வீரர்கள் திரும்பும் வழியில் பனிச்சரிவு.
    • பனிச்சரிவில் சிக்கியுள்ள 28 பேர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரம்.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் மலையேறுதல் பயிற்சிக்கான அரசு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சேர்ந்த 34 பயிற்சி மலையேறு வீரர்கள், 7 பயிற்சியாளர்கள் என மொத்தம் 41 பேர் இமயமலையின் திரவுபதி கா தண்டா-2 சிகரத்தில் இருந்து பயிற்சியை முடித்துக் கொண்டு முகாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    அப்போது, திடீரென அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் அவர்கள் அனைவரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்த இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் பனிச்சரிவில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


    இந்த பனிச்சரிவில் சிக்கிய சிலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் இன்னும் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


    இந்த துயர நிகழ்விற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். உத்தர்காசியில் ஏற்பட்ட பனிச்சரிவு சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது, இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். உள்ளூர் நிர்வாகம், தேசிய பேரீடர் மீட்புக்குழு, இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் ராணுவக் குழுக்கள் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் உடனடியாக ஈடுபட்டு வருகின்றன, இவ்வாறு அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் உத்தரகாண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்ற செய்தி வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கல், காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக திரும்பவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மைசூர் வருகை.
    • 6ந் தேதி ராகுல் காந்தியுடன் நடை பயணத்தில் சோனியா பங்கேற்கிறார்.

    மாண்டியா:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயண பாத யாத்திரையை கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இன்று மாலை பாண்டவர் புரத்தில் அவரது நடைபயணம் நிறைவடைந்தது. அங்கு பேசிய ராகுல்காந்தி, நாட்டிலேயே அதிக ஊழல் நிறைந்த அரசாக கர்நாடகா பாஜக அரசு உள்ளது என்றார்.

    சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரிடம் இந்த அரசு 40% கமிஷன் வசூலிக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து கர்நாடக ஒப்பந்ததாரர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும்,ஆனால் பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 


    முன்னதாக மைசூரில் உள்ள சுத்தூர் மடத்திற்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதி சிவராத்திரி ஸ்ரீ தேசிகேந்திர சுவாமிகளிடம் ஆசி பெற்றதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் அவரது தாயார் சோனியா காந்தியும், சகோதரி பிரியங்கா காந்தியும் கலந்து கொள்கின்றனர். இதற்காக சோனியா காந்தி மைசூர் விமான நிலையத்திற்கு இன்று வந்தார். 


    அவரை அம்மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சிவகுமார் வரவேற்றார். 6ந் தேதி மாண்டியாவில் நடைபெறும் பாத யாத்திரையில் சோனியாகாந்தியும் பங்கேற்பார் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல.
    • பாஜக தலைமையிலான மத்திய அரசு பணக்கார இந்தியர்களுக்கானது.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் குறித்து மத்திய அரசை ராகுல்காந்தி சாடி உள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    பாஜக தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கானது அல்ல, ஐந்து முதல் ஆறு பணக்கார இந்தியர்களுக்கானது. அவர்கள் விரும்பும் எந்த வியாபாரத்தையும் ஏகபோகமாக நடத்துகிறார்கள்.

    இதுவரை இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை இந்தியாவுக்கு நாங்கள் ( காங்கிரஸ்) ஒருபோதும் வழங்கவில்லை. இன்று எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வை நாங்கள் இந்தியாவிற்கு வழங்கவில்லை. அரசின் கொள்கைகள் நாட்டின் பொருளாதார நிலையை மோசமாக்கியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு படிவங்கள், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கிடைக்கும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

    30-ந் தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1-ந் தேதி, வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ந் தேதி கடைசிநாள். அன்று மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். அக்டோபர் 17-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். 19-ந் தேதி, ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதால், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் மூத்த எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி இயல்பான தலைவர் என்றும், அவருக்கு எந்த பதவியும் தேவையில்லை என்றும் மேற்கு வங்க காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    ராகுல்காந்தி போட்டியிட மறுத்து விட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவதாகவும், இனிமேல் ராகுல்காந்தி குடும்பத்தை சிறுமைப்படுத்தும் முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    காங்கிரஸில் ஜனநாயகம் உள்ளது, அதனால் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது என்றும், ஆனால் பாஜகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்ததா என கேள்வி எழுப்பிய சவுத்ரி, அந்த கட்சியின் தலைவர் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டார் என குறிப்பிட்டார்.

    • வேலை கேட்கும் இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்.
    • 16 கோடி வேலை வாய்ப்புகள் ஏன் உருவாக்கப் படவில்லை.

    புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிறுத்தை இன்று இந்திய மண்ணுக்குத் திரும்பியுள்ளது, 8 சிறுத்தைகள் வந்து விட்டன. சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழா நமது பாரம்பரியத்தை மீட்பதற்கு மட்டுமல்ல, இப்போது சிறுத்தைகள் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்திருப்பதற்கும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், எட்டு சிறுத்தைகள் வந்து விட்டன, 8 ஆண்டுகளில் 16 கோடி வேலை வாய்ப்புகள் ஏன் உருவாக்கப் படவில்லை என்பதை அவர் (பிரதமர் மோடி) சொல்ல வேண்டும், வேலை கேட்கும் இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையின்மை தினமாக அறிவித்த காங்கிரஸ் கட்சி, வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வழங்குவதாக மோடி, வாக்குறுதி அளித்திருந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் ஏழு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், 22 கோடி பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. 

    • இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை.
    • யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி இப்போது பயனற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை பயணம், கேரளாவில் 18 நாட்கள் நடைபெறுகிறது, உத்தரப் பிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. கர்நாடகாவில் 19 நாட்கள் நடைபெறுகிறது என்றால், அது குறித்து ராகுல் காந்தியிடம் கேளுங்கள், அவர் பதில் அளிப்பார்.

    நாங்கள் ஏன் காங்கிரஸ் கட்சி மீது கோபப்பட வேண்டும்? ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது திட்டங்களை நிறைவேற்ற ஜனநாயக உரிமை உள்ளது. இதில் கோபப்படுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் எதுவும் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி பயனற்றது.

    இது மக்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தலுக்கு முதலில் மாநில அளவில் ஒன்றுமை உருவாக்கப்படும். அதிகபட்சமாக மதச்சார்பற்ற ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற சிபிஎம் முயற்சி செய்து வருகிறது.

    2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வாஜ்பாய்க்கு எதிராக யார் என்ற கேள்வி எழுந்தது.கடைசியில் அவருக்கு எதிராக, பாஜக அல்லாத ஆட்சி அமைந்தது, அது 10 ஆண்டு நீடித்தது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது அவசியம், அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆர்எஸ்எஸ்-ஐ தடுக்க காங்கிரஸ் தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது.
    • உண்மையான கொள்கைகள் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வளர்ந்தது.

    ராய்பூர்:

    ஆர்.எஸ்.எஸ். சீருடையான காக்கி டிரவுசரில் தீப்பிடிக்கும் படத்தை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நாட்டை வெறுப்புச் சூழலில் இருந்து விடுவித்து, பாஜக-ஆர்எஸ்எஸ் செய்த சேதங்களை அகற்ற வேண்டும், அந்த இலக்கை படிப்படியாக அடைவோம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் மூன்று நாள் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்ட நிறைவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் இணைப் பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளதாவது:

    இந்திய மக்களை இணைக்கும் வேலையை யாராவது செய்தால் அது நல்ல விஷயம்தான், ஆனால் வெறுப்பின் மூலம் எப்படி இணைவது? உண்மையான அர்த்தத்தில் மக்களை இணைக்கும் கூறுகளை அங்கீகரித்து நாட்டை ஒன்றிணைக்க அவர் (ராகுல்காந்தி) முயற்சித்தால், வரவேற்கப்படுவார். இல்லையெனில், நீங்கள் வெறுப்பின் மூலம் மக்களை ஒன்றிணைக்க முயற்சித்தால், அது ஒரு அரசியல் வித்தையாக இருக்கும். மக்களை இணைக்கும் நோக்கத்திற்கு உதவாது.

    அவர்கள் (காங்கிரஸ்) நீண்ட காலமாக (ஆர்.எஸ்.எஸ். மீது) வெறுப்பை வளர்த்து வருகின்றனர். அவரது ( ராகுல் காந்தி) முன்னோர்கள் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்.) அவமதித்துள்ளனர். அதை தடுக்க தங்கள் முழு பலத்தையும் செலுத்தினர். இரண்டு முறை தடை விதித்தனர். ஆனால் எங்களிடம் உண்மையான கொள்கைகள் இருப்பதால் சங்கம் தொடர்ந்து வளர்ந்து வந்தது. அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், சங்கம் தொடர்ந்து வளர்ந்தது. 


    காங்கிரஸால் ட்வீட் செய்யப்பட்ட தீயில் எரியும் காக்கி உடை படம் அவர்களின் வெறுப்பை பிரதிபலிக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இந்தியாவின் ஆன்மீக அடையாளம் இந்துத்துவா என்று அழைக்கப்படுகிறது. இந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை வெளியீடு
    • ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலை நிறுத்த வும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலை வர் ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டு உள்ளார்.

