search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • மதம்சார்ந்த நம்பிக்கைகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது

    டெல்லியில் இருந்து செயல்படும் ஆல்ட் நியூஸ் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரும், பத்திரிகையாளருமான முகமது ஜுபைர், மதம் சார்ந்த விஷயங்கள் பற்றி தொடர்ச்சியாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சிலரது மத நம்பிக்கைகளை அவர் புண்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில், டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் ஜுபைரை கைது செய்தனர். அவர் மீது மத உணர்வுகளை தூண்டி சமூக அமைதியை சீர்குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்றிரவு கைது செய்யப்பட்ட ஜுபைர், பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இந்நிலையில், முகமது ஜுபைர் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவின் வெறுப்பு மற்றும் மதவெறியை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அக்கட்சியால் அச்சுறுத்தல் இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.

    ஒரு உண்மையின் குரலைக் கைது செய்தால் இன்னும் ஆயிரம் குரல் எழும்பும் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட பத்திரிகையாளருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷும் ஆதரவு தெரிவித்துள்ளார். முகமது ஜுபைர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி உள்ளார்.

    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

    திருவனந்தபுரம்:

    கேரள சட்டசபையின் 15-வது கூட்ட தொடர் இன்று தொடங்கியது.

    இக்கூட்டத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தியின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கிளப்ப காங்கிரசார் திட்டமிட்டு இருந்தனர்.

    அதன்படி கூட்டம் தொடங்கியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபையின் மைய பகுதிக்கு சென்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அமைப்பின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ. நிர்வாகிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமரும்படி கூறினார். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர்.

    இதையடுத்து சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் கேள்வி நேரம் உடனே தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். மேலும் கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து பதாகைகளையும் காண்பித்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்ததால் சபை நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியது.

    இதையடுத்து சபாநாயகர் ராஜேஷ் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.சபை தொடங்கிய முதல் நாளிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இடைத்தேர்தல் முடிவு வெளியானவுடன் காங்கிரஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல்.
    • மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அகர்தலா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதிப் ராய் பர்மன் வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பாஜக, காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. இதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

    திரிபுராக மாநில காங்கிரஸ் தலைவர் பிரஜித் சின்ஹா செங்கல்லால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் பாஜக ஆதரவாளர்களால் கத்தியால் குத்தப்பட்டதாகவும், அம்மாநில காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் ஆசிஷ் குமார் சாஹா தெரிவித்துள்ளார்.

    மோதலில் ஈடுபட்ட கும்பலை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் அந்த பகுதி போர் களம் போல் காட்சி அளித்தது. மோதலுக்குப் பிறகு காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

    காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் பாஜக  ஆதரவாளர்கள் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக திரிபுரா தகவல் மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சுஷாந்தா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், திரிபுராவில் காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது பாஜக குண்டர்கள் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். மக்கள் எங்களுடன் உள்ளனர். இந்த தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது வெட்கக்கேடு. அந்த குண்டர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். இவ்வாறு தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திருமங்கலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை, மோடி அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    திருமங்கலம்

    ராகுல்காந்தி மீதான மத்திய அமலாக்கத்துறை விசாரணை மற்றும் மோடி அரசை கண்டித்து மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி, திருமங்கலம் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.

    விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் அறிவுறுத்தலின்படி நடந்த இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாபட்டி பாண்டியன் தலைமை வகித்தார்.

    முன்னாள் மாவட்ட தலைவர் ஜெயராம், மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமங்கலம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கரிசல்பட்டி சவுந்திரபாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்ட த்தில் வட்டார தலைவர்கள் முருகேசன், சங்கன், தளபதி சேகர், பாண்டியன், வீரபுத்தி ரன், உசிலம்பட்டி நகர் தலைவர் மகேந்திரன், துணைத்த லைவர் சரவணன், நகர செயலாளர் ராஜா தேசிங், கவுன்சிலர் அமுதா சரவணன், முன்னாள் நகர் தலைவர் தாமோதரன், மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல்காந்தி துன்புறுத்தப்படுகிறார்.
    • மத்திய அமலாக்கத்துறையில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை?.

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் இன்று 5வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    பிற்பகல் உணவு இடைவேளைக்குப் பிறகும், இரவில் அரை மணி இடைவேளைக்கு பிறகும் ராகுல் காந்தியிடம் விசாரணை நடைபெற்றது. கடந்த நான்கு நாட்களில் ராகுல் காந்தியிடம் மொத்தம் 40 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தனிப்பட்ட நோக்கத்தின் காரணமாக ராகுல் காந்தி துன்புறுத்தப் படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அமலாக்க இயக்குநரகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

    பாஜக மற்றும் மோடி அரசுக்கு எதிராக ராகுல்காந்தி தொடர்ந்து, உறுதியான முறையில், குரல் கொடுத்து வருவதாகவும், எனவே ராகுல்காந்தியை துன்புறுத்தும் இந்த நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்துவது, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் போராட்டம் போன்ற முக்கிய பிரச்சனைகளில் இருந்து நாட்டை திசை திருப்பும் முயற்சி என்றும் அவர் கூறியுள்ளார்.

    மத்திய அமலாக்கத்துறையில் மற்ற வழக்குகள் தேங்கிக் கிடக்கும் போது இந்த வழக்குக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டார்.

    • திருப்பரங்குன்றத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்வதை கண்டித்து நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை செய்வதை கண்டித்து அந்த கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். ஓ.பி.சி. தலைவர் சரவணபவன் வரவேற்றார்.

    இதில் தெற்கு மாவட்டத்தலைவர் பாண்டியன், துணைத்தலைவர் பழனிகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பொன்.மனோகரன், ராஜ்குமார், பொன்மகாலிங்கம், பூபதி பாண்டியன், சீனிவாசன், செல்வராஜ், சின்னதேவர், இளைஞர் காங்கிரஸ் காசிமாயன் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.

    • ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
    • தெற்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் நடந்தது

    திருப்பரங்குன்றம்,

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுரை தெற்கு மாவட்ட காங்கி ரஸ் கட்சி சார்பில் துணைத் தலைவர் எம்.பி.எஸ்.பழனிகுமார் தலைமையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.வி.மகேந்திரன் முன்னிலை வகித்தார். பகுதி தலைவர் நாகேஸ்வரன், அமைப்பு சாரா தொழிலாளர் பணியாளர் பிரிவு மாவட்ட தலைவர் பொன். மகாலிங்கம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் சரவண பகவான், பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பூபதி பாண்டியன், ராமகிருஷ்ணன், சீனிவாசன், செல்வராஜ், சின்ன தேவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சி ஜெய் ஜவான்.
    • ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

    புதுடெல்லி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.

    ரெயிலுக்கு தீ வைப்பு, ரெயில் நிலையங்கள் சூறை என பல்வேறு போராட்டங்களால் ரெயில் சேவைகள் முடங்கி போய் உள்ளன.

    இந்த நிலையில் இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்,பி தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக அக்கட்சி ஜெய் ஜவான். ஜெய்கிசான் கொள்கையை அவமதித்து வருகிறது. இதற்கு முன்பு கறுப்பு வேளாண்மை சட்டத்தை மோடி திரும்ப பெற்றார். அதே போல இளைஞர்கள் கோரிக்கையை கனிவுடன் ஏற்று அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் .

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தின் விதிகளை பா.ஜனதா அரசாங்கம் மாற்றியமைத்தது.
    • விமானப் படையில் நியமனங்களை வழங்க வேண்டும்.

    புதுடெல்லி:

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதனை திரும்ப பெற வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    அக்னிபாத்-இளைஞர்கள் நிராகரித்தனர். விவசாய சட்டம்-விவசாயிகள் நிராகரித்தனர். பண மதிப் பிழப்பு-பொருளாதார நிபுணர்கள்நிராகர்த்தனர். ஜி.எஸ்.டி.-வர்த்தகர்கள் நிராகரித்தனர். நாட்டு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது பிரதமருக்கு புரியவில்லை.

    ஏனென்றால் அவர் தனது நண்பர்களின் குரலை தவிர வேறு எதையும் கேட்க வில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, 24 மணி நேரம் கூட கடந்து செல்லாத நிலையில் புதிய ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தின் விதிகளை பா.ஜனதா அரசாங்கம் மாற்றியமைத்தது.

    இதன் மூலம் இத்திட்டம் இளைஞர்கள் மீது அவசர அவசரமாக திணிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. இந்த திட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும்.

    விமானப் படையில் நியமனங்களை வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஆள் சேர்ப்பு முடிவுகளை வெளியிட வேண்டும். முன்பு போல் ராணுவ ஆள் சேர்ப்பை (வயது தளர்வுடன்) நடத்துங்கள்.

    இவ்வாறு பிரியங்கா கூறியுள்ளார்.

    துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு சென்ற ராகுல் காந்தி அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். #RahulGandhi #Dubai
    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 10-ந் தேதி இரவு ராகுல் காந்தி துபாய் வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், இந்திய வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து பேசினார்.

    தொடர்ந்து துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இரவு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு இருந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    நேற்று ராகுல்காந்தி தனது 2-வது நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். துபாய் இண்டர்நேசனல் அகாடமி சிட்டியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவ, மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். சுமார் 50 நிமிடம் அவர்களுடன் உரையாடினார். 
    சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி பெயரை முன்மொழிந்ததது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அப்போது அதனைக் கச்சிதமாகச் செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

    அவர் சிலையாக மட்டுமல்ல, நம் சிந்தனையிலும் நிறைந்திருப்பதால்தான், உங்களில் ஒருவனான நான் அந்த சிலை திறப்பு விழாவின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, “மத்தியிலே நடைபெறும் “சேடிஸ்ட் மோடி” தலைமையிலான பாசிச-நாசிச ஆட்சியை வீழ்த்தி ராகுல்காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்பதை பிரகடனப்படுத்தினேன்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைத்து- மத நல்லிணக்கத்தைச் சிதைத்து- பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் தகர்த்துக் கொண்டிருப்பதுடன், தமிழ்நாட்டை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை கொண்ட வரும், பா.ஜ.க.வின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் மதசார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே உரக்கச் சொன்னேன்.

    தலைவர் கலைஞர் காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திராவால் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் கொண்டுள்ளது. தி.மு.க. ஆதரித்தாலும், எதிர்த்தாலும் அதில் உறுதியாக நின்றுள்ளது. அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை.

    இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அவர்கள் பக்கம் இருந்த பழமைவாதிகளே அதனை எதிர்த்த நிலையில், அவை நிறைவேற துணை நின்ற இயக்கம்தான் தி.மு.க.,

    அதுபோலவே 1980-ம் ஆண்டு இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவதற்கு காங்கிரசால்தான் முடியும் என்றபோது, அதற்கு முந்தைய தேர்தலில் பெருந்தோல்வி அடைந்து இருந்த இந்திராகாந்தி அரசியல் களத்தில் மீண்டு வருவாரா? என்ற கேள்வி எழுந்த சூழலில், “நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சி தருக...” என முழங்கி அது வெற்றிகரமாக நிறைவேற துணை நின்றவர் தலைவர் கருணாநிதி.


    2004-ம் ஆண்டு மதசார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, “இந்திராவின் மருமகளே வருக... இந்தியாவின் திருமகளே வெல்க..” என முதன் முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர் கருணாநிதி.

    அதன் பின்னர்தான், அகில இந்திய கட்சிகள் பலவும் அணிவகுத்தன. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர் ராகுல்காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டி உள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில்தான் ராகுல்காந்தியை முன்மொழிந்து உள்ளேன்.

    மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போதைய சூழலில் இதுகுறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியேதான் விடிவுகள் பிறந்து உள்ளன.

    மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவு பெற இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம். நாசக் கரத்தை வீழ்த்திட நேசக் கரங்களாய் இணைவோம்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #Congress #RahulGandhi
    வங்கி மோசடி குற்றவாளியிடம் அருண்ஜெட்லி மகள் லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #BJP #Congress

    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டமாக நவம்பர் 12 மற்றும் 20-ந் தேதிகளில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள தனியார் கல்லூரியில் விவசாயிகள் மாநாடு நேற்று நடந்தது.

    இதில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் பற்றி நீங்கள் கண்டிப்பாக கேள்விப்பட்டு இருப்பீர்கள். இருவரும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் மோசடி செய்தவர்கள். ரூ.35 ஆயிரம் கோடியை திருடியவர்கள்.

     


    இதில் மொகுல்சோக்ஷி மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியின் மகளின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் டெபாசிட் செய்து உள்ளார். அவரிடம் இருந்து ஜெட்லி மகள் பணம் பெற்றுள்ளார். ஊடகங்கள் மிரட்டி ஒடுக்கப்படுவதால் இதுகுறித்த செய்தியை வெளியிட தயங்குகின்றன.

    இதன் காரணமாகவே மெகுல் சோக்ஷி மீது அருண்ஜெட்லி எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அவர் எளிதில் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    இதே விவகாரம் குறித்து சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கி கடன் மோசடியாளர்கள் நீரவ் மோடி, மெகுல் சோக்ஷி நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக அருண்ஜெட்லிமகள் சோனாலி, மருமகன் ஜெயேஷ் பக்ஷி ஆகியோர் இருந்தனர். இதற்காக ரூ.24 லட்சம் கட்டணமாக பெற்றுள்ளனர்.

    நீரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவான பிறகு சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் பலரிடம் விசாரணை செய்தது. ஆனால் அருண்ஜெட்லியின் மகள், மருமகனிடம் மட்டும் விசாரணை நடைபெற வில்லை. இதற்கு அருண் ஜெட்லியின் தலையீடே காரணம்.

    வங்கி கடன் வழக்கில் இருந்து அவர் தனது மகளையும், மருமகளையும் காப்பாற்றினார். இதன்மூலம் தனது நிதி மந்திரி பதவியை அவர் தவறாக பயன்படுத்தி உள்ளார். எனவே அருண்ஜெட்லியை மத்திய மந்திரி பதவிவியில் இருந்து நீக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுளார். #RahulGandhi #BJP #Congress

    ×