search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
    • தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது.

    திருப்பூர் :

    தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக மே மாதம் சிறப்பு தேர்வு நடத்தப்படுமென அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம், திருப்பூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி அருள்அரசு கூறியதாவது :- திருப்பூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது. கடந்த, 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூர கல்வி வழியில் பயின்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே 2023 - டிசம்பர் 2023 இரு பருவங்களில் சிறப்பு தேர்வு நடக்கிறது.இதில் மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்ச்சி பெறாத மாணவர்கள் வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

    • எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • மாணவர்கள் தடகளம், நீளம் தாண்டுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள எடமணல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியின் சார்பாக 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

    பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.

    உதவி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்புரையாற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ். பரிமளா செல்வராஜ் மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார்.

    பள்ளி மாணவ மாணவியர் தடகளம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைவாணி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சவீதா, பத்திரிக்கையாளர் என்.பிரசன்ன வெங்கடேசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு மற்றும் பள்ளி மேலாண்மைகுழு உறுப்பி னர்கள் ஆகியோர் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினர்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், ராஜ துரை, சக்தி, ராம் சதீஷ்குமார், நேதாஜி, விவேகானந்தன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு போட்டிகளை நடத்தினர் போட்டி ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், செல்வராஜன் மற்றும் விஜய மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.

    • மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரி மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரி மாணவர்கள் , உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மாநில அரசு தலையிட்டு தேர்வு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாணவ மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கைது செய்தனர்.

    • டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.
    • இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.இக்கல்லூரியில் முதல்வர் தென்னரசு காரணமேயில்லாமல் இடமாற்றம்செய்யப்பட்டார்.இதனை கண்டித்து கல்லூரியின் மாணவர்கள் 500 -க்குமேற்பட்டோர்அவரை மீண்டும் இக் கல்லூரியிலே பணியமர்த்தவேண்டும் என உயர்கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கல்லூரி வளாகத்திலேயே 3-வதுநாளாகஉள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு மற்றும் உயர்கல்வித்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

    • பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது.
    • ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி இல்லாத மாவட்டமாக விளங்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, கவின்மிகு தஞ்சை இயக்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஆகியவை இணைந்து இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டியை நடத்தியது.

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் தளத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த போட்டியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாணவ- மாணவிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆணையர் சரவணகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் குணசேகரன், ரவிக்குமார், கவின்மிகு தஞ்சை இயக்கம் டாக்டர் ராதிகா மைக்கேல், இந்தியா ரெட் கிராஸ் துணைத் தலைவர் பொறியாளர் முத்துக்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.
    • பஸ்கள் சரியான நேரத்தில் வராததால் மாணவர்கள் கடும் அவதி.

    அதிராம்பட்டினம்:

    பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினத்திற்கு இடைப்பட்ட ஊர்க ளான முதல்சேரி, பள்ளிக்கொ ண்டான், சேண்டாக்கோட்டை, மாளியக்காடு போன்ற பகுதிகளில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் தினமும் தங்கள் அத்தியாவசிய தேவைக்கா கவும், பணி நிமித்தமாகவும் பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இந்நிலையில், அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்ல இடைநில்லா பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் மேற்கண்ட கிராமங்களில் நின்று செல்வதில்லை.

    இதனால் அந்த கிராமங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் நீண்ட நேரம் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அரசு மற்றும் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர்.

    அந்த பஸ்களும் சரியான நேரத்தில் வராததால் மாணவர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இடைப்பட்ட ஊர்களில் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    • தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று பிளஸ்-1 பொது தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 5-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என 225 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 804 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.

    காலையிலே மாணவ- மாணவிகள் தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். செல்போன், கால்குலேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

    கடும் சோதனைக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 10 பணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    தேர்வு பணியில் 112 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் , 112 துறை அலுவலர்கள், 7 வினாத்தாள் கட்டுக் காப்பாளர்கள், 27 வழித்தட அலுவலர்கள், 139 நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள், 1961 அறை கண்காணிப்பாளர்கள், 194 சொல்வதை எழுதுபவர்கள் மற்றும் 225 அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் தடையில்லா குடிநீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்பட்டன.

    • பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் 104 இலவச ஆலோசனை எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
    • பிரச்சினைகள் அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம்.

    திருப்பூர் :

    தேர்வு எழுதும் மாணவர்கள் பசியின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டால் 104 இலவச ஆலோசனை எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். அவ்வகையில் மாணவர்கள் பலர், தேர்வுக்காக இரவு முழுவதும் கண் விழித்து படித்து வருகின்றனர்.அவர்களில் சிலர், கவலை, பசியின்மை, துாக்கமின்மை போன்ற பிரச்னைகளையும் எதிர்கொள்கின்றனர்.இவற்றை சமாளிக்கவும், தேர்வுக்கு பயமின்றி தயாராவதற்கும் சில குறிப்புகளை மனநல மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- ஆசிரியர்- மாணவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கால அட்டவணையை திட்டமிட வும், செயல்திறன்களை கவனித்து அதற்கேற்ப உதவலாம்.உடல், மனநலம் இரண்டுமே முக்கியம். தேர்வு அறையில் பிறர் மீது கவனம் செலுத்தாமல் தேர்வின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.

    தொடர்ந்து ஒரே பாடத்தை படிக்காமல் மாற்றி மாற்றி படிக்கலாம். திருப்பூரில் மாவட்ட மனநலத்திட்டம் சார்பில் பள்ளிகள், தூக்கமின்மை, எரிச்சல், முன்கோபம், தலைவலி, உடல்வலி, அதிகம் பசியெடுத்தல், பசியின்மை இதுபோன்ற பிரச்சினைகள் அறிகுறிகள் இருப்பின் மாவட்ட மனநல ஆலோசனை மையத்தை அணுகலாம். அல்லது 104 இலவச ஆலோசனை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன.
    • பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில் அதன் பெரு நிறுவன சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.60.68 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டன. அதன் பணிகள் நிறைவடைந்து, கடந்த 10ம் தேதி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

    திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய அணுமின் கழக தொழில்நுட்ப இயக்குனர் பண்டாக்கர் (மும்பை), சென்னை அணுமின் நிலைய இயக்குனர் ஷெல்கே மற்றும் அணுமின் நிலைய அதிகாரிகள் வர இருந்தனர். இவர்களை நுழைவு வாயிலில் வரவேற்க பள்ளி மாணவ, மாணவிகளை சுட்டெரிக்கும் வெயிலில் செருப்பு இல்லாமல் நிற்க வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
    • முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 5 இடங்களில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவிரி இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கூடலரங்கில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.

    இதில் கவிதைப் போட்டி "காவிரியைப் போற்றுவோம்" என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி"தமிழ் இலக்கியங்களில் தமிழர் மரபு என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி"தமிழர் பண்பாடே சமுத்துவப் பண்பாடு" "நாணி போற்றும் தமிழர் பண்பாடு" என்ற தலைப்பிலும் பாட்டுப்போட்டி" மண்ணின் மணம் கமழும் மக்கள் பாடல்கள்" "சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள்" என்ற தலைப்பிலும் நடைபெறுகிறது. கல்லூரி மாணவர்கள் ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே பங்கு பெறலாம்.

    இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ -மாணவிகள் தங்களது பெயரினை இன்றுக்குள் (திங்கட்கிழமை) ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சலில் sathiyamoorthy6932@gmail.com அனுப்ப வேண்டும்.

    போட்டி நடைபெறும் நாளன்று காலை 10 மணிக்குள் கல்லூரி கலையரங்கத்திற்கு மாணவர்கள் வர வேண்டும்.

    இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பொது நூலகத்துறை சார்பில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

    இப்போட்டி குறித்த விவரங்களை 9751806932 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவருமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-

    பாபநாசம் நகரில் தனி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. தற்போது பாபநாசம் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி - வித்யா பாட சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகின்றது.

    இந்த வட்டார கல்வி அலுவலகம் அந்த பள்ளி கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கு இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஏற்கனவே இடிக்கப்பட்ட பழைய இடத்திலேயே பாபநாசம் வட்டார கல்வி அலுவலகம் கட்டித் தர வேண்டும்.

    பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாபநாசம் ஒன்றியம் உம்பளப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பாபநாசம் பேரூராட்சி வார்டு எண் 3 இல் உள்ள பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் சுந்தரபெருமாள் கோவில் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - கிழக்கு, ஆகிய பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும்,

    பாபநாசம் பேரூராட்சியில் பொது நூலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்றவாறு அந்த பகுதி இல்லாததால், புதிய இடத்தினை தேர்வு செய்து நவீன வசதிகளுடன் நூலகத்துக்கு தனி கட்டிடம் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் இராஜகிரி ஊராட்சியில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடமும், கணினி வசதிகள் உள்ளிட்ட உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய கட்டிடம் கட்ட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.

    • 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • கண்காணிக்க 824 அறை கண்கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வை 5134 மாணவர்களும், 6057 மாணவிகளும் என மொத்தம் 11191 பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 1 தேர்வை 4446 மாணவர்களும், 5565 மாணவிகளும் என 10011 பேரும் எழுதுகின்றனர்.

    மாவட்டத்தில் 36 பொது தேர்வு மையங்களும், 2 தனித்தேர்வர்களுக்கான மையங்களும் ஆக மொத்தம் 38 பொது தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க 824 அறைக்கண் கணிப்பாளர்கள் மற்றும் 90 பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    ×