search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமித்ஷா"

    • தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகு பா.ஜனதாவினர் மீது 409 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.
    • பா.ஜனதாவினர் கொடுக்கும் புகார்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர். கூட போடுவதில்லை.

    சென்னை:

    தமிழக அரசு பா.ஜனதாவினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் பா.ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து முன்னாள் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை மேலிடம் அனுப்பி வைத்தது.

    இந்த குழுவினர் பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே கொடிக் கம்பம் அகற்றப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் வீடுகளுக்கும் நேரில் சென்று விசாரித்தார்கள். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தனர்.

    தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகு பா.ஜனதாவினர் மீது 409 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. இதில் 70 சதவீதம் வழக்குகள் சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்ட பதிவுகளுக்காக போடப்பட்டுள்ளது.

    அண்ணாமலை வீடு முன்பு கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் 6 பேர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவினர் கொடுக்கும் புகார்கள் தொடர்பாக எப்.ஐ.ஆர். கூட போடுவதில்லை.

    மசூதி அருகே இருந்ததால் தான் பா.ஜனதா கொடிக் கம்பத்தை அகற்றியதாக கூறுகிறார்கள். அதே இடத்தில் தி.மு.க. கொடிக் கம்பம் இருக்கிறது. அந்த கொடிக் கம்பம் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கிறது. ஆனால் பா.ஜனதா கொடிக்கம்பம் தெருவுக்குள் அண்ணாமலை வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்தது. அதை அகற்ற என்ன அவசியம் வந்தது.

    அரசு நிர்வாகமும் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பழி வாங்கும் எண்ணத்தில் செயல்படுவது தெரிகிறது.

    இந்த விஷயத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலையிட வேண்டும். இதுதொடர்பாக தமிழக நிலவரங்கள் தொடர்பான அறிக்கையை மேலிட குழுவினர் அமித்ஷாவிட மும், அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டாவிடமும் வழங்க உள்ளனர்.

    தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சூழலில் மத்திய உள்துறை தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி உள்ளனர்.

    • கூட்டணி முறிந்தது டெல்லி தலைமையை வருத்தத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது.
    • ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

    சென்னை:

    பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா-அ.தி.மு.க. இடையேயான கூட்டணி முறிந்துள்ளது.

    இந்த கூட்டணி முறிவுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது அ.தி.மு.க. தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுக்கு எதிராகவும், தலைவர்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையிலும் அவர் கருத்து தெரிவித்தது அ.தி.மு.க.வினரை கோபப்படுத்தியது.

    ஆனால் அண்ணா பற்றி தான் கூறிய கருத்துக்கள் வரலாற்று உண்மை. அதற்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என்று அண்ணாமலை உறுதியாக கூறினார்.

    இதையடுத்து அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்தனர். அந்த கூட்டத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவெடுத்து அறிவித்தனர்.

    இந்த கூட்டணி முறிவு விவகாரம் டெல்லி பா.ஜனதா தலைவர்களை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வுடனான கூட்டணி தொடர வேண்டும். 2024 பாராளுமன்றத் தேர்தலையும் இதே கூட்டணியில் தான் சந்திக்க வேண்டும் என்று டெல்லி தலைமை ஆலோசனை வழங்கி வந்தது. அதனால்தான் அவ்வப்போது நெருடல்கள் ஏற்பட்டபோது டெல்லி தலைவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கூட்டணி முறிந்தது டெல்லி தலைமையையும் வருத்தத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அண்ணாமலையிடம் விளக்கம் கேட்க முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லி சென்ற அண்ணாமலை கட்சி தலைவர் ஜே.பி.நட்டா, அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து பேசினார். அதே போல் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனையும் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது ஒவ்வொரு இடங்களிலும் பேசும்போது அங்குள்ள வரலாற்று நிகழ்வுகளை பேசுவது வழக்கம். அந்த மாதிரிதான் அண்ணா பற்றிய கருத்தும் அமைந்தது. இது இயற்கையாகவே அமைந்தது என்று தன் தரப்பு விளக்கத்தை அண்ணாமலை கூறியிருக்கிறார்.

    தொடர்ந்து அமித்ஷாவையும் சந்திக்க டெல்லியில் தங்க வேண்டி வந்ததால் இன்று சென்னையில் நடைபெறுவதாக இருந்த மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    அண்ணாமலை இன்று அமித்ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணி தொடர்பாக அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அமித்ஷா ஆலோசனைகள் வழங்குவார் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்று ஆகிவிட்டதால் பா.ஜனதா தலைமையில் புதிய அணியை உருவாக்குவதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பா.ஜனதா தலைவர்கள் தொடர்பில் இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார். பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதன் பலனை எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

    எனவே இவர்கள் பா.ஜனதா பக்கம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் த.மா.கா., டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகள் இன்னும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவில்லை.

    இந்த கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி பயணத்தை முடித்து கொண்டு அண்ணாமலை நாளை சென்னை திரும்புகிறார்.

    நாளை மறுநாள் (5-ந் தேதி) தன் மீதான வழக்கில் கோர்ட்டில் ஆஜராகிறார்.

