search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 145409"

    • கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தங்ககொடி மரம் பொள்ளாச்சியை சேர்ந்த பக்தர்கள் சிலர் திரண்டு வந்து அமர்ந்து இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்களிடம் விவரங்களை கேட்டார்.

    அப்போது, அவர்கள் கம்பத்தடி ஆஞ்சநேயரை, ஏற்கனவே இருந்த இடத்தில் மீண்டும் வைத்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கூட்டுபிரார்த்தனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். மேலும் இது தொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர். மனுவைப் பெற்ற கோவில் இணை ஆணையர், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து, அவர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டனர்.

    இதனால் நேற்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பின் தலைவர் சீனிவாசன் கூறியதாவது:-

    கடந்த 2015-ம் ஆண்டு நடந்த மகா கும்பாபிஷேகத்தை காரணம் காட்டி கோவிலில் பழமையாக இருந்த பல இடங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கம்பத்தடி ஆஞ்சநேயர் இடம் மாற்றி வைக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் தாயார் சன்னதி உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் ராமானுஜர் காலத்தில் எப்படி இருந்ததோ அதேபோல் மீண்டும் மாற்றி அமைக்க கோரி தமிழக அரசுக்கும், அறநிலையத்துறையினருக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறோம்.

    இது தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீரங்கம் கோவில் நிலைமை குறித்தும், அதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அந்த வகையில் இன்று (நேற்று) ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் வகையில், கோவில் ஆரியப்படாள் வாசலுக்குள் உள்ள தங்க கொடிமரம் அருகே கூட்டு பிரார்த்தனை நடத்தினோம். இதையடுத்து எங்களை சந்தித்த கோவில் நிர்வாக அதிகாரி எங்களது கோரிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேரோட்டம் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 19-ந்தேதி ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலும், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதுமான திருவெள்ளறை பங்கஜவல்லி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்கள் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து திருவெள்ளறை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு தினமும் பெருமாள்-தாயார் மண்டகப்படிகளுக்கு சென்று வருகின்றனர். மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் திருவெள்ளறை கோவில் உற்சவர்கள் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லித்தாயாருடன் தீர்த்தவாரிக்காக நேற்று ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளினார். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு பங்கஜவல்லித்தாயார் சமேத செந்தாமரைக்கண்ணன் சுவாமி பல்லக்கில் ஸ்ரீரங்கம் புறப்பட்டார். வழிநடை உபயங்கள் கண்டருளியவாறு நேற்று காலை 10 மணியளவில் பெருமாள், தாயார் ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரையை அடைந்தனர். அங்கு அவர்களுக்கு தீர்த்தவாரி மற்றும் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்துடன் இரவு வரை பக்தர்களுக்கு தாயார்-பெருமாள் காட்சியளித்தனர். நள்ளிரவுக்குமேல் அங்கிருந்து மீண்டும் திருவெள்ளறை புறப்பட்டனர்.

    உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளாக இன்று(திங்கட்கிழமை) இரவு கருட வாகனத்திலும், 15-ந் தேதி இரவு யானை வாகனத்திலும், 16-ந் தேதி பூந்தேரிலும் சுவாமி வீதி உலா வருகிறார். 17-ந்தேதி குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளுகிறார்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந்தேதி காலை நடைபெற உள்ளது. அன்று இரவு சப்தாவரணம் நடக்கிறது. மறுநாள் 19-ந் தேதி இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் திருவெள்ளறை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.
    • பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் வீதி உலா வந்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று முன்தினம் மாலை மேலவாசலில் உள்ள தெப்பகுளத்தில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    9-ம் திருநாளான நேற்று பந்தக்காட்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் எழுந்தருளி பந்தக்காட்சியில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

    பந்தக்காட்சியின் போது நம்பெருமாள் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் வீதி உலா வந்தார். பின்னர் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.
    • இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். பின்னர், இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் கண்டருளி மைய மண்டபம் சென்றடைந்தார். பின்னர் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    9-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவிலின் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தெப்ப உற்சவம் இன்று மாலை நடைபெறுகிறது.
    • பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

    7-ம் நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு வந்தார். பின்னர் அவர் நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 9-ம் திருநாளான 3-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.

    பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • மூன்று முறை தெப்பம் வலம் வரும்.
    • 3-ந்தேதி மீண்டும் நம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப உற்சவம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதை முன்னிட்டு தினமும் உற்சவர் நம்பெருமாளுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் புறப்பாடுகளும், மண்டகப்படிகளும், பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா காட்சிகளும் நடந்து வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கவுள்ளது.

    இதையொட்டி நாளை மதியம் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து உபநாச்சியார்களுடன் புறப்பட்டு மாலையில் ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தின் வடகரையில் உள்ள ஆஸ்தான மண்டபம் வந்து சேர்வார். இரவு 7.30 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் பெருமாள் தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளியபின் தெப்ப உற்சவம் தொடங்கும். மூன்று முறை தெப்பம் வலம் வரும்.

