search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஹேரியர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த கார் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 ஜனவரி மாத வாக்கில் ஹேரியர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததில் இருந்து அவ்வப்போது புது அம்சங்கள் மூலம் ஹேரியர் மாடல் அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த காரின் நிற ஆப்ஷன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தன. அந்த வரிசையில் ஹேரியர் ஜெட் எடிஷன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், டாடா ஹேரியர் புது வேரியண்ட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், கார் எப்படி காட்சியளிக்கும் என ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. அந்த வகையில் பேஸ்லிப்ட் மாடலின் முன்புற கிரில் மாற்றப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் எல்இடி டிஆர்எல்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காரின் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்ட கேசிங் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபினில் மேம்மபட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரிவைஸ்டு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: Zigwheels

    • லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் S மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய உருஸ் S மாடலில் செயல்திறனுடன், ஆடம்பர வசதிகள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன.

    லம்போர்கினி நிறுவனம் உருஸ் சீரிசில் புது மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லம்போர்கினி கார் உருஸ் S என அழைக்கப்படுகிறது. புதிய லம்போர்கினி உருஸ் S மாடலில் அதிக ஆடம்பர அம்சங்கள் மற்றும் கஸ்டமைசேஷன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இண்டீரியரை பொருத்தவரை புதிய உருஸ் S மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை.

    எனினும், இந்த காரில் ஆடம்பரத்திற்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் இண்டீரியர் அம்சங்கள் வித்தியாசமான பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய உருஸ் S மாடலில் 4.0 லிட்டர், ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 666 ஹெச்பி பவர் மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். போக்ஸ்வேகன் குழுமத்தின் மிகவும் சக்திவாய்ந்த வி8 என்ஜின் என்ற பெருமையை இந்த மாடலும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

    புதிய லம்போர்கினி உருஸ் S மாடல்- சபியா, நீவ் மற்றும் டெர்ரா என மூன்று வித ஆஃப் ரோட் ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்டிரீட், ஸ்போர்ட் மற்றும் டிராக் போன்ற டிரைவிங் மோட்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த காரின் வினியோகம் ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் தான் லம்போர்கினி நிறுவனம் தனது 200-ஆவது எஸ்யுவியை இந்தியாவில் வினியோகம் செய்தி இருந்தது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் M8 காம்படீஷன் ஸ்பெஷல் எடிஷன் காரை அறிமுகம் செய்தது.
    • இது M சீரிஸ் ஸ்பெஷல் எடிஷன் சீரிசில் ஏழாவது மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது M சீரிசின் 50-ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் 10 ஸ்பெஷல் எடிஷன் M மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த வரிசையில், பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 5- ஜாரெ M எடிஷன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பிஎம்டபிள்யூ M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் விலை ரூ. 2 கோடியே 55 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய M8 காம்படீஷன் 50 ஜாரெ M எடிஷன் மாடலில் சக்திவாய்ந்த வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4.4 லிட்டர், ட்வின் டர்போ வி8 யூனிட் ஆகும். இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் ஸ்டெப்டிரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    50 ஜாரெ M எடிஷனில் M8 மாடல் ஐல் ஆப் மேன் கிரீன் நிறத்தில் கிடைக்கிறது. இத்துடன் M ப்ரூக்லின் கிரே மற்றும் அவென்ட்யுரின் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் டேடோனா புளூ, புரோசன் பிரிலியண்ட் வைட், புரோசந் மரினா பே புளூ, புரோசன் டீப் கிரீன் மற்றும் புரோசன் டீப் கிரே போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. M கார்பன் பைபர் அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ லேசர்லைட் இடம்பெற்று உள்ளது.

    காரின் உள்புறம் லெதர் மெரினோ இருக்கை மேற்கவர்கள், M சீட் பெல்ட்கள், அல்காண்ட்ரா ஹெட்லைனர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் M கார்பன் பேக்கேஜ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடலை ஏற்கனவே அறிமுகம் செய்து விட்டது.
    • புதிய ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் E, S, G மற்றும் V மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட்கள் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் வேரியண்ட் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    முன்னதாக டொயோட்டா ஹைரைடர் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை செப்டம்பர் 09 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. டொயோட்டா ஹைரைடர் காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டொயோட்டா ஹைரைடர் விலை விவரங்கள்:

    ஹைரைடர் E மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம்

    ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 12 லட்சத்து 28 ஆயிரம்

    ஹைரைடர் S மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 13 லட்சத்து 48 ஆயிரம்

    ஹைரைடர் S ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 15 லட்சத்து 11 ஆயிரம்

    ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 14 லட்சத்து 34 ஆயிரம்

    ஹைரைடர் G மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 15 லட்சத்து 54 ஆயிரம்

    ஹைரைடர் G ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 17 லட்சத்து 49 ஆயிரம்

    ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT ரூ. 15 லட்சத்து 89 ஆயிரம்

    ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் AT ரூ. 17 லட்சத்து 09 ஆயிரம்