    7-ந்தேதி பொதுக்கூட்டத் துடன் குமரியில் தொடங்கிய பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், டாக்டர் பினுலால்சிங், நவீன்குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ராகுல்காந்தியை பெருந்திரளாக கூடி வரவேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 13 மணி நேரத்தில் 55 கிலோ மீட்டர் பயணம்
    • எளிமையான பழக்கத்தால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொள்கிறார்.

    கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார்.குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக அவர் பாத யாத்திரை மேற்கொண்டார்.55 கிலோ மீட்டர் தூரத்தை 13 மணி நேரத்தில் கடந்து நேற்று கேரளா எல்லை பகுதிக்கு ராகுல் காந்தி சென்றார்.

    இன்று காலை ராகுல் காந்தி குமரி மாவட்ட எல்லையான செருவார கோணத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்ட போது சிறுவர்கள் முதல் பெரிய வர்கள் வரை அவரை கண்டுகளித்தனர்.

    சாலையின் இரு புறமும் நின்று கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விளையாட்டு வீராங்கனைகள், பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பி னருடனும் ராகுல் காந்தி செல்பி எடுத்து மகிழ்ந்தார். தொண்டர்களையும் அவர் உற்சாகப்படுத்தினார். தினமும் ஓய்வு நேரங்களில் ஒவ்வொரு தரப்பு மக்க ளையும் சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்ட றிந்தார். விவசாயிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவப் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் ராகுல் காந்தியிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அவரும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பினரிடமும் உறுதி அளித்து உள்ளார்.

    100 நாள் வேலைத்திட்ட பெண்களிடம் கலந்துரை யாடிய ராகுல்காந்தி அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசினார்.இது பார்ப்பவர்களை கவரும் வகையில் இருந்தது. பாத யாத்திரையின்போது சாலை யோர டீக்கடை ஒன்றிலும் டீ குடித்து அசத்தினார். இளநீர் பருகியும் தனது தாகத்தை தீர்த்துக் கொண்டார்.

    குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் ராகுல் காந்தியை சந்தித்து உள்ள னர். மாவட்ட எல்லையான தலச்சன்விளையில் குமரி மாவட்ட பாத யாத்திரையை நிறைவு செய்து பேசிய ராகுல் காந்தி தமிழக மக்கள் மீது தனக்கு தனி ஈடுபாடு உண்டு என்றும், உங்களை விட்டு பிரிந்து செல்வது தனக்கு வருத்தமாக இருப்பதாகவும் பேசியது தொண்டர்களை மட்டுமின்றி பொது மக்க ளையும் கவர்ந்தது.

    ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையானது 2024 பாராளுமன்ற தேர்தலை நோக்கியே மேற்கொண்டு உள்ளதாக அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர். ஏற்க னவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்து வருகிறது. பத்மநாபபுரம் தொகுதி காங்கிரஸ் கூட்டணியான தி.மு.க. வசம் உள்ளது.

    2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் தனது செல்வாக்கை நிரூ பிக்க ராகுல் காந்தியின் பாதயாத்திரை ஒரு உத்தி யோகமாக இருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராகுல்காந்தியின் பாத யாத்திரையானது காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்துள்ளது.

    • சர்ச்சைக்குரிய பாதிரியாருடன் ராகுல் சந்திப்பு குறித்து பாஜக கடும் விமர்சனம்.
    • பாதிரியாருடனான ராகுல் சந்திப்பில் எந்த தவறும் இல்லை என காங்கிரஸ் விளக்கம்.

    இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டம் புலியூர் குறிச்சியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றார். அங்கிருந்த பாதிரியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது இயேசுநாதர் கடவுளின் வடிவமா, இது சரிதானா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, இயேசுவே உண்மையான கடவுள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடவுள் அவரை ஒரு உண்மையான மனிதராக வெளிப்படுத்துகிறார், சக்தியை போல் அல்ல, அதனால் நாம் அவரை (ஏசுநாதரை) மனிதராக பார்க்கிறோம் என்றார். 

    ஏசுநாதர் உண்மையான கடவுள் என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ராகுல் காந்தி மற்றும் ஜார்ஜ் பொன்னையா இடையேயான உரையாடல் குறித்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, இது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இதற்கு முன்பு இந்த மனிதர் (ஜார்ஜ் பொன்னையா) இந்து குறித்த வெறுப்பு கருத்துக்களை கூறியதற்காக கைது செய்யப்பட்டார், பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக் கூடாது என்பதற்காக நான் காலணிகள் அணிகிறேன் என்று அவர் கூறியிருந்தார் என ஷெஹ்சாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் ராகுல்காந்தி சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ராகுல் காந்தி தனது பாதயாத்திரையின் போது பலரை சந்தித்து உரையாடுவார், அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.  

    • நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சியால் பாடுபட முடியாது.
    • வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே காங்கிரசால் செயல்பட முடியும்.

    ஜோத்பூர்:

    கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் குறித்து பாஜக கடும் விமர்சனங்களை வைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    இந்தியா குறித்து பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையை காங்கிரஸ்காரர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசமே இல்லை என்று ராகுல் கூறியிருந்தார். இதை எந்த புத்தகத்தில் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் வாழும் தேசம் இது. இந்த தேசத்திற்காக பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.

    தற்போது பாரதத்தை இணைக்க வெளிநாட்டு உடை அணிந்து ராகுல் காந்தி சென்றுள்ளார், ஆனால் அவர் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்காக காங்கிரஸால் பாடுபட முடியாது, (சிலரை) திருப்திப்படுத்தவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் மட்டுமே (காங்கிரசால்) செயல்பட முடியும்.

    • முளகுமூட்டில் தொடங்கி களியக்காவிளை சென்றடைகிறார்
    • வழி நெடுக செல்பி எடுத்து தொண்டர்கள் உற்சாகம்

    நாகர்கோவில்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு உள்ளார்.

    கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி பாதயாத்திரை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று இரவு முளகுமூடு பகுதியில் தங்கினார். இன்று 4-வது நாளாக முளகுமூட்டில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். முன்னதாக பள்ளி வளாகத்தில் ராகுல் காந்தி தேசிய கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரை யாடியதுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    இதைத்தொடர்ந்து காலை 7.05 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. வெள்ளை சீருடையுடன் தேசிய கொடியை ஏந்தியவாறு நிர்வாகிகள் முன் சென்றனர். தொடர்ந்து செண்டை மேள கலைஞர்கள் முன் செல்ல ராகுல்காந்தி நடைபயணம் மேற்கொண்டார்.

    மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி திக் விஜய் சிங், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், விஜய்வசந்த் எம்.பி., ஜோதிமணி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோரும் உடன் வந்தனர்.முளகுமூடு பகுதியில் ஏராளமான சிலம்பாட்ட கலைஞர்கள் ராகுலை வரவேற்க காத்திருந்தனர். அவர்கள் ராகுல்காந்தியை கண்டதும் சிலம்பம் ஆடினர்.

    அதனை ரசித்த ராகுல் காந்தி பின்னர் சிலம்ப கலைஞர்களை அருகில் அழைத்து பாராட்டினார். இதுபோல சாலையோரம் நின்ற சிறுமி ஒருவரை அழைத்து ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

    ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்ட சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மாடிகளில் இருந்தும் பெண்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை பார்த்து கை அசைத்தனர். ராகுல்காந்திக்கு ஒவ்வொரு சந்திப்பிலும் செண்டை மேளம், சிங்காரி மேளம், மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி பயணம் செய்த பாதையோரம் ஏராள மான பள்ளி மாணவிகளும் அவரை பார்க்க காத்திருந்தனர். ராகுல்காந்தி வந்ததும் அவர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். அவர் களில் சிலர் செல்போன்களை உயர்த்திக் காட்டி செல்பி எடுக்க வேண்டுமென்று கேட்டனர்.

    அவர்களை பார்த்து புன்முறுவல் செய்த ராகுல்காந்தி, பாதுகாப்பு அரணை தாண்டி சென்று மாணவிகளுடன் செல்பி எடுத்துக் கொண்டார். விருப்பம் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாணவிகள் உற்சாகம் அடைந்தனர்.

    இன்று காைல முளகுமூட் டில் தொடங்கிய ராகுலின் பாத யாத்திரை மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியில் காலை 9.10 மணிக்கு சென்றடைந்தது. அங்கு ஓய்வு எடுக்கும் ராகுல்காந்தி இன்று மாலை 3 மணிக்கு களியக்காவிளை சென்று அடைகிறார்.

    ராகுல்காந்தி மேற்கொண் டுள்ள இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் 4 நாட் கள் நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் கடந்த 7-ந்தேதி தொடங்கிய பாத யாத்திரை இன்று குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சென்று அடைகிறது. இன்றிரவு களியக்காவிளை அருகே கேரள எல்லை பகுதியான செறுவாரக்கோணத்தில் நிறைவு செய்கிறார். அதன்படி, ராகுலின் தமிழக சுற்றுப்பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    நாளை முதல் ராகுல்காந்தியின் கேரள பாத யாத்திரை தொடங்கு கிறது. அங்கு 18 நாட்கள் அவர், பாத யாத்திரை மேற் கொள்கிறார். இன்று கேரள எல்லையை நெருங்க நெருங்க ராகுலுக்கு தமிழிலும், மலையாளத்திலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ×