search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல்காந்தி"

    • முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.
    • மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார்.

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று இரவு நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.

    இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட உள்ளார். இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

    கலைஞர் நினைவு நாணயம் வெளியிடப்படுவதற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார். அதில், "கலைஞரின் தொலைநோக்குப் பார்வை கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமாக வாழ வழி வகுத்தது. அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாடு ஒரு தைரியமான பாதையில் பயணித்தது. அவரது கொள்கையில் இருந்த தெளிவு தமிழ்நாடு, முன்னோடியாக திகழ உதவியது. அவருக்கு நினைவு நாணயம் வெளியிடுவதில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

    கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடுவதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

    அவரது பதிவில், "கலைஞரின் கனவை நனவாக்க நாம் தொடர்ந்து ஒன்றிணைந்து பணியாற்றுவோம்" என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    • ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர்.
    • நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள்.

    புதுடெல்லி:

    ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர் என்று நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.

    நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.

    நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.

    இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

    • அதானியின் வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் பங்குகளை வாங்கியதாக ஹிண்டன்பர்க் புகார்
    • SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "SEBI தலைவர் மாதபி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை?

    முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பிரதமர் மோடியா.., SEBI தலைவரா.. அல்லது அதானியா?

    இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

    நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் அஞ்சுகிறார் என இப்போது புரிகிறது" என்று பேசியுள்ளார்.

    • மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

    மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதன்பிறகு பல்வேறு தரப்பினரும் கனிமொழி எம்.பி., தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    நேற்று காலையில் சுமார் 10.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், மீனவ அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.

    இதையடுத்து சுமார் 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர்.

    இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவர் ராஜேஸ்குமார், தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவ பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.


    • பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.
    • மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட 7 எம்.பி.க்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் மாம்பழம் அனுப்பி வைத்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் நட்புறவை பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எம்.பி.க்களுக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    சமீபத்தில் பதவி விலகிய வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக்ஹசீனா தான் பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு தவறாமல் மாம்பழம் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எம்.பி.க்கள் கபில் சிபல், சசிதரூர், சமாஜ்வாடியை சேர்ந்த மொஹிப்புல்லா நத்வி, ஜியா உர் ரஹ்மான் பார்க், ராம்பூர் இக்ரா ஹசன், காஜிபூர் அப்சல் அன்சாரி ஆகிய 7 பேருக்கு மாம்பழம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.பி. ஒருவருக்கு கூட மாம்பழம் அனுப்பி வைக்க வில்லை.

    இதுகுறித்து மத்திய மந்திரி கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    ரேபரேலியை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு பாகிஸ்தானுடன் 'நபக்' (தூய்மையற்ற) தொடர்பு இருக்கிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து வரும் மாம்பழங்கள் தனக்கு பிடிக்காது என்று சில காலத்திற்கு முன்பு ராகுல் காந்தி கூறினார்.

    பாகிஸ்தான் தூதரகம் தற்போது ராகுல்காந்திக்கு மாம்பழங்களை அனுப்பியுள்ளது. அவர் விரும்பும் மற்ற விஷயங்களை அவர் சொல்ல வேண்டும் என்றார்.

    இதேபோல் பா.ஜ.க. எம்.பி. அனுராக்தாக்கூர் கூறியுள்ள குற்றச்சாட்டில், இதயம் இருக்கும் இடத்தில் இருந்து மாம்பழங்களை பெறுகிறார்கள். அவருக்கு (ராகுல்காந்தி) உத்தர பிரதேசத்தின் மாம்பழங்கள் பிடிக்காது. ஆனால் பாகிஸ்தானில் இருந்து வரும் மாம்பழங்களால் அவர் உற்சாகமாக இருப்பதாக தெரிகிறது என்றார்.

    7 எம்.பி.க்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மட்டும் பாகிஸ்தான் தூதரகம் ஏன் மாம்பழம் அனுப்புகிறது என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான அமித்மால்வியா கேள்வி கேட்டுள்ளார்.

    பா.ஜ.க. மந்திரி, எம்.பி.க்கள் குற்றச்சாட்டால் மாம்பழம் விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

    • வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு
    • வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார்.

    ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை குஸ்மானை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

    இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார். இந்த நிலையில், வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் அப்பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "உலக சாம்பியன்களான மல்யுத்த வீராங்கனைகளை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவின் பெருமைக்குரிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து இந்தியாவின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    வினேஷ் மனம் தளரக்கூடியவர் அல்ல, அவர் இன்னும் வலுவாக களம் திரும்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    நீங்கள் எப்போதும் நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறீர்கள் வினேஷ். இன்றும் முழு நாடும் உங்களுடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    வினேஷ் போகத் தகுதி நீக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கேவும் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    • 3 மாதங்களில் குடியேற ராகுல்காந்தி திட்டம்.
    • டெல்லி சுனக்ரி பாக் சாலையில் அமைந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் புதிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி சுனக்ரி பாக் சாலை எண்.5 என்ற முகவரியில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளதாக பாராளுமன்ற இல்லங்கள் குழு வட்டாரங்கள் கடந்த மாதம் தெரிவித்தன.

    இந்த பங்களாவை ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேரா ஏற்கெனவே பார்வையிட்டு சென்றார். எனவே ராகுலுக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

    புதிய பங்களா ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ராகுல் காந்திக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், அவரது பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற இல்லங்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் ராகுல்காந்தி குடியேற இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த பங்களாவில் தங்குவதற்கு ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததையடுத்து வீடு ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு அதில் அலுவலகமும் அமைக்கப்பட்ட பிறகு அதில் குடியேற ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அதற்கு இன்னும் 3 மாதம் ஆகலாம்.

    எனவே புதுப்பிப்பு பணிகள் முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் புதிய பங்களாவில் குடியேற ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதுவரை அவர் ஜன்பத் இல்லத்தில் தங்கி இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

    • சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன.
    • தொழிலதிபர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு.

    2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக் கணக்குகளில் மாதாந்திர குறைந்த பட்ச வைப்புத் தொகை [மினிமம் பேலன்ஸ்] இல்லாததால் வசூலிக்கப்பட்ட அபராதம் மட்டுமே ரூ. 2331 கோடி என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி மக்களவையில் தெரிவித்துள்ளார். இது கடந்த நிதியாண்டில் வசூலிக்கப்பட்ட அபராதத்தை விட 25 சதவீதம் அதிகமாகும்.

    அதிகபட்சமாக பஞ்சாப் தேசிய வங்கிக் பயனர்களிடமிருந்து மொத்தமாக ரூ.633 கோடியும், பேங் ஆப் பரோடா பயர்களிடமிருந்து மொத்தமாக ரூ.386 கொடியும் வங்கிக் கணக்கில் மாதாந்திரமாக மினிமம் பேலன்ஸ் இல்லாத காரணத்தால் வசூலிக்கப்பட்டுள்ளது. மினிமம் பேலன்ஸ் தொகையானது வங்கிக்கு வங்கி, இடங்களை பொறுத்து மாறுபடும். மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடிவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மீது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காட்டமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "மோடியின் அமிர்த காலத்தில் சாமானிய மக்களின் காலி பாக்கெட்டுகளில் இருந்தும் பணம் வசூலிக்கப்படுகின்றன.

    தொழிலதிபர்களுக்கு ₹16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்த மோடி அரசு, 'மினிமம் பேலன்ஸ் இல்லை' எனக் கூறி ஏழை மக்களிடம் இருந்து ₹8,500 கோடி அபராதமாக வசூல் செய்துள்ளது.

    மக்களின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சியாக மோடியின் சக்கர வியூகத்தில் திறக்கப்பட்ட கதவுதான் இந்த அபராத நடைமுறை.

    இந்திய மக்கள் அபிமன்யூக்கள் அல்ல, அர்ஜுனர்கள் என புரிந்துகொள்ளுங்கள். சக்கர வியூகத்தை உடைத்து உங்களது எல்லா அட்டூழியங்களுக்கும் எப்படி பதில் தர வேண்டும் என மக்களுக்கு தெரியும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும்.
    • ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் அத்தொகுதியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வ பெருந்தகை கலந்துகொண்டு பேசுகையில், ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு பிறகு அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தொடங்கும். காங்கிரஸ் கட்சியும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வரு கின்றனர்.

    இதனால் ராகுல்காந்தியின் பின்னால் இளைஞர்கள் ஏராளமானோர் அணி திரண்டு வருகின்றனர் என்று பேசினார்.

    இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேசியதாவது:-

    கூட்டணி கட்சியால்தான் வெற்றி பெற்றோம் என்பதில் என்ற சந்தேகமும் வேண்டாம். அதற்காக நாம் தி.மு.க.விற்கு நன்றி தெரிவித்து கொள்வோம். கூட்டணியில் ஜெயித்ததால் நமக்கு பலமில்லை என்று கருதவேண்டாம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் பக்கமே சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் ஆதரவளித்து வாக்களித்து உள்ளனர்.

    40-க்கு 40 வெற்றி பெற தி.மு.க. கூட்டணியில் இருந் ததும் முக்கிய காரணம். தி.மு.க., அ.தி.மு.க.விற்கு பிறகு 3-வது மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் காங்கிரஸ் உள்ளது. இளைஞர்கள் எல்லாம் இன்றைக்கு புதிதாக வந்த கட்சிகளை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

    அவர்களை தடுத்து நிறுத்தி காங்கிரசை நோக்கி ஈர்க்கும் வகையில் நமது எதிர்கால செயல்பாடுகள் அமைய வேண்டும். இளைஞர்களை நம் பக்கம் ஈர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திக் காமல் மற்ற நேரங்களிலும் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

    மின்கட்டண உயர்வு தற்போது தேவையில்லாத ஒன்று. திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மரணம் குறித்து போலீசார் தெளிவுப்படுத்த வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்காது.

    கூட்டணி தர்மம் என்பதற்காக நாம் கூனி குறுகி நிற்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் பிரச்சனையை பேச வேண்டும். அனைத்து தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

    நாம் தமிழர் கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இளைஞர்கள் அக்கட்சிக்கு உணர்வுபூர்வமாக வாக்களிக்கின்றனர். அவர்களை நம் பக்கம் ஈர்க்கும் வகையில் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்து காங்கிரஸ் கட்சியில் இணைக்க வேண்டும்.

    2026 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறவேண்டும். அதற்காக கட்சியினர் தீவிரமாக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    பின்னர் செல்வப்பெருந்தகையும், கார்த்தி சிதம்பரமும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், தமிழகத்தில் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஜான்பாண் டியன் போன்றோர் கூறி வருகின்றனர்.

    எங்களை பொருத்தவரையில் தலைவர்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொலைகள் நடக் கின்றன. அ.தி.மு.க. ஆட்சி யில் நடைபெற்ற கொலைகளை எண்ணி பாருங்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மீது சட்ட நிபுணர்களை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
    • டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். டிரம்ப் பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த நபர் டொனால்ட் டிரம்ப்-ஐ சுட்டார். இந்த சம்பவத்தால் பரபர சூழல் உருவானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் அதிபர் டிரம்ப் காதில் இருந்து இரத்தம் சிந்தியது. இதைத் தொடர்ந்து டிரம்ப்-ஐ பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றிக்கொண்டு அவரை அங்கிரிந்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஃப்பிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    முதற்கட்டமாக துப்பாக்கி சூடு நடத்தியவர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்துள்ளார் என்று எஃப்பிஐ தெரிவித்தது.

    துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ்-ஐ பாதுகாவலர்கள் சம்பவ இடத்தில் வைத்தே சுட்டுக் கொன்றனர். இவர் ஏன் டிரம்ப்-ஐ சுட முயன்றார் என்பது பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.

    இத்தகைய செயல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.
    • ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூக மக்களுக்கிடையே வெடித்த வன்முறைக் கலவரம் ஒராண்டைக் கடந்தும் நீடிக்கிறது. தற்போதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று சந்தித்தார்.

    தேர்தலுக்கு முன்பு இரண்டு முறை மணிப்பூர் சென்ற ராகுல்காந்தி, எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மணிப்பூர் சென்றிருக்கிறார்.

    மணிப்பூரில் ஜிப்ராம், சுராசந்த்பூர், மொய்ராங் ஆகிய பகுதிகளில் இருக்கும் நிவாரண முகாம்களை ராகுல் காந்தி பார்வையிட்டார்.

    ஜிப்ராம் முகாமில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்களிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, தற்போதைய சூழல் குறித்து விசாரித்தார். மேலும், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து மாலை மணிப்பூர் ராஜ்பவனில் ஆளுநர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். ஆளுநர் அனுசுயா ராகுல் காந்திக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    இதனையடுத்து ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மணிப்பூர் இந்தியாவின் பெருமைக்குரிய மாநிலமாகும். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க ஒவ்வொரு தேசபக்தரும் உதவ வேண்டும். பிரதமர் மோடி ஓரிரு நாட்கள் நேரம் ஒதுக்கி மணிப்பூர் மக்களை சந்திக்க வேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அது மக்களுக்கு சற்று ஆறுதலை தரும். மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உதவ காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று தெரிவித்தார்.

    ×