    ஹைரைடர் V மைல்டு ஹைப்ரிட் MT AWD ரூ. 17 லட்சத்து 19 ஆயிரம்

    ஹைரைடர் V ஸ்டிராங் ஹைப்ரிட் eCVT ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய டொயோட்டா ஹைரைடர் மைல்டு ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் K15C என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹைரைடர் மாடல்- E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் AWD வசதி மைல்டு ஹைப்ரிட் V மேனுவல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டாப் எண்ட் மாடலில் பானரோமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

    • டிரைவர் உயிர் தப்பினார்
    • களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி இன்று காலை கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது.திருவனந்தபுரம் வினோத் காரை ஓட்டிவந்தார். களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் கார் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்தது. கார் அப்பளம் போல் நொறுங்கியது. இருப்பினும் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர் சிறு காயங்களுடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிராபஸ் நிறுவனத்தின் புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் மொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    ஜெர்மன் நாட்டு டியூனிங் நிறுவனமான பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக் ஒட்டுமொத்தத்தில் பத்து யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

    பிராபஸ் P 900 ராக்கெட் எடிஷன் ஜெர்மன் நாட்டை சேர்ந்த டியூனிங் நிறுவனமான பாங்கர்ஸ் 800 அட்வென்ச்சர் XLP பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய P 900 ராக்கெட் எடிஷன் மாடல் அட்வென்ச்சர் ரக XLP மாடல்களின் பிக்கப் பாடி கொண்டிருக்கின்றன. இத்துடன் 900 ராக்கெட் எஸ்யுவியின் சேசிஸ் மற்றும் பவர்டிரெயின் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

    புதிய P 900 ராக்கெட் எடிஷன் பிக்கப் டிரக்-இலும் 4.5 லிட்டர் ட்வின் டர்போ பிராபஸ் வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை உருவாக்க 4.0 லிட்டர் ட்வின் டர்போ AMG வி8 பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜினுடன் பெரிய டர்போ சார்ஜர்கள், பில்லட் கிரான்க்‌ஷாப்ட், போர்ஜ் செய்யப்பட்ட பிஸ்டன்கள், போர்ஜ் செய்யப்பட்ட கனெக்டிங் ராட்கள், பூஸ்ட்எக்ஸ்டிரா வால்வுகள், ஹை-பிரெஷர் பம்ப்கள், ரேம்-ஏர் இன்டேக் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்தனை மாற்றங்கள் செய்யப்பட்ட என்ஜின் 4470சிசி திறன் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 888 ஹெச்பி பவர், 1250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பிராபஸ் P900 ராக்கெட் எடிஷன் ஒட்டுமொத்த எடை 2720 கிலோ ஆகும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 280 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தொடர்ந்து புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.
    • இந்த வரிசையில் டாடா சபாரி புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சபாரி XMS மற்றும் XMAS புது வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 17 லட்சத்து 96 ஆயிரம் மற்றும் ரூ. 19 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. டாடா சபாரி புது வேரியண்ட்கள் XM மற்றும் XT வேரியண்ட்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    XM வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது டாடா சபாரி XMS மற்றும் XMAS வேரியண்ட்களில் கூடுதலாக பானரோமிக் சன்ரூப், டிரைவ் மோட்கள் (இகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்), 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நான்கு ஸ்பீக்கர்கள், நான்கு ட்வீட்டர்கள், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ரெயின் சென்சிங் வைப்பர்கள், உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட், ஆட்டோ ஹெட்லேம்ப், எலெக்ட்ரிக் போல்டபில் ORVM-கள் வழங்கப்பட்டு உள்ளன.

    புதிய டாடா சபாரி மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது. முன்னதாக டாடா ஹேரியர் XMS வேரியண்டை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இதன் விலை ரூ. 17 லட்சத்து 20 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • போக்ஸ்வேகன் சர்வீஸ் மையம் ஒன்று தனது வாடிக்கையாளருக்கு கொடுத்த கட்டண ரசீது வைரல் ஆகி வருகிறது.
    • கார் சரி செய்யும் விவகாரத்தில் ஏற்கனவே பல முறை இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    இந்தியாவில் செயல்பட்டு வரும் போக்ஸ்வேகன் சர்வீஸ் மையங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையை பில் செய்து பல முறை சர்ச்சியில் சிக்கியுள்ளன. அந்த வரிசையில், தற்போது போக்ஸ்வேகன் போலோ மாடலை சரி செய்ய அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையம் ஒன்று ரூ. 22 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது அனுபவத்தை லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

    பெங்களூரில் வசித்து வரும் அனிருத் கனேஷ் என்பவர் போக்ஸ்வேகன் போலோ TSI மாடலை பயன்படுத்தி வருகிறார். சமீபத்திய பெங்களூரு வெள்ளத்தில் போக்ஸ்வேகன் போலோ சேதமடைந்து விட்டது. இதை அடுத்து அனிருத் பெங்களூரை அடுத்த வைட்பீல்டில் உள்ள போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சர்வீஸ் மையத்திற்கு தனது போலோ காரை சரி செய்ய எடுத்துச் சென்றார். சேதமடைந்த காரை எடுத்துச் செல்ல இரவு நேரத்தில் யாரும் வரவில்லை என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.


    வைட்பீல்டு வொர்க்‌ஷாப்பில் அனிருத்தின் போக்ஸ்வேகன் போலோ கார் 20 நாட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சார்பில் அதிகாரி அனிருத்தை தொடர்பு கொண்டு காரை சரி செய்ய ரூ. 22 லட்சம் வரை செலவாகம் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனிருத் தொடர்பு கொண்டார். இன்சூரன்ஸ் நிறுவனம் காருக்கு முழு சேதமடைந்து விட்டதாக குறிப்பிட்டு, காரை சர்வீஸ் மையத்தில் இருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

    காரின் தரவுகளை சேகரிக்க அனிருத் காரின் விற்பனையகம் சென்றார். அங்கு அவரிம் ரூ. 44 ஆயிரத்து 840 கட்டண ரசீது கொடுத்து மீண்டும் ஷாக் கொடுத்துள்ளனர். பின் இந்த பிரச்சினையை போக்ஸ்வேகன் வாடிக்கையாளர் சேவை மையத்திம் அனிருத் தெரிவித்து இருக்கிறார். இதனை 48 மணி நேரத்தில் சரி செய்வதாக அனிருத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது பிரச்சினை சரி செய்யப்படவில்லை.

    போக்ஸ்வேகன் போலோ காரை ரூ. 11 லட்சம் கொடுத்து வாங்கிய அனிருத் அதனை சரி செய்ய தனக்கு ரூ. 22 லட்சம் வரை ஆகும் என சர்வீஸ் செண்டர் அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அனிருத்தை தொடர்பு கொண்ட போக்ஸ்வேகன் அவரிடம் ரூ. 5 ஆயிரம் செலுத்த வலியுறுத்தி உள்ளது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராண்ட் விட்டாரா மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த காருக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கி நடைபெற்று வந்தது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா மாடலின் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மிட்-சைஸ் எஸ்யுவி விலை ரூ. 10 லட்சத்து 45 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. முன்னதாக மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு ஜூலை மாத வாக்கில் துவங்கியது.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் சிக்மா, டெல்டா, சீட்டா, ஆல்பா, சீட்டா பிளஸ் மற்றும் ஆல்பா பிளஸ் என ஆறு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார்- நெக்சா புளூ, ஆர்க்டிக் வைட், ஸ்பிலெண்டிட் சில்வர், கிராண்டியர் கிரே, செஸ்ட்நட் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஆர்க்டிக் வைட் மற்றும் பிளாக் ரூப், ஸ்பிலெண்டிட் சில்வர் மற்றும் பிளாக் ரூப், ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூப் என ஒன்பது விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    இந்த கார் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் என்ஜின், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் என்ஜின் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் 102 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்டிராங் ஹைப்ரிட் வெர்ஷன் 91 ஹெச்பி பவர், 122 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் eCVT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்டப், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிலேட்கள், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், ஷார்க் பின் ஆண்டெனா, பானரோமிக் சன்ரூப், டூயல் டோன் பிளாக் மற்றும் பிரவுன் இண்டீரியர் கொண்டிருக்கிறது.

    இத்துடன் டிஜிட்டல் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஹெச்யுடி, பேடில் ஷிப்டர்கள், சுசுகி கனெக்ட் டெலிமேடிக்ஸ், டிரைவ் மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா டாப் எண்ட் மாடல் விலை ரூ. 19 லட்சத்து 49 ஆயிரம் என நிர்ணண் செய்யப்பட்டு உள்ளது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்கார்பியோ N மாடல் வினியோகம் துவங்கியது.
    • இந்த கார் முன்பதிவு துவங்கிய 30 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடலுக்கான வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஜூலை 30 ஆம் தேதி மஹிந்திரா ஸ்கார்பியோ N முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கிய முதல் 30 நிமிடங்களில் இந்த காரை வாங்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தனர்.

    தற்போது வினியோகம் துவங்கி இருக்கும் நிலையில், புதிய ஸ்கார்பியோ N மாடலின் 25 ஆயிரம் முன்பதிவுகளையும் இந்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் வினியோகம் செய்து முடிக்க மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. மேலும் வினியோகம் துவங்கிய பத்து நாட்களுக்குள் குறைந்தபட்சம் 7 ஆயிரம் யூனிட்களை வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N மாடல் Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L போன்ற வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கார் ஆறு மற்றும் ஏழு பேர் பயணம் செய்யும் வகையில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ N காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    புதிய ஸ்கார்பியோ N மாடலின் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 23 லட்சத்து 90 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
    • உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பயணம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 68) வியாபாரி. இவர் இன்று அதிகாலையில் மார்த்தாண் டம் மார்க்கெட்டுக்கு வியாபாரத்திற்காக சென்று விட்டு சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சொகுசு கார் வேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட அய்யப்பன் பரிதாபமாக பலியானார்.

    இதையடுத்து விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டெம்போ டிரைவர் பலி
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38) சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும் சிவஜித் என்ற மகனும் உள்ளனர்.

    இவர் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி சென்றார். திருநந்திக்கரை செங்கோடு பகுதியில் சென்ற போது, சொகுசு கார் வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ராஜேஷ் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து சிவப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ×