search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது.
    • திரிபுராவில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    அகர்தலா :

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார்.

    மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.

    பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

    காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

    நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும்.

    பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது.
    • இதனால் உள்துறை மந்திரி சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் நடக்க உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனி விமானத்தில் சென்றார்.

    இந்நிலையில், திரிபுராவில் கடும் பனி நிலவுதை தொடர்ந்து மோசமான வானிலை ஏற்பட்டது. இதையடுத்து உள்துறை மந்திரி அமித்ஷா சென்ற விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    • இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
    • டெல்லி மகளிர் ஆணையமும் இச்சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது.

    புதுடெல்லி:

    டெல்லியில் காருடன் இழுத்து செல்லப்பட்டு, இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக, டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், கும்பலாக ஆண்கள் சிலர் தங்களது காரின் கீழ் இழுத்துச் சென்றதில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தூக்கில் போடப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கொண்டுள்ளேன். அவர்கள் உயரிய அரசியல் தொடர்பு உள்ளவர்களாக இருப்பினும் இந்த விவகாரத்தில் கருணை காட்டக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை மூத்த போலீஸ் அதிகாரி ஷாலினி சிங் என்பவரிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இதேபோல், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் இந்த சம்பவம் பற்றி தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டதுடன், டெல்லி போலீசாருக்கு நோட்டீசும் அனுப்பி உள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுகிறார்.
    • ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டன், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக செயல்படுகின்றனர்.

    புதுடெல்லி:

    இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.

    ஜனவரி 3-ம் தேதி தொடங்கும் இலங்கை தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பாண்ட்யா சகோதரர்கள் இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

    இதுதொடர்பாக ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், உங்களுடன் விலைமதிப்பற்ற நேரத்தைச் செலவிட எங்களை அழைத்ததற்கு நன்றி. உங்களை சந்தித்தது பெருமையாகவும், பாக்கியமாகவும் இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

    • கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என அமித்ஷா கூறினார்.
    • 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் பெங்களூருவில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் இணைந்து பா.ஜ.க. கூட்டணி அமைக்கப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

    கர்நாடகாவில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் கர்நாடாகாவில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் தெளிவாக கூற விரும்புகிறேன்.

    காங்கிரஸைப் பொறுத்தவரை, அதிகாரத்தைப் பெறுவது ஊழல் செய்வதற்கான ஒரு வழியாகும். ஆனால் எங்களைப் பொறுத்தவரை அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும்.

    சமீபத்தில் நடந்த 7 மாநில தேர்தல்களில் 5 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 6 மாநிலங்களில் காங்கிரஸ் சரிவை சந்தித்துள்ளது என குறிப்பிட்டார்.

    • இந்த 2 கட்சிகளும் ஊழல் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன.
    • இந்த முறை பாஜகவை முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    மண்டியா:

    கர்நாடகாவில் விரைவில் சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தற்போது அங்கு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். ஜனவரி மாதம் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்றே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    கர்நாடகா மாநில பாஜக சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை மாநாடு மண்டியாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன.அந்த கட்சிகள் ஊழல் கொள்ளை நடத்துகின்றன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அது டெல்லி ஏ.டி.எம். போல செயல்படும். மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி செய்தால், அது ஒரு குடும்ப ஏ.டி.எம். ஆக இருக்கும். இந்த 2 கட்சிகளும் ஊழல்கள் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளன. அதனால் ஊழல், வாரிசு அரசியலில் இருந்து கர்நாடகாவை விடுவிக்க வேண்டும்.

    மண்டியா, மைசூரு மண்டலத்தில் அந்த இரு கட்சிகளுக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்தது போதும். இந்த முறை பாஜகவை நீங்கள் முழு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் இரட்டை என்ஜின் அரசை கொண்டு வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் கர்நாடகத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஜம்முவில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை அமித்ஷா ஆய்வு செய்தார்.
    • ஒவ்வொரு பிரிவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிக்க அறிவுறுத்தல்.

    ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் சமந்த் குமார் கோயல், மத்திய ரிசர்வ் இயக்குனர் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜம்முவில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமித்ஷா ஆய்வு செய்தார். 


    காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அப்போது அவர் வலியறுத்தினார். பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சியின் பலன்களை உறுதி செய்தல், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் திட்டங்கள் சென்று சேர்வதை கண்காணிப்பது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

    மேலும் இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத பிரச்சாரத்தை தகர்க்க வேண்டும் என்றார். பயங்கரவாத சூழல் அமைப்பை அழிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரிவினைவாத பிரச்சாரத்திற்கு உதவி, ஊக்கம், ஆதரவு கூறுகளை களைய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

    • பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரும் புகழே வெற்றிக்கு காரணம்.
    • 2024 மக்களவைத் தேர்தலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும்.

    சூரத்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் காணொலி மூலம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    மாநில தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி, குஜராத் பாஜக கோட்டையாக இருந்தது, இனி எப்போதும் இருக்கும் என்பதை நிரூபிக்கிறது. இந்த முடிவு மற்ற மாநில தேர்தல்களிலும், 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும். பிரதமர் மோடிக்கு நாட்டிலும், குஜராத்திலும் கிடைத்த பெரும் புகழே இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம்.

    இந்த தேர்தலில் புதிய கட்சிகள் குஜராத்திற்கு வந்தன, வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்களை அளித்தன, ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவற்றை காணவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செல்போனில் ‘பெகாசஸ்’ பொருத்தப்பட்டதாக அவர் சொல்கிறார்.
    • உங்கள் தலைவரைப் போலவே, நீங்களும் படிப்பதில்லை

    புதுடெல்லி :

    நாடாளுமன்ற மக்களவையில் நேற்று போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விவாதம் நடந்தது. அதில், காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகாய் பேசியதாவது:-

    இந்தியாவுக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க நிலம், கடல் எல்லைகளிலும், சர்வதேச விமான நிலையங்களிலும் என்னென்ன கண்காணிப்பு முறைகளை வைத்து இருக்கிறீர்கள். அதுபோல், இந்தியா-மியான்மர் எல்லையில் ஆயுத கடத்தல், ஆள்கடத்தல் மற்றும் விலங்குகளின் பாகங்கள் கடத்தலை முறியடிக்க என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறீர்கள்.

    எங்களை மீண்டும், மீண்டும் உளவு பார்க்கிறீர்கள். எங்கள் போன்களிலும், பத்திரிகையாளர்கள் போன்களிலும் 'பெகாசஸ்' மென்பொருளை பொருத்துகிறீர்கள். அந்த மென்பொருளை பயன்படுத்தி, இதுவரை எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது குறுக்கிட்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அவரை கடுமையாக கண்டித்தார். அமித்ஷா கூறியதாவது:-

    தனது செல்போனில் 'பெகாசஸ்' பொருத்தப்பட்டு இருப்பதாக தீவிரமான குற்றச்சாட்டை உறுப்பினர் கூறியிருக்கிறார். அதற்கான ஆதாரத்தை அவர் சபையில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரது வார்த்தைகள் நீக்கப்பட வேண்டும். இந்த சபை, அக்கறையுடன் விவாதம் நடத்தும் இடம், பொறுப்பற்ற அரசியல் செய்யும் இடம் அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதற்கு கவுரவ் கோகாய், சபாநாயகர் ஓம்பிர்லாவை பார்த்து, ''உளவு பார்க்க 'பெகாசஸ்' பயன்படுத்துகிறீர்களா? இல்லையா? என்று நான் கேட்டது தவறா? என்று சபாநாயகர் தீர்ப்பளிக்க வேண்டும்'' என்று கூறினார்.

    அமித்ஷா மீண்டும் பேசுகையில், ''தனது செல்போனில் 'பெகாசஸ்' பொருத்தப்பட்டதாக அவர் சொல்கிறார். அதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். இதுபோன்று அவர் பேசக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பளித்து விட்டது. உங்கள் தலைவரைப் போலவே, நீங்களும் படிப்பதில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது'' என்று கூறினார்.

    அப்போது, சபாநாயகர் ஓம்பிர்லா குறுக்கிட்டு, ''உறுப்பினர்கள் ஆதாரத்துடன் கருத்துகளை முன்வைத்தால், சபையின் கண்ணியம் அதிகரிக்கும்'' என்று அறிவுறுத்தினார்.

    • கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன.
    • பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது.

    ஷில்லாங் :

    இந்தியாவின் 8 வட கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகியவற்றின் நலனுக்காக, குறிப்பாக அவற்றின் பொருளாதார, சமூக மேம்பாட்டுக்காக 1972-ம் ஆண்டு நவம்பர் 7-ந் தேதி வடகிழக்கு கவுன்சில் ஏற்படுத்தப்பட்டது.

    இந்த வட கிழக்கு கவுன்சில் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பொன்விழா கொண்டாட்டம், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் கலந்து கொண்டார்.

    இந்த விழாவில் பேசும்போது அமித்ஷா கூறியதாவது:-

    வட கிழக்கு மாநிலங்கள் என்றால் வன்முறை, பிரிவினைவாதம் என்றுதான் ஒரு காலத்தில் அறியப்பட்டன. ஆனால் (மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிற) கடந்த 8 ஆண்டுகளில் வன்முறை சம்பவங்கள் 70 சதவீதம் குறைந்து விட்டன. பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல் 60 சதவீதம் சரிந்து விட்டது. வன்முறை சம்பவங்களில் பொதுமக்கள் பலியாவது 89 சதவீதம் குறைந்திருக்கிறது.

    வட கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் அமைதியை ஏற்படுத்தியது.

    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடி 50 முறை இங்கு வந்துள்ளார். இந்த பிராந்திய வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டியவரும் அவர் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.
    • போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநில தலைநகர்  கொல்கத்தாவில் நடைபெற்ற 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்களும், பீகார் மற்றும் ஒடிஸா மாநில துணை முதலமைச்சர்களும், உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா கூறியுள்ளதாவது: 


    கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், மண்டலக் கவுன்சில் கூட்டங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவகாரங்கள் குறித்த விவாதம் நடத்தப்பட்டு, அவற்றில் 93 சதவீத விவகாரங்களுக்குத் தீர்வு கண்டிருப்பது மிகப்பெரிய சாதனை. பல்வேறு விவகாரங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு, தொடர்ச்சியாகக் கூட்டங்கள் நடத்தப் பட்டதே இதற்கு காரணம். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான ஒருமித்த ஒத்துழைப்புக்கு , மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் செயலகங்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன.

    கிழக்கு மண்டலங்களில் உள்ள மாநிலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சியில், கிழக்கு மண்டல மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.கிழக்கு மண்டலத்தில் இருந்து இடதுசாரி தீவிரவாதம் பெருமளவுக்கு ஒழிக்கப்பட்டுள்ளது.

    இதனை முற்றிலும் ஒழிக்க தீர்க்கமான வழிமுறைகள் உருவாக்கப்படும். கிழக்கு மண்டல மாநிலங்களில், இடதுசாரித் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்காமல் கண்காணிக்கவும், மற்ற மாநிலங்களுக்கு நிகரான வளர்ச்சியை அந்த மாநிலங்கள் எட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், போதைப்பொருட்கள் நடமாட்டத்தைத் தடுக்க, மாவட்ட அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதை முதலமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு நுட்பத்தின் உதவியுடன், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள்.
    • மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது.

    புதுடெல்லி:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் வெளிநாடு நிதி பெறுவது தொடர்பான உரிமம் ரத்து குறித்து கேள்வியை தவிர்க்கவே பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எல்லை பிரச்சினையை எழுப்பியது.

    சீன தூதரகத்தில் இருந்து ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி நன்கொடை கிடைத்தது. இது எப்.சி.ஆர்.ஏ. விதிகளின்படி இல்லாததால் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் சீன ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து விட்டு தற்போது நாடகம் ஆடுகிறார்கள்.

    மோடி அரசு இருக்கும் வரை ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×