search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநிலங்களவை"

    • ஜெகதீப் தங்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.
    • சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது

    பாராளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வரும் நிலையில் மாநிலங்களவையில் நேற்று காரசாமான விவாதங்கள் நடந்தன. குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், துணை குடையரசுத் தலைவரும் மாநிலங்களவை சபாநாயகருமான ஜெகதீப் தன்கர் அடுத்து சிறைக்கு செல்லலாம் என்று  தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    மோடி தலைமையிலான பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி அரசு அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் பலரை அரசியல் நோக்கத்துடன் சிறையில் அடைத்து வருவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அறிந்ததே.

    இந்த நிலையில்தான் மாநிலங்களவையில் நேற்று பேசிய சஞ்சய் சிங், 'நான் பட்ஜெட்டை வாசித்தேன். அதில் சிறைகளுக்கான நிதியும் குறைந்துள்ளது. சிறைத்துறைக்கு வெறும் ரூ.300 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறைகளுக்கான பட்ஜெட்டை மட்டுமாவது உயர்த்துங்கள். படஜெட்டை உயர்த்தி சிறைகளை மேம்படுத்துங்கள். இப்போது என்னை அனுப்பினீர்கள், அடுத்து நீங்களும்[ஜெகதீப் தன்கர்] செல்ல நேரிடும் ' என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த ஜெகதீப் தன்கர், சஞ்சய் சிங்கின் கோரிக்கை குறித்து மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவர் ஜே.பி நட்டா பரிசீலிக்க வேண்டும் என்று புன்னகையுடன் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2023 ஆம் ஆனது டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.
    • மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் பேசினார்.

    புதுடெல்லி:

    மத்திய பட்ஜெட் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறியதாவது:

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது சமூகத்தின் சில பிரிவுகள் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. ஆனால், இம்முறை அரசாங்கம் அனைவரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. பா.ஜ.க. ஆதரவாளர்கள்கூட அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி, ஜிஎஸ்டி மற்றும் மூலதன ஆதாய வரி போன்ற வரிகள் மூலம் பொதுமக்களின் வருமானத்தில் 70 முதல் 80 சதவீதத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ளது.

    நாங்கள் இங்கிலாந்தைப் போல வரி செலுத்துகிறோம். ஆனால் சோமாலியாவைப் போல சேவைகளைப் பெறுகிறோம்.

    உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், போக்குவரத்து, கல்வி போன்றவற்றை அரசாங்கம் நமக்கு வழங்குகிறதா?

    2019-ல் பா.ஜ.க. அரசுக்கு 303 இடங்கள் கிடைத்தன. ஆனால் மக்கள் அந்த இடங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்து அவற்றை 240-க்கு கீழே கொண்டு வந்தனர்.

    கடந்த 25 மாதங்களில் உண்மையான கிராமப்புற ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    உணவுப் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றால் தான் குறைவான இடங்கள் கிடைத்தன.

    இந்தப் போக்குகள் தொடர்ந்தால் வருங்கால தேர்தல்களில் பா.ஜ.க. இன்னும் குறிப்பிடத்தக்க இடங்களைவிட சரிந்து 120 இடங்களுக்குக் குறையக் கூடும் என தெரிவித்தார்.

    • தற்போது பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது.
    • இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 101 ஆக உள்ளது.

    இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றால் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக-வால் தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. 240 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்றது. இதனால் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார்.

    மக்களவையில் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையிலும் தனி மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 குறைவாக உள்ளது.

    மாநிலங்களவை மொத்தம் 245 எம்.பி.க்களை கொண்டதாகும். மத்திய அரசின் பரிந்துரையின்படி ஜனாதிபதி சில எம்.பி.க்களை நியமனம் செய்வார். அவ்வாறு நியமனம் செய்த நான்கு (ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி) எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதனால் மாநிலங்களவையில் பா.ஜகவின் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது.

    இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. 245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் மெஜாரிட்டிக்கு 113 இடங்கள் தேவை. தற்போது மாநிலங்களவையில் 225 எம்.பி.க்கள் உள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13, ஆம் ஆத்மி மற்றும் திமுக-வுக்கு தலா 10 எம்.பி.க்கள் உள்ளனர்.

    பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை அல்லாத சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், நியமனம் எம்.பி.க்கள் மற்றும் சுயேட்சை எம்.பி.க்களும் உள்ளனர்.

    தற்போது ஒரு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டுமென்றால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதலாக 13 எம்.பி.க்கள் ஆதரவு தேவை.

    ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (11), அதிமுக (4) ஆகிய இரண்டு கட்சிகளும் 15 எம்.பி.க்களை வைத்துள்ளன. இவர்கள் ஆதரவு தேவைப்படும்.

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இரண்டு கட்சிகளும் பாஜக-வுடன் நல்ல உறவில் இருந்தன. ஆனால் தேர்தலின்போது அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு எதிராக பாஜக சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதனால் இரண்டு கட்சிகளும் ஆதரவு கொடுக்குமா? என்பது தெரியவில்லை.

    அதேபோல் மாநிலங்களவையில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான்.

    இவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்றால் நியமன எம்.பி.க்கள் ஆதரவை நாட வேண்டியிருக்கும். நியமன எம்.பி.க்கள் எண்ணிக்கை மொத்தம் 12 ஆகும்.

    மாநிலங்களவையில் மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இந்த வருடத்திற்குள் 11 இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா, அசாம், பீகார் மாநிலங்களில் தலா இரண்டு இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஒரு இடங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

    அசாம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏழு இடங்களில் வெற்றி பெற முடியும். மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக கூட்டணி ஒன்றிணைந்து செயல்பட்டால் இரண்டிலும் வெற்றி பெற முடியும். அத்துடன் ஒய்எஸ்ஆர், நியமன எம்.பி.க்கள் ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்ட வாய்ப்புள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு இடங்கள் காலியாக உள்ளது. சட்டமன்ற தேர்தல் செப்டம்பர் 30-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    • மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
    • மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு சமூகத்தினருக்கு இடையிலான மோதல் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காணாமல் போகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அண்டை மாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மணிப்பூரில் வன்முறை இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை குறித்து வாய் திறப்பதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தன.

    நேற்று மக்களவையில் பிரதமர் மோடி பேசும்போது, மணிப்பூர் வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். "Save Manipur" எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பிரதமர் மோடி பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    மாநில அரசு மற்றும் மற்றவர்களுடன் சேர்ந்து மத்திய அரசு மணிப்பூரில் அமைதியை கொண்டு வர பணியாற்றி வருகிறது. மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மாநிலத்தின் அதிகமான இடங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முற்றிலும் அமைதி திரும்புவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.

    வன்முறை தொடர்பாக 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மணிப்பூர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு இரண்டு தேசிய பேரிடர் குழுவின் இரண்டு அணிகளை மணிப்பூருக்கு அனுப்பி வைத்தது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதத்திற்கு தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கின்றனர்.
    • பாராளுமன்றத்தில் அமளி செய்வதை தவிர வேறு எதுவும் எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாது.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு பேச வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

    இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

    * பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் நான் கூறும் உண்மைகளை எதிர்கொள்ள முடியவில்லை.

    * உண்மையை எதிர்கொள்ள முடியாமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

    * மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதத்திற்கு தயாராக இல்லை என்பதால் வெளிநடப்பு செய்கின்றனர்.

    * பாராளுமன்றத்தில் அமளி செய்வதை தவிர வேறு எதுவும் எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாது.

    * நான் பேசும் உண்மைகளை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை என்று கூறினார்.

    • விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் இருக்கும்.
    • சிறிய நகரங்களை மேம்படுத்தி இந்தியாவின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள் இருக்கும்.

    இதுவரை எந்த அரசுகளும் செய்யாத அளவிற்கு வேளாண் பொருட்களுக்கான MSP உயர்த்தப்பட்டுள்ளது.

    நிலத்தில் இருந்து சந்தை வரை விவசாயிகளுக்கு எனது அரசு துணை நிற்கும், வழிகாட்டும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்ஜின்களாக 2, 3ம் கட்ட நகரங்கள் இருக்கும்.

    நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிற்கு பொது போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்.

    சிறிய நகரங்களை மேம்படுத்தி இந்தியாவின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம்.

    காங்கிர அரசு விவசாயிகளை தவறாக வழிநடத்தியது அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.

    மாநிலங்களவைக்கு பிரதமர் மோடி தவறான தகவல்களை வழங்குவதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர்.

    எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு பேச வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

    • இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.
    • நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் அடுத்த 20 வருடங்களுக்கு பாஜக ஆட்சி தான் நடைபெறும்.

    காங்கிரசின் செயல்பாடுகள் பாஜகவை அடுத்த 20 வருடங்களுக்கு ஆட்சியில் வைத்திருக்கும்.

    இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்ற மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.

    நாட்டில் ஏழ்மைக்கு எதிரான போர் பிரகடனத்தை நாங்கள் வெளியிட்டுள்ளோம்.