    பின்னர் 6-ந் தேதியில் இருந்து 3-ம் கட்ட யாத்திரையை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

    இன்று சென்னையில் நடைபெற இருந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருந்த கோட்ட பொறுப்பாளர்கள் 10 பேருடன் கட்சி அலுவலகத்தில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன் ஆலோசனை நடத்தினார்.

    • டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா இடையே இருந்த கூட்டணி முறிந்து போனதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்த கடுமையான விமர்சனங்கள்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்ததால் ஏற்கனவே கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. விலகி சென்றதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை ஏற்று இன்று காலை அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் கோவையில் தூய்மை பணி திட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் காலையில் அவர் செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.20 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அண்ணாமலை புறப்பட்டு செல்கிறார்.

    டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையெனில் நாளை காலை முதல் மதியம் வரை அடுத்தடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    இதற்காக அண்ணாமலை அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையில் அவர் தமிழக பா.ஜ.க. தொடர்பான பல்வேறு தகவல்களை தொகுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வில் முடிவுகள் எடுக்கப்பட்டால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று வலியுறுத்த உள்ளார்.

    இதுவரை இருந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னே்றறக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டதும், இந்த தோழமைக் கட்சிகள் என்ன முடிவு எடுப்பது? யார் பக்கம் போவது? என்பதில் தொடர்ந்து குழப்பத்துடன் உள்ளன. கூட்டணி தொடர்பாக இந்த கட்சிகள் இதுவரை உறுதியாக முடிவு எடுக்கவில்லை.

    பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன. எனவே இந்த கட்சிகள் அ.தி.மு.க. பக்கம் சாயுமா? அல்லது பா.ஜனதா பக்கம் சாயுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

    ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் தற்போது வரை நடுநிலையுடன் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி நீடிக்க வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது. மீண்டும் கூட்டணி ஏற்படாவிட்டால் இவர்கள் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளை அரவணைத்து 3-வது அணியை உருவாக்கலாம் என்று அண்ணாமலை மேலிடத் தலைவர்களிடம் நாளை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டால்தான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அண்ணாமலை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ம.தி.மு.க., ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தர் கட்சி, ஈஸ்வரன் கட்சி இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன.

    தற்போது உள்ள சூழ்நிலையில் 20 முதல் 23 சதவீத வாக்குகளை பா.ஜனதா பெற முடியும் என்று அண்ணாமலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்ட உள்ளார். டெல்லி மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையின் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பு ஏற்படலாம்.

    2 நாள் பயணமாக டெல்லி செல்லும் அண்ணாமலை தனது திட்டத்தை டெல்லி மேலிடத் தலைவர்களிடம் விலக்கி கூறி அனுமதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நாளை மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளார். நாளை மறுநாள் சென்னையில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த கூட்டத்தில் டெல்லி மேலிட தலைவர்களின் கருத்துக்களை அண்ணாமலை விளக்கி கூறுவார். 3-வது அணிக்கு பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்பது அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பாக அமையும்.

    புதிய அணிக்கு பா.ஜனதா முயற்சி செய்தால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளன.

    • இதனால் பெருமளவில் பொருள், நேரம், மனிதவளங்கள் மிச்சமாகும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது
    • முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர் மட்ட கமிட்டி அமைக்கப்பட்டது

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில் பொருள், நேர மற்றும் மனிதவள விரையங்கள் தடுக்கப்படுவதுடன், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முக்கிய முடிவுகளை தொலைநோக்கோடு எடுப்பதற்கும் இது உதவும் என்பதால் இதனை தீவிரமாக ஆளும் பா.ஜ.க. அரசு பரிசீலித்து வருகிறது.

    இதற்காக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட கமிட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இன்று அந்த கமிட்டியின் முதல் சந்திப்பு நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆணைய இயக்குனர் என் கே சிங், முன்னாள் மக்களவை பொது செயலாளர் சுபாஷ் கஷ்யப் மற்றும் முன்னாள் தலைமை கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கு பெற்றனர்.

    முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகள், மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள், பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆகியோரை அழைத்து அவர்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இவை மட்டுமல்லாமல் சட்ட ஆணையத்தின் கருத்தை கேட்கவும் சட்டத்துறை முடிவெடுத்துள்ளது.

    இந்த சந்திப்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கலந்து கொள்ளவில்லை. அவரையும் உறுப்பினராக்கியிருந்தும், தான் இதில் பங்கு பெற விரும்பவில்லை என அவர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் 2021ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மேலும் சில மாநிலங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டம் அமலுக்கு வந்தால் இந்த மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுமா என விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானாவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஐதராபாத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார்.

    ஐதராபாத்:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெலுங்கானா மாநிலத்தில் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இந்நிலையில், ஐதராபாத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    இதுதொடர்பாக, அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை ஐதராபாத்தில் இன்று சந்தித்தேன். விளையாட்டுத் திறமைக்காக அவர் பெற்றுள்ள சர்வதேச அங்கீகாரத்தில் தேசம் பெருமிதம் கொள்கிறது. அவரது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

    • பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான அணியை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அந்தக் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இதன் எதிரொலியாகவே தமிழகத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியில் முழுமையாக அமர்ந்த பிறகு முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதால் தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

    மதுரையில் பிரமாண்டமான முறையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்திக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். பாரதிய ஜனதாவுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற முறையில் கூடுதல் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் (அ.தி.மு.க.) 20 இடங்களில் போட்டியிடுங்கள்.

    எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள். இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கேட்டதாக தெரிகிறது.

    அமித்ஷாவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல், கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே மீண்டும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.

    குறிப்பாக தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

    இதன் மூலம் கூட்டணியை பலப்படுத்த அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இருவருமே வரும் நாட்களில் தீவிரம் காட்ட களம் இறங்க உள்ளனர்.

    இதன்படி அமித்ஷா அடுத்த மாதம் இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகத்துக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான காய் நகர்த்தல்கள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தன்னை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறார்.

    இதை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தனது மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

    இதன் காரணமாகவே அவர் தன் மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு விவகாரம் பற்றியும் பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் இன்று டெல்லி சென்றார்.
    • டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

    இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி சென்றார்.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

    இந்தச் சந்திப்பின் போது பாராளுமன்ற தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    • பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்.
    • அங்கு அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரையும் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்.

    சென்னனை:

    பாராளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெறவும், இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறவும் பா.ஜ.க. தீவிரமாக வேலை செய்து வருகின்றது.

    இதற்கிடையே, பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று டெல்லி செல்கிறார்.

    இந்த கூட்டத்துக்கு பிறகு ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோரை எடப்பாடி பழனிசாமி தனித்தனியே சந்தித்து, பா.ஜ.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.
    • மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

    சென்னை:

    சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுக்கு ஒப்பிட்டு அதை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் பா.ஜனதா சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

    இதற்கிடையில் சனாதனம் பற்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா ஊடக பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.என்.எஸ். பிரசாத் மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் உதயநிதியின் பேச்சு இந்து மதத்தின் புனிதத்தை இழிவுபடுத்தும் வகையில் தவறான வகையில் மக்களின் பொது அமைதிக்கும் தேச ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    சுய விளம்பரத்துக்காகவும், அரசியல் லாபத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மத ரீதியான பிளவுகளை உண்டாக்கும் வகையில் தி.மு.க. செயல்படுகிறது.

    மக்களிடையே ஒற்றுமை உணர்வை குலைக்கும் இந்த போக்கை தி.மு.க. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இப்போது இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

    இதன் பின்னணி, பின்புலத்தின் நோக்கம் கண்டறியப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

    வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 2 மாதங்களில் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளும் 4-வது சுற்றுப்பயணம் இதுவாகும்.
    • காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நாளை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகிறார்.

    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. கட்சி தலைவர்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    மத்திய மந்திரி அமித் ஷா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று மாநில காங்கிரஸ் அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் மகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள சாரிபாலிக்கு பழங்குடியினர் சமூக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    தொடர்ந்து பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். கடந்த 2 மாதங்களில் அமித்ஷா சத்தீஸ்கர் மாநிலத்தில் மேற்கொள்ளும் 4-வது சுற்றுப்பயணம் இதுவாகும். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் நாளை (சனிக்கிழமை) சத்தீஸ்கர் மாநிலத்திற்கு வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தும் அவர் 'யுவ சம்வாத்' நிகழ்ச்சியில் இளம் வாக்காளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    • மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார்
    • பிரசாரத்தில் பிரதமர் மோடிதான் முன்னிலை படுத்தப்படுவார் என அமித்ஷா சூசக தகவல்

    மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இதனால் மீண்டும் சிவராஜ் சவுகான் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தல் பா.ஜனதா எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக தொடருவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தேர்தல் முடிவுக்கு பின்னர்தான், முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித்ஷா பதில் அளித்துள்ளார்.

    மேலும், ''சிவராஜ் சவுகான் முதலமைச்சராக இருக்கிறார். இது எங்கள் கட்சியின் வேலை. நாங்கள் முடிவு செய்வோம். அவர் முதலமைச்சர். நாங்கள் தேர்தலில் இருக்கிறோம். பிரதமர் மோடி மற்றும் சவுகான் தலைமையிலான ஆட்சியில் நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும். ஆகவே, வளர்ச்சி தேர்தல் நிகழ்ச்சி நிரலாக அமைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். பிரதமர் மோடி, பிரசாரத்தின்போது முன்னிலைப் படுத்தப்படுவார்'' என்றார்.

    பா.ஜனதா எப்போதுமே, தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதில்லை. மீண்டும் ஆட்சியை பிடித்தால், ஏற்கனவே முதல்வராக இருக்கும் நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருந்தாலும், பா.ஜனதாவின் பாராளுமன்ற குழுதான் இறுதி முடிவு எடுக்கும்.

    ×