    மூன்றாவது சுற்றின்போது இரவு 9.15 மணியளவில் பெருமாள் தாயார் தெப்பக்குளத்தின் மையமண்டபத்தில் எழுந்தருள்வர், அங்கு அலங்காரம் அமுது செய்விக்கப்பட்டபின், மீண்டும் பெருமாள் தாயார் தெப்பத்தில் ஏறி சுற்றை நிறைவுசெய்தபின் கரையேறுவர், அதைத்தொடர்ந்து உபயக்காரர்கள் மரியாதைக்குப்பின் மேற்கு மற்றும் வடக்குவாசல் வழியாக இரவு 11.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவர்.

    அடுத்தநாள் (3-ந்தேதி) மாலை மீண்டும் நம்பெருமாள் புறப்பட்டு தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் வருவார். அதனைத் தொடர்ந்து இரவு ஒற்றைபிரபை வாகனத்தில் பந்தக்காட்சியுடன் பெருமாள் கோவில் திரும்புவார். அத்துடன் தெப்பபோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவடையும்.

    • 1-ந்தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார்.
    • தெப்பத்திருவிழா 2-ந்தேதி நடைபெறுகிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறு நம்பொருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்னர் மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) ஹனுமந்த வாகனத்திலும், நாளை(சனிக்கிழமை) கற்பகவிருட்ச வாகனத்திலும், 26-ந் தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 27-ந்தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28-ந் தேதி யானை வாகனத்திலும் உள்திருவீதிகளில் நம்பெருமாள் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான 1-ந் தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்வீதிகளில் வலம் வந்து மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 3-ந் தேதி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தெப்பத்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடைபெறுகிறது
    • 3-ந்தேதி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    அப்போது, முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதி, புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.

    தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில், 24-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஹனுமந்தவாகனத்தில், 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கற்பகவிருட்ச வாகனத்தில், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில், 27-ந்தேதி மாலை 6.30 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில், 28-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதிகளில் வலம் வருகிறார்.

    தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான மார்ச் 1-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உள்வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 3-ந்தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நிறைவுபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா மார்ச் 3-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
    • தெப்பத்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் திருப்பள்ளி ஓடம் திருநாள் எனப்படும் தெப்பத்திருவிழா வருகிற 23-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நம்பெருமாள் தினமும் காலையில் மூலஸ்தானத்தில் இருந்து பல்லக்கில் புறப்பாடாகி வழிநடை உபயம் கண்டருளிகிறார்.

    மேலும் தினமும் மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் புறப்பாடாகி உள்வீதிகளில் வலம் வருகிறார். தெப்பத்திருவிழாவின் முதல் நாளான 23-ந்தேதி ஹம்ச வாகனத்திலும், 24-ந் தேதி அனுமந்த வாகனத்திலும், 25-ந்தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 26-ந்தேதி வெள்ளி கருட வாகனத்திலும், 27-ந் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28-ந்தேதி யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் 7-ம் நாளான மார்ச் 1-ந்தேதி நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந் தேதி நடைபெறுகிறது. 9-ம் திருநாளான 3-ந் தேதி ஒற்றை பிரபை வாகனத்தில் பந்த காட்சி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • 5-ந்தேதி நம்பெருமாள் உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.
    • நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித் திருநாள் எனப்படும் தை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான தை தேர்த்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் உத்திர வீதிகளில் உலா வந்து, தைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளினார்.

    பின்னர் காலை 6 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி மற்றும் கிழக்கு உத்திரவீதிகளில் வலம் வந்து மீண்டும் காலை 10.00 மணிக்கு நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் தேரின் முன்பாக பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.

    நாளை சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான வருகிற 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • 4 -ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 4-ம் திருநாளான 29-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் உத்தரவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    7-ம் நாளான நேற்று நம் பெருமாள் உபய நாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளி உத்திர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இன்று(வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து நம்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு உத்தரவீதிகளில் வலம் வந்து காலை 9 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 6.30 மணிக்கு குதிரை வாகனத்தில் புறப்பட்டு உத்திரவீதிகளில் வலம் வந்து நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கண்ணாடி அறை சென்றடைகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெறுகிறது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.30 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4 -ந் தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 5-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இந்த விழா 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தைத்தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த விழா வருகிற 5-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    தைத்தேரோட்ட திருவிழாவின் முதல் நாளான நேற்று அதிகாலை 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் கொடிப்படம் புறப்பட்டு வந்து காலை 5.30 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 6.15 மணிக்கு நம்பெருமாள் கொடியேற்ற மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 6.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் புறப்பட்டு உள் திருவீதிகளான 4 உத்திர வீதிகளிலும் வலம் வந்து இரவு 8.15 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளிவிட்டு கண்ணாடி அறை சென்றடைந்தார்.

    2-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்படுகிறார். மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

    திருவிழாவின் 3-ம் நாளான 28-ந் தேதி காலை சிம்ம வாகனத்தில், மாலை யாளி வாகனத்தில், 29-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்தில் மாலை கருட வாகனத்தில், 30-ந் தேதி காலை சேஷ வாகனத்தில், மாலை ஹனுமந்த வாகனத்தில், 31-ந் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்தில், மாலை யானை வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வருகிறார். 1-ந்தேதி நெல் அளவை கண்டருளுகிறார். 2-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×