    அடுத்த 5 வருடங்களில் ஏழ்மைக்கு எதிரான போரில் எனது அரசு தீவிரம் காட்டும்.

    நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியனின் வாழ்வையும் மேம்படுத்துவதே இலக்கு.

    ஆட்டோ பைலட் மோடில் நாடு தானாக பொருளாதாரத்தில் வளர்வதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    கடந்த பத்து வருடங்களில் எங்களின் உழைப்பு ஒரு முன்னோட்டம் மட்டுமே.

    சிறப்பான ஆட்சி என்பதை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் உழைப்பு இருக்கும்.

    வறுமையில் உள்ள மக்களை மீட்க எனது அரசின் வேகம் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறினார்.


    • அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
    • எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசியல் சாசனம் எங்களுக்கு வழங்கும் உத்வேகத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

    * தற்போது பலர் கைகளில் அரசியல் சாசன புத்தகத்தை பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

    * அரசியல் சாசனத்தின் பெருமைகளை நாடு முழுவதும் பரப்புவது என் கடமை.

    மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே ஜனாதிபதி உரைக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.

    • NDA பெற்ற மிகப்பெரிய வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடைபெற்றது.
    • அரசியல் சாசனம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு.

    மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டில் 60 வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஒரு அரசு பதவி ஏற்றுள்ளது.

    * NDA பெற்ற மிகப்பெரிய வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடைபெற்றது.

    * கடைசியில் எதிர்க்கட்சிகள் தற்போது தான் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளன.

    * 10 வருட கடின உழைப்பிற்கு மக்கள் அளித்துள்ள விருதுதான் தேர்தல் வெற்றி.

    * தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை.

    * எதிர்க்கட்சிகளின் தவறான பரப்புரையை தோற்கடித்து மக்கள் வெற்றியை வழங்கி உள்ளனர்.

    * இந்தியாவின் அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான்.

    * அரசியல் சாசனம் தான் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு என்று கூறினார்.


    • நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.
    • 'வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது'

    கடந்த ஜூலை [ஜூன் 27] ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. மக்களவையில் ராகுல் காந்தியின் உரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கும் இடையிலான கருத்து மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    கூட்டத்தொடரின் ஆரம்ப கூட்டங்களில் தான் பேசும்போது ஜெகதீப் தன்கர் மைக்கை ஆப் செய்வதாக கார்கே பல முறை குற்றம்சாட்டினார். ஆனால் மைக்கின் கண்ட்ரோல் தன்னிடம் இல்லை என்று ஜெகதீப் விளக்கம் அளித்தார். நேற்று முன் தினம் இருவருக்கும் இடையில் சற்று இணக்கம் ஏற்பட்டு அவை கலகலப்பாக இருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் கார்கே - ஜெகதீப் தன்கர் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

    நேற்று மாநிலங்களவையில், காங்கிரஸ் எம். பி பிரமோத் திவாரி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசியபோது, ஆளும் பாஜக பல வழிகளில் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது என்று சாடினார். இந்த கருத்தை கண்டித்த ஜெகதீப் தன்கர், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது என்று தெரிவித்தார். உடனே எழுந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயராம் ரமேஷ், அதை [துரோகத்தை] எங்களால் நிரூபிக்க முடியும் என்று தெரிவித்தார். இதனால் பொறுமை இழந்த ஜெகதீப் தன்கர், ஜெயராம் ரமேஷை பார்த்து, நீங்கள் மிகவும் புத்திசாலி, திறமை வாய்ந்தவனர், நீங்கள் உடனே வந்து எதிர்கட்சித் தலைவர் கார்கேவின் இடத்தில் அமர்ந்து அவரது வேலையே நீங்களே பார்க்கலாம் என்று கிண்டலாக தெரிவித்தார்.

    ஜெகதீப் தன்கரின் கருத்தை கண்டிக்கும் வகையில் கார்கே உடனே எழுந்து, வர்ணாசிரம கட்டமைப்பை மாநிலங்களவையிலும் கொண்டுவராதீர்கள், அது உங்கள் மூளையில் இன்னும் இருக்கிறது, எனவே தான் ஜெயராம் ரமேஷை புத்திசாலி என்று தெரிவிப்பதன்மூலம் தலித் ஆகிய நான் மந்தமான நபர் என்றும் அவர் எனக்கு பதில் இங்கு வந்து அமர வேண்டும் என்றும் கூறுகிறீர்கள் என்று காட்டமாக ஜெகதீப் தன்கரிடம் தெரிவித்தார்.

     

    இதனால் சற்று கலக்கமடைந்த தன்கர், நான் அப்படி கூறவில்லை, எனது கருத்தை நீங்கள் திரித்துக் தவறாக எடுத்துகொண்டீர்கள், உங்கள் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. நீங்கள் இருக்கும்போது ஜெயராம் ரமேஷ் ஏன் பேச வேண்டும் என்ற அர்த்தத்திலேயே அவ்வாறு சொன்னேன், நீங்கள் சில பிரச்னைகளை தீர்க்க வேண்டியது உள்ளது என்று தெரிவித்தார்.

     

    இதற்கு பதிலளித்த கார்கே, என்னை உருவாகியவர் இங்கு உள்ளார் [சோனியா காந்தியை சுட்டிக்காட்டி] மேலும் மக்கள் என்னை உருவாக்கியவர்கள். நீங்களோ ஜெய்ராம் ரமேஷோ என்னை உருவாக்கவில்லை என்று தெரிவித்தார். 

     

    • ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.
    • கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவியது

    நேற்று நடந்த பாராளுமன்ற மக்களை கூட்டத்தொடரில் ராகுல் காந்தியின் அதிரடி உரை அவையை களேபரம் ஆகியது தெரிந்ததே. அதேசயம் பாராளுன்றத்தில் நடந்த மாநிலங்களவை கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் மக்களவையில் நடந்ததற்கு நேர் மாறாக காங்கிரஸ் தலைவர் கார்கேவின் கருத்துக்களால் சிரிப்பலை ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று நடந்த மாநிலங்களவை கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேச எழுந்த போது தனக்கு கால்வலி இருப்பதால் உட்கார்ந்து பேச கார்கே அனுமதி கேட்டார். அதற்கு அனுமதி அளித்த மாநிலங்களவை சபாநாயகரும் துணைக் குடியரசுத் தலைவருமான ஜெகதீப் தன்கர், 'கார்கே ஜி இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு உதவியுள்ளேன்' என்று சிரித்தபடி தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்த கார்கே, 'ஆமாம் நீங்கள் எங்களுக்கு [எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு] சில சமயம் உதவுகிறீர்கள். நான் அதை நினைவு கூர்கிறேன்' என்று நகைச்சுவை தொனிக்க தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி உரை குறித்து தொடர்ந்து பேசத் தொடங்கிய கார்கே பாஜக எம்.பி சுதான்சு சதுர்வேதியை குறிப்பிட்டு பேசும்போது, இடையில் நிறுத்தி, 'மன்னிக்கவும், திவேதி, திரிவேதி, சதுர்வேதி ஆகிய பெயர்கள் என்க்கு எப்போதும் குழப்பமாக உள்ளது.

    நான் தெற்கில் [தென்னிந்தியாவில்] இருந்து வருவதால் இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை; என்று நகைச்சுவையாக தெரிவிக்க அரங்கமே சிரிப்பலையால் அதிர்ந்தது.இதற்கு சிரித்தபடி பதிலளித்த சபாநாயகர் ஜெகதீப் தன்கர், 'நீங்கள் விரும்பினால் இந்த விவகாரம் குறித்துஅரை மணி நேரத்துக்கு வேண்டுமானாலும் நாம் விவாதிக்கலாம்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக கடந்த நாட்களில் தான் பேசும்போது மைக்கை அணைத்து விடுவதாக கார்கே ஜெகதீப் தன்கரை குற்றம்சாட்டியதால் அவையில் இருவருக்கும் இடையில் இறுக்கமான சூழல் நிலவிய நிலையில் நேற்றைய கூட்டம் அந்த இறுக்கத்தை தளத்தியது என்றே கூறலாம். கடந்த ஜூன் 27 ஆம் தேதி தொடங்கிய மாநிலங்களவை கூட்டொடர் நாளையுடன் முடிவடைவது குறிப்பிடத்தத்க்கது. 

     

    • 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
    • நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது.

    ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிவாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதிதாக நிறைவேற்றப்பட்ட 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "கால அவகாசம் அளிக்காமல், உரிய ஆலோசனைகளை பெறாமல் அவசர கதியில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரப்பட்டுள்ளன. 3 குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில் மாநிலங்கள் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. அனைத்து துறைகளுடன் ஆலோசித்து நடைமுறைப்படுத்த போதுமான கால அவகாசம் தேவை.

    3 குற்றவியல் சட்டங்களிலும் தவறுகள் உள்ளன. மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சட்டங்கள் ஆங்கிலத்தில் அமைய வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ×