search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார்.
    • இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் தங்களது X கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

    முன்னதாக தெலுங்கானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, 'மோடியுடன் நீங்கள், உங்களுடன் மோடி' என்ற முழக்கத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் இன்று இந்திய தேசம் முழுவதும் உரத்த குரலில் 'நான் மோடியின் குடும்பம்' என்று கூறுகிறது என்று தெரிவித்தார்.

    இதே போல் 2019 மக்களவை தேர்தலிலும் சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என தெரிவித்திருந்தார்;

    பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என்று லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்த நிலையில், நான் மோடியின் குடும்பம் என்ற வாசகத்தை பாஜகவினர் இன்று தனது X கணக்கில் இணைத்துள்ளனர்.


    • நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    • பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.

    "தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும் நெல்லை தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், 28 பேர் பெண்கள், பட்டியலினத்தவர்- 27, ஓபிசி- 57 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அதன்படி, முதற்கட்ட பட்டியலில், பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

    பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இன்னும் முழுமை அடையாததால் அடுத்தகட்ட பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
    • குஜராத் காந்தி நகரில் உள்துறை மந்திரி அமித்ஷா போட்டியிடுகிறார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட்டது. தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. வெளியிட்ட அறிவிப்பில் 195 வேட்பாளர்களை அறிவித்தது. வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.

    உ.பி.யில் 51, ம.பி.யில் 24, மேற்கு வங்காளத்தில் 20, குஜராத்தில் 15, கேரளாவில் 12, சத்தீஸ்கரில் 11, டெல்லியில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் 34 மத்திய மந்திரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    குஜராத் காந்தி நகரில் அமித்ஷாவும், போர்பந்தரில் மன்சுக் மாண்டவியாயும், அருணாசல் பிரதேசத்தில் கிரண் ரிஜிஜுவும் போட்டியிடுகின்றனர்.

    நடிகர் சுரேஷ் கோபி கேரளாவின் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இந்தப் பட்டியலில் 47 இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    தமிழகத்துக்கு வேட்பாளர் ஒருவரும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.
    • 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

    சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் உள்ள கண்காட்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாஜக மக்களவை பூத் கமிட்டி கூட்டத்தில் அமித்ஷா பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    2004- 2014 வரை சோனியா- மன்மோகன் அரசு மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 1,99,000 கோடி மட்டுமே வழங்கியது.

    அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளில் மத்தியப்பிரதேசம் மாநிலத்திற்கு ரூ. 7,74,000 கோடி கொடுத்தார். ஒவ்வொரு யாத்திரைத் தளங்களையும் பாஜக அரசு மேம்படுத்தியது. 

    நோய் வாய்ப்பட்டிருந்த மத்தியப் பிரதேசத்தை உயிர்ப்பித்து வளர்ந்த மாநிலமாக மாற்றியது. வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்குப்பின் இந்தியா மீண்டும் மகத்துவம் பெறும்.

    இந்தியா வல்லரசாக மாறும். மேலும், உலகின் 3-வது பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மாற்றிக் காட்டுவோம்.

    இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சி ஊழலுக்கு இணையான கட்சி. காங்கிரஸ் என்றால் ஊழல், ஊழல் என்றால் காங்கிரஸ். 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து உள்ளார்கள்.

    10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு பைசா கூட திருடினார் என்று அவர்களால் குற்றம் சாட்ட முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காட்டாங்குளத்தூரில் நடக்கும் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.
    • ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பா.ஜனதாவின் சார்பில் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை நடக்கிறது. இந்த கூட்டத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்தும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக இருந்தது. அதன் பின்னர் மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுவதாக பயண நிகழ்ச்சி வகுக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அவர் திடீரென பயண திட்டத்தை மாற்றியுள்ளார். காலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மாலையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவிற்கு பதில் மாநில செயலாளர் அண்ணாமலையும், பொறுப்பாளர் தேசிய விநாயகமும் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 5 மணிக்கு நட்டா டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அதன் பிறகு அமைந்தகரையில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்று நேற்று நடந்தது.
    • இத்தாலி ஜோடியை வீழ்த்தி போபண்ணா-மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, இத்தாலியின் சிமோன் போலெலி-ஆன்ரீயா வவாசோரி ஜோடியைச் சந்தித்தது.

    பரபரப்பாக நடந்த போட்டியில் 7-6, (7-0), 7-5 என்ற செட்களில் இத்தாலி ஜோடியை வீழ்த்தி ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்த வெற்றியின் மூலம் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற வரலாற்று சாதனையை ரோகன் போபண்ணா படைத்துள்ளார். அவர் 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    இந்நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரோகன் போபண்ணாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெற்றிபெற வயது ஒரு தடையில்லை என்பதை ரோகன் போபண்ணா மீண்டும் மீண்டும் காட்டுகிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் வெற்றிக்கு அவருக்கு எனது வாழ்த்துக்கள். எப்பொழுதும் நமது ஆன்மா, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறன்களை வரையறுக்கிறது என்பதை அவரது குறிப்பிடத்தக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டலாக உள்ளது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், உண்மையான திறமைக்கு எந்த எல்லைகளும் தெரியாது. ஆஸ்திரேலிய ஓபனில் வெற்றி பெற்ற ரோகன் போபண்ணாவுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தளராத கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால், நீங்கள் ஒரு சர்வதேச சின்னம் ஆக உருவாகி இருக்கிறீர்கள். முரண்பாடுகளை தகர்த்து நாட்டுக்கு கவுரவம் சேர்த்துள்ளீர்கள். உங்களுடைய வருங்கால முயற்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஆஸ்திரேலியா ஓபன் 2024ல் மேத்யூ எப்டனுடன் இணைந்து நமது ரோகன்போபண்ணா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக முன்னேறிய ரோகனுக்கு எனது வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார்.

    • ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார்.
    • அசாமில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மணிப்பூரில் தொடங்கினார். தற்போது அவரது யாத்திரை அசாமில் நடந்து வருகிறது. அங்கு யாத்திரையில் ராகுல் காந்திக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேற்று கவுகாத்தி நகர எல்லையில் ராகுல் காந்தியின் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை நடத்தி வரும் நிலையில் அசாமின் நாகோன் மாவட்டத்தில் யாத்திரையில் பா.ஜ.க.வினர் இடையூறு ஏற்படுத்தினர். ஆபத்தான முறையில் ராகுல் காந்திக்கு அருகில் வந்து மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கினர்.

    இதில் அசாம் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக இருந்தனர். சில நேரங்களில் பா.ஜ.க. தொண்டர்கள் யாத்திரைக்குள் செல்ல வசதி செய்து தந்துள்ளனர். இது ராகுல் காந்தியைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையத்தை உடைத்து அவரது மற்றும் யாத்திரையில் பங்கேற்பவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிப்பதாக உள்ளது.

    எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அசாம் முதல் மந்திரி மற்றும் அசாம் காவல்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க நீங்கள் தலையிட்டு உத்தரவிட வேண்டும். ராகுல் காந்தி மற்றும் யாத்திரையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக சந்திப்பு.
    • சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தல்.

    தமிழக எம்.பிக்கள் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமிஷ்ஷாவை சந்தித்தனர்.

    டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக எம்.பி.க்கள் குழு, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

    அப்போது, தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு, விரைந்து நிவாரணம் வழங்குமாறும், சுமார் 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறும் எம்.பி.க்கள் குழு அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சந்திப்பின்போது, திமுக- டி.ஆர்.பாலு, ம.தி.மு.க- வைகோ, சி.பி.ஐ- சுப்பராயன், சி.பி.எம்.- நடராஜன் உள்ளிட்டோர் அமித்ஷாவுடன் சந்தித்தனர்.

    மேலும், விடுதலை சிறுத்தைகள் சட்சி- ரவிக்குமார், ஐ.யு.எம்.எல்- நவாஸ் கனி, கொங்கு நாடு மக்கள் கட்சி- சின்ராஜ் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர்.

    • மிச்சாங் புயல் நிவாரணப் பணிகளுக்காக 9,692.67 கோடி ரூபாய்.
    • தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாய்.

    தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

    தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த இந்த இரண்டு மிகப்பெரிய இயற்கைப் பேரிடர்களுக்கும் மத்திய அரசிடமிருந்து நிவாரணத் தொகையாக தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 37,907.19 கோடி ஏற்கனவே கோரியுள்ளது. இது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 19,692.67 கோடி ரூபாயும், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக 18,214.52 கோடி ரூபாயும் உள்ளடக்கியதாகும்.

    மிச்சாங் புயலினால் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் எற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட மததிய குழுவினர் டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அதோடு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழ்நாட்டிற்கு வந்து, மிச்சாங் புயல் வெள்ள பாதிப்புகளை 7-12-2023 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

    அதேபோன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழை காரணமாக ஏற்பட்ட பெருத்த பாதிப்புகளை மத்தியக் குழுவினர் 20-12-2023 அன்று நேரில் பார்வையிட்டனர். ஒன்றியக் குழுவினர் இம்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்திடத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு செய்து தந்திருந்தது.

    இதுமட்டுமின்றி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் 26-12-2023 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்று, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2-1-2024 அன்று தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, திருச்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்புகள் தொடர்பாக குறிப்பிட்டு, சேதங்கள் குறித்த தனது வருத்தத்தையும், வேதனையையும் பதிவு செய்திருந்தார்.

    ஆனால், மத்திய குழுக்களின் வருகைக்குப் பின்னரும், ஒன்றிய அமைச்சர்கள் பார்வையிட்டதற்குப் பிறகும், நிவாரணத் தொகை கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டு கோரிக்கை மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், மத்திய அரசிடமிருந்து இதுவரை நிவாரணப் பணிகளுக்கென எந்தவொரு நிவாரணத் தொகையும் பெறப்படவில்லை.

    இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டபோது, குறுகிய காலத்திற்குள் மத்திய அரசு நிவாரண நிதியினை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், மாநில மக்களின் நலனில் அக்கறை கொண்டு, இரண்டு பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் தற்காலிக சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும், கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழையெளிய, நடுத்தர மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும், தமிழ்நாடு அரசு இதுவரை 2,100 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

    அதுமட்டுமின்றி, இந்த இயற்கைப் பேரிடர்களினால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான வாழ்வாதார மறுகட்டமைப்புத் திட்டத்தினையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு கோரியுள்ள 37,907.19 கோடி ரூபாயினை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், மத்திய உள்துறை அமைச்சர் மித்ஷாவை சந்திக்க நேரம் கோரப்பட்டுள்ளது என தமிழக அமைச்சர் சில தினங்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் நாளைமறுநாள் (சனிக்கிழமை) மதியம் மூன்றரை மணியளவில் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறது தமிழக பாராளுமன்ற அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு. அப்போது வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்யக்கோரி வலியுறுத்த உள்ளனர்.

    • எல்லை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
    • ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்

    ஜம்முவின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பி சென்ற நிலையில், அவர்களை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 2-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் போலீசார் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் அதிகரிப்பது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, ஜன.9 அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளார். அங்கு எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
    • மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் நிவாரணத் தொகை வழங்கவில்லை.

    தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர்.

    மிச்சாங் புயல், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.

    இந்நிலையில், வெள்ள நிவாரணத் தொகையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழகத்தை சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் நேரம் கோரியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," மத்திய அமைச்சர்கள், மத்திய குழு ஆய்வு செய்த பின்னரும் எவ்வித நிவாரண தொகையும் பெறப்படவில்லை.

    மற்ற மாநிலங்களில் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோது குறுகிய காலத்தில் மத்திய அரசு நிவாரண நிதியை வழங்கியது.

    தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907.19 கோடியை உடனே வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    ×