search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து மனு.
    • அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதி அளித்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல்.

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்தது, அதனைத் தொடர்நது அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணைக்கு நடத்தியதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

    இன்று காலை பணமோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை செப்டம்பர் 9-ந்தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதிலுக்கு மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நான்கு வார காலஅவகாசம் கொடுத்தள்ளது நீதிபதி பிரதிபா எம்.சி. தலைமையிலான பெஞ்ச்.

    அரவிந்த கெஜ்ரிவால் வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நீதிமன்றம் காலஅவகாசம் கொடுத்துள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஜூன் 20-ந்தேதி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. ஆனால் ஜூன் 25-ந்தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமினுக்கு தடைவிதித்தது. ஜூன் 26-ந்தேதி சிபிஐ அவரை கைது செய்தது.

    • பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகள் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.
    • இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

    அவருடன் தொடர்பு டைய இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசை அமலாக்கத்துறை குறைந்த பட்சம் 5 முறை விசாரித்து இருந்தது. குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைத்தது.

    சுதேஷ் சந்திரசேகரிடம் இருந்து ஜாக்குலின் விலை உயர்ந்த பரிசுகள், நகைகளை பெற்றதாகவும், அவர் குற்றவாளி என தெரிந்தே பழகினார் என்றும், இதற்கு பணத்தின் மீதான மோகமே காரணம் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டு இருந்தது.

    இதை ஜாக்குலின் மறுத்து தான் நிரபராதி என்றும், சுகேஷின் குற்ற செயல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருகிறார்.

    இந்த நிலையில் நடிகை ஜாக்குலின் பெர்ணான்ட சுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ஏற்கனவே பல முறை விசாரணை நடத்தி இருந்தும் தற்போது மீண்டும் விசாரணை நடத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
    • இந்த வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு.

    வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

    போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப் பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, தன் மீது தவறாகவும், உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாபர் சாதிக் தான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் வந்தது.

    அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு விசாரைணக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதாடியுள்ளது.

    இந்நிலையில், மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன.

    புதுடெல்லி:

    ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட மறுநாள் அமலாக்கத்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.

    அதன் பின்னர் ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. குடோன்களிலும் சோதனை நடந்தது. ஜாபர் சாதிக்கின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரிடம் அமலாக்க அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது வழக்கு சம்பந்தப்பட்ட பல ஆவணங்களும், வாக்குமூலங்களும் பெறப்பட்டன.

    இதற்கிடையே கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை திகார் சிறைக்குள் சென்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பட்டியாலா சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி அனுமதியை பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அப்போது விசாரணை முழுமையாக முடிக்கப்படவில்லை.

    இதனால் விசாரணையை மீண்டும் நடத்த அதே கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் அனுமதி பெற்றனர். ஜூன் 25 மற்றும் 26-ம் தேதிகளில் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. பணமோசடி தடுப்புச்சட்டம் பிரிவு-50-ன் கீழ் வழங்கப்பட்ட அந்த அனுமதியின்பேரில் அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று ஜாபர் சாதிக்கிடம் மீண்டும் விசாரணை நடத்தினார்கள்.

    வாக்குமூலத்தை பதிவு செய்ய மடிக்கணினி மற்றும் பிரிண்டர்களும் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த விசாரணையைத் தொடர்ந்து வாக்குமூலம் பதிவு ஆவணங்களில் அவரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்க அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.
    • சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி ஷங்கர் ஜிவாலுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில்,

    * சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் 4,730 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    * அரசு அதிகாரிகளின் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளனர்.

    * மாநில அரசு இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தவறி விட்டது.

    * 5 மாவட்டங்களில் சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மிக தெளிவான டிரோன், பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.

    * நான்கு ஒப்பந்த நிறுவனங்களை அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஒரு இடத்தில் 2 இயந்திரங்களை வைத்து மட்டுமே மணல் அள்ளுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் மணல் அள்ளப்பட்டுள்ளது.

    * சண்முகம், ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர்செல்வம், கரிகாலன் உள்ளிட்ட மணல் ஒப்பந்ததாரர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

    * அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாதது ஒப்பந்ததாரர்கள் சொத்துக்களை வாங்கி குவித்ததையும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டி உள்ளது.

    * அனுமதிக்கப்பட்ட அளவை விட 23.64 லட்சம் யூனிட் கடந்த ஆண்டு மட்டும் அதிகம் அள்ளப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால்.
    • சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில் கீழமை நீதிமன்றதில் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அது அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளித்த மனுவால் நிறுத்திவைக்கப்பட்டது.

    தனக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார் கெஜ்ரிவால். கெஜ்ரிவாலின் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், நீதிமன்றத்தில் வைத்தே கலால் கொள்கை வழக்கில் சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் தடையை எதிர்த்து தான் அளித்த மனுவை கெஜ்ரிவால் வாபஸ் பெற்றுக்கொண்டார். மேலும் நீதிமன்றத்தில் தனது உடலில் ரத்த சர்க்கரை அளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கெஜ்ரிவால் விஷயத்தில் அடுத்தடுத்து பரபரப்பான வகையில் காட்சிகள் மாறி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதே இப்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.  மேலும் ஜாமீன் கேட்டு புதிய மனு ஒன்றை கெஜ்ரிவால் தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
    • பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவாலுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையில் தொடக்கத்திலிருந்தே மோதல் போக்கு நிலவி வருகிறது. கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசிகளை அளிக்க சிறை அதிகாரிகள் மறுத்ததாக கூறி ஆம் ஆத்மியினர் திகார் சிறைக்கு முன் போராட்டம் நடத்தியது வரை இந்த மோதல் சென்றது.

    இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரச்சாரம் செய்வதற்காக உச்சநீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.

     

    இந்நிலையில் கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான காலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.இரண்டு நாட்களாக தொடர்ந்த விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவால் சிபிஐ அதிகரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    இதற்கிடையில், இன்று கெஜ்ரிவால் மீண்டும் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் வழங்கப்பட்டு கெஜ்ரிவால் வெளியே வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்திலேயே பாஜக அரசு சிபிஐ அதிகாரிகளை ஏவி இந்த திடீர் கைதை அரங்கேற்றியுள்ளது என்று ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.  

     

    • கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது.
    • அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும்.

    மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீட்டுக்காக 7 கோடி பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக அரூரை சேர்ந்த ஹமீது புகார் மனு தாக்கல் செய்தார்.

    ஹமீது மனுவை விசாரித்த கொச்சி நீதிமன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை தயாரித்த பரவா பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு மோசடி செய்துள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

    மேலும், பரவா ஃபிலிம்ஸ் ஒரு ரூபாய் கூட ஹமீதுக்கு வழங்கவில்லை என்றும் பொய்யான தகவல்களை கூறி அவருடன் ஒப்பந்தம் செய்து பணம் பெற்றுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்திற்காக முதலீடாக ₹7 கோடி பெற்று முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் படத்தின் தயாரிப்பாளர் - நடிகர் ஷோபின் ஷாஹிர் இடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.

    கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் ஷோபினிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது.
    • படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் வசூல் ஈட்டிய படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாள படமான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடி புகார் கூறப்பட்டது.

    அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் பின்னணியில் உள்ள தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய நபர்களால் தான் ஏமாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். தான் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பிறகு தனக்கு வாக்களித்த படி, 40 சதவீத லாப பங்கு கிடைக்கவில்லை என்றும், இந்த மோசடியால் ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சினிமா துறையில் நிதி மோசடிகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையில் இறங்கியது. மஞ்சுமெல் பாய்ஸ் பட புகார் குறித்தும், படத்தின் தயாரிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கறுப்பு பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்தது. தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் அந்த படத்தின் நடிகரும், மற்றொரு தயாரிப்பாளருமான சவுபின் ஷாகிரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் படம் தயாரிப்பு முதலீடு, செலவு, வரவு போன்றவை குறித்து அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். அதன்பிறகு அவர் வீடு திரும்பினார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்படும் என்று அமலாக்கத் துறை இயக்குனரக வட்டாரம் தெரிவித்துள்ளது.

    • செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அ.தி.மு.க. ஆட்சியில் டிரைவர் -கண்டக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக முறைகேட்டில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் வகித்து வந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை தருவதாக கூறி ரூ.1.62 கோடி பணத்தை பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2018-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ரூ.1 கோடியே 62 லட்சம் பணம் பெற்ற விவகாரத்தில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் 2019-ம் ஆண்டு தனியாக ஒரு வழக்கை பதிவு செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். இதன் பிறகே இந்த வழக்கு வேகம் எடுத்தது.

    இதை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில்பாலாஜி கோர்ட்டை நாடினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    இதைதொடர்ந்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்தியிரில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜூன் 21-ந்தேதி இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் பின்னர் அங்கேயே நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜூலை மாதம் 18-ந்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதன் பிறகு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டாக சிறையிலேயே இருந்து வருகிறார்.

    செந்தில் பாலாஜி 6-வது முறையாக ஜாமின் மனுவை தாக்கல் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி ஜாமின் மறு விசாரணைக்கு வர உள்ளது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரிய வரும்.

    • கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார்.
    • முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு

    புதுடெல்லி:

    டெல்லி மதுபான (கலால்) கொள்கை முறைகேடு தொடர்பான சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கவிதாவுக்கு எதிரான துணை குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிபதி கவேரி பேவேஜா முன்னிலையில் அமலாக்கத் துறையால் (திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வின்போது கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட கவிதாவின் காவலையும் நீதிபதி நீட்டித்தார்.

    அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.1,100 கோடிக்கும் மேல் பணமோசடி நடந்துள்ளது. இதில் வழக்கில் சிக்கிய 'இண்டோஸ் பிரிட்ஸ்' நிறுவனம் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு கையூட்டாக தந்த ரூ.100 கோடி, நிறுவனம்தின் லாபமாக பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.192.8 கோடி என மொத்தம் ரூ.292.8 கோடி கவிதாவுக்குத் தொடர்புடையதாகும்.

    வழக்கில் உள்ள தொடர்புகள் மற்றும் தனது ஈடுபாட்டை மறைப்பதற்கு, கைப்பேசிகளில் இருந்த எண்ம ஆதாரங்களை கவிதா அழித்துள்ளார். கைப்பேசியிலுள்ள தகவல்கள் முழுமையாக அழிக்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை' எனக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி ஐதராபாதில் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • விசாரணை அமைப்புகள் அவர்களை இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

    கோடிக்கணக்கான பண மோசடி வழக்கில் நிரவ் மோடி, விஜய் மல்லை போன்ற தொழில் அதிபர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் அவர்கள் வெளிநாட்டிற்கு தப்பியோட காரணம் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது.

    சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டு முன்பு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜாமின் வழங்கப்பட்ட வியோமேஷ் ஷா, நிபந்தனையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கோரிய மனு விசாரணைக்கு வந்தது.

    அப்போது வியோமேஷ் ஷாவின் நிபந்தனை மாற்றி அமைக்கப்பட்டால் நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    ஆனால், விசாரணை அமைப்பின் வாதத்தை நீதிபதி நிராகரித்தார். அத்துடன், "இந்த விவாதங்களை முழுமையாக நான் ஆய்வு செய்து பார்த்ததில் வெளிநாட்டிற்கு ஓடிய நபர்கள், விசாரணை அமைப்புகள் உரிய நேரத்தில் அவர்களை கைது செய்யாததுதான் காரணம் என்பதை கவனிக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன்" எனத் தெரிவித்தார்.

    மேலும், "வியோமேஷ் ஷா சம்மன் அனுப்பியதற்கு பதில் அளிக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஜாமின் பெற்றுள்ளார். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்வதற்காக பலமுறை விண்ணப்பம் செய்துள்ளார். ஷா வழக்கை நிரவ் மோடி, விஜய் மல்லையா, மெகுல் சோக்சி போன்றோர் வழக்குடன் ஒப்பிட முடியாது" என்றார்.

    நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி பலகோடி ரூபாய் பிஎன்பி மோசடியில் முக்கிய குற்றவாளிகள் ஆவார்கள். நிரவ் மோடி தற்போது இங்கிலாந்தில் உள்ள சிறையில் உள்ளார். மெகுல் சோக்சி ஆன்டிகுவாவில் உள்ளார். மல்லையாக இங்கிலாந்தில் உள்ளார். 900 கோடி ரூபாய் லோன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

    ×